12 ராசியினருக்கும் ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012 க்கானது எழுத விரும்புகிறேன்.ஆனா அது ரொம்ப கஷ்டமான விசயம் ரொம்ப நுணுக்கு எழுத முடியாது..அப்படியே லைட்டா தெரிஞ்சுக்க விரும்புறவங்க படிக்கலாம்..ஏன்னா ஆங்கில புத்தாண்டு பலன் என்பது குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி,அப்புறம் 2012 ஆண்டு துவங்கும் நேர ராசிக்கட்டம் பார்த்து பலன் சொல்வதுதான்.
அதனால் இதை ஒவ்வொரு ராசியினருக்கும் இப்ப இருந்தே எழுத ஆரம்பிச்சாதான் சரியாக இருக்கும்.ஒரு மாசத்துக்குள்ள எழுதி முடிச்சா 2012துவங்கும்போது..முழுமையான பலன் வந்திருக்கும்னு நினைக்கிறேன்...
www.astrosuper.com |
1.1.2012 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசியில் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது..இந்திய ராசி தனுசுக்கு நான்காம் ராசியில் பிறப்பதால் இந்தியா பொருளாதார ரீதியாக இன்னும் பல படிகளை கடந்து முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.குரு,செவ்வாய் போன்ற அரசு கிரகங்கள் எல்லாம் மறைந்து இருப்பதால் இந்திய அரசு நிர்வாகம் பல பிரச்சனைகளை இந்த வருடம் சந்திக்கும்..ஆட்சி ஒரு நிலையில்லாமல் அனைத்து தர மக்களின் நம்பிக்கை இழந்து செல்லவும் வாய்ப்புண்டு...கடுமையான நெருக்கடிகளை இந்திய ஆளுங்கட்சி மக்களுக்கு கொடுக்கும்.
தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள சனியால் நீதியின் குரல் ஓங்கி ஒலிக்கும்.சனி குறிப்பது சுப்ரீம் கோர்ட்டை.சனி இருப்பது வாக்கு எனப்படும் குரல் ஸ்தானத்தில்.சனியோ துலாத்தில் உச்ச வீட்டில்.ஆக சுப்ரீம் கோர்ட் எனப்படும் தலைமை நீதி மன்றம் தான் இந்தியாவை வழி நடத்துகிறது..மக்கள் அதைதான் நம்புகின்றனர் என உலக நாடுகள் பேசும் அளவு சூழ்நிலை செல்லும்.அரசியல்வாதிகள் கோர்ட் சவுக்கை சொடுக்கினால் மட்டுமே மக்களிடம் உண்மை பேசுவர்.
இனி வரும் நாட்களில் ஒவ்வொரு ராசியினருக்கும் புத்தாண்டு பலன்கள் பார்ப்போம்..!!
1 கருத்து:
கன்னி ராசியை முதலில் கணித்தீர்கள் என்றால் புண்ணியமாப் போகும்!
கருத்துரையிடுக