பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

திருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்"?

திருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்"?


திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதரத்துடன் பதிவு யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்  வாருங்கள்...



இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம்  நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி  வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.


குறிப்பு

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால்
நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதிணோர் மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது மாறாக அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும் இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னம் காரர்கள் தெரியுமா. மேஷம்  , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் அவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

" சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " --

“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப்  பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம் "

வியாழன், 28 ஜனவரி, 2016

செல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வில் செய்யக்கூடியவை

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் இறந்தோர் படங்களை தெற்குப் பார்த்து வைக்க வேண்டும்..

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.


33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

பாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை


பாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam

நாளை  திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப தரிசனம் பாவம் போக்கும்...!! வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
உலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...

திருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்தின் அருகில் இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம் தரிசிப்பது தவறில்லை..

நோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..!!
  ----------------------------------

 டிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.
காலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8 என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில் உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம் ..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .
அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்..
 ----------------------------------------

 இன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.

.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை  குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.

சூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.
-------------------------------------
சூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில் தீவிரவாத அச்சுருத்தல்கள் அதிகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.
கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில் பயணங்கள் தவிர்க்கவும்.


செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சொர்க்கம் நரகம் இருக்கிறதா ..நம்ப முடியாத உண்மைகள்

சொர்க்கம் ,நரகம் இருக்கிறதா...நிச்சயம் இருக்கிறது....நம்முடைய உயர்ந்த ,நல்ல எண்ணங்கள் ,செயல்பாடுகள் பொறுத்து இறந்த பின் அந்த ஆத்மா அதாவது ஆவி உருவம்..சந்திரனை நோக்கி சென்றால் வைகுண்டம்..மறுபிறப்பு உண்டு....அப்பிறவியில் சுகமான வாழ்க்கையுண்டு ....சூரியனை நோக்கி சென்றால் சொர்க்கம் மறுபிறவி இல்லை....இருள் கிரகமாகிய சனியை நோக்கி சென்றால் நரகம்....!! பல நூறு ஆண்டுகள் கஷ்டம் உண்டு....கருட புராணம் இதை சொல்கிறது .இந்த சட்டங்கள் வயோதிகம்,நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு மட்டும்..விபத்து,தற்கொலை என இறப்பவர்களுக்கு அப்படி அல்ல...அவர்கள் ஆவி,பிசாசு எனப்படுகின்றனர்...இறந்த 20 அடிக்குள் அந்த ஆவி அலையும்..உயரக்கிளம்பவும் முடியாது..வெளியே செல்லவும் இயலாது..அருளாளர்களின் ஆசி கிடைத்தால்தாம் மோட்சம்.
 ------------------------------------------
பதார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!
 --------------------------------------------
 எல்லா கோயில்களிலும் இப்போதெல்லாம் கோயில் கர்ப்ப கிரகத்தில் அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போட்டிருக்கின்றனர்....டியூப்லைட் ,மற்றும் பாதரச விளக்குகளின் பாதிப்பால் தேவதைகள் சக்தி இழக்கும்..இதனால் கோயிலில் இருக்கும் நன்மை செய்யும் தேவதைகள் வெளியேறக்கூடும்....நெய்தீபம்,மற்ரும் நல்லெண்ணெய் தீபம் மட்டுமே தேவதைகளை மகிழ்ச்சி படுத்தும்..அந்த இடத்தை சுற்றி சுற்றி வரும்!! வணங்குவோர்க்கு ஆசியும் கிடைக்கும்!!.

 -----------------------------------------------
ஜாதகத்தில் செவ்வாய்,சனி நன்றாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறுகிறார்கள்..குரு,சுக்கிரன் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அதிர்ஷ்டவசமாக சுலபமாக முன்னேறிவிடுகிறார்கள்...மாமனார் சொத்தோ ,தந்தை சொத்தோ அவர்களுக்கு இயல்பிலேயே சுகவாசியாக வாழ வைத்துவிடுகிறது..அல்லது பினாமியாக கூட இருக்கலாம் 
 ------------------------------------------------
 தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது..
 -----------------------------------------
 ஜாதகத்தில் மாந்தி என இருப்பதை பார்த்திருப்போம்..மாந்தி என்பது சனியின் புத்ரன் அகும்..மாந்தி பற்றி கேரள ஜோதிடர்கள் அதிகம் பயப்படுவர்..அதை பற்றியே பலன் சொல்வர்..தமிழகத்தில் சனிக்குதான் அதிக முக்கியத்துவம்..மாந்தி சனியின் பலன்களை ஒட்டியே இருக்கும்...சனி போலவே மாந்தி லக்னத்துக்கு மறைந்து இருந்தால் நல்லது 2,7 ஆம் இடங்களில் இருந்தால் திருமணம் லேட் ஆகும் ..குடும்பம் அமையாது என சொல்லப்படுவதுண்டு..6,10,11 ல் இருந்தால் நல்ல யோகத்தை தருகிறது

சனி, 6 செப்டம்பர், 2014

லட்சுமி கடாட்சம் உண்டாக செல்வவளம் பெருக எளிய பரிகாரம் ;ஜோதிடம்

சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள் இனிப்பு,பால்,மல்லிகைப்பூ, இவற்றில் ஒன்றையாவது வாங்கினால் செல்வம் பெருகும்..வீண் செலவுகளை குறைக்கும்..விருத்தியாகும்...

பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்..நோய்கள் பாதிப்பு குறையும்..மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்...முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வாக்கு வளரும்..செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்..மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!

கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வையுங்கள் வாஸ்து மீறல்கள் நீங்கி தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் கண் திருஷ்டி போகும்..யனை என்பது குருவின் வாகனம் இதனை வாசல் பகுதியில் சிலையாக வைக்கும்போது செல்வாக்கு அதிகரிக்கும்..முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி இருப்பார்கள் இது களிற்றுப்படிகள் எனப்படும் இப்போதெல்லாம் நிறைய மாடர்ன் டிசைன்கள் வந்துவிட்டன...ஆனால் அந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது..

தெரு வழியே யானை போனால் தண்ணீர் கொடுத்து வீட்டின் மீது தெளிக்க செய்யலாம்...இதனால் தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்..வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்...கரி ,விறகு ,பஞ்சு  போன்றவை வாங்கக்கூடாது..


பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில்  இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்...

புதன், 3 ஏப்ரல், 2013

சந்தனம்,விபூதி,குங்குமம் நெற்றியில் பூசிக்கொள்வது ஏன்..?

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

புதன், 21 நவம்பர், 2012

நிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வழி


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!


ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்துஇ சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல் தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!

ஒருநாள்... காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோதுஇ பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!

காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932)இ ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகான். அப்போதுஇ கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில் நீராடிய சுவாமிகள் அந்தணர்களுக்குத் தானம் அளித்து தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. 'ஈச்சங்குடியில் உள்ள அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில் எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்' என விரும்பினார் பெரியவாள்.

காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி பெங்களூருவில் இருந்து அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா 'ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது பண்ணு!' எனச் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டார் அவர்.

அந்தக் கோயில் குறித்தும்இ ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும் ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும் அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.
என்ன நினைத்தாரோ... சட்டென்று அன்பரிடம்'ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?' என்றவர் ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும் அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி 'இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்' என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி 'இது என் பாக்கியம்! என் பாக்கியம்!' என்று சொல்லி ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.

'எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம்இ தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!' என ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.

பிறகென்ன... அந்த வீடுஇ விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில்இ வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில் குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம் 8.1.94. அதாவது தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம் அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!

பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல் 'ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்' என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.

வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர் அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். 'இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!' என சொல்லாமல் சொல்லி ஆசி வழங்கினார்.

ஈச்சங்குடி வேத பாடசாலை அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால் வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில் அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால் நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!

அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்றுஇ அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால் ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்


மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்

ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது. கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. 'சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்'. ' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லிவிட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது. 


ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல, மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா. 

ஏழு,எட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறுவென்று கொட்டகை போடப்பட்டது. 

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று...

 பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'சுவாமி ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டார். 

பதினொன்னரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே'??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா. 

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. '' யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம்வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'

' ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா இசைஇ பிரவசனம் பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? . 

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் ' 'அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!' சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார். 

'ஆமாம்!இ பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டுவச்ச வில்வகூடை தான் இது.' ' யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன்இ தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான். 

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான். 

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன? 

'புரந்தர கேசவலு''ங்கய்யா.

'தமிழ் பேசறியே எப்படி??'

'அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு.ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.

''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??'

'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாருஇ '' ஏலேஇ புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க. சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க'' 

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார். 

'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார். 

'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதைகேக்கணும்''. மஹா பெரியவா புலகாங்கிதமானாள். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார். 

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன்நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

' சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தராஇ நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமிஇ எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தராஇ உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார். 

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறினா. 

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' . 

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

''புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்'.

கேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்


கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.


அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும் அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி 'கவலைப்படாதீங்க கண்பார்வை கிடைச்சுடும். ஆனால் நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி கும்பகோணம் திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்'னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில் குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும்இ ஆரத்தி எடுத்துக்கொண்டவள்இ தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர் 'அம்மா... இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு' என்று சொல்லி யிருக்கிறார். இவளும்இ 'பரவாயில்லை... எடுத்துக்கோங்க' என்றாளாம். உடனே அந்தக் குருக்கள் 'நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?' என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக் குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறார்கள். 'காஞ்சிபுரத்தில் இருக்காரே சங்கர மடத்தில்... அவரை தரிசனம் செய்யுங்கோ' என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்றுவிட்டு அப்படியே காஞ்சிபுரத்துக்கு வந்தாளாம். அன்று சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா 'என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டயே கேளுங்க!' என்றார். அத்துடன் அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.

அதே நேரம் அந்தப் பெண் 'குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!' என்றாளாம் சத்தமாக... பரவசம் பொங்க!

ஆமாம்... காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. 'நம்பினார் கெடுவதில்லை... இது நான்கு மறைத் தீர்ப்பு' என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும்இ வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோதுஇ அவர் என்ன சொன்னார் தெரியுமா?

'என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன்இ உன்னோட நம்பிக்கைஇ நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை... எல்லாம்தான் காரணம்!' என்றார்'' எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.

''பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால்இ அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).

பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும் ஒரு நல்ல காரியம் சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலைஇ அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர் ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!

அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து 'இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்' என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா அந்த பக்தரைக் கூப்பிட்டுஇ 'இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!' என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.

மகா பெரியவாளுக்கோஇ தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல் தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து பக்தரை மகிழ்வித்த நிம்மதி.

ஆமாம்... மகா பெரியவா எதைச் செய்தாலும் அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மாரியம்மன் உருவான கதை

ஆடி மாசம் பொறந்தாச்சுன்னா மூலைக்கு மூலை அம்மன் கோயில்ல கூழ் ஊத்த ஆரம்பிச்சிடுறாங்க ...மாரியாத்தா கூழ் தான் குடிக்குமா...பெப்சி எல்லாம் குடிக்காதா...? ஒரு சேஞ்ச்க்கு அதையும் கொடுங்கடா....என ச்லித்துக்கொள்பவரா நீங்க..?.நம் முன்னோர்கள் இந்த சம்பிரதயம் எதுக்கு வெச்சிருக்காங்க தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க..இன்று நாகரீகம்,வசதி வாய்ப்பு,கம்ப்யூட்டர்,கார்,பைக் என நாம் பரபரப்பாக இருந்தாலும் 20 வருடங்களுக்கு முன்பு ஐ.டி கம்பெனியை நம்பி நாம் இல்லை..விவசாயத்தை நம்பித்தான் இருந்தோம்....ஒண்ணு முதலாளி..அல்லது கூலி...இவர்களை சார்ந்த வணிகர்கள் இதுதான் பெரும்பான்மை...சாதாரண பாமர மக்களை அதிகம் கொண்ட,கிராமங்களை அதிகம் கொண்ட நம் இந்தியாவில் மழையை நம்பித்தான் அனைவரும் இருந்தோம்...

மழை பெய்தால்தான்..விவசாயம் செழிக்கும்..விவசாயம் செழித்தால்தான் எல்லாம் செழிக்கும்..எனவே மழை வேண்டி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தெய்வம் உருவாக்கப்பட்டது..பெண் தானே இரக்கமுள்ளவர்..தாயை விட அன்பு ஏது? எனவே பெண் தெய்வத்தை வணங்கினர்..மாரி என்றால் மழை..மழைக்கான தெய்வத்தை மாரியம்மன் என வழிபட்டனர் அதற்காக நேர்த்திக்கடன் செலுத்தினர்..நோயை விரட்டும் தெய்வமாகவும் மாரியம்மன் வழிபடப்பட்டது..ஒவ்வொரு கால சூழலிலும் ஒவ்வொரு நோய் நம்மை தாக்கும்..மழைக்காலத்தில் ஒரு சில நோய்கள்...வெய்யில் காலத்தில் சின்னம்மை,பெரியம்மை ,வெட்கை போன்றவை..இவற்றை குணமாக்கும் அருமருந்துகள் வேப்பிலை,மஞ்சள்தான்..இவை இரண்டும் அற்புத கிருமி நாசினிகள் என இப்போதான் விஞ்ஞானிகள் தலை சொறிந்து கொண்டே ஒப்புக்கொள்கிறார்கள் ஆனா நம்ம முப்பாட்டன் இதை அப்பவே தெரிஞ்சி வெச்சிருந்தான்..

இன்னிக்கு அமெரிக்காகாரன் இதை எப்படியாவது நம்ம சொத்தாக்கிடனும்னு துடிக்கிறான் ...ஆனா இந்த மரம் நம் இந்திய மண் சூழலுக்குத்தான் பழுதில்லாத அற்புத மருந்தாக விளையும்..ஆடி மாதம்  தமிழ் மாதங்களில் நாலாவது மாதமாக வருகிறது..இதை நம் முன்னோர்கள் ஒரு ராசியில்லாத மாதமாகவே கருதி வந்தனர்..நோய்கள் உண்டாக்கும் மாதம் மாதங்களில் ஒன்றாகவும்,உள்ளுறுப்புகள் பாதிக்கும் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் உற்பத்தியாகும் மாதமாகவும் கருதினர்..இந்த பயத்தால் முதலுதவியாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் என கருதினர்..அதற்காக ஒரு மருந்தை தயாரித்தனர்..அதுதான் கூழ்..இதில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ராகியை கூழாக்கி அதில் மருந்தான வேப்பம்பூ,கலந்து கொடுத்தனர்..சும்மா கொடுத்தா நம் மக்கள் குடிப்பானா...பிகு பண்ணுவான்...அதுக்காக உண்டாக்கப்பட்டது திருவிழா...அப்பல்லாம் கூலி ஆட்கள்தானே அதிகம்..அவன் எங்கிருந்து கூழ் தயரிக்க முடியும்..? திருவிழா வெச்சா பணக்காரன் தான் நடத்த முடியும்..அவன் கிட்ட பணம் வர வைக்கவும் திருவிழா உதவும்..சும்மா கேட்டா தருவானா..சாமிக்குன்னு கேட்டா அள்ளி தருவான்..இதனால் ஏழைகளின் பசியும் அடங்கியது...ஒரே கல்லில் நம் முன்னோர் எத்தனை மாங்கா அடிச்சிருக்காங்க பாருங்க!!

புதன், 14 மார்ச், 2012

சதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அற்புதம்;


சதுரகிரி சித்தர்கள் வாழும் பூமி.தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம்.இக்கோயில் பற்றி நான் நேற்று எழுதியதை படித்த கோவை மணிகண்டன் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டார்..என்ன சார்..முக்கியமான நிறைய விசயம் எழுதாம விட்டுட்டீங்க..அங்க எவ்ளோ அற்புதங்கள் இருக்கு தெரியுமா..என்றார்..எனக்கு தெரிஞ்சத மட்டும் எழுதினேன்...எனக்கு வழிகாட்டி யாரும் இல்லாம தான் போனேன்..அதனால நிறைய எழுத முடியல..உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க என்றேன்...அவர் சொல்ல ஆரம்பித்தார்.நான் சின்ன வயசுல இருந்து அங்க அடிக்கடி போய்கிட்டு இருக்கேன்..மலையை சுத்தி ஜோதி விருட்சம் மரங்கள் நிறைய இருக்கு...இந்த இலைகளை பறித்து திரிக்கு பதிலாக தீபம் போடலாம்...கல்தாமரை எனும் இலைகள் இங்கு நிறைய இருக்கு.இது சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்கும்..நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் தரும்..இதை வெளியூர் வைத்தியர்கள் நிறைய பறித்து செல்வார்கள்..இது தாமரை இலை போல இருக்கும்..இது 10 இலை சேர்ந்தாலே ஒரு கிலோ வரும்...இது மார்க்கெட்டில் 350 விலை மதிப்பு இருக்கு..குங்கிலியம் மரம் அதிகம் இருக்கு.அந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் அவ்வளவு மணமாக இருக்கும்.இந்த மரத்தின் பிசிந்தான் சாம்பிராணி தூள் ஆக்குகிறார்கள்...இந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் மதிப்பு மட்டும் கிலோ 150 ரூபாய்.இங்குள்ள மக்கள் இதைதான் அதிகம் விற்று பிழைக்கிறார்கள்...பெரியாநங்கை செடி இங்கு அதிகம் உண்டு..இதன் வேரை 48 நாட்கள் ஊற வைத்து அருந்தி வந்தால் பாம்பின் விஷம் கூட உடலில் ஏறாமல் முறியும்...பாம்பு இந்த செடியை கண்டால் நடுங்கும்..இதைபோலவே நாகதாளி வேரும்...பாம்பு அஞ்சும் மூலிகை....செந்நாயுருவி இங்கு நிறைய இருக்கு..இதை மென்று சிலர் வசியமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...செங்குமரி,கருப்பு மஞ்சள் போன்றவையும் இங்கு உண்டு..இது இரும்பை தங்கமாக்கும் மூலிகயில் முக்கியமானவை ....

நாங்கு குன்றுகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் இருந்து காவல் காக்கின்றனர்...நடுவில் சுந்தரமகாலிங்கம்,சந்தன மகாலிங்கம் இருக்கின்றனர்..வெள்ளைப்பிள்ளையார்...தவசிப்பாறை..குகை மகாலிங்கம் சிவனை அவசியம் தரிசிக்கணும்..மலையின் உச்சியில்,சிறிய குகை இருக்கும்..இங்கு ஒரு புலி செல்லும் அளவுக்கு குகை வாசல் இருக்கும்.இதனுள் சிறிது தூரம்..தவழ்ந்து சென்று..சிறிது தூரம்..ஊர்ந்து சென்று,நுழைந்தால் நின்று கொள்ளும் அளவு இடம் இருக்கும்.அங்கு பெரிய மகாலிங்கம் தரிசனம் செய்யலாம் என்றார்..இன்னும் பல அற்புதங்கள் சொன்னார்..எழுதுகிறேன்..!!!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

சுவாமியே சரணம் ஐயப்பா..!


கார்த்திகை 1 ந்தேதி முதல் சபரிமலை சீசன் ஆரம்பித்து விட்டது...இனி எங்கு பார்த்தாலும் ஐயப்பன் கோசம்தான்...ஒரு நாளைக்கு மூணு வேளை குவார்ட்டரும்,கப்புமாக அலைந்த குப்புசாமி ராமசாமி எல்லாம் ஐயப்பசாமி ஆகிவிட்டனர்..அவர்களை இனி சாமி என்றுதான் அழைக்க வேண்டும்..காலையில் பவானி கூடுதுறை சென்று இருந்தேன்..கர்நாடகா,ஆந்திரா பக்தர்களால் பவானி கோவில் திணறியது..எங்கு பார்த்தாலும் டூர் பஸ்களும்,வேன்களுமாக நிற்கின்றன..வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்குமாம்...கோவை என்.ஹெச் ரோடு திணறிவிடும்...இவர்கள் இந்த வழியே.கொடுமுடியும்
செல்வார்கள்...சபரிமலை செல்லும் வழியில் இருக்கும் கோயில்களில் எல்லாம் தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மதுரை
,திருச்செந்தூர் சென்று வருவார்கள்...

அசைவம் சாப்பிட்டு தினசரி குவார்ட்டர் அடிப்பவர்களும் மாலை போட்டுவிட்டால் சந்தன பொட்டும் காவி வேட்டியுமாக பக்தியுடன் காணப்படுகிறார்கள்..அவர்களை பார்த்தாலே கையெடுத்து கும்பிட வேண்டும் போலிருக்கிறது..எல்லோரும் சாமி சாமி என அழைப்பதாலும் ,ஐயப்பன் கோபக்காரர் என்பதாலும் ஐயப்ப வழிபாட்டுக்கே உரியஆச்சாரங்களை சுத்த பத்தமாக ஒழுக்கத்துடன் 48 நாளைக்கு கடை பிடிப்பார்கள்...சிலர் குடும்பத்தில் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்தாலும் ஐயப்பன் காப்பாத்துவார் என கடனை வாங்கி கொண்டு மலைக்கு போய் வருகிறார்கள்...வருடா வருடம் கன்னி சாமி அதிகரித்து கொண்டே தான் இருக்கிறார்கள்....

வருடம் முழுக்க இருக்கும் கோபம்,ஆத்திரம் குறைந்து பலர் சாந்த சொரூபியாக இருப்பதை இந்த நாட்களில் பார்க்கிறேன்..அதே சமயம் மலைக்கு போய்விட்டு வந்ததும்,மாலையை கழட்டி விட்டு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும் டாஸ்மாக் கடைக்கு ஓடுவதையும் பார்த்திருக்கிறேன்...

http://1.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TOj-sfpbZvI/AAAAAAAABgY/CoDo2JTFKtw/s320/angappanaicken-street-88.jpg

சிலருக்கு கார்த்திகை பிறந்ததும் மாலை போட்டே ஆக வேண்டும்..ஐயப்பன் கூப்பிடுறான் போறேன்..என வருசா வருசம் மாலை போட்டு விடுவார்கள்.சிலர் ஒரு முறை மாலை போட்டு விட்டு மலைக்கு போய் வந்ததும் இந்த வேலை நமக்கு ஆகாது...அடுத்த வருசம் என்னை கூப்பிடாத மாப்ள...நம்ம வீட்டு பக்கத்துலியே ஐயப்பன் கோயில் கட்டிட்டாங்க.அங்கியே அவரை கும்பிட்டுக்கிறேன்...என்பார்கள்...

சிலருக்கு ஐயப்பன் கோயில் போய் வருவது பெருமையான விசயம்...என் வீட்டுக்காரரு மாலை போட்ருக்காரு..உங்க மருமகனை வழி அனுப்ப அம்மாவை கூட்டிகிட்டு வந்துடுங்க...அப்பா..!என மனைவி சொந்தக்காரர்களிடம் சொல்லி அழைப்பதை பெருமையாக பார்க்கும் கணவர் சாமிகளும் உண்டு...பல இடங்களில் இது ஒரு மொய் கணக்காகவும் இருக்கிறது...வழி செல்வுக்கு பணம் கொடுத்து அனுப்பும் மொய் கணக்கு.....
ஆந்திராவுக்கு திருப்பதி போல...கேரளாவுக்கு சபரிமலை தங்க சுரங்கம்..திருப்பதி போலவே கேரளாவுக்கும் தமிழன் தான் படியளக்கிறான்..

http://1.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TOj-3uak2FI/AAAAAAAABgc/jpcV06AH1Ps/s320/tblgeneralnews_81756228209.jpg

ஐயப்பன் ஆலயத்துக்கு பெண்கள் யாரும் செல்ல கூடாது என்பது விதி...இது பழங்கால விதி..காரணம் புலி நடமாட்டம் அதிகமுள்ள சபரிமலையில்பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாள் பிரச்சனை வழியில் ஏற்பட்டால் , ரத்த வாடைக்கு புலிகள் சூழ்ந்து விடும்..பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் தான்...அன்று காட்டுக்குள் 16 கிலோ மீட்டர் நடந்தார்கள் ..கடும் புதர்கள் சூழ்ந்த பாதை..இன்று ஐயப்பன் கோயில் வாசலில் பஸ் நிறுத்தும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள்...பெரிய வழி பாதை ,சிறிய பாதை என இரண்டும் உண்டு....சிறிய வழி பாதைதான் பலரது சாய்ஸ்...சபரிமலையில் சீரகதண்ணீர் ,பஞ்சாமிர்தம் மாதிரி ஒரு பிரசாதம் சூப்பரா இருக்கும்..எங்கு பார்த்தாலும் நெய் வாசம்..ஐயப்பன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்த நம்பியார் 6 மாதம் சிகரெட் பிடிப்பார்..6 மாதம் சிகரெட் பிடிக்க மாட்டார்...யார் வீட்டிலும்,ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார்...ஐயப்பனையே நினைத்து உருகி வழிபட்டவர்...ரஜினி,சிரஞ்சீவி வருடம் தோறும் சென்று வந்தார்கள்..பக்தர்களுக்கு தம்மால் இடைஞ்சல் வரக்கூடாது என நிறுத்தி விட்டார்கள்..கஸ்டப்பட்டு நடந்து சென்று18 படிகளை தொட்டு வணங்கி ஏறும் தருணம் சிலிர்ப்பானது...ஐயப்பனை காணும் கணம் மெய் மறந்த நிலைதான்...நான் அனுபவித்திருக்கிறேன்.. .

இந்த ஆந்திரா,கர்நாடகா பக்தர்கள் முரட்டுத்தனமானவர்கள்..பவானி,கொடுமுடி வழியாக இவர்கள் வந்து சாமி கும்பிட்டு விட்டு போகும் தை மாதம் வரை கோவில் பணியாளர்களும்,கடைக்காரர்களும் உசாராகத்தான் இருப்பார்கள்...பெரும்பாலும் இவர்கள் பணம் செலவழிப்பதில்லை..கழிவறையை உபயோகப்படுத்துவதில்லை ..திறந்த வெளிதான்....பவானி,கொடுமுடியில் கடைக்காரர்கள்,கோவில் பணியாளர்கள் ஏதாவது நொரண்டாக இவர்களிடம் பேசி விட்டால்,உடனே அடிதான்....தமிழ்நாட்டு ஐயப்ப சாமிகள் போல இவர்களை சாந்த சொரூபியாக பார்க்க முடியாது வருசம் முழுக்க சாப்பிட்ட கோங்கிரா மிளகா சட்னி ,அடக்கி வைக்கப்பட்ட அந்த நேரத்தில்தாம் முழுசா வெளிப்படும் போல இருக்கு.கடைக்காரர்கள் கொஞ்சம் ஏமாந்தால் சுட்டுவிடும் சாமிகளும் இருக்கிறார்கள்....ஐயப்பன் பாட்டு கேசட் ஹாட் பிசினஸ் எஸ்.பி.பி முதல் இதையே முழு நேர தொழிலாக செய்யும் பாடகர்கள் வரை இந்த மாதம் அடை மழைதான்... மாலை போட்டு விட்டால் ஐயப்பன் சிடி வாங்கத்தான் முதலில் ஓடுகிறார்கள்

பொதுவாக மாலை போட்டு விட்டால் லாகிரி வஸ்துக்கள்,போதை பொருட்கள் உபயொகிக்க கூடாது என்பது விதி...ஆனால் பீடியை கட்டுகட்டாய் இழுக்கும் சாமிகள்,டாஸ்மாக்கில் சுத்தபத்தமாய் குவார்ட்டர் அடிக்கும் சாமிகள் பார்த்திருக்கிறேன்..கவிச்சி தான் ஐயப்பனுக்கு ஆகாது அதனால் சுண்டல் கொடுன்னு வாங்கி சாப்பிடுவார்கள்..

சுற்றுலா சாமிகள் இருக்கிறார்கள்..இவர்கள் சபரிமலை,மதுரை,திருச்செந்தூர் டிரிப் அடிக்கவும்,குவார்ட்டர் அடிக்காம ஒரு மாசம் எல்லாம் இருக்க முடியாது என்பவர்களும்...சபரிமலையில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்திட்டு வரலாம் என கிளம்பும் உளவாளிகளும், 5,7,9,நாள் மட்டும் மாலை போடுவார்கள்..சிலர் ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் மட்டும் மாலை போட்டு செல்வதை பார்த்திருக்கிறேன்...


 48 நாட்கள்...காலை 5 மணிக்கு ஒரு குளியல்..மாலை 6 மணிக்கு ஒரு குளியல்...தகாத வார்த்தைகள் பேசாமல் ,குருசாமிக்கு கட்டுப்பட்டு நாகரீகமுடன்,அமைதியுடன் ,ஐயப்பனை வழிபட செல்லும் ஐயப்ப சாமிகளை நான் வணங்குகிறேன்...இவர்கள் சபரி சென்று வந்தாலும் இதே ஒழுக்கமுடன் வாழ முயற்சி செய்வார்கள்....இதற்குதான் இந்த வழிபாடே துவங்கியது..ஒரு மனிதன் 48 நாட்கள் ஒழுக்கமுடன் இருந்தால் அவன் வாழ்நாள் முழுக்க ஒழுக்கமுடன் வாழ மனம் பழகி கொள்ளும்....

மத்தபடி சில சிரிப்பு சாமிகளுக்கும், நல்ல சாமிகளுக்கும் ஒரு வார்த்தை ..மழை அதிகமா பெஞ்சுகிட்டே இருக்கு மலை பாதையில வழுக்கி விழுந்துடாதீங்க..சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்து போகிறவர்கள் இன்னும் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்...கூட்ட நெரிசலில் குழந்தைகளோடு சிக்கிக்காதீங்க...

சுவாமியே சரணம் ஐயப்பா.