india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மே, 2016

தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை

    
1. தினசரி காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிஷங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோயில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் உத்தம பெண்கள் நல்ல புஷ;பங்கள் மேகம்; சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை மனைவி குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி வேப்;பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோய் நொடியும் விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. துளசிச் செடியிலும் வேப்ப நெல்லி மரத்திலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

5. இரவில் கண்கள் ஓய்வு பெறுகின்றன. காலையில் எழுந்தவுடன் கண்கள் படிப்படியாக அதன் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்தால் மெல்ல மெல்லப் பரவும் ஒளிச்சக்திக்கு ஏற்ப கண்கள் அதன் சக்தியை இரவு உறக்கத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் படிப்படியாகப் பெறுகின்றன. 

6. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

7. சூரியன் உதிக்கும் முன் வாசல் வீடு பெருக்கி நீர் தெளிக்கவும் வெறும் தண்ணீரைத் தெளிக்காமல் பசும் சாணம் சேர்த்துத் தெளித்தால் வெளியிலிருந்து வீட்டிற்குள் எவ்வித விஷக்கிருமிகளும் புகாது. தண்ணீரும் அன்று புதிதாக எடுத்ததாக இருந்தால் நல்லது.

8. அமாவாசை திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.

9. கோலம் போடும் போது ஒரு கோட்டுக் கோலமோ மூன்று இழைக் கோலமோ போடக் கூடாது. இரட்டை இழைக்கோலம் தான் போட வேண்டும். அசுப காரியங்களுக்கு தான் மூன்று இழைக் கோலம் போடுவார்கள்.

10. கோலம் கவர்ச்சியாகவும் அழகாகவும் அமைவது நல்ல சகுனம்.

11. தெற்கு பார்த்து கோலம் போடக் கூடாது. கோலம் தெற்கில் முடியவும் கூடாது.

12. உணவு உண்டபின் குளிக்கக் கூடாது.

13. நள்ளிரவில் குளிக்கக் கூடாது.
14. அமாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

15. பொதுவாக ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. தீபாவளி அன்று ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று மட்டும் விதி விலக்கு குளிக்கலாம். தீபாவளி அன்று மட்டும் விடியற்காலை 4மணி முதல் 6மணிக்குள் கங்காதேவி அனைத்து நீரிலும் பிரதட்சனம் ஆகிறாள். அதற்காகத்தான் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா! என்று பெரியோர்கள் கேட்பார்கள்;.

16. உறவினர்களை ஊருக்கு அனுப்பி விட்டு உடனே எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.

17. நாளெல்லாம் உடுத்தியிருக்கும் ஆடையோடும் பெண்கள் புடவையோடும் குளிக்கக் கூடாது. அசுப காரியத்திற்கு மட்டுமே அப்படி குளிப்பார்கள்.

18. ஆடையில்லாமலும் குளிக்கக் கூடாது. ஏதேனும் துண்டை கட்டிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.

19. சூடான தண்ணீரை ஒரு போதும் தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலையில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைகின்றன. மிக குளிர்ந்த தண்ணீரையும் தலையில் ஊற்றக் கூடாது.

20. அமாவாசை பௌர்ணமி தவிர பிற நாட்களில் கடலில் நீராடக் கூடாது. மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் கடலில் நீராடக் கூடாது.   

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை


நல்ல சந்தன ஊதுபத்தி இரண்டை கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமான அறையில் வைத்துவிட்டு 20 நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும் தீரும்.மனம் லேசாகும்..
 
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.


சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.


இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.



பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.


பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது.

அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வித்தியாசமான ஆலயங்கள்;சக்திவாய்ந்த வழிபாடு

நமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.

●  கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.


●  ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.


●  புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோவில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதி யார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து செல்வாராம். இக்கோவில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார்


.●  மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன.

●  ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து,
அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார் கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோவில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

●  மயிலம் முருகன் கோவிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.


●  அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோவில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரகமாக இருக்கிறது. இக்கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முற்பட்ட கோவிலாகும்.

●  நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சந்நிதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.


●  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோவில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த் தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து  வருகிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


●  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத் தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


●  மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு- தெற்கு கோபுரங்களுக்கிடையே  கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சந்நிதியை இரண் டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


●  திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.


●  108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

●  கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

●  விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனா பிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.


●  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.


●  அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகை யால் ஆனவர்.
●  உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

●  திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சந்நிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.


●  புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோவில் திங்கட் கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோவில் மூடியிருக்கும்.
●  தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. இக்கல் சந்திரனி டமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.

●  நாம் சாதாரணமாக கோவில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால் இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

புதன், 24 செப்டம்பர், 2014

குடிப்பழக்கம் ,பந்தயத்தால் துன்பப்படுவோர் ஜாதகம் ;மங்கள்யான் -செவ்வாய்-ஜோதிடம்

ஜோதிடத்தில் பொதுவாக குடிப்பழக்கம் என வைத்து சொல்லும்போது செவ்வாய் தான் முக்கிய காரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது....செவ்வாய் தான் குணத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது...தமிழ்நாடு செவ்வாய் பூமியாக இருப்பதால்தான் செவ்வாய்க்கு அதிபதியான முருகன் சிலைகளை அதிகம் வைத்து வழிபட வைத்தனர் நம் முன்னோர்.இன்று மங்கள்யான் விண்கலம் செவ்வாயை ஆய்வு செய்துவரும் நிலையில் ,செவ்வாய் கிரகம்தான் இதுக்கெல்லாம் காரணம் என சொல்லலாமா என கேட்காதீர்கள் ..சந்திராயன் விண்களம் சந்திரனை  ஆய்வு செய்தாலும் பெள்ர்ணமி அன்று கடல் பொங்கத்தான் செய்கிறது காரணம் சந்திரனின் ஈர்ப்பு சக்திதான்...எத்தனை அறிவியல் வளர்ந்தாலும் இயற்கைதான் எப்போதும் வெல்லும். அதைப்பற்றி தெரிந்துகொள்ளலாமே தவிர அதை வெற்றிக்கொள்ள முடியாது..

குடிப்பழக்கம்,சூதாட்டம் பற்றி ஒரு ஜோதிட பாடல் இவ்வாறு சொல்கிறது.

மங்களன் ராசிதன்னில்
மாபுதன் வாசம் செய்ய
அங்கவன் தன்னைச் செவ்வாய்
அனைத்திட நோக்க வந்தோர்
பந்தய போட்டியாலே
பணமதை விரயமாக்கி
நிந்தனை போதையாலே
நெறியிலா துழல்வாராமே !’’

செவ்வாயின் ராசிகளான மேசம்,விருச்சிகம் ஆகிய ஒன்றில் புதன் இருக்க அப்புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும் போட்டி பந்தயம்,சூதாட்டம்,போன்றவற்றில் பணத்தை இழப்பதோடு குடிக்கு அடிமையாகி நெறி தவறியும் நடப்பர் என்று சொல்கிறது இந்த பாடல்...

செவ்வாய் சக்தியை குறிக்கிறது...அதனுடைய இருக்குமிடம் ,பார்வை பொறுத்து ஆக்கம் மற்ரும் அழிவை தருபவராக இருக்கிறார்..செவ்வாய் உணர்ச்சிபூர்வமான கிரகம்..ஒருவருக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியை ஆட்சி செய்கிறது.....குழப்பம்,சண்டை,வாக்குவாதம்,விபத்து,கலவரம் இவற்றுக்கு செவ்வாய்தான் அதிபதி..புதன் ஒரு சஞ்சலம் நிறைந்த கிரகம் மாறிக்கொண்டே இருக்கும் குணத்தை சொல்கிறது...சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டது யாருடன் சேர்கிறாரோ அதற்கேற்ப ஆட்டி வைக்கும்...தீயவரோடு சேர்ந்தால் தீயவராகிவிடுவார்...இவர்கள் இருவரும் சேர்ந்தால் எல்லா தீய செயல்களிலும் ஈடுபடுவார்கள் அதாவது ஜாதகரை ஈடுபட செய்வார்கள்...

சனி, 5 ஜூலை, 2014

தமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்

 பரபரப்பு விற்பனையில் ..முதலில் நான் தயாரித்த 5 கிலோ மூலிகை சாம்பிராணி தீர்ந்துவிட்டது ....இனி தயாரித்துதான் கொடுக்கனும் .என் மேல் வைத்த நம்பிக்கையால் வாங்கிய நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த விலைக்கு 100 சதவீதம் நான் சொன்னபடி 23 மூலிகைகள்,வாசனை பொருள்கள் கொண்டு தரமாகவே தயாரித்து கொடுத்திருக்கிறேன் ...ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி ...இது கெட்ட சக்தியை வீட்டில்,தொழில் செய்யுமிடத்தில் இருந்து விரட்டும் செல்வவளம் உண்டாக்கும்..சாம்பிராணி புகை போல பயன்படுத்தலாம் தெளிவாக அறிய முந்தைய பதிவை படிக்கவும்./.தேவைபடுவோர் இன்பாக்சில் சொன்னால் போதும் ..இல்லையேல் மெயில் செய்யவும்.sathishastro77@gmail.com.அடுத்த முறை தயாரிக்கும்போது அனுப்புகிறேன் ...!!இதன் விலை 250 கிராம் 500 ரூபாய்...தேவைப்பட்டால் செல்லில் அழைக்கவும் 9443499003





மரகத பச்சையால் தெய்வ சிலைகள் இருக்கும் கோயில் மிக சக்தி வாய்ந்தது...அதனை நாம் கண்களால் பார்த்து வழிபடும்போது, அதன் சக்தி நமக்குள் ஊடுருவி நமக்குள் வசீகர சக்தியை உண்டாக்குகிறது..சென்னையில் மிக சக்தி வாய்ந்த கோயில்களில் முக்கியமானது சிறுவாபுரி முருகன்..உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அது உடனே நிறைவேறுகிறது...காரணம் மிகப்பெரிய மரகத பச்சை லிங்கம் ..இதைப்போல வேறு உலகில் எங்கும் இல்லை எனலாம்..அதனை வழிபடுவதே பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இங்கு பெரும்பாலான சிலைகள் பச்சைக்கல்லால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் 12 விதமான சிறப்புகள் பெற்றது...!!

எனக்கு என்ன வேணும்னு கடவுளுக்கு தெரியும். அதனால எதையும் கேட்டு வேண்ட மாட்டேன் என்பது அறியாமை..உண்மையில் தன் அம்மாவிடம் குழந்தை இது வேண்டும் என அடம்பிடித்து வாங்குவது போல, மனம் உருக கடவுளை வேண்டி,நமக்கு தேவையானதை கேட்டு வணங்க வேண்டும். நிச்சயம் அது கிடைக்கும் என மகான்கள் அருளுரை பலவற்றில் இருந்து நான் கற்ற பாடம்.

 தினம் மாலை 6 மணிக்கு மண் சட்டி விளக்கில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்ற அந்த வீட்டில் துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..!!

 காலபைரவர்கள் மொத்தம் 64.இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் ஆலயம் காசிக்கு அடுத்து தர்மபுரி அதியமான் கோட்டையில்தான் இருக்கிறது...சக்திவாய்ந்த முஸ்லீம் படையெடுப்பை சமாளிக்க முடியாதே என மன்னன் அதியமான் கவலையில் இருந்தபோது, ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரையின் பேரில் காசியில் இருக்கும் பைரவர் சிலையில் ஒன்றை எடுத்து வந்து தன் கோட்டையில் அதியமான் பிரதிஷ்டை செய்தார்..அந்த போரில் முஸ்லீம்களையும் வென்றார்..எனவே எதிரி தொல்லை இருப்பவர்கள்,கடன் தொல்லை,நோய் தொல்லை,வழக்கு பிரச்சினை இருப்பவர்கள் இவரை வணங்கினால் தேய்பிறை அஷ்டமி பூஜை செய்தால் விடுதலை அடையலாம்..!!

இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.

அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும்

இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

 செங்கல்பட்டு அருகில் இருக்கும் திருக்கழுகுன்றம்...இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தியாகிறது என்கிறார்கள் ..கன்னி ராசியில் குரு வரும்போது இங்கு பெரிய விழாவாகவாக கொண்டாடுவது ஐதீகம் கன்னி ராசி லக்னக்காரர்கள் இங்கு வழிபட்டால் பல பிரச்சினைகள் தீர்கிறது!! இரு முனிவர்கள் கழுகாக பிறந்து இங்குள்ள குளத்தில் நீராடி உச்சிக்கால பூஜை பிரசாதத்தை உண்டு சாப விமோசனம் பெற்றனர்..அந்த இரு கழுகுகள் தினசரி மதியம் வந்து பிரசாதம் உண்டு வந்ததை பலரும் கண்டுள்ளனர்.

 -தொடரும்-

வெள்ளி, 30 மே, 2014

இந்தியாவின் எதிர்காலம் ஜோதிடம்

சுதந்திரம் பெறும்போது இந்தியா வுக்கு ஜாதகம் கணித்தால் கடகம் ராசி வரும்.அந்த கடக ராசியில் எத்தனை கிரகம் இருக்கிறது என பாருங்கள்.இப்போது அந்த கடகத்தில் தான் குரு ஜூன் 19 அன்று உச்சம் பெற போகிறார் கிட்டதட்ட 10 வருடம் கிரகம் இல்லாத ராசி கட்டத்தில் உலா வந்துகொண்டிருந்த குருவுக்கு கடகத்தில்தான் நிறைய கிரகம் ராசியில் நுழையப்போகிறார் தனியாக பயணம் செய்த ஒருவர் கூட்டமாக நண்பர்களை பார்த்தால் சந்தோசம் பிச்சிக்காதா...அப்படித்தான் குரு பல கிரகம் கூட்டு அமைப்பில் இருக்கும் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனதும்,அதன் காரகத்துவங்களை குரு பிரகாசப்படுத்தப்போகிரார் குரு பார்க்க கோடி நன்மை உண்டாகிறது. கேதுவை பார்ப்பதால் மதம்,ஆன்மீகம் செழித்தோங்கும்..எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக அவரவர் மதத்தை பின்பற்ற அரசு உதவும்.மக்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வார்கள் அந்நிய நாட்டு மொகம்,கலாச்சரம் குறையும்.பல நன்மைகளை இந்தியாவுக்கு வாரி வழங்கப்போகிறார்.

குரு பெயர்ச்சி ஆவதற்கு முன்பே 2 மாதங்களுக்கு முன்பே பலன் தருவார் அப்படி பார்த்தால் பலமான ஆளுங்கட்சி அமைந்தது தான் அந்த பலன்.இனி மிக பிரபலமாக இந்தியா பேசப்படப்போகிறது ..பல ஆயிரம் நன்மைகள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் உண்டாகப்போகிறது என என் ஜோதிட கணக்கு சொல்கிறது...ராசிக்கு கண்டக சனி நடப்பது உள்நாட்டு கலவரத்தை சொன்னாலும் நீதி,வளம்,முன்னேற்றம் கண்கூடாக தெரிகிறது.பொருளாதார வளர்ச்சி சிற்ப்பாக இருக்கும் என்பதே இப்போது தெளிவாக தெரிகிறது!

திங்கள், 19 மே, 2014

மோடி ஜாதகமும் ராகுல் ஜாதகமும்

பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் பாரதியா ஜனதா கட்சிக்கும் ,பிரதமராக வரும் 24ஆம் தேதி பதவி ஏற்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் மண் கவ்வ வைத்து 37 இடங்களை பிடித்து பெரும் சாதனையை செய்த ஒன் மேன் ஆர்மி அம்மா ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...நாம் முன்பே சொன்னது போலதான் நடந்திருக்கிறது போனில் பாராட்டிய நம் வாசகர்களுக்கு நன்றி...ஜெயலலிதா அவர்களது மகம் நட்சத்திரம் சிம்மம் ராசிக்கு யோகமான நாளில்தான் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது தேர்தல் தேதியும் யோகம்...முடிவுகள் அறிவுக்கும் நாளும் அவருக்கே ஜெயம் என்றானது தமிழ் வருடத்தின் பெயரே ஜெய வருடம் அப்புறம் என்ன இறையருள் அசி அவருக்கு பரிபூரணமாக இருந்திருக்கிறது!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்கள் காங்கிரசை கழுவி துடைத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டார்கள்..கூட்டணி தர்மம் எனும் பெயரில் கூட்டணி கட்சிகள் அடிக்கும் கூத்துகளை கண்டுகொள்ளாமல் இருந்ததர்கான தண்டனை...மக்களின் கோபத்தை  தேர்தலின் போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு ஜீவித்தனமாக இருந்திருக்கிறார்கள்..ராகுல் ஜாதகத்தின் மகிமை பற்றி முன்பே நான் எடுத்து சொல்லி இருக்கிறேன்..ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா..?

வெறும் ராசியை வைத்து பலன் பார்க்க முடியாது. ஜாதகத்தில் இருக்கும் கிரக பலம்தான் முக்கியம் என்பதற்கு உதாரணம் மோடி..ராகுல்..இருவருமே விருச்சிகம் தான். ஒருவர் அபார வெற்றி, ஒருவர் படு தோல்வி.ராசியின் அதிபதி செவ்வாய் பலம் பெற வேண்டும்...பிறக்கும்போது கிரகங்கள் பலமான இடத்தில் அமைந்திருக்கவேண்டும்..தற்சமயம் நல்ல திசாபுத்தியும் இருக்க வேண்டும் ராசி அதிபதி பலம் இழந்த ராகுல் வாழ்வில் எதையும் சாதிக்கவில்லை.. ராசி அதிபதி பலம் பெற்ற மோடி தொட்டதெல்லாம் வெற்றிதான்..



ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்

காங்கிரசை எதிர்க்க பவர் ஃபுல்லான பிரதமர் வேட்பாளர் இல்லாமலும், உள்கட்சி பகையாலும் பா.ஜ போனமுறை தோல்வி அடைந்தது ஆனால் இந்த முறை அப்படி இல்லை...மோடி பலம் வாய்ந்தவராக எல்லா வகையிலும் தகுதியானவராக மக்கள் ஆதரவு பெற்றவராக களம் காண்கிறார் இப்பவே காங்கிரசுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வருகிறது இன்னும் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் இப்போது இருப்பது போல பல மடங்கு மோடி ஆதரவு அலை பெருக ஆரம்பிக்கும்...அதை முறியடிக்க காங்கிரஸ் பக்கம் வசீகரமான ஆட்களோ மக்கள் ஆதரவு பெற்றவர்களோ இல்லை..மாறாக எதிர்ப்பு அலை சூறாவளியாக வீசும்.
ராஜராஜ சோழன் விருச்சிக ராசிக்காரர்களைதான் எப்போதும் எதிரிகளிடம் தூது அனுப்புவாராம்...காரணம் எதிரிக்கு தகுந்தாற்போல வளைந்து கொடுத்து காரியத்தை சாதித்து விடுவார்கள்..எதிரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை படிப்பதில் கில்லாடியாகவும் இருப்பார்கள்..மோடி விருச்சிக ராசி..தேர்தல் பிரச்சார குழு தலைவர் அதாவது கட்சிக்கும் மக்களுக்குமான தூதுவர்...அவர் மக்கள் மனதை ஏற்கனவே படித்தவர்..சொல்லவா வேண்டும்..மோடி மஸ்தான் தன் வேலையை திறம்பட செய்வார் ...2018ல் நம் இந்தியா வல்லரசு ஆக வேண்டும்..ஊழல் ஆட்சி,கோழை கட்சி,அந்நியர்களின் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்...அவ்வளவுதான்...!!


எல்லையில் சீனா 30 கி.மீ வரை உள்ளெ புகுந்து ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..பாகிஸ்தான் காரன் அடிக்கடி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறான்... டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு பாதாளத்துக்கு போய்விட்டது எதையும் இந்த காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை..பிரதமர் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்..அரசு செயல்படுகிறதா என்பதே சந்தேகம்...பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது என்றே நிதி மந்திரி சொல்லிக்கொண்டிருக்கிறார் கழுத்தளவு நீரில் மூழ்கிகொண்டிருக்கிறோம் இன்னும் இதையே சொன்னால் எப்படி..? 

இப்போ தங்கம் விலை 24,000 ரூபாய் நோக்கி போகிறது..பெட்ரோல் டீசல் விலை வாரவாரம் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் இஷ்டத்துக்கு இனி ஏறும்..விலைவாசியும் அதனுடன் சேரும்...இதை எப்படி தடுக்கப்போறாங்க...தடுப்பாங்களா என்பதே சந்தேகம்..நேற்று கூட நிலக்கரி ஊழல் சம்பந்தமான ஃபைகள் எல்லாம் காணாம போச்சு என்கிறார்கள் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்றால் நம் நாட்டு பாதுகாப்பின் லட்சணம் புரிகிறதா..?ஊழல் இல்லா துறையே இல்லை என்று ஆகிவிட்டது..யாரையும் இவங்க கட்டுப்படுத்துறது இல்ல..அடக்குவது இல்லை..இவங்க கவலை எல்லாம் மீடியாவுக்கு தெரியக்கூடாது எதிர்கட்சிகளுக்கு தெரிய கூடாது என்பதுதான்.

எதிலும் உறுதியான நிலையான முடிவு எடுக்காத கோழை கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். ஆட்சிக்கு வந்து,ஒன்பது வருசம் ஆச்சு ...என்னதான்யா கிழிச்சீங்க என மோடி கேட்கும் கேள்விக்கு அங்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை..!!

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஆடி மாசம் புது மண தம்பதிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங்க..?

ஆடி மாசம் புது மண தம்பதிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங்க..?

ஆடி மாசம் முதலிரவு நடந்தா கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாசமான சித்திரையில் குழந்தை பிறக்கலம்..சித்திரை அக்னி நட்சத்திரம் எனும் கடுமையான வெப்பம் நிறைந்த மாசம்..இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும் உடல் நலிவடையும்..அப்போ எல்லாம் இவ்வளவு மருத்துவ வசதி கிடையாது...குழந்தைகள் பிறப்பதும் ஏதாவது நோயால் இறப்பதுமாக இருப்பதால் ஒவ்வொருவரும் 10,15 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர்...சில குழந்தைகள் இறந்தாலும் சில குழந்தைகள் பிழைக்குமே என்பதற்காக..சித்திரை மாசம் குழந்தை பிறந்தா அப்பனுக்கு ஆகாது ..வம்சத்துக்கு ஆகாது என்பதும் இதனால்தான்..
அக்குழந்தைக்கு பல நோய்கள் உண்டாகலாம்..என்பதோடு அவன் ஜாதகத்தில் மேசத்தில் சூரியன் உச்சம் ஆகியிருக்கும்..சரியான கோபக்காரனாகவும் இருப்பான்..யாரிடமும் அனுசரித்தும் போக மாட்டான்..குடும்பத்தில் கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடாகவும் இருக்கும் என்றெல்லாம் யோசித்துதான் ஆடி மாதத்தை அதுக்கு ஆகாதுன்னு சொல்லி வெச்சிருக்காங்க!!

மாரியம்மன் உருவான கதை

ஆடி மாசம் பொறந்தாச்சுன்னா மூலைக்கு மூலை அம்மன் கோயில்ல கூழ் ஊத்த ஆரம்பிச்சிடுறாங்க ...மாரியாத்தா கூழ் தான் குடிக்குமா...பெப்சி எல்லாம் குடிக்காதா...? ஒரு சேஞ்ச்க்கு அதையும் கொடுங்கடா....என ச்லித்துக்கொள்பவரா நீங்க..?.நம் முன்னோர்கள் இந்த சம்பிரதயம் எதுக்கு வெச்சிருக்காங்க தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க..இன்று நாகரீகம்,வசதி வாய்ப்பு,கம்ப்யூட்டர்,கார்,பைக் என நாம் பரபரப்பாக இருந்தாலும் 20 வருடங்களுக்கு முன்பு ஐ.டி கம்பெனியை நம்பி நாம் இல்லை..விவசாயத்தை நம்பித்தான் இருந்தோம்....ஒண்ணு முதலாளி..அல்லது கூலி...இவர்களை சார்ந்த வணிகர்கள் இதுதான் பெரும்பான்மை...சாதாரண பாமர மக்களை அதிகம் கொண்ட,கிராமங்களை அதிகம் கொண்ட நம் இந்தியாவில் மழையை நம்பித்தான் அனைவரும் இருந்தோம்...

மழை பெய்தால்தான்..விவசாயம் செழிக்கும்..விவசாயம் செழித்தால்தான் எல்லாம் செழிக்கும்..எனவே மழை வேண்டி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தெய்வம் உருவாக்கப்பட்டது..பெண் தானே இரக்கமுள்ளவர்..தாயை விட அன்பு ஏது? எனவே பெண் தெய்வத்தை வணங்கினர்..மாரி என்றால் மழை..மழைக்கான தெய்வத்தை மாரியம்மன் என வழிபட்டனர் அதற்காக நேர்த்திக்கடன் செலுத்தினர்..நோயை விரட்டும் தெய்வமாகவும் மாரியம்மன் வழிபடப்பட்டது..ஒவ்வொரு கால சூழலிலும் ஒவ்வொரு நோய் நம்மை தாக்கும்..மழைக்காலத்தில் ஒரு சில நோய்கள்...வெய்யில் காலத்தில் சின்னம்மை,பெரியம்மை ,வெட்கை போன்றவை..இவற்றை குணமாக்கும் அருமருந்துகள் வேப்பிலை,மஞ்சள்தான்..இவை இரண்டும் அற்புத கிருமி நாசினிகள் என இப்போதான் விஞ்ஞானிகள் தலை சொறிந்து கொண்டே ஒப்புக்கொள்கிறார்கள் ஆனா நம்ம முப்பாட்டன் இதை அப்பவே தெரிஞ்சி வெச்சிருந்தான்..

இன்னிக்கு அமெரிக்காகாரன் இதை எப்படியாவது நம்ம சொத்தாக்கிடனும்னு துடிக்கிறான் ...ஆனா இந்த மரம் நம் இந்திய மண் சூழலுக்குத்தான் பழுதில்லாத அற்புத மருந்தாக விளையும்..ஆடி மாதம்  தமிழ் மாதங்களில் நாலாவது மாதமாக வருகிறது..இதை நம் முன்னோர்கள் ஒரு ராசியில்லாத மாதமாகவே கருதி வந்தனர்..நோய்கள் உண்டாக்கும் மாதம் மாதங்களில் ஒன்றாகவும்,உள்ளுறுப்புகள் பாதிக்கும் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் உற்பத்தியாகும் மாதமாகவும் கருதினர்..இந்த பயத்தால் முதலுதவியாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் என கருதினர்..அதற்காக ஒரு மருந்தை தயாரித்தனர்..அதுதான் கூழ்..இதில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ராகியை கூழாக்கி அதில் மருந்தான வேப்பம்பூ,கலந்து கொடுத்தனர்..சும்மா கொடுத்தா நம் மக்கள் குடிப்பானா...பிகு பண்ணுவான்...அதுக்காக உண்டாக்கப்பட்டது திருவிழா...அப்பல்லாம் கூலி ஆட்கள்தானே அதிகம்..அவன் எங்கிருந்து கூழ் தயரிக்க முடியும்..? திருவிழா வெச்சா பணக்காரன் தான் நடத்த முடியும்..அவன் கிட்ட பணம் வர வைக்கவும் திருவிழா உதவும்..சும்மா கேட்டா தருவானா..சாமிக்குன்னு கேட்டா அள்ளி தருவான்..இதனால் ஏழைகளின் பசியும் அடங்கியது...ஒரே கல்லில் நம் முன்னோர் எத்தனை மாங்கா அடிச்சிருக்காங்க பாருங்க!!

வியாழன், 27 செப்டம்பர், 2012

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..? rameshwaram temple



ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., தூரத்தில் உள்ளது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22 தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர்.

ஜாதகத்தில் பித்ரு தோசம் இருந்தால் அதை கழிக்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான்... குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டால் விபத்து,தற்கொலை, அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம்,திதி கொடுப்பது அவசியம்..அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் உண்டாகும்..

காசிக்கு போய் விட்டு வந்தாலும் ராமேஸ்வரம் போய் வந்தால்தான் இந்துக்களின் இந்த ஜென்ம புனித பயணம் நிறைவடையும் என இந்துமத சாஸ்திரம் சொல்கிறது எனவே காசியில் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு யாத்திரையை முடிக்கிறார்கள்..இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய ஜோதிர் தலங்களில் இது ஒன்றாகும்..இந்தியாவின் மிக முக்கிய சிவ ஸ்தலம் என உலகெங்கும் இருக்கும் இந்து மக்கள் வழிபடும் கோயில் இது..இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்ப்படுகிறது..இந்த கடல் நீருக்கு விசேஷ சக்தி இருப்பதாகவும்,முன்னோர்களின் சாபத்தை நீக்கும் சக்தி பெற்றதாகவும் புராணம் சொல்கிறது..அதனால் இக்கடலில் நீராடுவது மிக முக்கியம்.இக்கோயிலுக்குள் அமைந்துள்ள 21 வகையான தீர்த்தங்கள் பல அபூர்வ சக்தி பெற்றவை..ஒவ்வொரு கிணற்று நீரும் ஒவ்வொரு சுவை...கொண்டது..இவற்றில் நாம் நீராடுவதால் பல புன்ணிய ஆத்மாக்களின் ஆசி கிடைக்கிறது..நம் உடல் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி பெறுகிறது

சுவாமி சன்னதியில் தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50, கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம் செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும். ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 9 மணி

புதன், 24 ஆகஸ்ட், 2011

CYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+


CYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+




இண்டெர்னெட் பிரவுசிங் செண்டர்கள் இன்று கிராமங்களில் கூட வேகமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன..கல்லூரி மாணவர்களுக்கு பலவிதத்திலும் பெரிய உதவிகரமாக இவை இருப்பதாலும்,அவர்கள் பிராஜக்ட் ரிப்போர்களுக்கு தேவையான குறிப்புகளை எடுக்க உதவுவதாலும் இண்டர் நெட் சென்டர்கள் நல்ல தொழிலாக வளர்ந்து வருகிறது..செல்ஃபோன் பாடல்கள் தரவிறக்க,சினிமாக்கள் டவுன்லோடு செய்ய,ஈமெயில் செக் செய்ய என்று பயன்படுத்துபவர்கள் அதிகம்.



எங்கள் ஊரில் ஐந்து பிரவுசிங் செண்டர்கள் உள்ளன.இங்கு நான்கு கல்லூரிகள் இருப்பதால் நீக்ரோ மாணவர்கள்,கேரளா,ஆந்திராவில் இருந்து இங்கு வந்து தங்கி படிப்பவர்களும் அதிகம்..எனவே எல்லா சென்டர்களும் பிஸிதான்..நான் அடிக்கடி பிரவுசிங் செண்டர் போவேன்...இளைஞர்கள் எந்தளவு வருகிறார்களோ அதே அளவு இளம்பெண்களும் மாணவிகளும் வருகிறார்கள் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் ஸ்கைப்பில் பேச குடும்ப பெண்களும் வருகிறார்கள்....

16 +பெண்களுக்கு இண்டர்னெட் அறிமுகம் ஆவதே ரிசல்டுகள் பார்ப்பதில்தான்..இவர்கள் இப்படி அறிமுகம் ஆகி இண்டர் நெட்டை முதன்முதலாக ஆர்வமுடன் பார்த்து விட்டு மத்தவங்க எல்லாம் என்ன பார்க்கிறாங்க என நோட்டம் விடுகிறார்கள் ..தடுப்பு பார்க்க முடியாதபடி இருந்தால் பரவாயில்லை...பார்க்கும்படி இருந்தால் ,பக்கத்துல இருக்கிறவன் ஆபாசபடம் பார்த்தால் ? அவர்கள் முதலில் ச்சீ மோசம் என திரும்புவார்கள் என்றாலும் என்ன என்ன இருக்குமோ என முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது...



இது ஒரு வகை..கல்லூரி பெண்களுக்கு தன் தோழிகள் மூலமாக ஃபேஸ்புக் ,ஜீமெயில் சாட்டிங்,எல்லாம் நன்கு அத்துபடி ஆகிவிட்டது.. உன் மெயில் ஐடி என்ன ..ஃபேஸ்புக் ஐடி என்ன என பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள்..தோழியின் வீட்டில் உட்கார்ந்து பழகி கொள்கிறார்கள்..அப்புறம் போரடிக்கும் போது தயங்கி தயங்கி பிரவுசிங் செண்டருக்குள் நுழைந்து ஃபேஸ்புக் அப்டேட் செய்ய பழகி கொண்டு விடுகிறார்கள் அதன் பின் அதன் அடிமை போல் ஆகி விடுகிறார்கள்...ஞாயிற்றுகிழமை மட்டும் அல்லாமல் கல்லூரி முடிந்ததும் பிரவுசிங் செண்டர்களில் ஒரு மணி நேரம் செலவழித்து விட்டு போகும் மாணவர்களுக்கு போட்டியாக இவர்களும் வருகிறார்கள்....

முதலில் ஃபேஸ்புக்கில் ஆரம்பிப்பது..மற்ற தளங்களை பார்வை இடுவது வரை தொடரும்..இதுவரை சினிமா மட்டுமே இளைஞர்களை சீரழிக்கிறது என்ற நிலை இப்போது மாறிவிட்டது..டிவி மோகம் மறைந்து இண்டர் நெட் மோகம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது....

இவர்களாவது பரவாயில்லை ..விவரம் தெரிந்தவர்கள்..ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க எல்லாம் இன்று தினசரி கேம்ஸ் விளையாட பிரவுசிங் செண்டரே கதியாக கிடக்கிறார்கள்.. கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக இன்று அதிக குழந்தைகளை கிறுக்கு பிடிக்க வைத்திருப்பது கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றால் அது மிகை இல்லை...ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூபாய் என்ற ரேஞ்சில் இவர்கள் கேம்ஸ் விளையாடுவதை பார்த்தால் வீட்டில் பணம் வாங்கி வந்து விளையாடுவதை போலவே தெரியவில்லை..மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள்.. இத்தனைக்கும் இவர்கள் பணக்கார குழந்தைகள் அல்ல...அரசு பள்ளியில் படிக்கும் சாதாரணமானவர்கள்...

ரூம் போல சில பிரவுசிங் கஃபேக்கள் இருப்பதால் பல காதலர்களுக்கும் வசதியாக போய் விட்டது..ஒரு மணி நேரத்து இருபது ரூபாதாம்பா ரொம்ப சீப் என இவர்கள் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை..மொச்ச் மொச்ச் சத்தம் பேச்சிலர்களை கடுப்படித்து விடுகிறது...

பிரவுசிங் செண்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தியவர்கள் எந்தெந்த தளம் பார்த்தார்கள் என்ற ஹிஸ்டரியை செண்டர் உரிமையாளர்கள் உடனே அழித்து விட வேண்டும்..ஒருமுறை சடவுன் செய்து ஆன் செய்தால் கூட போதும்..அதன்பிறகே அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும்..

சின்ன பசங்க அதிக நேரம் கேஸ் விளையாடினாலோ..தினசரி வந்து கொண்டிருந்தாலோ அவனது வீட்டில் தகவல் தெரிவித்து விட வேண்டும்...

சிறிய வயது பெண்கள் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்கள் முடிந்தவரை ஆபாச தளங்களை தடை செய்து செட்டிங்க்ஸ் அமைக்க முயற்சிக்கலாம்..ஏன் என்றால் அவர்கள் அறியாமல் திடீர் என சில ஆபாச தளங்கள் திறந்து விட வாய்ப்புண்டு...

முடிந்தவரை பெற்றோர்கள் தங்கள் பெண்களுடன் பிரவுசிங் சென்டர் வந்து அவர்கள் வேலை முடியும் வரை உடன் இருந்து விட்டு செல்வது நல்லது...


பக்கத்து சீட்ல இரண்டு முன்று வயசு பொண்ணுங்க சேர்ந்து ஏய் இங்க பாருடி என் கீச்சு கீச்சு குரலில் பேசிக் கொள்வதை கேட்கும்போது...நமக்கு டென்சன் ஏறுது