புதன், 24 செப்டம்பர், 2014

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்;நண்பர்களுக்கு நன்றி

புரட்டாசி அமாவாசை எனும் புனிதமான நாள் அன்று நாம் செய்யும் தானம் தர்மம் நமக்கு அளவில்லாத நன்மைகளையும் புண்ணியத்தையும் அள்ளித்தரும் என நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்....மகாளயபட்சம் 15 நாட்கள் இறந்துபோன நம் முன்னோர்கள் சூரியன்,சந்திரன் அருளால் பூமியில் உலவும் காலம் ஆகும்...பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மை அணுகும் காலமும் இந்த புரட்டாசி அமாவாசையில்தான் அப்படிப்பட்ட மகா உன்னத நாளில் வருடம் தோறும் சில தர்மங்களை நண்பர்களின் உதவியுடன் செய்து வருகிறேன்...பலருக்கும் அதை நேரில் செய்ய முடியாத சூழ்நிலை..ச்லர் வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாத நிலை என்பதால் என் உதவியுடன் அதை நிறைவேற்ற விரும்புகின்றனர்....அதற்காக நானும் கடந்த மூன்று புரட்டாசி அமவாசையிலும் செய்து வருகிறேன்...அடுத்து தை அமாவாசையிலும் செய்ய இருக்கிறேன்.

நேற்று செவ்வாய்க்கிழமை 23.9.2014 கண்பார்வையற்றோர் இல்லம் சென்று 150 பேருக்கு அன்னதானம் செய்தோம்...முதியோர்களுக்கு உடைதானம் செய்தோம்...ஆதரவற்றோர் இல்லத்துக்கு பொருட்கள் வாங்க உதவி செய்தோம்.....ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி....அவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை வழிபாடு செய்யப்பட்டது....அவர்களது குடும்பம் பூரண உடல்நலம்,மனநலம்,செல்வவளம் பெற்று நீடூழி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது....திருவருள் துணையுடன் நல்லதே நடக்கும்!!






கருத்துகள் இல்லை: