புதன், 24 செப்டம்பர், 2014

குடிப்பழக்கம் ,பந்தயத்தால் துன்பப்படுவோர் ஜாதகம் ;மங்கள்யான் -செவ்வாய்-ஜோதிடம்

ஜோதிடத்தில் பொதுவாக குடிப்பழக்கம் என வைத்து சொல்லும்போது செவ்வாய் தான் முக்கிய காரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது....செவ்வாய் தான் குணத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது...தமிழ்நாடு செவ்வாய் பூமியாக இருப்பதால்தான் செவ்வாய்க்கு அதிபதியான முருகன் சிலைகளை அதிகம் வைத்து வழிபட வைத்தனர் நம் முன்னோர்.இன்று மங்கள்யான் விண்கலம் செவ்வாயை ஆய்வு செய்துவரும் நிலையில் ,செவ்வாய் கிரகம்தான் இதுக்கெல்லாம் காரணம் என சொல்லலாமா என கேட்காதீர்கள் ..சந்திராயன் விண்களம் சந்திரனை  ஆய்வு செய்தாலும் பெள்ர்ணமி அன்று கடல் பொங்கத்தான் செய்கிறது காரணம் சந்திரனின் ஈர்ப்பு சக்திதான்...எத்தனை அறிவியல் வளர்ந்தாலும் இயற்கைதான் எப்போதும் வெல்லும். அதைப்பற்றி தெரிந்துகொள்ளலாமே தவிர அதை வெற்றிக்கொள்ள முடியாது..

குடிப்பழக்கம்,சூதாட்டம் பற்றி ஒரு ஜோதிட பாடல் இவ்வாறு சொல்கிறது.

மங்களன் ராசிதன்னில்
மாபுதன் வாசம் செய்ய
அங்கவன் தன்னைச் செவ்வாய்
அனைத்திட நோக்க வந்தோர்
பந்தய போட்டியாலே
பணமதை விரயமாக்கி
நிந்தனை போதையாலே
நெறியிலா துழல்வாராமே !’’

செவ்வாயின் ராசிகளான மேசம்,விருச்சிகம் ஆகிய ஒன்றில் புதன் இருக்க அப்புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும் போட்டி பந்தயம்,சூதாட்டம்,போன்றவற்றில் பணத்தை இழப்பதோடு குடிக்கு அடிமையாகி நெறி தவறியும் நடப்பர் என்று சொல்கிறது இந்த பாடல்...

செவ்வாய் சக்தியை குறிக்கிறது...அதனுடைய இருக்குமிடம் ,பார்வை பொறுத்து ஆக்கம் மற்ரும் அழிவை தருபவராக இருக்கிறார்..செவ்வாய் உணர்ச்சிபூர்வமான கிரகம்..ஒருவருக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியை ஆட்சி செய்கிறது.....குழப்பம்,சண்டை,வாக்குவாதம்,விபத்து,கலவரம் இவற்றுக்கு செவ்வாய்தான் அதிபதி..புதன் ஒரு சஞ்சலம் நிறைந்த கிரகம் மாறிக்கொண்டே இருக்கும் குணத்தை சொல்கிறது...சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டது யாருடன் சேர்கிறாரோ அதற்கேற்ப ஆட்டி வைக்கும்...தீயவரோடு சேர்ந்தால் தீயவராகிவிடுவார்...இவர்கள் இருவரும் சேர்ந்தால் எல்லா தீய செயல்களிலும் ஈடுபடுவார்கள் அதாவது ஜாதகரை ஈடுபட செய்வார்கள்...

கருத்துகள் இல்லை: