கும்பகோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பகோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூன், 2017

எந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..? சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள்


பிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்..


நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த  மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம்.ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்... 

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்த படியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம். 

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப் பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன. 

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே விட்டுப் போவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :

சிவ பெருமான் தன்னைதானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

புற்றுநோய் தீர்க்கும் " திருந்து தேவன் குடி அருமருந்தம்மை :

புற்று நோய் தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்து அம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொல்லைகள் தீர்க்கும்  திருச்சேறைருண விமோச்சனர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
      
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும். 

இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.  

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்  சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
      
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய  ‘ஸ்ரீவாஞ்சியம்’ :
      
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், 

கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழி பட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
    
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
        
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,
கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
      
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
      
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". 

ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
      
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". 

நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

தொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோயில்கள்

தொழில்  உயர்வு
திருமோகூர்;

இங்கே  சக்கரத்தாழ்வார்தான்  விசேச  அம்சம்.  இவர் 16  கைகள்   கொண்டவராக  16  ஆயுதங்களுடன்  திகழ்கிறார்.  விக்ரகத்தின்  மீது  மந்திர  எழுத்துக்கள்  எழுதப்பட்டுள்ளன.  சக்கரத்தாழ்வார்   மந்திர  எழுத்துக்களோடு  காணப்படுவது  இங்கு  மட்டுமே.  சக்கரத்தாழ்வார்  பின்புறம்  யோக  நரசிம்மர்  உள்ளார்.  இதை  ‘நரசிம்ம  சுதர்சனம்”  என்று  சொல்வார்கள்.  இவரை  வணங்கினால்,  வியாபார  விருத்தி,  தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு  ஆகியவை  கிடைக்கும்.
வழித் தடம்;  மதுரை- மேலூர்  சாலையில் உள்ளது.


அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஒரே  இடத்தில்  கிடைக்ககூடிய ஸ்தலம்

பர்வத  மலை;
உமாதேவி  தன்  பதியான  சிவனிடம்  அறம், பொருள்,  இன்பம்,  மோட்சம்  ஆகியவை  ஒரே இட்த்தில்  கிடைக்ககூடிய  சிவ ஸ்தலம்  ஒன்றைக்  கூற  வேண்டும்  என்று  கேட்டுக்  கொண்டதற்கு  சிவ பெருமான்  சுட்டிக் காட்டிய  ஸ்தலம்.  இங்கு  பிரம்மராம்பிகை  உடனுறை  மல்லிகார்ஜூனர்  எழுந்தருளி  அருள் செய்கிறார்.  மகா லட்சுமி  தவம்  செய்த   இடம்.  பதிணெண்  சித்தர்கள்  தினமும்  வந்து   வணங்கும்  மலை.  மூலிகைக்காற்று  எப்போது  வீசி  நோய்  தீர்க்கும்  மலை.
வழித் தடம்
திருவண்ணாமலையிலிருந்து  35 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

.  குழந்தைகளுக்குப் பேச்சு,  கையெழுத்து  சரியாக  வராத  நிலை

இன்னம்பூர்;
இக்கோவிலில்  உள்ள  எழுத்தறி  நாதருக்கு  அர்ச்சனை  செய்தால் பேச்சு  சரியாக  வராத  குழந்தைகளுக்குப்  பேச்சு  வரும்.   கையெழுத்து  சரி வர  வராத  குழந்தைகளுக்கு  கையெழுத்து  சரியாக  வரும்.  குழந்தைகளின்  நாக்கில்  புஷ்பத்தால்  எழுதுகிறார்கள்.
வழித் தடம்;
கும்பகோணம்- சுவாமி மலை  சாலையில்  உள்ளது.


  வரும்  ஆபத்துக்களை  முன் கூட்டியே  அறிய
திருப்பழனம்;
இறைவன்  ஆபத்சகாயேஸ்வரர்.  இறைவி  பெரிய நாயகி.  எவர்  ஒருவர்  இத்தலத்திற்கு  வந்து  இவ்விருவருரையும்  வணங்கிறார்களோ,  அவர்களுக்கு  வரும்  ஆபத்துக்கள் முன்கூட்டியே  தெரிய  வரும்.  அதன் படி  வரும்  ஆபத்துக்கலிருது  மீண்டு  கொள்ளலாம்.
வழித் தடம்;
தஞ்சை  மாவட்டம்  திருவையாற்றுக்கு  அருகில்,  திருவையாற்றுக்கு  அருகில்,  திருவையாறு-  கணபதி  அக்ரஹாரம்  சாலையில்  உள்ளது.
.  உடல்  ஊனமுற்றோர்  குறை  நீங்க
கூனஞ்சேரி;
மூலவர்  கைலாய  நாதர்,  கருவிலிருந்து  பிறக்கும்  போதே  எட்டு  கோணலுடன்  பிறந்த  அஷ்டாவக்கிரன்  புது  உருக்கொண்ட  ஸ்தலம்.  பிறரைப்  போல்  கோணல்  நீங்கி  அழகு  பொருளாகியவனாக  மாறிய ஸ்தலம்.  இங்குள்ள  கைலாய  நாதரை  வழிபட  உடல்  ஊனமுற்றவர்  குறை  நீங்கி  இறை  அருள் பெறலாம்.
வழித் தடம்;
சுவாமி மலையிலிருந்து  திருவைகாவூர்  செல்லும்  சாலையில்  உள்ளது.
.  தங்க  நகைத் தொழிலில்  ஈடுபடுபவர்  மேன்மையடைய;
செதலபதி;
இங்குள்ள   முக்தீஸ்வரர்   கோவிலில்  சுவர்ணவல்லி  தாயார்  காட்சி  தருகிறார்.  சுவர்ணம்   என்றால்  தங்கம்.  தங்கத்தை  வாங்கி  குவிக்க  வேண்டும்  என  விரும்புபவ,  தங்க நகைத்  தொழிலில்   ஈடுபட்டிருப்பவர்  இந்த  அம்பிகையை  வழிபட  செல்வம்  செழிக்கும்.
வழித் தடம்;
திருவாரூர்-  மயிலாடுதுறை  சாலையில்  உள்ள  கூத்தனூரிலிருந்து 2 கி.மீ.  தூரத்திலுள்ளது.
 மாதவிடாய்  சிக்கல்  தீர;   மாதவிடாய்  கோளாறு   காரணமாக  கர்ப்பம்  தரிக்காதவர்கள்  முப்பந்தல்   இசக்கியம்மனையும்,  குழந்தை  பெற்ற   தாய்மார்கள்  மாதவிடாய்   அடிக்கடி  வருவது,  அதிக   ரத்தப்போக்கு   ஆகியவற்றுடன்  போராடினால்   திருநெல்வேலி  இசக்கியம்மனையும்  வழிபட  வேண்டும்.
வழித் தடம்;
திருநெல்வேலியிலிருந்து  நாகர் கோவில்  செல்லும்  ரோட்டில்  50 கி.மீ.  தூரத்தில்   காவல்  கிணறு  எனற   இடத்தில்   தாண்டிச் சென்றால்  முப்பந்தல்   இசக்கியம்மனைத்  தரிசிக்கலாம்.
 திருநெல்வேலி  குறுக்குத் துறை  இசக்கியம்மனைத்  தரிசிக்க  பழைய  பஸ்  ஸ்டாண்டிலிருந்து  [ஜங்சன்]   தடம்  எண்  10 ல்  சென்றால்  இத்தலத்தை  அடையலாம்.
ஆண்டாங்கோவில்;
இது,  ருது  பரிகார   தலம்  ஆகும்.  அம்பிகை   சிறப்புமிக்கவள்,   வரப்பிரசாதி.  சோம  வாரத்தில்    இத்தலத்தில்  உள்ள  புஷ்கறணியில்  நீராடி,  ஏழு  சோம வாரம்  அம்பிகையை  தரிசித்தால்,  உரிய   வயது  வந்ததும்   ருதுவாகாத  பெண்கள்  ருதுவாவார்கள்.
வழித் தடம்;
குடந்தையில்  இருந்து   வலங்கைமான்   வழியாக  குடவாசல்  செல்லும்  வழித்தடத்தில்   2 கி. மீ. தொலைவில் உள்ளது.

   நவமாருதி

திண்டுக்கல்;   தமிழ்நாட்டில்   மிகவும்   அரிதாக   விள்ங்கும்  நவமாருதி   [ஒன்பது   வடிவங்கள்]   திண்டுக்கல்,  ரவுண்டு   ரோடு,  ராம்  நகரில்  அமைந்துள்ளது.

கிழமை   வாரியாக   வழிப்பட்டால்  கிடைக்கும்  பலன்;
1.      பால மாருதி- ஞாயிறு;  ராகு  தோஷம்  நீங்கி,  திருமணத்தடை  நீங்கும்,  கண் பார்வை  நிவர்த்தியாகும்.   சூரிய  உதயத்தில்   வழிபட  வேண்டும்.
2.      யோக  மாருதி- திங்கள்;   மன  அமைதி,  குடும்பத்தில்  குழப்பங்கள்  நீங்கும்.
3.      தீர  மாருதி-செவ்வாய்;  வெற்றிலை  மாலை  அணிவித்து,  செந்தூர  அர்ச்சனையால்  வழிபட்டால்  எதிரிகள்  தொல்லை  நீங்கும்.
4.      பஜனை மாருதி-புதன்;   முற்பிறவியில்  செய்த  பாப  தோஷங்கள்  விலகும்.
5.      வீர  மாருதி- வியாழன்;  எலுமிச்சை  மாலை அணிவித்து வழிபட்டால்   குறைவற்ற  செல்வமும்,  கைவிட்டுப்  போன  பொருள்  கிடைக்கும்.
6.      தியான  மாருதி- வெள்ளி;  பெண்கள்  வழிபட  கணவரின்  எதிரிகள்  நீங்கி,  குழந்தைகளுக்கு   கல்வி  மேம்பாடு  கிட்டும்.
7.      பக்த  மாருதி- சனி;   நல்லெண்ணெய்  தீபம்  ஏற்றி  வழிபட  சனியினால் ஏற்படும்  ஆபத்து  நீங்கி  நீண்ட  ஆயுள்  கிடைக்கும்.
8.      பவ்ய மாருதி-  பிறந்த  கிழமைகளில்  வழிபட்டால்  ராகு,  கேது  தெசை  பாதிப்பு  நீங்கும்.  செய்தொழிலில்  வெற்றி  கிடைக்கும்.   குழப்பங்கள்  நீங்கி  மன  அமைதி  கிட்டும்.
9.      சஞ்சீவி  மாருதி;  பிரதோச  காலங்களில்  வடை  மாலை  சாற்றி  வழிபட்டால்  தீராத  நோய்கள்  தீரும்.
வழித் தடம்;
திண்டுக்கல்  பேருந்து நிலையத்திலிருந்து  சிலுவத்தூர்  சாலையில்  ரவுண்டு  ரோடு,  ராம்   நகர்  ஸ்டாப்பில்  இறங்க  வேண்டும்