புதன், 19 அக்டோபர், 2011

புனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க! star astrology

நட்சத்திரத்தின் தன்மை;

இந்த நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும்.சாத்வீக குணம் கொண்டது.பிறை போன்ற வடிமைப்பு கொண்டது.கூட்டமாக உள்ள இடத்தில் காணப்படும்.நாத பிந்து என்ரு அழைக்கப்படும் ஒலிகளின் கூட்டணியில் அமைச்சரை போல போற்றப்படும்.கடவுளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அமைப்பு கொண்டது.இதன் அதிபதி குரு பகவான் ஆவார்.கணம் தேவ கணமாகவும்,மிருகம் பெண் பூனையாகவும்,விருட்சம் மூங்கிலாகவும்,பட்சி அன்னமாகவும் அமையப்பெற்று காணப்படுகிறது.இவர் காது,தொண்டை,தோள்கள்,தோள் எலும்புகள் இவற்றை ஆளுகை செய்கிறார்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை முதலில் வரும்.அதனை அடுத்து மற்ற திசைகள் வரும்.ராமர் பிறந்த புன்ணிய நட்சத்திரம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரகள் எப்படி..?

சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.கண்டிப்பானவராகவும்,ஒழுக்கமானவரகவும் இருப்பர்.இளகிய மனம் கொண்டவர்கள்.நாம முதல்ல சரியா இருக்கணும் என நினைப்பர்.அதே போல இவர்களிடம் பழகுபவர்கள் சரியா இருக்கணும்னு நினைப்பாங்க..நல்ல குணம் அன்பு,அமைதி,மனிதாபிமானம்,உதவி செய்தல்,பொது தொண்டு ,ஆன்மீகம் என உதாரண மனிதராக திகழ்வார்கள்.கட்டம் சரியில்லைன்னா கொஞ்சம் மாறும் அவ்வளவுதான்.

இவர்களுக்கு ஏற்படும் நோய்கள்;

அதிகமான இனிப்பு உண்பதால் சர்க்கரை நோயினால் பாதிப்பு ஏற்படும்.ட்ரிங்க்ஸ்,அசைவ உணவு அதிகம் பிடிக்கும்.பிற்காலங்களில்...நுரையீரலில் கேன்சர்...இந்த நட்சத்திரகார்களுக்கு அதிகம் உண்டு.அதுக்காக பயப்படாதீங்க..கேன்சர் தரும் கிரகமாகிய சனி,ஏடாகூடமா சூரியன்,செவ்வாயுடன் சம்பந்தம் ஆனால்தான் இது உறுதியாகும்..

தொழில்கள்;
பலர் நன்கு படித்து வழக்கறிஞர்,நீதிபதிகள் ஆகின்றனர்.ஆனா பெரும்பாலும் கமிசன் தொழில்,ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்கள் அதிகம்.

12 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு. அறிந்து கொண்டோம்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

புனர்பூச நட்சத்திரத்தின் குணவியல்புகளை அறிந்து கொள்ள வைக்கும் அருமையான பதிவு பாஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நட்சத்திர பலனை பதிவிட்டதற்கு நன்றி


நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி Sir!

naren சொன்னது…

புனர்பூசம் நட்சத்திரம், இராமர் பிறந்த நட்சத்திரம் என்ற தகவலுக்கு நன்றி. இராமாயணம் ஜாதகத்தை பற்றி என்ன சொல்கிறது, என்ற பதிவுக்காக waiting.

VIJAYAKUMAR.R சொன்னது…

அப்படியே, ரோஹிணி நட்சத்திர பதிவும் போட்டா, கொஞ்சம் மனசை தேத்திப்போம்

Unknown சொன்னது…

நான் புனர்பூசமா இல்லை திருவாதிரையா என்று சந்தேகமாக உள்ளது.....தயவு செய்து தீர்த்து வைக்கவும்!!! நன்றி

Unknown சொன்னது…

நான் புனர்பூசமா இல்லை திருவாதிரையா என்று சந்தேகமாக உள்ளது.....தயவு செய்து தீர்த்து வைக்கவும்!!! நன்றி

Parameswaran சொன்னது…

புனர்பூசம் நட்சத்திரம் சுக்கிரன் தசை நடந்து வருகிறது நல்லதா கெட்டதா

Unknown சொன்னது…

நன்றி அண்ணா

Unknown சொன்னது…

நன்றி அண்ணா

kesavan சொன்னது…

கண்ணன் பிறந்த நட்சத்திரம்