வெள்ளி, 28 அக்டோபர், 2011

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;

ரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.

நான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்துள்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்

கருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Thank you very much sir , for giving my Blog link...

naren சொன்னது…

சித்தர் கோவில் தகவலுக்கு நன்றி. தலைவர் ரஜினி உண்மையாக அங்கு வந்திருந்தால் நல்லதுதான். திருப்பதி கோவில் புகைப்படங்களைப் பார்த்தால் இன்னும் ரஜினிக்கு தேஜஸ் கூடியிருப்பது தெரியும்
பதிவிற்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஏதோ ஒரு ரஜினி மேட்டர் சிக்கிடுது ஹாஹா

Sivamjothi சொன்னது…

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://jaghamani.blogspot.in/2012/08/blog-post_23.html


சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர்

http://jaghamani.blogspot.in/2012/08/blog-post_23.html

Unknown சொன்னது…

தேசிய சட்டத்துறை மந்திரியும், முன்னால் கர்நாடக முதல் மந்திரியுமான கிருஷ்ணா, இளைய ராஜா உட்பட ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட பலரும் வந்து அருளாசி பெறும் புன்னியதலம் நெரூர் சதாஷ்வரப்.பிரம்மேந்திராள் ஆலயம் என்பது உண்மைதான்.