திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ராசிக்கட்டம் ,ஜோதிடம்,வானியல்

டி அமாவாசைக்கு சில நண்பர்கள் உதவியால் சிறப்பாக அன்னதானம் ,உடை தானம் செய்தோம்..உதவிய நண்பர்களுக்கு நன்றி..இந்த மாதமும் நிதி அனுப்பட்டுமா என சில நண்பர்கள் கேட்டார்கள்..வேண்டாம் உங்களுக்கு சிரமம் தர விரும்பவில்லை...புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பெற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டேன்.

ஃபேஸ்புக்கில் சில வரிகளை எழுதிவிட்டு அப்படியே ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் நேரம் சரியாக போய்விடுவதால் ப்ளாக் பக்கம் வரவே முடியவில்லை..வாட்ஸ் அப்பில் ஒரு நண்பர் ப்ளாக்கையே மறந்துட்டீங்களா...தினமும் வந்து ஏமாந்து போகிறேன் .தினமும் ஒரு ஜோதிட பதிவு எழுதுங்க என வருத்தப்பட்டார்..இனி ஒழுங்காக எழுதுகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

வானியலும் ராசிக்கட்டமும் ;

பூமியின் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது.பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 360 டிகிரியைதான் 12 ராசிகட்டங்களாக ஒரு ராசிக்கு 30 டிகிரி வீதம் கணக்கிட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது..அதாவது மேசம் ராசிக்கு 30 டிகிரி..இந்த ராசி முதல் ராசி..அதாவது சூரியன் 360 டிகிரி சுற்றி வந்து ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடத்தை தொடங்குகிறார்.முதல் ராசியான மேசத்தில் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்.. முதல் 30 டிகிரியான இதனை சித்திரை மாதம் வருடத்தின் முதல் மாதம் என கணக்கிடப்பட்டது.அதுதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

நம் முன்னோர்கள் ,பூமி சூரியனுக்கு வல இட பாகமாக செல்வதை இரண்டு அயனமாக பிரித்தார்கள்.பூமியிலிருந்து பார்வைக்கு சூரியன் வட பாகமாக செல்வதை உத்திராயண புண்ணியகாலம் என்றும் (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) பின்னர் தென்பாகமாக செல்வதை தட்சயனாயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை)என்றும் பெயரிட்டனர்.

  ரத்த கொதிப்பு கட்டுப்பட

றைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களுக்கு திருப்பதியின் நுழைவாயிலில் தத்ரூபமான சிலை உண்டு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரலை இந்துக்கள் வீடுகளில் , நாளின் ஏதாவது தருணத்திலாவது கேட்காமல் இருக்க முடியாது,இவர் 1930களில் பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்தனை சக்தி வாய்ந்தது,அதை ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் கேட்டு வர ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் வரும் என்பது கண்கூடு
(.-நன்றி -கீதப்ப்ரியன்)

 எப்போதும் வறுமை 

ஜாதகத்தில் மிக முக்கியமானது லக்னாதிபதி..4ஆம் அதிபதி 9ஆம் அதிபதி..1,4,9 என இந்த அதிபதிகள் 6,8ஆம் இடங்களில் மறைந்து போனால் எப்போதும் வறுமைதான்...2 ஆம் அதிபதி 6ல் இருந்தால் கடன் வாங்கிதான் வாழ்க்கை நடத்த முடியும்..2ஆம் அதிபதி 8ல் இருந்தால் எதை தொட்டாலும் நஷ்டம்.2 ஆம் அதிபதி 6,8,12ல் இல்லாமல் எங்கு இருந்தாலும் செல்வம் ,செல்வாக்கு வளரும்.


கருத்துகள் இல்லை: