கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூன், 2017

எந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..? சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள்


பிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்..


நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த  மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம்.ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்... 

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்த படியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம். 

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப் பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன. 

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே விட்டுப் போவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :

சிவ பெருமான் தன்னைதானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

புற்றுநோய் தீர்க்கும் " திருந்து தேவன் குடி அருமருந்தம்மை :

புற்று நோய் தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்து அம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொல்லைகள் தீர்க்கும்  திருச்சேறைருண விமோச்சனர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
      
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும். 

இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.  

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்  சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
      
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய  ‘ஸ்ரீவாஞ்சியம்’ :
      
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், 

கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழி பட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
    
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
        
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,
கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
      
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
      
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". 

ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
      
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". 

நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தெய்வ சக்தி கொண்ட காராம்பசு

நாட்டு மாட்டில் உடல் முழுவதும் கறுப்பாக உள்ளதுதான் காராம்பசு.இதன் பாலை கறந்து ,தைப்பூசம் நாளில் முருகனுக்கு அபிசேகம் செய்து அந்த பாலை அருந்தி நோய் நீங்க பெற்றார்கள் நம் முன்னோர்கள்..செம்பு,பித்தளை ,பஞ்சலோகம் தவிர எந்த பாத்திரத்திலும் பாலை வைக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று ஒரு பெரிய சில்வர் பாத்திரத்தை கோயிலில் வெச்சிருக்காங்க..அதுல கோயிலுக்கு வரவங்க எல்லாம் பாக்கெட் பாலை கொண்டு வந்து ஊத்துறாங்க..அதை எடுத்து அபிசேகம் செய்றாங்க...சுவாமி சிலை கருங்கல் சிலை ஆனாலும் ,பஞ்சலோகம் ஆனாலும் அபிசேகம் செய்யப்படும் பொருளோடு சேர்ந்து வினைகள் புரிந்து நம் உடலுக்கு நன்மை செய்வதுதான் அபிசேகத்தின் அடிப்படை தத்துவம்.அதை முறையாக செய்வோம்..!!
******************************


கோயிலுக்கு இரவை பகலாக்கும் லைட்ஸ் கோயிலை சுத்தி வைக்குறது,டைல்ஸ் போட்டு வழவழன்னு நடக்க முடியாதபடி மாத்துறது,காதை கிழிக்கும் கரண்ட் மேளம் வைக்குறது,ரெக்கார்டு டான்ஸ்,ஆர்க்கெஸ்ட்ரா வைக்குறது ,,சில்வர் பாத்திரம் பயன்படுத்துவது இது எல்லாம் ராமேஸ்வரத்திலும் தீர்க்க முடியாத பாவ செயலாகும்...காரணம் பல ஆயிரம் மக்களின் ஆரோக்கியம்,மன சாந்தியை ஒரே நேரத்தில் கெடுக்கிறீர்கள்.
அக்காலத்தில் கோயில்களில் அதுவும் உள்புறத்தில் மட்டும் பரத நாட்டியம்,வீணை இசை,கதை சொல்தல்,புராண கதை,மக்களுக்கு நல்லவை சொல்லல் என இருந்தது.மக்கள் நடக்க டைல்ஸ் போட மாட்டார்கள்..பிரம்மாண்டம்,ஆன கோயில் கட்டியவர்களால் அதை செய்யவா முடியாது..? கோயிலில் அடிப்படை தத்துவமே ஆரோக்கியம்,மன சாந்திதானே..?
இரண்டையும் டைல்ஸ் கெடுக்கும்..கண்களின் ஒளியை பலப்படுத்துவது தீபம்..அதிக வெளிச்சமுள்ள லைட்ஸ்..தெய்வ சக்தியை குறைக்கும்..சிறிய வெளிச்சத்தில் மட்டுமே கடவுளை தரிசிக்க வேண்டும்....!!
**************************
நாட்டு மாட்டில் உடல் முழுவதும் கறுப்பாக உள்ளதுதான் காராம்பசு.இதன் பாலை கறந்து ,தைப்பூசம் நாளில் முருகனுக்கு அபிசேகம் செய்து அந்த பாலை அருந்தி நோய் நீங்க பெற்றார்கள் நம் முன்னோர்கள்..செம்பு,பித்தளை ,பஞ்சலோகம் தவிர எந்த பாத்திரத்திலும் பாலை வைக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று ஒரு பெரிய சில்வர் பாத்திரத்தை கோயிலில் வெச்சிருக்காங்க..அதுல கோயிலுக்கு வரவங்க எல்லாம் பாக்கெட் பாலை கொண்டு வந்து ஊத்துறாங்க..அதை எடுத்து அபிசேகம் செய்றாங்க...சுவாமி சிலை கருங்கல் சிலை ஆனாலும் ,பஞ்சலோகம் ஆனாலும் அபிசேகம் செய்யப்படும் பொருளோடு சேர்ந்து வினைகள் புரிந்து நம் உடலுக்கு நன்மை செய்வதுதான் அபிசேகத்தின் அடிப்படை தத்துவம்.அதை முறையாக செய்வோம்..!!
***********************************
இலுப்பை மரங்களை அதிகளவில் வளர்ப்போம்;
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீயுறங்கு..’

இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.
அக்காலத்தில் ஊர் ஊருக்கு இலுப்பை மரத்தோப்புகள் இருக்கும் இம்மரம் இருக்கும் இடத்தில் கெட்ட சக்திகள் அண்டாது...மாந்த்ரீக பாதிப்புகளில் இருந்து ஊரை காக்க ஒவ்வொரு ஊர்க்காரர்களும் இதை வளர்த்தனர் என்றும் சொல்வர்.இலுப்பை கொட்டைகளை ஆட்டி எண்ணெய் எடுத்து அதில் விளக்கேற்றி காற்றில் பரவும் விஷக்கிருமிகளை அழித்தனர்..
ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்பு வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தனர்...இது பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயிர் வளர்க்கும் உரமாகவும் பயன்பட்டிருக்கிறது!!
இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலியை குணமாக்கும் சக்தி உண்டு.
ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும்...இலுப்பை மரங்களை அதிகளவில் வளரசெய்வது முக்கியம்!!

சனி, 20 பிப்ரவரி, 2016

பிரதோசம் வழிபாடு அற்புதங்கள்

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.


பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவ

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.


நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

புதன், 23 டிசம்பர், 2015

திருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர். கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது நம்பிக்கை. 

தல வரலாறு: ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. திருமால் குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். மீண்டும் உலகத்தை படைக்க விரும்பி, தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார். அவருக்கு படைக்கும் சக்தியை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா, திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் ஒரு கோவில் அமைத்தார். அவரே "திருவுந்தி பெருமான்' என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். 

"உந்தி' என்றால் "வயிறு'. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்ததால், பிரம்மா பிறக்க காரணமான உறுப்பின் பெயரையே பெருமாளுக்கு சூட்டினர். புராண காலத்தில் பிரம்மாவின் பெயரால் இவ்வூர் "சதுர்முகன்புரி' (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) என அழைக்கப்பட்டது. தற்போது நார்த்தாம்பூண்டி எனப்படுகிறது. 

நாரதர் பூண்டி: ஒரு சமயம் சாபம் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவர் தன் சாபம் தீர திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார். 12 ஆண்டுகள் வழிபட்ட பிறகு, திருமால் நாரதருக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். நாரதர் தங்கி வழிபட்டதால் சதுர்முகன்புரிக்கு "நாரதர் பூண்டி' என பெயர் ஏற்பட்டது. அதுவே "நார்த்தாம்பூண்டி' என மருவி விட்டது. 

12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவரையர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோவில் கோபுரம், மண்டபம், குளம் அழிந்தது. பிறகு பெருமாளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் "கல்யாண வெங்கடேசப் பெருமாள்' எனப்படுகிறார். பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.

இருப்பிடம்: திருவண்ணாமலை-வேலூர் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் நாயுடு மங்கலம் அங்கிருந்து கூட்டுரோட்டில் 5 கி.மீ.
அலைபேசி: 94421 56422.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை


நல்ல சந்தன ஊதுபத்தி இரண்டை கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமான அறையில் வைத்துவிட்டு 20 நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும் தீரும்.மனம் லேசாகும்..
 
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.


சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.


இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.



பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.


பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது.

அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வித்தியாசமான ஆலயங்கள்;சக்திவாய்ந்த வழிபாடு

நமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.

●  கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.


●  ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.


●  புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோவில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதி யார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து செல்வாராம். இக்கோவில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார்


.●  மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன.

●  ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து,
அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார் கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோவில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

●  மயிலம் முருகன் கோவிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.


●  அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோவில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரகமாக இருக்கிறது. இக்கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முற்பட்ட கோவிலாகும்.

●  நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சந்நிதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.


●  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோவில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த் தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து  வருகிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


●  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத் தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


●  மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு- தெற்கு கோபுரங்களுக்கிடையே  கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சந்நிதியை இரண் டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


●  திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.


●  108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

●  கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

●  விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனா பிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.


●  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.


●  அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகை யால் ஆனவர்.
●  உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

●  திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சந்நிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.


●  புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோவில் திங்கட் கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோவில் மூடியிருக்கும்.
●  தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. இக்கல் சந்திரனி டமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.

●  நாம் சாதாரணமாக கோவில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால் இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்

மேசம்  -திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி

ரிசபம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மிதுனம் -சிதம்பரம் நட்சராஜர் தட்சிணாமூர்த்தி

கடகம் -திருசெந்தூர் முருகன் கோயில் தட்சிணாமூர்த்தி

சிம்மம்-கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி 

கன்னி -சங்கரன்கோயில் தட்சிணாமூர்த்தி

துலாம் -மதுரை மீனாட்சி கோயில் தட்சிணாமூர்த்தி 

விருச்சிகம் -திருப்புடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்)

தனுசு -ஆலங்குடி கோயில் தட்சிணாமூர்த்தி

மகரம் -திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி 

கும்பம் -திருக்கடையூரமுதகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மீனம் -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்

27  நட்சத்திர  அதி தேவதை  வழிபாடு  தோஷங்களும்,  பரிகாரங்களும்;

அசுவினி;

ஸ்ரீ சரஸ்வதி தேவி அசுபதி  நட்சத்திரத்தின்  அதி தேவதை;
ஓம் அம் அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவாய நமஹ
அசுபதி  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
     திருத்துறைப்பூண்டி

அருள் மிகு பிறவி மருந்தீஸ்வரர்  திருக்கோவில்
திருவாரூரிலிருந்து  30 கி.மீ.  தூரத்தில்  திருத்துறைப்பூண்டி  உள்ளது. பஸ் ஸ்டேண்டிலிருந்து 1 கி.மீ.  தூரத்தில் கோவில் உள்ளது.


2.ஸ்ரீ துர்க்கை தேவி  பரணி நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பம்  பரணி மாஹாளி ஸ்ரீ துர்க்கா  தேவாய நமஹ

பரணி இந்த  நட்ச்த்திரம் அவதரித்த ஸ்தலம்
    நல்லாடை

அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.  நெடுங்காடு  வழியாக காரைக்கால்  செல்லும்  வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
ஸ்ரீ அக்னி தேவி கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை
ஓம் கம் கிருத்திகை ஆதிசேசன் ஸ்ரீ அக்னி தேவாய நமஹ

3.கார்த்திகை இந்த நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
    கஞ்ச நகரம்

அருள் மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
 மயிலாடுத்துறை  பூம்புகார் செல்லும் வழியில் 8.கி.மீ. தூரத்தில் கஞ்சா நகரம் அமைந்துள்ளது.  மெயின்  ரோட்டிலிருந்து   பிரியும்  ரோட்டில் அரை கி.மீ.  சென்றால்  கோயிலை  அடையலாம்.

4.ஸ்ரீ பிரம்மா  ரோகிணி  நட்சத்திரத்தின் அதி தேவதை
ஓம் ரோம்  ரோகிணி ஸ்ரீ நாகர் ஸ்ரீ  பிரம்மா தேவாய  நமஹ ரோகிணி  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
     காஞ்சிபுரம்
அருள் மிகு பாண்டவ  தூதப் பெருமாள்  திருக்கோவில்
  காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர்  கோயில்  எதிரில்  உள்ள  சாலையில்  கோயில்  அமைந்துள்ளது.

5.ஸ்ரீ சந்திரன்  மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்  அதி தேவதை
ஓம் ம்ரும் மிருக சீர்ஷம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
    முகூந்தனூர்
அருள் மிகு ஆதி நாராயணபெருமாள் திருக்கோவில்
தஞ்சாவூரிலிருந்து   திருவாரூர் செல்லும்  வழியில் 50 கி.மீ. தூரத்தில் முகந்தனூர் உள்ளது.  இந்த  பஸ்  ஸ்டாப்பிலிருந்து  1 கி.மீ.  தூரம்  சென்றால்  கோயிலை  அடையலாம்

6.ஸ்ரீ ருத்திரன் திருவாதிரை நட்சத்திரத்தின்  அதிதேவதை
 ஓம் ஆம்  திருவாதிரை  ஸ்ரீ  சனீஸ்வரா ஸ்ரீ ருத்திரர் தேவாய நஹ
.திருவாதிரை  இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
   அதிராம் பட்டினம்
அருள் மிகு அபயவரதீஸ்வரர்  திருக்கோவில்
தஞ்சாவூரிலிருந்து 70 கி.மீ.  தூரத்தி உள்ள பட்டுக்கோட்டை சென்று  அங்கிருந்து  12 கி.மீ.  சென்றால்  அதிராம் பட்டினத்தில் உள்ள அந்த ஆலயத்தை அடையலாம்.

7.ஸ்ரீ அதிதி  தேவி  புனர் பூசம் நட்சத்திரன் அதிதேவதை
ஓம் பும் புனர் பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ அதிதி  பகவான் தேவாய நமஹ

புனர் பூசம்  இந்த  நட்சத்திரம்   அவதரித்த ஸ்தலம்
     வாணியம் பாடி
அருள் மிகு  ஆதிதீஸ்வரர்   திருக்கோவில்
வேலூரிலிருந்து  கிருஷ்ணகிரி  செல்லும்  வழியில்   67 கி.மீ.  தூரத்தில் உள்ளது.   பஸ் ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளா   பழைய  வாணியம் பாடியில் உள்ளது.

8.ஸ்ரீ குரு  பூசம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம்  பூசம்  ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்ரீ  குரு  பகவான்  தேவாய நமஹ

 பூசம்  இந்த நட்சத்திரம்  அவதரித்த திருக்கோவில்
  விளாங்குளம்
அருள் மிகு  அட்சயபுரீஸ்வரர்   திருக்கோவில்
பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும்  வழியில்   கிழக்கு  கடற்கரை  சாலையில் 30 கி.மீ. சென்றால்  கோயிலை  அடையலாம்.  புதுக்கோட்டையிலிருந்து   பேராவூரணி  வழியாகவும்   விளாங்குளத்தை  அடைய   வழியிருக்கிறது.

9.ஸ்ரீ ஆதிசேசன்   ஆயில்யம்   நட்சத்திரத்தின்  அதி தேவதை
ஓம் ஆம்   ஆயில்யம்  ஸ்ரீ  ராகு பகவான் ஸ்ரீ ஆதிசேசன்  தேவாய நமஹ

.ஆயில்யம்  இந்த   நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
       திருவிசை நல்லூர்
அருள் மிகு  கற்கடடேஸ்வரர்  திருக்கோவில்
 கும்பகோணத்திலிருந்து   சூரியனார்  கோவில் செல்லும்  ரோட்டில்  11 கி.மீ.  தூரத்தில் உள்ள  திருவிசை நல்லூர்  சென்று  அங்கிருந்து    பிரியும்   ரோட்டில்  2  கி.மீ.  சென்றால்  கோயிலை  அடையலாம்.

10.ஸ்ரீ சுக்கிரன் மகம் நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் மம்  ஸ்ரீ தில்லைக்காளி  ஸ்ரீ  சுக்கிரர்  தேவாய  நமஹ
மகம் இந்த நட்சத்திரம்  அவதரித்தன் ஸ்தலம்
விராலிப் பட்டி விலக்கு
அருள் மிகு  மகாலிங்கேஸ்வரர்  திருக்கோவில்
  திண்டுக்கல்லிருந்து  நத்தம் செல்லும்  ரோட்டில்  10 கி.மீ.  தூரத்தில்  விராலிப்பட்டி உள்ளது.  இங்கிருந்து  2 கி.மீ. மினி பஸ்ஸில் சென்றால்  கோயிலை  அடையலாம்.  ஆட்டோ  வசதியும் உண்டு.

11.ஸ்ரீ  பார்வதி   தேவி  பூரம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம் பூரம்  ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  பார்வதி  தேவாய நமஹ
பூரம்  இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
   திருவரங்குளம்
அருள் மிகு  ஹரிதீர்த்தேஸ்வரர்  திருக்கோவில்
புதுக்கோட்டையிலிருந்து  பட்டுக்கோட்டை  செல்லும்  வழியில்  7 கி.மீ.  சென்றால் வரும்  திருவரங்குளம் என்னும்  ஊரில்  ஆலயம் உள்ளது.

12.ஸ்ரீ சூரியன் உத்திரம் நட்சத்திரத்தின் அதிதேவதை
ஓம் உம் உத்திரம் ஸ்ரீ வாஞ்சியம்மன்  ஸ்ரீ  சூரிய பகவான் தேவாய நமஹ

உத்திரம் இந்த நட்சத்திரம்  அவதரித்த  ஸ்தலம்
  இடையாற்றுமங்கலம்
திருச்சி சத்திரம்   பஸ் ஸ்டேண்டிலிருந்து  22 கி.மீ.   தூரத்தில் உள்ள   லால்குடி  சென்று  அங்கிருந்து   5 கி.மீ. தூரத்திலுள்ள   இடையாற்று  மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

13.ஸ்ரீ சவிதா  தேவி  ஹஸ்தம்  நடசத்திரத்தின்  அதிதேவதை
ஓம்  ஹம் அஸ்தம்  ஸ்ரீ  ராஜ துர்க்கை  ஸ்ரீ  சவிதா  தேவி  தேவாய  நமஹ
ஹஸ்தம்  இஎத  நட்சத்திரம்  அவதரித்த  ஸ்தலம்
    கோமல்

அருள் மிகு  கிருபா கூபாரேஸ்வரர்  திருக்கோவில்
கும்பகோணத்திலிருந்து  மயிலாடுதுறை  செல்லும்  வழியில்  உள்ள குத்தாலத்திலிருந்து   பிரியும்  ரோட்டில்  8 கி.மீ.  தூரத்தில்  கோமல் ஊரில்  உள்ளது.  குத்தாலத்திலிருந்து   பஸ் ஆட்டோ  வசதி உள்ளது.

14.ஸ்ரீ துவஷடா  புவனேஸ்வரி  சித்திரை நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் சிம் சித்திரை ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ புவனேஸ்வரி தேவாய நமஹ
   குருவித்துறை
அருள் மிகு  சித்திரை ரத வல்லப பெருமாள் திருக்கோவில்
மதுரையிலிருந்து  23 கி.மீ.  தூரத்திலுள்ள   குருவித்துறைக்கு  மதுரை  பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து  பஸ் உள்ளது.  குருவித்துறையிலிருந்து   3.கி.மீ.  தூரத்தில் உள்ளது.   வியாழன், பெளர்ணமி   தினங்களில்   கோயில் வரை பஸ்கள் செல்லும்   மற்ற  தின்ங்களில்  ஆட்டோவில்  செல்ல வேண்டும்.

15.ஸ்ரீ வாயு  சுவாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் ஸ்வாம் ஸ்வாதி  ஸ்ரீ  சனிபகவான்  ஸ்ரீ  வாயு  பகவான்  தேவாய  நமஹ
சுவாதி இந்த நட்சத்திரம் அவதரித்த  ஸ்தலம்
  சித்துக்காடு
 அருள் மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோவில்
பூந்தமல்லியிலிருந்து  தண்டூரை  என்னும்  ஊருக்குச் செல்லும்  வழியில்  8 கி.மீ. தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம்  உள்ளது.  குறித்த  நேரத்தில்  மட்டுமே  பஸ் உண்டு  என்பதால்   பூந்தமல்லியிலிருந்து  வாகனங்களில்  சென்றும் திரும்பலாம்.

16.ஸ்ரீ முருகன்  விசாகம் நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் விம் விசாகம் ஸ்ரீ வன துர்க்கை  ஸ்ரீ முருகபகவான் தேவாய நமஹ
. விசாகம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
    திருமலைக்கோவிலை
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில்
மதுரையிலிருந்து  155 கி.மீ. தொலைவிலுள்ள செங்கோட்டை  சென்று  அங்கிருந்து 7 கி.மீ. தூரத்திலுள்ள்  திருமலைக்கோவிலை  பஸ் மற்றும்  வேன்களில்  அடையலாம்.  இவ்வூரைச் சுற்றி  பிரபல்  ஐயப்ப  ஸ்தலங்களான  ஆரியங்காவு,  அச்சன் கோவில், குளத்துப்புழை,  ஆகியவை உள்ளன.

17. ஸ்ரீ லட்சுமி தேவி  அனுசம் நட்சத்திரத்தின்  அதிதேவதை 
ஒம் அம் அனுசம்  ஸ்ரீ  முகாம்பிகை  ஸ்ரீ  அஷ்டலட்சுமி தேவாய நமஹ
அனுஷம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
   திருநின்றியூர்
அருள் மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்
மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி  செல்லும்  வழியில்  7 கி.மீ. தூரத்தில் திருநின்றியூர்  என்னும் ஊரில்  இத்தலம்  அமைந்துள்ளது.

18. ஸ்ரீ இந்திரன் கேட்டை  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் ஜேம் கேட்டை ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ இந்திரன் தேவாய நமஹ
 கேட்டை  இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
  பசுபதி கோயில்
அருள் மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம்  செல்லும்  வழியில்   13 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

19.ஸ்ரீ அனுமன் மூலம் நட்சத்திரத்தின் அதிதேவதை
ஓம் மும் மூலம் ஸ்ரீ சொக்கநாதர் ஸ்ரீஅனுமன் பகவான் தேவாய நமஹ

 மூலம்  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
மப்பேடு
அருள் மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில்
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும்  வழியில் 45 கி.மீ. தூரத்தில்  மப்பேடு  என்ற ஊரில்  இத்தலம் உள்ளது.  [பூந்தமல்லியிலிருந்து  22 கி.மீ.  பேரம்பாக்கம் செல்லும்  வழியில்]

20. ஸ்ரீ வருணன்  பூராடம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம் பூராடம் ஸ்ரீபிரகஸ்பதி ஸ்ரீ  வருண பகவான்  தேவாய நமஹ
 பூராடம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
  கடுவெளி
அருள் மிகு  ஆகாச புரீஸ்வரர் திருக்கோவில்
 தஞ்சாவூரிலிருந்து  [13. கி.மீ திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை  செல்லும்  வழியில் 4. கி.மீ. தூரம் சென்றால்  கடுவெளியை  அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

21.உத்திராடம் நட்சத்திரத்தின் அதி தேவதை வினாயகர்

ஓம் உம் ஸ்ரீ துர்க்காதேவி ஸ்ரீமகாகணபதி தேவாய நமஹ

 அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
 இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு

22.ஸ்ரீ  விஷ்ணு  திருவோணம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் திம் திரு ஓணம்  ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மகா விஷ்ணு   தேவாய நமஹ
திருவோணம் இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
  திருப்பாற்கடலை
அருள் மிகு  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில்
வேலூரிலிருந்து  சென்னை செல்லும்   வழியில்  20 கி.மீ.  தூரத்திலுள்ள  காவேரிப்பாக்கத்தில்  இறங்கி   அங்கிருந்து   பிரியும்  ரோட்டில்  2 கி.மீ.  சென்றால்  திருப்பாற்கடலை  அடையலாம்.  ஆற்காடு  வாலாஜாவிலிருந்தும்  பேருந்துகள்   உள்ளன.  இவ்வூரில்  இரண்டு   பெருமாள்   கோயில்கள்  இருப்பதால்  பிரசன்ன   வெங்கடேச பெருமாள்  எனக்  கேட்டுச்  செல்லவும்.

23.ஸ்ரீ  வசுக்கள் அவிட்டம் நட்சத்திரத்தின்  அதிதேவதை
1.தரன்
2.சோமன்
3.அனிலன்
4.ப்ரத்யூஷன்
5.த்ருவன்
6.அஹன்
7.அனலன்
8. ப்ரபஷன்
 ஓம் அம் அவிட்டம்  ஸ்ரீ அஷ்ட்திக்பாலகர்கள் ஸ்ரீ அஷ்டவசுக்கள் தேவாய நமஹ
 அவிட்டம்  இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
   கொடுக்கை
அருள் மிகு ஞானபுரீஸ்வரர்  திருக்கோவில்
கும்பகோணம் மகாமகக்குளம்  மேற்குக்  கரையிலிருந்து 4 கி.மீ.  தூரத்தில்  கோயில் உள்ளது.   கும்பகோணத்திலிருந்து   தாராசுரம்முழையூர்  வழியாக   மருதாநல்லூர்  செல்லும்  பஸ்களில் கொருக்கை   என்னும்  இடத்தில் உள்ளது.

24.ஸ்ரீ   யமன் சதயம்  நட்சத்திரத்த்ன் அதிதேவதை
 ஓம் சம் சதயம் ஸ்ரீ சர்பசயனப்பெருமாள்   ஸ்ரீ  எமன் பகவான்  தேவாய நமஹ
 சதயம்   இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
  திருப்புகலூர்
அருள் மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவாரூர்  மாவட்டம்  நன்னிலத்திலிருந்து  நாகப்பட்டினம்  செல்லும்  வழியில்  10 கி.மீ. தொலைவில்  திருப்புகலூர்  என்னும்  ஊரில்  இத்தலம் உள்ளது.

25. ஸ்ரீ குபேரன் பூரட்டாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம்  பூரட்டாதி  ஸ்ரீ சித்தர குபதர் ஸ்ரீ குபேரபகவான் தேவாய நமஹ

 பூரட்டாதி  இந்த  நட்சத்திரம் அவதரித்த  ஸ்தலம்
  ரங்கநாதபுரம்
அருள் மிகு திருவானேஸ்வரர் திருக்கோவில்
திருவையாரிலிருந்து  17 கி.மீ. தூரத்திலுள்ள  திருக்காட்டுப்பள்ளி சென்று  அங்கிருந்து   அகரப்பேட்டை  செல்லும் ரோட்டில்  2 கி.மீ. தூரம் சென்றால்  ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
 
26. ஸ்ரீ  காமதேனு  உத்திரட்டாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் உம் உத்திரட்டாதி  ஸ்ரீ சனி பகவான்  ஸ்ரீ காமதேனு தேவாய நமஹ
 உத்திரட்டாதி  இந்த  நட்சத்திரம்ன்   அவதரித்த ஸ்தலம்
 தீயத்தூர்
அருள் மிகு  சகஸ்ரலட்சுமீஸ்வரர்  திருக்கோவில்
புதுக்கோட்டயிலிருந்து  40 கி.மீ.  தூரத்திலுள்ள   ஆவுடையார்   கோவில் சென்று,  அங்கிருந்து   திருப்புவனவாசல்  செல்லும்  வழியில்  21 கி.மீ.   தூரத்தில் தீயத்தூர்  உள்ளது.  மதுரையிலிருந்து   செல்பவர்கள்  அறந்தாங்கி  சென்று  அங்கிருந்து  திருப்புவனவாசல்  செல்லும்  பஸ்களில்  சென்றால்  தீயத்தூர்  என்னும்  இடத்தில்  உள்ளது.  தூரம்  120 கி.மீ.

27.ஸ்ரீ சனீஸ்வரன்  ரேவதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஒம் ரேம் ரேவதி ஸ்ரீ சோமஸ்கந்தர் ஸ்ரீ சனீஸ்வரர் தேவாய நமஹ
ரேவதி இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
     காருகுடி

அருள் மிகு   கைலாசநாதர் திருகோவில்
திருச்சியிலிருந்து  முசிறி  40 கி.மீ.  சென்று   முசிறியிலிருந்து  வேறு  பஸ்களில்   தாத்தாயங்கர்பேட்டை [21 கி.மீ.]  செல்ல வேண்டும்.  இங்கிருந்து   5 கி.மீ.  தூரத்தில் உள்ள  காருகுடி  என்னும் இடத்தில் உள்ளது.

சனி, 21 பிப்ரவரி, 2015

பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்

நட்சத்திர  அதிபதிகளும்,   பரிகார ஸ்தலங்களும்;

நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில்  பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும்.முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள்..அங்குள்ள தல மரத்தை வலம் வாருங்கள்..


1.அசுவினி- சனிஸ்வரர்; திருநள்ளாறு   தர்ப்பன்யேசுவரர்

2.பரணி- காளி;திருவாலங்காடு[அரக்கோணம் அருகில்]

3. கார்த்திகை- ஆதிசேஷன்; நாகப்பட்டினம் [நாகநாதர்]
4.ரோகிணி- நாக நாதர்;   திருநாகேஸ்வரம் [கும்பகோணம் அருகில்]

5. மிருகசீரிடம்- வனதுர்க்கை;  கதிரமங்கலம் [கும்பகோணம்  குத்தாலம் சாலை
6. திருவாதிரை- சனீஸ்வரர்;   திருக்கொள்ளிக்காடு[திருவாரூர் 
  அருகில்]
7.புனர்பூசம்- தட்சணாமூர்த்தி;  ஆலங்குடி[கும்பகோணம் அருகில்]

8.பூசம்-   தட்சணாமூர்த்தி ;  குச்சனூர்  [தேனி அருகில்]

9.ஆயில்யம்-   சனீஸ்வரர்;  திருப்பரகுன்றம்  சனிபகவான்

10.மகம்- தில்லைக்காளி ; சிதம்பரம்

11.  பூரம்-  ராகு  ;திருமணஞ்சேரி  ராகு [மயிலாடுதுறை]

12.உத்திரம்- வஞ்சியம்மன்;  மூலனூர்[  [தாராபுரம்  அருகில்]

13. ஹஸ்தம்- ராஜ துர்க்கை; திருவாரூர்   ராகு

14. சித்திரை- ராஜ துர்க்கை;  திருவாரூர்  சனி[வன்மீக  நாதர்   நீலோற்பாலம்பாள்]

15.சுவாதி-  சனீஸ்வரர்;   திருவானைக்காவல் ராகு,  சனி [திருச்சி அருகில்]

16.  விசாகம்-  சனீஸ்வரர்   திருவேடகம்  ராகு,  சனி  [சோழவந்தான்  அருகில்]

17.அனுசம்- மூகாம்பிகை;  திருவிடைமருதூர்[கும்பகோணம்அருகில்]

18.கேட்டை  அங்காள பரமேஸ்வரி ;  பல்லடம்[காங்கேயம் அருகில்]

19.  மூலம்-  தட்சிணாமூர்த்தி; மதுரை

20.   பூராடம்- தட்சிணாமூர்த்தி;  திருநாவலூர்  [பண்ருட்டி  அருகில்

21.உத்திராடம்-  துர்க்கை;  தட்சிணாமூர்த்தி தருமபுரம் [திருநள்ளாறு]

22.திருவோணம்-  ராஜ காளியம்மன்; தெத்துப்பட்டி [திண்டுக்கல் அருகில்]

23. அவிட்டம்- சனி; ராகு;   கொடுமுடி சனி,  ராகு  [கரூர் அருகில்]

24. சதயம்  - சனி, ராகு;  திருச்செங்கோடு  சனி,  ராகு  [நாமக்கல் அருகில்]

25.பூரட்டாதி – ஆதிசேஷன் ; காஞ்சீபுரம்  சித்ரகுப்தர் , ராகு. கேது

26. உத்திரட்டாதி – சனி,  தட்சிணமூர்த்தி;  ஓமாம்புலியூர்  சனி, ராகு [சிதம்பர அருகில்]

27.ரேவதி- சனி, தட்சிணாமூர்த்தி;  ஒமாம் புலியூர்  சனி,  ராகு  சிதம்பரம் அருகில்]