தொழில் வளர்ச்சி தரும் கற்கள்
பொதுவாக இந்த கற்களை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
மாணிக்கம் : அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள்
அரசியல், பொதுநல தொடர்பு உடையவர்கள்.
சந்திரகாந்தம், முத்து : மெட்டல்ஸ், தத்துவம், கணிதம், பொறியியல்
துறையில் உள்ளவர்களுக்கு
வைரம்; நிர்வாகத்துறை, பால்பண்ணை, மேனேஜர்
தொழில், விவசாமய், சகல துறைகளிலும் உதவி இயக்குனர் துறையில் உள்ளவர்கள்.
மரகதம்- பச்சை : ஏஜென்சி-கமிஷன், துணி காகிதம், பிரிண்டிங்
(அச்சகம்) அலங்காரப் பொருட்கள் துறையில் உள்ளோர் உபயோகத்திற்கு
பவளம் : அதிகாரத்துறையில் உள்ளோர், இராணுவம்,
காவல்துறை, கட்டட மேஸ்திரி, உணவு விடுதி, மின்சார இலாகாவில் பணியாற்றுவோர்.
கோமேதகம் : கைரேகை பார்ப்போர், மந்திரம் சொல்பவர்கள்,
ஜோதிடர்கள், அரசியல் விமர்சகர், நாட்டியக் கலைஞர்
வைடூரியம் : சினிமாத்துறையில் உள்ளவர்கள், தூதரகப்
பணியில் உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கை ரிப்போர்ட்டர்கள், மருத்துவத்துறை;
நீலக்கற்கள் இரும்புக்கடை வைத்து இருப்பவர், ரியல்
எஸ்டேட், வீட்டுமனை தொழில் உள்ளவர்.
நோய் நீங்க கற்கள் தரும் பலன்
பித்தம், வாதம், சிலோத்துமம், மூலம் நோய்கள் நீங்க (நவராத்தின மணி)
சாராயம், குடி, விஷம் நீங்க லாகிரி வஸ்துகள்
உபயோகிப்பவர் உபத்திரம் நீங்க; அமிதிஸ்ட்
கிரக தோஷம், பீடை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி இவைகள் நீங்க அணியவேண்டிய கற்கள். (அமிதிஸ்ட் சுகந்தி)
விஷ பயம், எம பயம், நோய் பயம் நீங்கி சுகம் பெற அணியவேண்டிய கல் (கார்னெட், கோமேதகம்)
நரம்புக்கோளாறு நீங்க (மரகதக்கல் - பச்சை)
ஜெயம் பெற, உடல் உஷ்ணம் நீங்க, சர்வசித்தி பெற (ரசமணி)
இதய நோய்க்கு; (வைரம்)
ஞாபகசக்தி குறைதல், தலை சுற்றல் (நவமணிகள்)
தொழுநோய், இரணம், தோல்நோய், படை, சொறிகளுக்கு (கோமேதகம்)
ஆஸ்துமா, சளி, இருமல், கபம், இழுப்பு, ஆஸ்துமா, இயலை, மூச்சு அடைப்பு போன்றவைகள் (முத்து-சந்திரகாந்தம்)
பித்தப்பை கோளாறு, காமாலை, கர்ப்பப்பை கோளறுகளுக்கு, இயற்கை (மாணிக்கக் கற்கள்)
சிறுநீரகக் கோளாறுகளுக்கு (ஜட்டு – மாலாகைட்)
அதிர்ஷ்டக்கற்களை உபயோகிக்கும் வழிமுறைகள்
திருப்பாற்கடலில் தோன்றிய காமதேனு அனைத்து தேவாதி தேவர்களும் தன் உடலிலே இருக்க இடம் அளித்து ஈஸ்வரனுக்கு வாகனமாகவும், நம் துன்பத்தை சுமக்கின்ற தெய்வமாகவும், அன்னையாகவும் அருள்பாலிக்கும் பசுவின் கோமியம் உலகில் உள்ள புண்ணிய நதிகளின் பூர்ண பலனை விட கங்கையை விடவும் புண்ணியமான தீர்த்தம் பசுவின் கோமியம் என்பது சாஸ்திரம் அறிந்த பெருமக்கள் அவர்கள் அறிந்த உண்மையாகும். எந்தவொரு கற்களையுமே கோமியத்தில் போட்டு வைத்து பின்னர் அணியும் நாளில், அணிந்து கொள்ள எளியைமான வழி:
1. புதனுக்குரிய மரகத பச்சைக்கல்
புதன்கிழமை இரவு, விடியற்காலை 4 முதல் 5க்குள் புதன் கிரகம் வலிமையுள்ள நேரம் உஷாக்காலம் என்று பெரியோர்கள் சொல்வார்கள் அந்த நேரத்தில் 5மண்விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபாடு செய்து பச்சைக்க் மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
2. குருபகவானுக்குரிய புஷ்பராகக்கல்
மஞ்சள்நிற புஷ்பராகக்கற்களை வியாழக்கிழமை அதிகாலை 6 முதல் 7 அருகில் இருக்கும் கோயிலில் ஒரு மஞ்சள் துண்டு, 3 நெய்விளக்கு, 3 எலுமிச்சை கனி வைத்து குருபகவானை வழிபட்டு மோதிரத்தை அணிவது விசேஷம்
3. சனிபகவானுக்குரிய நீலக்கல்
இதனை இயலாதோர் வீட்டிலும் செய்யலாம் (அ) கோவிலிலும் செய்யலாம். சதுர்த்தி திதி அன்று விரைவில் அணிந்து கொள்ளலாம் வாய்ப்பு உள்ளவர்கள் சனிக்கிழமையில் சனீஸ்வரர் சந்நிதியில் 6 முதல் 7.30 மணிக்கு (காலை) நீலநிற மோதிரக்கல்லை அணிந்து கொள்ளலாம்.
4. செவ்வாய்க்குரிய பவளம்
பவளமோதிரத்தை அணிவோர் செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் வீட்டில் (அ) சுப்ரமணியம் ஆலயத்தில் அணிந்து கொள்ளலாம்.
5. சூரியனுக்குரிய மாணிக்கம்
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 முதல் 4 மணிக்குள் 9 நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து மாணிக்கக் கற்களை அணிந்து கொள்ளலாம்.
6. சுக்கிரனுக்குரிய வைரம்
வெள்ளிக்கிழமை அதிகாலை வளர்ச்சியுள்ள குளிகை நேரத்தில் காலை 7.30 முதல் 9.30 மணிக்குள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமி படத்திற்கு முன்பு அணிந்து கொள்ளலாம்.
7. சந்திரபகவானுக்குரிய முத்து
சந்திரகாந்தக்கல் அணிவோர் 1.30 முதல் 3 மணிக்குள் 5 அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி திங்கள் கிழமையில் வழிபாடு செய்து மோதிரத்தை அணியலாம்.
8. இராகுவிற்குரிய கோமேதகக்கல்
செவ்வாய்க்கிழமையில் இராகுகாலம் உள்ள நேரத்தில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
9. கேதுவிற்குரிய வைடூரியம்
ஐந்துவிதமான பழங்கள் (கனி) ஐந்து நிறமுடைய ஒரு கர்சிப் (கைக்குட்டை) இவைகளுடன் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் கலந்த ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்து அணிந்து கொள்வதே சிறப்பு. கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் வரும் நட்சத்திர நாளில் அணிந்து கொள்வதே சிறப்பு.
நட்சத்திரங்களை அறிய வாய்ப்பு இல்லாதோர் செவ்வாய்க்கிழமைகளிலும் அணியலாம்.
2 கருத்துகள்:
நல்ல தகவல்
நல்ல கருத்துக்கள்.
சோதிடம் சார்ந்த பல கட்டுரைகளை முழுமையான விளக்கத்துடன் மேலும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.நன்றி
கருத்துரையிடுக