god லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
god லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மே, 2016

தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை

    
1. தினசரி காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிஷங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோயில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் உத்தம பெண்கள் நல்ல புஷ;பங்கள் மேகம்; சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை மனைவி குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி வேப்;பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோய் நொடியும் விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. துளசிச் செடியிலும் வேப்ப நெல்லி மரத்திலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

5. இரவில் கண்கள் ஓய்வு பெறுகின்றன. காலையில் எழுந்தவுடன் கண்கள் படிப்படியாக அதன் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்தால் மெல்ல மெல்லப் பரவும் ஒளிச்சக்திக்கு ஏற்ப கண்கள் அதன் சக்தியை இரவு உறக்கத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் படிப்படியாகப் பெறுகின்றன. 

6. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

7. சூரியன் உதிக்கும் முன் வாசல் வீடு பெருக்கி நீர் தெளிக்கவும் வெறும் தண்ணீரைத் தெளிக்காமல் பசும் சாணம் சேர்த்துத் தெளித்தால் வெளியிலிருந்து வீட்டிற்குள் எவ்வித விஷக்கிருமிகளும் புகாது. தண்ணீரும் அன்று புதிதாக எடுத்ததாக இருந்தால் நல்லது.

8. அமாவாசை திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.

9. கோலம் போடும் போது ஒரு கோட்டுக் கோலமோ மூன்று இழைக் கோலமோ போடக் கூடாது. இரட்டை இழைக்கோலம் தான் போட வேண்டும். அசுப காரியங்களுக்கு தான் மூன்று இழைக் கோலம் போடுவார்கள்.

10. கோலம் கவர்ச்சியாகவும் அழகாகவும் அமைவது நல்ல சகுனம்.

11. தெற்கு பார்த்து கோலம் போடக் கூடாது. கோலம் தெற்கில் முடியவும் கூடாது.

12. உணவு உண்டபின் குளிக்கக் கூடாது.

13. நள்ளிரவில் குளிக்கக் கூடாது.
14. அமாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

15. பொதுவாக ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. தீபாவளி அன்று ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று மட்டும் விதி விலக்கு குளிக்கலாம். தீபாவளி அன்று மட்டும் விடியற்காலை 4மணி முதல் 6மணிக்குள் கங்காதேவி அனைத்து நீரிலும் பிரதட்சனம் ஆகிறாள். அதற்காகத்தான் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா! என்று பெரியோர்கள் கேட்பார்கள்;.

16. உறவினர்களை ஊருக்கு அனுப்பி விட்டு உடனே எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.

17. நாளெல்லாம் உடுத்தியிருக்கும் ஆடையோடும் பெண்கள் புடவையோடும் குளிக்கக் கூடாது. அசுப காரியத்திற்கு மட்டுமே அப்படி குளிப்பார்கள்.

18. ஆடையில்லாமலும் குளிக்கக் கூடாது. ஏதேனும் துண்டை கட்டிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.

19. சூடான தண்ணீரை ஒரு போதும் தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலையில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைகின்றன. மிக குளிர்ந்த தண்ணீரையும் தலையில் ஊற்றக் கூடாது.

20. அமாவாசை பௌர்ணமி தவிர பிற நாட்களில் கடலில் நீராடக் கூடாது. மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் கடலில் நீராடக் கூடாது.   

வியாழன், 28 ஜனவரி, 2016

செல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வில் செய்யக்கூடியவை

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் இறந்தோர் படங்களை தெற்குப் பார்த்து வைக்க வேண்டும்..

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.


33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை


நல்ல சந்தன ஊதுபத்தி இரண்டை கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமான அறையில் வைத்துவிட்டு 20 நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும் தீரும்.மனம் லேசாகும்..
 
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.


சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.


இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.



பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.


பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது.

அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.

புதன், 18 மார்ச், 2015

தெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்

தெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்

விண்வெளியில் பெரிய சூரிய மண்டலங்களில் உள்ள பெரிய பூமிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் எட்டு,ஒன்பது அறிவுள்ள மனிதர்களையே நமது சித்தர்கள் தெய்வங்கள் என்றனர்.

அவர்களின் உதவி பெற தொடர்பு பெற நமது மூளையில் மின்காந்த சக்தி கூட வேண்டும் கண் ,காது,மூக்கு,தோல் இவைகளில் காந்த வசியம் கூடினால் அவர்களை காணலாம்..பேசலாம்..அவர்களின் மீது அன்பும்,நட்பும் செலுத்தலாம்..

அவர்களின் உதவி இல்லாமலும் நமது ஹார்மோன் சுரப்பி,மூளை,கண்,காது,குரல்நாண்,தோல்,மூக்கு ஆகிய ஐம்புலன்களும் ஒன்றாக வலுவுடன் (ஹைபோதலாமஸ்) செயல்பட்டால்,நாம் சர்வஜனவசியம் பெற்று ,புகழ்,அதிகாரம்,ஆரோக்கியம்,செல்வம்,பதவி இவைகளை பூமியில் திட்டமிட்டு அடையலாம்..

விதையையும் மதியால் வெல்லலாம்..
ஊழையும் உட்பக்கம் இழுக்கலாம்..
கிரகங்களை மனக்கயிற்றால் கட்டலாம் 

என சமண வள்ளுவர் கூறுகிறார்.

அணுவை பிளந்தால் வரும் பெரும் சக்தியை போல் நம் உடலை பிளந்தால் பெரும் ஆன்ம மனோ சக்தி வரும்.மனமகிழ் கூட்டு பிரார்த்தனையும்,,தானதர்மமும், போதும் என இயேசுவும்,நபிகள் நாயகமும்,புத்தரும்,மகாவீரரும் கூறியிருக்கின்றனர்.

இறைவனை மனதில் உயிரில் ஏற்றி தியானம் செய்ய உருவங்களை பார்க்காமல் இமயத்தில் முனிவர்கள் தவம் செய்தனர்..முக்கோண பட்டங்களிலும் மழித்துளி நீரிலும் சூரிய ஒளியில் உல்ள நவவானவில் நிரங்கள் விலகும்.எனவே முனிவர்கள் நவகிரக சக்திகள் இல்லாத நீர்மேகங்கள் சூழ்ந்த முக்கோண மலை உச்சியிலும் கடலுக்கடியிலும் பாதாளத்திலும் தவம் செய்து சூரிய நியூட்ரினோ சக்தியை கிரகித்து ஞான சக்தியை பெற்றனர்.

-----------------------------------------

நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?

தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள்..ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். உங்கள் இலக்கு எது என தீர்மானித்து,அதைநோக்கிசெல்லதைரியம்,தன்னம்பிக்கை,முயற்சி,உழைப்பு எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உறுதிமொழி எடுங்கள்
அதன் பின் உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள்..பிரபஞ்ச சக்தி உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி தரும்..இது பலரது அனுபவ நம்பிக்கை...முயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்..கேட்டது கிடைக்கும்!!!

திங்கள், 8 செப்டம்பர், 2014

வளர்ச்சியும் ,முன்னேற்றமும் உண்டாக என்ன வழி..?



நம் பெரியோர்கள், நமது வீட்டில் எப்போதும் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் குழந்தைகள் விளையாடும் சந்தோச ஒலி,பறவைகள் எழுப்பும் இனிய கீதம்,வீணை,மிருதங்கம்,புல்லாங்குழல் இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி அருள் நிறைந்திருக்கும்...வளர்ச்சியும் ,முன்னேற்றமும் நாளுக்கு நாள் வளரும்...டிவி அழுகை சேஇயல்களை தினமும் மாலையில் பார்த்து மன அழுத்தத்துக்கு ஆளானால் ரத்த அழுத்தம் உட்பட நோய்கள் பெருகுவதுடன் வீட்டில் தரித்திரம் உண்டாகும்....நெகடிவ் அலைகள் பெருகி உங்கள் வளர்ச்சி முடங்கி கடன் தொல்லை அதிகமாகும்..இனியேனும் இதனை உணர்ந்து செயல்படுங்கள்..

  விருச்சிகம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் இக்காலத்தில் செவ்வாய் அங்கு ஆட்சி பெறுவதால் ,விருச்சிகம் ராசியினருக்கு நல்லது நடக்கும்...மனபலம்,பணபலம் உண்டாகும்...சிம்மம்,மேசம் ராசியினருக்கும் செவ்வாய் கரிய அனுகூலத்தை உண்டாக்குவர் இதுவரை இருந்த பயம் விலகி தெளிவு பிறக்கும்..தடங்கல்கள் விலகும்.....செப்டம்பர் 26 முதல் சுக்கிரன் நீசம் ஆவதால் ரிசபம்,துலாம்,கன்னி ராசியினருக்கு அச்சமயம் விரய செலவுகள் ,சுப செல்வௌகள் அதிகமாகலாம்..இப்போதே அதற்குண்டான வகையில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது..வானில் இருந்த கண்டம் விலகி இப்போதூ நீரால் கண்டம் உண்டாகும் என சொல்லி இருந்தேன்....நீர் ராசியான விருச்சிகத்தில் செவ்வாய் நுழைய ஆரம்பித்ததும்,ஜம்மு காஷ்மீரில் 500 கிராமங்கள் நீரால் மூழ்கி இருக்கிறது..9 ராணுவ வீரர்கள் உட்பட 200 க்கும் மெற்பட்டவர்கள் பலியாகி இருக்கின்றனர்..தண்ணீருக்கு நம் ஊரிலும் பஞ்சம் இல்லை..மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..அது தண்ணீராக இருந்தாலும் சரி..


 ஆணுக்கும் பெண்ணுக்கும் 10 பொருத்தம் அமைந்தாலும் ஜனன ஜாதக கட்டத்தை பொறுத்தே வாழ்க்கை இன்பமா துன்பமா என்ற முடிவு தெரியும்...இதை சரியாக ஆராயாமல் திருமணம் செய்தால் பத்து பொருத்தம் இருந்தாலும் குடும்ப வாழ்வில் மனநிம்மதி இருக்காது....எதுக்கு கல்யாணம் செய்தோம் என விரக்தி உண்டாகிவிடும்...

 ஜாதகத்தில் லட்சுமி ஸ்தானம் ,விஸ்ணு ஸ்தானம் என்றெல்லாம் புகழப்படுபவை 5,9ஆம் இடங்கள் தான் இவற்ரில் சுப கிரகங்கள் இருந்தால் போதும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும்..சொத்துக்கள் சேர்க்கை நிறைய உண்டாகும்...நினைத்தது தடையில்லாமல் நடக்கும்...5 பூர்வபுண்ணியம் 9 பாக்யஸ்தானம்..மனைவி அமைவதும்,நல்ல பிள்ளைகள் கிடைப்பதும் நல்ல வீடு அமைவது எல்லாம் பாக்யம் தான்...நினைச்சது வெற்றிகரமா முடியனும்னா பூர்வபுண்ணியம் நல்லாருக்கனும் ....இல்லைன்னா தோல்வி மேல தோல்விதான்..

 குளிகை காலம் நம் ஊரில் அதிகம் பயன்படுத்தப்படுவது இறந்தவர்களை இடுகாட்டுக்கு தூக்கும்போது இந்த நேரத்தில் எடுக்ககூடாது என்பதற்காகத்தான்...இந்த நேரத்தில் எடுத்தால் திரும்ப திரும்ப கெட்டது நடக்கும் என ஒரு நம்பிக்கை உண்டு...அதை தவிர வெகுஜன மக்களதிகம் வேறு எதற்கும் இதனை பார்க்க மாட்டார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் இந்த குளிகை நேரத்தை நல்ல காரியத்துக்கு அதிகம் பயன்படுத்துவார் குளிகையில் நிலம் சொத்துக்களும் வாங்குவார் ..கேட்டால் அப்பதானே திரும்ப திரும்ப வாங்க முடியும்...இந்த நேரத்தில் கடன் வாங்கிடாதீங்க திரும்ப திரும்ப வாங்கும்படி ஆகிடும்!!

கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

ஞாயிறு = 03.00 - 04.30

திங்கள் = 01.30 - 03.00

செவ்வாய் = 12.00 - 01.30

புதன் = 10.30 - 12.00

வியாழன் = 09.00 - 10.30

வெள்ளி = 07.30 - 09.00

சனி = 06.00 - 07.30

கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு = 09.00 - 10.30

திங்கள் = 07.30 - 09.00

செவ்வாய் = 06.00 - 07.30

புதன் = 03.00 - 04.30

வியாழன் = 01.30 - 03.00

வெள்ளி = 12.00 - 01.30

சனி = 10.30 - 12.00


புதன், 25 ஜூலை, 2012

வினாயகர் சிலைக்கு உயிர் உண்டா..?

வினாயகர் சிலைக்கு உயிர் உண்டா..?


80 வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் சிவய்யா என்ற யோகி மெளனமாக இருக்க ஆரம்பித்தார்...அவரை அனைவரும் மெளன ஸ்வாமிகள் என்றே அழைக்க ஆரம்பித்தனர்...அவர் அமைத்த மடத்துக்கும் மெளன ஸ்வாமிகள் மடம் என்றே பெயர் வந்தது...

ஒருமுறை அங்கு வினாயகப்பெருமான் பிரதிஷ்டை நடந்த பிறகு ஆங்கிலேயர் ஒருவர் பார்வையிட வந்தார்...''அங்கு நடக்கும் பூஜைகளுக்கு என்ன பெயர்..''என்று கேட்க,பிள்ளையாருக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்றார்..அவர் அவநம்பிக்கையுடன் மெளன ஸ்வாமிகளை பார்க்க,மெளனஸ்வாமியும் ,சந்தேகம் இருந்தால் பிள்ளையாரை ஒரு மருத்துவரை வைத்து பரிசோதனை செய்யுங்கள் என சைகையால் சொன்னார்...அவ்வாறு பரிசோதித்தபோது நாடித்துடிப்பு தெரிந்ததாக மருத்துவர் கூறினார்..இது அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது..

தெய்வத்தை சிற்ப நூல் கூறியபடி செய்யும்போது அதனுள் ஒரு கலை ஜீவதுடிப்புடன் தானெ வந்துவிடும்..மீதி 15 கலைகள் முறையாக செய்யும் வழிபாடுகளால் உண்டாகும்..கல்லில் கூட ஆண்,பெண்,அலி என்று உண்டு...ஆண் கல்லில் தட்டினால் தாம்பாள ஓசையு,பெண் கல்லில் தட்டினால் நாதமும் எழும்...அலி கல்லில் தட்டினால் எவ்வித ஓசையும் எழும்பாது...

ஆண் கல்லில் ஆண் தெய்வமும் பெண் கல்லில் பெண் தெய்வமும் அலி கல்லில் தூண்கள் ,படிக்கற்கள் செய்யவும் பயன்படுத்துவார்கள்!!!