annadanam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
annadanam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜனவரி, 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

4.2.2019 திங்கள் கிழமை தை அமாவாசை.அன்று கடந்த வருடம் போல் இந்த வருடமும் ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்கள்,ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் ,ஆடை தானம் வழங்க இருக்கிறோம்..கடந்த வருடம் போல இந்த வருடமும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..எனது வாட்சப் 9443499003 அல்லது இன்பாக்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும்
பங்களிப்பு செய்யும் நண்பர்கள் குடும்பத்தினரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை வழிபாடும் அன்று சங்கமேஸ்வரர் சன்னதியில் செய்யப்படும்..முதல் ஆளாக ரூ ஆயிரம் பங்களிப்பு செய்த அக்கா நளினா கீரன் சென்னை அவர்களுக்கு நன்றி!!

ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு அன்று அன்னதானம், ஆடைதானம் செய்வது பற்றி எழுதியிருந்தேன் எங்கள் பங்களிப்பும் அதில் இருக்கட்டும் வெளிநாட்டில் இருக்கும் எங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தியுங்கள் என சில நண்பர்களும் பங்களிப்பு செய்தனர்
சைலஜா ஜெர்மனி,பாலாகார்த்திக்,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீவித்யா,சண்முக சுந்தரம்,முருகன் ஜெயராமன்,ஜீவபாலன்,ராதா கிருஷ்ணன்,ரவி பழனிசாமி,சென்னை சுந்தர்,மாணிக்க பாண்டி,கிருஷ்ணப்பன் சரவணன் ஆகியோரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்!!!

வரும் திங்கள் கிழமை தை அமாவாசை அன்று ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் உடைகள் வழங்க உதவி புரிந்த நண்பர்கள்
தேவராஜன்,மாணிக்கம்,காயத்ரி,முருகன்,பத்மா.சிங்கப்பூர் குமார்,செந்தில்குமார்,ரவி பழனிசாமி,சாய் சதீஷ் வர்மா,ஸ்ரீவித்யா,பாலு வினா,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி..அவர்தம் குடும்பத்தினர் எந்த குறைவுமின்றி வளமுடன் நலமுடன் வாழ பிரார்த்தித்து கொள்கிறேன்.



திங்கள், 12 அக்டோபர், 2015

அன்னதானம் /annadanam




அன்னதானம் ;annadanam;

வருடம் தோறும் ஆடி,புரட்டாசி,தை அமாவாசைகளில் ஆதரவற்ற குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் செய்து வருகிறோம்.இந்த வருடமும் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு ,ஆதரவற்றோர்க்கும் ,கண்பார்வையற்றோர்க்கும் அன்னதானம் செய்தோம்.ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி!








செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி

ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை,தை அமாவாசை அன்று நண்பர்கள் பங்களிப்புடன் அன்னதானம் செய்து வருகிறோம்..ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர் இல்லங்களில் இதை செயல்படுத்துகிறோம்...

நண்பர்கள் உதவி அதிகம் கிடைத்தால் ஆடைகள்,உணவு தானியங்களும் வாங்கி ,உதவிகள் அதிகம் கிடைக்காத இல்லங்களுக்கு உதவி வருகிறோம்...அந்த வகையில் இந்த வருடம் ஆடி அமாவாசை அன்று நண்பர்கள் உதவியுடன் ,ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் நல்ல நேரம் இணையதளம் வாசகர்கள் சார்பில் ,உடல் ஊனமுற்றோர் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆடி அமாவாசை சிறப்பு அன்னதானம் மற்றும் பொருள் உதவி செய்யப்பட்டது...

நமது நல்ல நேரத்தில் இதை முன்கூட்டியே பதிவாக இடவில்லை அதற்காக நண்பர்கள் யாரும் கோபிக்க வேண்டாம்..ஃபேஸ்புக்கில் மட்டும் எழுதியிருந்தேன்...இன்னும் ஒரு மாதத்தில்  புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை வருகிறது..அதில் விருப்பம் இருப்பம் இருப்பவர்கள் இணைந்துகொள்ளலாம் நன்றி.

புதன், 24 செப்டம்பர், 2014

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்;நண்பர்களுக்கு நன்றி

புரட்டாசி அமாவாசை எனும் புனிதமான நாள் அன்று நாம் செய்யும் தானம் தர்மம் நமக்கு அளவில்லாத நன்மைகளையும் புண்ணியத்தையும் அள்ளித்தரும் என நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்....மகாளயபட்சம் 15 நாட்கள் இறந்துபோன நம் முன்னோர்கள் சூரியன்,சந்திரன் அருளால் பூமியில் உலவும் காலம் ஆகும்...பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மை அணுகும் காலமும் இந்த புரட்டாசி அமாவாசையில்தான் அப்படிப்பட்ட மகா உன்னத நாளில் வருடம் தோறும் சில தர்மங்களை நண்பர்களின் உதவியுடன் செய்து வருகிறேன்...பலருக்கும் அதை நேரில் செய்ய முடியாத சூழ்நிலை..ச்லர் வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாத நிலை என்பதால் என் உதவியுடன் அதை நிறைவேற்ற விரும்புகின்றனர்....அதற்காக நானும் கடந்த மூன்று புரட்டாசி அமவாசையிலும் செய்து வருகிறேன்...அடுத்து தை அமாவாசையிலும் செய்ய இருக்கிறேன்.

நேற்று செவ்வாய்க்கிழமை 23.9.2014 கண்பார்வையற்றோர் இல்லம் சென்று 150 பேருக்கு அன்னதானம் செய்தோம்...முதியோர்களுக்கு உடைதானம் செய்தோம்...ஆதரவற்றோர் இல்லத்துக்கு பொருட்கள் வாங்க உதவி செய்தோம்.....ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி....அவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை வழிபாடு செய்யப்பட்டது....அவர்களது குடும்பம் பூரண உடல்நலம்,மனநலம்,செல்வவளம் பெற்று நீடூழி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது....திருவருள் துணையுடன் நல்லதே நடக்கும்!!






செவ்வாய், 22 ஜூலை, 2014

ஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅமாவாசை26.7.2014 astrology

சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.தாய்கிரகமாகிய சந்திரன் ராசியில் சூரியன் இருக்கும் மாதம் ஆடி மாதம்..வருடத்தில் மூன்று தினங்கள் நிச்சயமாக நம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவார்கள் அது மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை,ஆடி அமாவாசை ...இந்த நாட்களில் நாம் அவர்களை வணங்கினால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் ஆசி கிடைக்கும்.நம் கஷ்டங்களை தீர்த்தும் வைப்பார்கள்.. அதிகாலையில் நதிக்கரையில் நீராடி பிராமணரை கொண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு,மதியம் பூஜை அறையில் தலை வாழை இலை போட்டு, பருப்பு சாதம் வாழைக்காய் பொறியல் செய்து,அவல் நாட்டுசர்க்கரை வைத்து நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி அதன் பின் காக்கைக்கு எள் சாதத்துடன் இதனையும் வைத்து காக்கை உண்டபின் உண்ண வேண்டும்....

ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாள்.அதுமட்டுமில்லாமல் எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருட ஆடி மாதத்துக்கு உண்டு..12 ஆண்டுகளுக்கு பின் குரு கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும்போது சூரியன்,சந்திரன் அங்கு கூடிகின்றனர்..இது மிகவும்  புனிதமான நாள் என்பதால் அன்று தான தர்மம் செய்வது வருடம் முழுக்க செய்ததற்கு சமமாகும்..எல்லா தோசங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.ஆடி அமாவாசை 26.7.2014 அன்று நான், ஆதரவற்ற ஊனமுற்ற,குழந்தைகளுக்கு 100 பேருக்கு மேல் அன்னதானமும் முதியவர்களுக்கு ஆடைதானமும் வழங்க இருக்கிறேன்...இணைந்து கொள்ள விரும்புபவர்கள்,நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் 9443499003 தகவல் தரலாம்...மெயில்;sathishastro77@gmail.com