அதென்ன ஏழாம் அறிவு..? முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ..? மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..!!
1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
2.தட்டான் தாழ்ப்பறந்தால் மழை
3,அந்தி ஈசல் அடை மழை
4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை
5.தவளை கத்தினால் மழை
6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை
7.கொக்கு மேடேறினால் மழை
8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.
9.கழுதை காதை உயர்த்தினால் மழை
10.ஈசல் பறந்தால் மழை
11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்
12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்
13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.
14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்
15.மயில் நடனமிட்டால் மழை வரும்
16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்
17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்
18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்
19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.
20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.
இன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி..? மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;
முக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,
ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே‘
என மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.
எங்க ஊர்ல இப்ப நல்ல மழை! அதான் இந்த சிறப்பு மழை பதிவு!!
எங்க ஊர்ல இப்ப நல்ல மழை! அதான் இந்த சிறப்பு மழை பதிவு!!
15 கருத்துகள்:
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......
சூப்பர் தகவல் சார்
என்னமோ சிவகுமார் பையன் படத்தப் பத்தித் தான் விமர்சனம் எழுதப் போறிங்களோன்னு பயந்துட்டேன்!இம்புட்டுத்தானா?மழை பத்தி அருமையா சொல்லியிருக்கீங்க,கங்கிராட்ஸ்!அட்வான்ட்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!
மழை பற்றிய பகிர்வு.... அருமை
மழையை எங்க ஊர் பக்கம் கொஞ்சம் அனுப்பி விடுங்க நண்பரே....
http://mokkaiswami.blogspot.com/2011/10/blog-post_23.html
http://mokkaiswami.blogspot.com/2011/10/blog-post_24.html
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
>>josiyam sathishkumar said...
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
அப்போ கெட்ட உள்ளங்களூக்கு, மீடியம் உள்ளங்களூக்கு நோ வாழ்த்து?
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா
இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
பாஸ்...எனக்கும் இந்த நம்பிக்கைகள், ஐதீகம் பற்றிக் கொஞ்சம் தெரியும், ஆனால் நீங்கள் பதிவில் ஏழாம் அறிவு பற்றி விளக்கிய பின்னர் தான் இதற்கு ஏழாம் அறிவு எனும் பெயர் உள்ளதே எனும் விடயம் தெரிந்தது பாஸ்..
தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே
மழை உங்க ஊர்ல மட்டும் இல்லை. எல்லா ஊர்களிலும். அதனால் அனைவரும் மழையுடன் ஒன்றி இந்தப் பதிவை படிப்பார்கள்.
7 அறிவு படம் உங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சியா என்று சந்தோசபட்டேன்..ம். மழை காட்சி.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
மழை பத்தி அருமையா சொல்லியிருக்கீங்க.
கருத்துரையிடுக