சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.தாய்கிரகமாகிய சந்திரன் ராசியில் சூரியன் இருக்கும் மாதம் ஆடி மாதம்..வருடத்தில் மூன்று தினங்கள் நிச்சயமாக நம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவார்கள் அது மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை,ஆடி அமாவாசை ...இந்த நாட்களில் நாம் அவர்களை வணங்கினால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் ஆசி கிடைக்கும்.நம் கஷ்டங்களை தீர்த்தும் வைப்பார்கள்.. அதிகாலையில் நதிக்கரையில் நீராடி பிராமணரை கொண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு,மதியம் பூஜை அறையில் தலை வாழை இலை போட்டு, பருப்பு சாதம் வாழைக்காய் பொறியல் செய்து,அவல் நாட்டுசர்க்கரை வைத்து நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி அதன் பின் காக்கைக்கு எள் சாதத்துடன் இதனையும் வைத்து காக்கை உண்டபின் உண்ண வேண்டும்....
ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாள்.அதுமட்டுமில்லாமல் எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருட ஆடி மாதத்துக்கு உண்டு..12 ஆண்டுகளுக்கு பின் குரு கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும்போது சூரியன்,சந்திரன் அங்கு கூடிகின்றனர்..இது மிகவும் புனிதமான நாள் என்பதால் அன்று தான தர்மம் செய்வது வருடம் முழுக்க செய்ததற்கு சமமாகும்..எல்லா தோசங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.ஆடி அமாவாசை 26.7.2014 அன்று நான், ஆதரவற்ற ஊனமுற்ற,குழந்தைகளுக்கு 100 பேருக்கு மேல் அன்னதானமும் முதியவர்களுக்கு ஆடைதானமும் வழங்க இருக்கிறேன்...இணைந்து கொள்ள விரும்புபவர்கள்,நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் 9443499003 தகவல் தரலாம்...மெயில்;sathishastro77@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக