திங்கள், 8 செப்டம்பர், 2014

வளர்ச்சியும் ,முன்னேற்றமும் உண்டாக என்ன வழி..?



நம் பெரியோர்கள், நமது வீட்டில் எப்போதும் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் குழந்தைகள் விளையாடும் சந்தோச ஒலி,பறவைகள் எழுப்பும் இனிய கீதம்,வீணை,மிருதங்கம்,புல்லாங்குழல் இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி அருள் நிறைந்திருக்கும்...வளர்ச்சியும் ,முன்னேற்றமும் நாளுக்கு நாள் வளரும்...டிவி அழுகை சேஇயல்களை தினமும் மாலையில் பார்த்து மன அழுத்தத்துக்கு ஆளானால் ரத்த அழுத்தம் உட்பட நோய்கள் பெருகுவதுடன் வீட்டில் தரித்திரம் உண்டாகும்....நெகடிவ் அலைகள் பெருகி உங்கள் வளர்ச்சி முடங்கி கடன் தொல்லை அதிகமாகும்..இனியேனும் இதனை உணர்ந்து செயல்படுங்கள்..

  விருச்சிகம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் இக்காலத்தில் செவ்வாய் அங்கு ஆட்சி பெறுவதால் ,விருச்சிகம் ராசியினருக்கு நல்லது நடக்கும்...மனபலம்,பணபலம் உண்டாகும்...சிம்மம்,மேசம் ராசியினருக்கும் செவ்வாய் கரிய அனுகூலத்தை உண்டாக்குவர் இதுவரை இருந்த பயம் விலகி தெளிவு பிறக்கும்..தடங்கல்கள் விலகும்.....செப்டம்பர் 26 முதல் சுக்கிரன் நீசம் ஆவதால் ரிசபம்,துலாம்,கன்னி ராசியினருக்கு அச்சமயம் விரய செலவுகள் ,சுப செல்வௌகள் அதிகமாகலாம்..இப்போதே அதற்குண்டான வகையில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது..வானில் இருந்த கண்டம் விலகி இப்போதூ நீரால் கண்டம் உண்டாகும் என சொல்லி இருந்தேன்....நீர் ராசியான விருச்சிகத்தில் செவ்வாய் நுழைய ஆரம்பித்ததும்,ஜம்மு காஷ்மீரில் 500 கிராமங்கள் நீரால் மூழ்கி இருக்கிறது..9 ராணுவ வீரர்கள் உட்பட 200 க்கும் மெற்பட்டவர்கள் பலியாகி இருக்கின்றனர்..தண்ணீருக்கு நம் ஊரிலும் பஞ்சம் இல்லை..மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..அது தண்ணீராக இருந்தாலும் சரி..


 ஆணுக்கும் பெண்ணுக்கும் 10 பொருத்தம் அமைந்தாலும் ஜனன ஜாதக கட்டத்தை பொறுத்தே வாழ்க்கை இன்பமா துன்பமா என்ற முடிவு தெரியும்...இதை சரியாக ஆராயாமல் திருமணம் செய்தால் பத்து பொருத்தம் இருந்தாலும் குடும்ப வாழ்வில் மனநிம்மதி இருக்காது....எதுக்கு கல்யாணம் செய்தோம் என விரக்தி உண்டாகிவிடும்...

 ஜாதகத்தில் லட்சுமி ஸ்தானம் ,விஸ்ணு ஸ்தானம் என்றெல்லாம் புகழப்படுபவை 5,9ஆம் இடங்கள் தான் இவற்ரில் சுப கிரகங்கள் இருந்தால் போதும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும்..சொத்துக்கள் சேர்க்கை நிறைய உண்டாகும்...நினைத்தது தடையில்லாமல் நடக்கும்...5 பூர்வபுண்ணியம் 9 பாக்யஸ்தானம்..மனைவி அமைவதும்,நல்ல பிள்ளைகள் கிடைப்பதும் நல்ல வீடு அமைவது எல்லாம் பாக்யம் தான்...நினைச்சது வெற்றிகரமா முடியனும்னா பூர்வபுண்ணியம் நல்லாருக்கனும் ....இல்லைன்னா தோல்வி மேல தோல்விதான்..

 குளிகை காலம் நம் ஊரில் அதிகம் பயன்படுத்தப்படுவது இறந்தவர்களை இடுகாட்டுக்கு தூக்கும்போது இந்த நேரத்தில் எடுக்ககூடாது என்பதற்காகத்தான்...இந்த நேரத்தில் எடுத்தால் திரும்ப திரும்ப கெட்டது நடக்கும் என ஒரு நம்பிக்கை உண்டு...அதை தவிர வெகுஜன மக்களதிகம் வேறு எதற்கும் இதனை பார்க்க மாட்டார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் இந்த குளிகை நேரத்தை நல்ல காரியத்துக்கு அதிகம் பயன்படுத்துவார் குளிகையில் நிலம் சொத்துக்களும் வாங்குவார் ..கேட்டால் அப்பதானே திரும்ப திரும்ப வாங்க முடியும்...இந்த நேரத்தில் கடன் வாங்கிடாதீங்க திரும்ப திரும்ப வாங்கும்படி ஆகிடும்!!

கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

ஞாயிறு = 03.00 - 04.30

திங்கள் = 01.30 - 03.00

செவ்வாய் = 12.00 - 01.30

புதன் = 10.30 - 12.00

வியாழன் = 09.00 - 10.30

வெள்ளி = 07.30 - 09.00

சனி = 06.00 - 07.30

கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு = 09.00 - 10.30

திங்கள் = 07.30 - 09.00

செவ்வாய் = 06.00 - 07.30

புதன் = 03.00 - 04.30

வியாழன் = 01.30 - 03.00

வெள்ளி = 12.00 - 01.30

சனி = 10.30 - 12.00


கருத்துகள் இல்லை: