புலிப்பாணி ஜோதிடம் 300;சனிபெயர்ச்சி ராசிபலன்;shani peyarchi 2012
பாரபட்சமில்லாத நீதிதேவன் சனிபகவான் .தனது தசா காலத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு நற்பலனை அள்ளி வழங்கியும்,பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அள்ளி வழங்ககூடியவரும் ஆவார்.துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் அடையும் காலம் இது என்பதால்தான் நீதி,நேர்மை,ஊழலற்ற அரசு என மக்கள் கொதித்தெழுகின்றனர்.நீதிமன்றம் தவறு செய்தவர்களுக்கு கிடுக்கி பிடி போடுகிறது.சர்வாதிகாரமாக நடந்த கடாபி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.அதே போல இலங்கை தமிழர்களை கொன்று குவித்த,ராஜபக்சேவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.அநீதி தோற்று நீதி வென்று மக்கள் நிலங்களை களவாடிய முன்னாள் மந்திரிகள் எல்லாம் சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
சனிபகவான் யோகிகளின் தியானத்துக்கு உரிய அவதூத தத்துவத்தின் அடையாளமாக விளங்ககூடியவர்,எவ்வளவு வலிமை உடையவர்களாக இருப்பினும் அடக்கி ஒடுக்கிவிடும் வலிமை பெற்ற்வர்.
புலிப்பாணி ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது.ஏழரை சனியில் என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சொல்கிறார்.ஒரே பாடலில் சுருக்கமாக.
’’பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
பாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்
சீரப்பா சிரநோயும் அம்மைபேதி
சிவசிவ சலபயமும் பொருளும்சேதம்
கூரப்பா குடியோடிப் போக செய்வன்
கொற்றவனே குடும்பத்தில் களவு போகும்
வீரப்பா வெகுபேர்க்கு கொடியோனாகி
விளங்குவான் புவிதனிலே விளம்பகேளே’’
விளக்கம்;
கோட்சாரப்படி ஜென்மராசிக்கு12,1,2 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டு சனி என்பர்.இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலி,அம்மை,பேதி எனக்கூறும் கொள்ளை நோயும்,ஜலபயமும்,பெரும்பொருள்சேதமும் உண்டாகும்.குடும்பத்தில் களவு போகுதலும்,இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கு கொடியவனாக விளங்குவான்..என புலிப்பாணி கூறுகிறார்.
இன்னொரு பாடலில்..எந்தெந்த ராசியினருக்கு அதிக தீமையும்,நன்மையும் ஏழரை சனி செய்யும் என விளக்குகிறார்;
‘’கேளப்பா கடகம் தேள் சிம்மம் ஜென்மம்
கெடுதி மெத்த செய்வனடா வேதைதானும்
நாளப்பா நலமாகும் மற்றை ராசி
நற்சுகமும் கிட்டுமடா வேட்டலுண்டு
கூளப்பா கோதையினால் பொருளுஞ்சேதம்
கொற்றவனோ கடனும் வந்து தீரும் என்றே
ஆளப்பா திசை பாரு வலுவை நோக்கி
அப்பனே முடவன்சேய் வலுவைக்கூறே’’
விளக்கம்;
கடகம்,விருச்சிகம்,சிம்மம்,ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு மிக கெடுதியையே சனி விளைவிக்கிறார்.மற்றைய ராசிகளுக்கு அதிக தீமை இல்லை.மாறாக நன்மைகள் அதிகம் விளையும்.கடன் ஏற்பட்டு தீரும்.தீரும் நோயாக வந்து போகும்..சனி,செவ்வாய் வலு இருப்பவருக்கு ஏழரை சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை எனவும் சொல்கிறார்...
1 கருத்து:
பரவாயில்லை நான் துலாம்தான்.
கருத்துரையிடுக