வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி horoscope;virgo

(உத்திரம் 2 ஆம் பாதம் முதல்;அஸ்தம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை)

கன்னி ராசிக்காரர் என்றாலே,அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் நீங்கள்.கன்னி புதன் ராசி என்பதால் உங்களிடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.வசியமன பேச்சு திறன் உங்கள் ப்ளஸ்.ஜோசியம்,மாந்திரீகம்,ஆன்மீகம்,சித்தர் வழிபாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்.எண்கணிதம்,ஜோதிடம் தொழிலாக கொண்டவர்களும் மிதுனம்,கன்னி,தனுசு ராசிக்காரர்கள் நிறைய உண்டு.காரணம் அடிப்படையான இவர்கள் கணிப்பு திறன்.யாரையும் பார்த்தவுடன் அவர் குணங்களை மதிப்பிட்டு விடுவீர்களே.


இளம் வயதில் காதல் வசப்படுவதும்..யார்தான் இளமையில் காதல் வயப்படாம இருக்கா...? ஆனா இந்த ராசிக்காரர் ரூட்டே தனி.அவ்வளவு ரசனை மிகுந்தவர்கள்.அதிலும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் ம்...கில்லாடிகள்.எப்போதும் இளமை கொப்பளிக்கும் குறும்புதனம் கண்களில் நிரம்பியிருக்கும்.உத்திரம் ந்ஃஅட்சத்திரக்காரர்தான் கொஞ்சம் உர் டைப்.ஆனா அவர் தொழில்,பணம் சம்பாதிக்கும் விசயத்தில் கெட்டி.சித்திரை கோபம் அதிகம்...யாரையும் தப்புன்னா டக்குன்னு முகத்தில் அடித்தார் போல கேட்டுவிடுவர் தயவு தாட்சண்யம் கிடையாது.

கடந்த ஐந்து வருடங்களாக ஏழரை சனி நடந்துவருகிறது...கடந்த இரண்டரை வருடமாக அதில் ஜென்ம சனி நடந்தது.வரும் நவம்பர் 1 ஆம் தேதியுடன் ஜென்ம சனி முடிகிறது.இனி பாத சனிதான்.அது இரண்டரை வருடம்.பொதுவா கன்னி ராசிக்கு முதல் ஏழரை ,மூணாவது ஏழரைதான் பாதிக்கும்.இரண்டாவது ஏழரை பாதிப்பதில்லை.அது பொங்கு சனியாக தொழிலில் முன்னேற்றம் தரும் ...ஆனாலும் மருத்துவசெலவு,அதிக விரய செலவு தடுக்க முடியாது.

டிசம்பர் 26 வரை குரு வக்ரம்.குரு ராசிக்கு நாலுக்குடையவன் என்பதால் உடல்நிலை பாதிப்புகள் டிசம்பர் 26க்கு பிறகு சரியாகும்.ஆனாலும் குரு உங்களுக்கு கெடுதல் செய்பவர் என்பதால் டிசம்பர் 26 வரை உங்களுக்கு நன்மைதான்.அதிக திடீர் வருவாயும்,தொழிலில் ஏற்றங்களும்,மதிப்பும்,மரியாதையும் கூடும்.2012 பொறுத்தவரை கோட்சாரம் பாதிப்பு அதிகம் இல்லாததால் திசா புத்தி உங்கள் ஜாதகப்படி சிறப்பாக இருப்பின் அதிர்ஷ்டமான வருடமே.

அதிர்ஷ்ட எண்கள்;6,5
பரிகாரம்;மதுரை மீனாட்சியை ஒரு முறை வழிபட்டு வாருங்கள்.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல பலன் சொல்லிருக்கீங்க அண்ணே !!

பெயரில்லா சொன்னது…

when will koodankulam strike end?

Thozhirkalam Channel சொன்னது…

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Thozhirkalam Channel சொன்னது…

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

பெயரில்லா சொன்னது…

நான் கண்ணி ராசி, அஸ்தம் நட்சத்திரம். 2012 இல் என் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்? M.Sc.,கம்ப்யூட்டர் சஸின்ஸ் படிப்பு.