வியாழன், 11 செப்டம்பர், 2014

பராசக்தியை நேரில் காண வேண்டுமா..? தெய்வ தரிசனம்


பராசக்தியை நேரில் காண வேண்டுமா..? ஒரு ஆன்மீக பெரியவர் இம்முறையை பயன்படுத்தி தரிசனம் செய்ததாக சொன்னது;

ஒரு சனிக்கிழமை அன்று குளித்து விட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பமரம் இருக்கும் இடம் செல்ல வேண்டும்.அதில் ஏறி ஆயுதம் உபயோகிக்காமல் கையினால் பெருவிரல் தடிமனாக இருக்கும் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து எடுக்க வேண்டும்.குச்சி வளையாமல் கோணல் இல்லாமல் இருக்க வெண்டும்.குச்சி இரண்டு அடி இருக்க வேண்டும்.கருங்கல்லில் தேய்ஹ்து அதன் தோல் பிசிறுகளை எடுத்துவிட்டு வழுவழுப்பாக்கி கொள்ளவும்.அதன் மேல் சந்தனம் பூசிக்கொள்ளவும்....

அமாவாசை அன்று காலையில் சிவப்பு நிற பட்டுத்துணியில் குச்சியை மூடி வைக்கவும்..இரவு 9 மணிக்கு மேல் மூடிய குச்சி மேல் தலையணை வைத்து படுக்கவும்..வடக்கே பார்த்து படுக்கவும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ ‘’ என மந்தால் ஜெபித்துக்கொண்டே தூங்கி விடவும்...பெள்ர்ணமி வரை இதை கடைபிடிக்கவும் 12 நாட்களில் நட்சத்திரக்கூட்டங்கள் கனவில் தோன்றும்....பெளர்ணமி அன்று நட்சத்திர ஒளியில் பராசக்தி தோன்றுவாள்...

60 நாட்கள் இதை கடைபிடித்தால் வருங்காலம் உங்கள் மனத்திரையில் காணலாம்...!!

கருத்துகள் இல்லை: