சனி, 29 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்

சனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.

சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சனி காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.

தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்..? என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.

தனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.

.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.பூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.

11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.

வங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்விற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

இக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

சனி பெயர்ச்சிக்குப் பிறகு நல்லா இருக்கான்னு பார்ப்போம்.