சகுனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சகுனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2011

ஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்

அதென்ன ஏழாம் அறிவு..? முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ..? மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..!!

1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

2.தட்டான் தாழ்ப்பறந்தால் மழை

3,அந்தி ஈசல் அடை மழை

4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை

5.தவளை கத்தினால் மழை

6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7.கொக்கு மேடேறினால் மழை

8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.

9.கழுதை காதை உயர்த்தினால் மழை

10.ஈசல் பறந்தால் மழை


11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்

12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்

13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.

14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்

15.மயில் நடனமிட்டால் மழை வரும்

16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்

17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்

18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்

19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.

20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.

இன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி..? மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;

முக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,


ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே‘
என மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.


எங்க ஊர்ல இப்ப நல்ல மழை! அதான் இந்த சிறப்பு மழை பதிவு!!




சனி, 14 மே, 2011

சகுனம் சூட்சுமம்


ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம் என எத்தனை வகைகளில் பிரித்து ஜோதிடம் சொன்னாலும் நம் பெரியோர்களின் சகுன சாஸ்திரம் பார்த்து கணிக்கும் கணிப்பு இவைகளுக்கு ஈடாகுமா...? ஆனால் இன்று பெரியோர்கள் ஃபேஸ்புக்,டிவிட்டர் என பிஸியாகிவிட்டார்கள்...கிராமங்களில் இன்று சகுனத்தையே அதிகம் நம்புகிறார்கள்.நல்ல காரியத்தை பத்தி பேசும்போது தும்முனான் ஒருத்தன் அப்பவே நினைச்சேன் இப்படி நடக்கும்னு என பேசிக்கொள்வார்கள்.காலையில வெளியே போகும்போதே சகுனம் சரியில்லை..அதே மாதிரியே இன்னிக்கு நஷ்டகணக்குதான் ஆச்சு..என்றும்பேசிக்கொள்வார்கள்,


பொண்ணு பார்க்க போனோம்..போற வழியில பாம்பு பார்த்தோம்...அதனால் வழித்த்டம் சரியில்லை என பல கல்யாணங்கள் கிராமப்புறங்களில் நின்றும் போயிருக்கின்றன...இந்த தகவலை பெண் வீட்டாருக்கு சொல்ல,வழித்தடம் சரியில்லை..அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என நினைக்கிறோம்...என ஒரு கடிதம் எழுதிவிட்டு கேன்சல் செய்துவிடுவார்கள்..பெண் வீட்டாரும் இதை புரிந்து கொண்டு விடுவார்கள்.பல வேறு காரணங்களுக்கும் பொய்யாக இந்த காரணத்தை சொல்வதும் உண்டு...வழித்தடம் சரியில்லை என சொல்லிவிட்டால் ஒன்றும் கேள்வி கேட்க முடியாது இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இன்றும் கிராமங்களில் உண்டு.

எங்கள் கிராமத்தில் என் அத்தையை பெண் பார்க்க வந்த கதை பற்றி எங்கள் பாட்டி சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது...கரூர் அருகில் காவிரி,அமராவதி என இரு ஆறுகளும் கூடும் இடத்தில்,ஆற்றின் ஓரம் இருக்கும் சிறு கிராமம் அது..அத்தையை பெண் பார்க்க வந்தார்கள்.மாப்பிள்ளை வீட்டார் வந்து போனதும்,வீட்டில் இருந்த வளர்ப்பு பூனை உத்திரத்தில் தூங்கியது,அப்படியே தூக்க கலக்கத்தில் தரையில் விழுந்து இறந்து போனது..அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.அதே மாதத்தில் அது 1970 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..அமராவதி ஆற்றில் பெரு வெள்ளம் வந்து,இவர்களது வயல்வெளிகள் நாசமானது..அந்த நஷ்டத்திலிருந்து மீள ஒரு வருசம் ஆனது.அப்போதும் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போட்டார்களே ஒழிய நிறுத்தவில்லை..நல்ல சம்பந்தம்.அரசாங்க வேலை.விட வேண்டாம் என திருமணத்தை முடித்தார்கள்.திருமணத்திற்கு பின் என் அத்தை பட்ட கஷ்டங்கள் ரொம்ப கொடுமை.அவருக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன.நகையை சூதாடி அழித்தார்.மாமியார் வீட்டில் திருடினார்.வீட்டுக்கு வராமல் 6 மாதம் தலைமறைவாக இருந்தார்.இதனால் என் அத்தை பிறந்த வீட்டிற்கே வர வேண்டியதாயிற்று.

பெண் பார்த்து விட்டு போனதும் வீட்டுப்பூனை இறந்தது,வெள்ளத்தால் பயிர் நாசம் இவையெல்லாம் சகுனங்களே..இயற்கை இவர்களுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் என உணர்த்தியது.

நமக்கு வரும் துன்பங்களை இயற்கையே முன்கூட்டி உணர்த்தும்.அதை தெய்வமாகவும் நினைக்கலாம்..முன்னோர்கள் வழிகாட்டுவதாகவும் எண்ணலாம்...சகுனம் என்றும் சொல்லலாம்...