மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 நவம்பர், 2015

பாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை


பாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam

நாளை  திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப தரிசனம் பாவம் போக்கும்...!! வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
உலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...

திருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்தின் அருகில் இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம் தரிசிப்பது தவறில்லை..

நோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..!!
  ----------------------------------

 டிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.
காலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8 என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில் உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம் ..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .
அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்..
 ----------------------------------------

 இன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.

.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை  குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.

சூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.
-------------------------------------
சூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில் தீவிரவாத அச்சுருத்தல்கள் அதிகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.
கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில் பயணங்கள் தவிர்க்கவும்.


திங்கள், 24 அக்டோபர், 2011

ஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்

அதென்ன ஏழாம் அறிவு..? முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ..? மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..!!

1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

2.தட்டான் தாழ்ப்பறந்தால் மழை

3,அந்தி ஈசல் அடை மழை

4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை

5.தவளை கத்தினால் மழை

6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7.கொக்கு மேடேறினால் மழை

8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.

9.கழுதை காதை உயர்த்தினால் மழை

10.ஈசல் பறந்தால் மழை


11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்

12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்

13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.

14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்

15.மயில் நடனமிட்டால் மழை வரும்

16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்

17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்

18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்

19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.

20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.

இன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி..? மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;

முக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,


ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே‘
என மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.


எங்க ஊர்ல இப்ப நல்ல மழை! அதான் இந்த சிறப்பு மழை பதிவு!!