trust லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
trust லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜனவரி, 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

தை அமாவாசை அன்னதானம் 2019

4.2.2019 திங்கள் கிழமை தை அமாவாசை.அன்று கடந்த வருடம் போல் இந்த வருடமும் ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்கள்,ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் ,ஆடை தானம் வழங்க இருக்கிறோம்..கடந்த வருடம் போல இந்த வருடமும் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..எனது வாட்சப் 9443499003 அல்லது இன்பாக்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும்
பங்களிப்பு செய்யும் நண்பர்கள் குடும்பத்தினரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை வழிபாடும் அன்று சங்கமேஸ்வரர் சன்னதியில் செய்யப்படும்..முதல் ஆளாக ரூ ஆயிரம் பங்களிப்பு செய்த அக்கா நளினா கீரன் சென்னை அவர்களுக்கு நன்றி!!

ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு அன்று அன்னதானம், ஆடைதானம் செய்வது பற்றி எழுதியிருந்தேன் எங்கள் பங்களிப்பும் அதில் இருக்கட்டும் வெளிநாட்டில் இருக்கும் எங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தியுங்கள் என சில நண்பர்களும் பங்களிப்பு செய்தனர்
சைலஜா ஜெர்மனி,பாலாகார்த்திக்,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீவித்யா,சண்முக சுந்தரம்,முருகன் ஜெயராமன்,ஜீவபாலன்,ராதா கிருஷ்ணன்,ரவி பழனிசாமி,சென்னை சுந்தர்,மாணிக்க பாண்டி,கிருஷ்ணப்பன் சரவணன் ஆகியோரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தங்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்!!!

வரும் திங்கள் கிழமை தை அமாவாசை அன்று ஆதரவற்ற குழந்தைகள் ,முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் உடைகள் வழங்க உதவி புரிந்த நண்பர்கள்
தேவராஜன்,மாணிக்கம்,காயத்ரி,முருகன்,பத்மா.சிங்கப்பூர் குமார்,செந்தில்குமார்,ரவி பழனிசாமி,சாய் சதீஷ் வர்மா,ஸ்ரீவித்யா,பாலு வினா,சதீஷ் ராமகிருஷ்ணன்,ஸ்ரீனிவாசன் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி..அவர்தம் குடும்பத்தினர் எந்த குறைவுமின்றி வளமுடன் நலமுடன் வாழ பிரார்த்தித்து கொள்கிறேன்.



திங்கள், 15 அக்டோபர், 2012

பவானி கூடுதுறை புரட்டாசி அமாவாசை அன்னதானம்!

பவானி கூடுதுறையில் இன்று புரட்டாசி மகாளயபட்ச அமாவசைக்காக திதி,தர்ப்பணம் கொடுத்தல்,தானம்,தர்மம் வழங்குதல்,அன்னதானம் செய்தல் மிக நல்லது புன்ணியம் சேர்க்கும் என எழுதியிருந்தேன்...


ஆதரவற்ற முதியவர் ,குழந்தைகள் காப்பகத்திற்கு சில உதவிகள் செய்யலாம் என இருக்கிறேன்..விருப்பம் இருப்பவர்கள் உடன் இணையலாம் என எழுதியிருந்தேன்..அதன்படி சில நண்பர்கள் தாங்களும் பங்களிப்பதாக சிறு தொகைகளை அனுப்பி இருந்தனர்...

     அரிசி,சர்க்கரை வழங்கிய போது  நண்பர் தினகர்,நான்,அருள் தீபம் காப்பாளர்

அவ்ர்கள் சார்பில்,பவானியில் உள்ள அருள் தீபம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு இன்று காலையில் சென்று ,உணவு அளிப்பதாக காப்பாளரிடம் சொன்னேன்..சாப்பாடு கூட இன்னிக்கு கிடைச்சிடும் சார்..ஆனா அரிசியா வாங்கிக்கொடுத்தா உங்க தானம் செய்தவர்களை நினைத்து குழந்தைகள் 10 நாள் சாப்பிடுவாங்க என்றார்..அதுவும் சரிதான் என எண்ணி,அரிசி 25 கிலோ ,சர்க்கரை 4கிலோ, அந்த இல்லத்தில் இருந்த 50 குழந்தைகளுக்கு இனிப்புகள்,பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்தேன்.உணவும் வழங்கப்பட்டது....அதற்காக அக்குழந்தைகள் தனக்கு தானம் வழங்க உதவி செய்த நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்ததும்பிரார்த்தனை செய்ததும் மறக்க முடியாத அனுபவம்..

                                                குழந்தைகளின் பிரார்த்தனை

                                              குழந்தைகளின் பிரார்த்தனை

என்னுடன் பேஸ்புக் நண்பர்,வானியல் ஆய்வாளர்,சென்னையை சேர்ந்த தினகர் அவர்களும் கலந்துகொண்டார்..அவரை சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது...

மிகவும் கஷ்டமான சூழலில் 50 குழந்தைகளை வைத்து அந்த இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது..முதல் நாள் இரவு நான் அங்கு போனபோது நல்ல மழை பெய்துகொண்டிருந்தது...சில குழந்தைகள் வெறும் தரையில் படுத்துறங்கினர்..அவர்கள் காலடியில் மழை நீர் கூரை வழியாக ஒழுகி சொட்டிக்கொண்டிருந்தது...பாய் இல்லையா சார்..பாய் இருக்குங்க..சின்னப்பசங்க..ராத்திரியில் யூரின் போயிடுவாங்க..அதான் அடிக்கடி அலசி.அடிக்கடி கிழிஞ்சிடுது என்றார்..ப்ளாஸ்டிக் பாய் வாங்கி வரேன்..கீழே படுக்க வைங்காதீங்க என சொன்னேன்..நாங்கள் பிஸ்கட்,ஸ்வீட் கொடுத்துவிட்டு வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது,12 வய்சு பொண்ணு வெளியே வந்து அண்ணா தேங்க்ஸ்...என சொல்லியது மனதை நெகிழ செய்துவிட்டது!!


நன்றிகள் அனைத்தும்,புண்ணியங்கள் அனைத்தும் எனக்கு பணம் அனுப்பிய நண்பர்களுக்கு சென்று சேரட்டும்..!!

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி,அன்னதானம்



வரும் திங்கள் கிழமை காலை அமாவாசை அன்று ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று அன்னதானம்,உடைகள் தானம் செய்யவிருக்கிறேன்..பவானி கூடுதுறையிலும் அன்னதானம் செய்கிறேன்... பேஸ்புக் மற்றும் நல்ல நேரம் இணைய தளத்தில் வந்த அறிவிப்பை பார்த்து சிலர் அவரவரால் முடிந்த தொகையை அனுப்பி வைத்து, எங்கள் சார்பிலும் நடத்துங்கள் என்றனர்...அவ்வாறு பணம் அனுப்பி வைத்தவர்களுக்காக முதியோர் இல்லத்தில் அவர்கள் குடும்பத்தினருக்காக சிறப்
பு பிரார்த்தனை செய்யப்படும்..பவானி கூடுதுறை கோயிலில் சங்கமேஸ்வரருக்கு அவர்கள் பெயரில் அர்ச்சனையும் செய்து பிரசாதமும் அனுப்பி வைக்கப்படும்..நான் வெறும் கருவிதான்...என்னை நம்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..உங்கள் பிரச்சினைகள் பிரார்த்தனைகள் இதன்மூலம் சிறிதளவேனும் குறைந்தால் மகிழ்ச்சி..நிச்சயம் நல்லது நடக்கும்..வாழ்க வளமுடன்
 
என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் 9443499003 எண்ணுக்கு அழைக்கவும் மெயில்;sathishastro77@gmail.com