வியாழன், 6 அக்டோபர், 2011

சிறை கைதியின் ஜாதகம் astrology

சிறைக்கைதியின் ஜாதகம் astrology;

சிறைக்கு செல்லும் கைதிகளின் ஜாதகம் பார்த்தால் அவர்களின் கிரக அமைப்பை பார்த்தால் மோசமான யோக அமைப்புகள் பற்றி தெரிந்துவிடும்.கீழ்க்கண்ட ஜாதகம் திருடுவதையே தொழிலாக கொண்டவரின் ஜாதகம்.இவரது ஜாதகத்தில் செவ்வாய்,சனி பார்வை இருப்பதை கவனியுங்கள்.8ல் சனி இருப்பதும்,வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதும் மோசமான கிரக நிலைகள்..அஷ்டமாதிபதி இரண்டில் இருப்பதால் பொய் பேசுவதே மூலதனம்.9ல் சந்திரன் இருந்தால் தெய்வ பலம் என சொல்வார்கள்.ஆனால் இவர் தெய்வ பலமெல்லாம் செவ்வாய் பார்வையால் சனிக்கு இரண்டில் இருப்பதால் அடிபட்டு போனது.மூலம் நட்சத்திரம் அகப்படும் அமைப்பு.தவறு செய்தால் மாட்டிக்கொள்வார்கள்..மூலம் நட்சத்திரம் சுகமில்லாத நட்சத்திரம் மட்டுமில்லாமல் கவலைப்படுகிற,துக்கப்படுகிற நட்சத்திரம்.

சூரியன் ஆறுக்குடையவன் சாரம் பெற்று தற்போது திசை நடத்துவதால் இவர் சிறையில் அடைபட்டு கிடக்கும் சூழல் உண்டானது.முக்கிய சுப கிரகங்கள் அனைத்தும் வலுவிழந்து இருப்பதையும் காணலாம்,.

சித்திரையில்பிறந்தவர்.சூரியன்உச்சமாகிலக்கினத்தில்இருப்பதும்பலவீனம்.கோபக்காரர்.கலகக்காரர் என்பதை சொல்கிறது.சுக்கிரன் உச்சம் பெற்று 12 ல் இருப்பதால் இவர் சம்பாதித்த பணம் எல்லாம் உல்லாசம்,காம சேட்டைகளுக்குதான் செலவாகி இருக்கும்.செவ்வாய்,சனி பார்வை எவ்வளவு கொடிது என காட்டவும்,6 க்குடையவன் சாரம் பெற்று திசா நடத்தும் கிரகம் என்ன செய்யும் என்பதற்கும் இந்த ஜதகம் நல்ல உதாரணம்.

2 கருத்துகள்:

Karthikeyan சொன்னது…

/* 8ல் சனி இருப்பதும்,வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதும் மோசமான கிரக நிலைகள்..அஷ்டமாதிபதி இரண்டில் இருப்பதால் பொய் பேசுவதே மூலதனம். */ மேற்கண்ட நிலையில் அஷ்டமாதிபதி தனித்து இருப்பதால் மட்டுமே ஏற்பட்டதா?

Unknown சொன்னது…

குழந்தை பிறந்துவிட்டால் யாருடைய ஜாதகம் செல்லும்