திங்கள், 15 அக்டோபர், 2012

பவானி கூடுதுறை புரட்டாசி அமாவாசை அன்னதானம்!

பவானி கூடுதுறையில் இன்று புரட்டாசி மகாளயபட்ச அமாவசைக்காக திதி,தர்ப்பணம் கொடுத்தல்,தானம்,தர்மம் வழங்குதல்,அன்னதானம் செய்தல் மிக நல்லது புன்ணியம் சேர்க்கும் என எழுதியிருந்தேன்...


ஆதரவற்ற முதியவர் ,குழந்தைகள் காப்பகத்திற்கு சில உதவிகள் செய்யலாம் என இருக்கிறேன்..விருப்பம் இருப்பவர்கள் உடன் இணையலாம் என எழுதியிருந்தேன்..அதன்படி சில நண்பர்கள் தாங்களும் பங்களிப்பதாக சிறு தொகைகளை அனுப்பி இருந்தனர்...

     அரிசி,சர்க்கரை வழங்கிய போது  நண்பர் தினகர்,நான்,அருள் தீபம் காப்பாளர்

அவ்ர்கள் சார்பில்,பவானியில் உள்ள அருள் தீபம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு இன்று காலையில் சென்று ,உணவு அளிப்பதாக காப்பாளரிடம் சொன்னேன்..சாப்பாடு கூட இன்னிக்கு கிடைச்சிடும் சார்..ஆனா அரிசியா வாங்கிக்கொடுத்தா உங்க தானம் செய்தவர்களை நினைத்து குழந்தைகள் 10 நாள் சாப்பிடுவாங்க என்றார்..அதுவும் சரிதான் என எண்ணி,அரிசி 25 கிலோ ,சர்க்கரை 4கிலோ, அந்த இல்லத்தில் இருந்த 50 குழந்தைகளுக்கு இனிப்புகள்,பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்தேன்.உணவும் வழங்கப்பட்டது....அதற்காக அக்குழந்தைகள் தனக்கு தானம் வழங்க உதவி செய்த நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்ததும்பிரார்த்தனை செய்ததும் மறக்க முடியாத அனுபவம்..

                                                குழந்தைகளின் பிரார்த்தனை

                                              குழந்தைகளின் பிரார்த்தனை

என்னுடன் பேஸ்புக் நண்பர்,வானியல் ஆய்வாளர்,சென்னையை சேர்ந்த தினகர் அவர்களும் கலந்துகொண்டார்..அவரை சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது...

மிகவும் கஷ்டமான சூழலில் 50 குழந்தைகளை வைத்து அந்த இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது..முதல் நாள் இரவு நான் அங்கு போனபோது நல்ல மழை பெய்துகொண்டிருந்தது...சில குழந்தைகள் வெறும் தரையில் படுத்துறங்கினர்..அவர்கள் காலடியில் மழை நீர் கூரை வழியாக ஒழுகி சொட்டிக்கொண்டிருந்தது...பாய் இல்லையா சார்..பாய் இருக்குங்க..சின்னப்பசங்க..ராத்திரியில் யூரின் போயிடுவாங்க..அதான் அடிக்கடி அலசி.அடிக்கடி கிழிஞ்சிடுது என்றார்..ப்ளாஸ்டிக் பாய் வாங்கி வரேன்..கீழே படுக்க வைங்காதீங்க என சொன்னேன்..நாங்கள் பிஸ்கட்,ஸ்வீட் கொடுத்துவிட்டு வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது,12 வய்சு பொண்ணு வெளியே வந்து அண்ணா தேங்க்ஸ்...என சொல்லியது மனதை நெகிழ செய்துவிட்டது!!


நன்றிகள் அனைத்தும்,புண்ணியங்கள் அனைத்தும் எனக்கு பணம் அனுப்பிய நண்பர்களுக்கு சென்று சேரட்டும்..!!

கருத்துகள் இல்லை: