தொழில்
உயர்வு
திருமோகூர்;
இங்கே சக்கரத்தாழ்வார்தான் விசேச
அம்சம். இவர் 16 கைகள்
கொண்டவராக 16 ஆயுதங்களுடன்
திகழ்கிறார். விக்ரகத்தின் மீது மந்திர எழுத்துக்கள்
எழுதப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் மந்திர எழுத்துக்களோடு காணப்படுவது
இங்கு மட்டுமே. சக்கரத்தாழ்வார் பின்புறம்
யோக நரசிம்மர் உள்ளார்.
இதை ‘நரசிம்ம சுதர்சனம்” என்று
சொல்வார்கள். இவரை வணங்கினால்,
வியாபார விருத்தி, தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு ஆகியவை
கிடைக்கும்.
வழித் தடம்;
மதுரை- மேலூர் சாலையில் உள்ளது.
பர்வத மலை;
உமாதேவி தன் பதியான
சிவனிடம் அறம், பொருள், இன்பம்,
மோட்சம் ஆகியவை ஒரே இட்த்தில்
கிடைக்ககூடிய சிவ ஸ்தலம் ஒன்றைக்
கூற வேண்டும் என்று
கேட்டுக் கொண்டதற்கு சிவ பெருமான்
சுட்டிக் காட்டிய ஸ்தலம். இங்கு
பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனர் எழுந்தருளி
அருள் செய்கிறார். மகா
லட்சுமி தவம் செய்த
இடம். பதிணெண் சித்தர்கள்
தினமும் வந்து வணங்கும்
மலை. மூலிகைக்காற்று எப்போது
வீசி நோய் தீர்க்கும்
மலை.
வழித் தடம்
திருவண்ணாமலையிலிருந்து 35
கி.மீ. தூரத்தில் உள்ளது.
. குழந்தைகளுக்குப் பேச்சு,
கையெழுத்து சரியாக வராத
நிலை
இன்னம்பூர்;
இக்கோவிலில் உள்ள எழுத்தறி
நாதருக்கு அர்ச்சனை செய்தால் பேச்சு சரியாக
வராத குழந்தைகளுக்குப் பேச்சு
வரும். கையெழுத்து சரி வர
வராத குழந்தைகளுக்கு கையெழுத்து
சரியாக வரும். குழந்தைகளின்
நாக்கில் புஷ்பத்தால் எழுதுகிறார்கள்.
வழித் தடம்;
கும்பகோணம்- சுவாமி மலை சாலையில் உள்ளது.
வரும் ஆபத்துக்களை முன் கூட்டியே
அறிய
திருப்பழனம்;
இறைவன் ஆபத்சகாயேஸ்வரர். இறைவி
பெரிய நாயகி. எவர் ஒருவர்
இத்தலத்திற்கு வந்து இவ்விருவருரையும் வணங்கிறார்களோ, அவர்களுக்கு
வரும் ஆபத்துக்கள்
முன்கூட்டியே தெரிய வரும்.
அதன் படி வரும் ஆபத்துக்கலிருது மீண்டு
கொள்ளலாம்.
வழித் தடம்;
தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு அருகில்,
திருவையாற்றுக்கு அருகில், திருவையாறு-
கணபதி அக்ரஹாரம் சாலையில்
உள்ளது.
.
உடல் ஊனமுற்றோர் குறை
நீங்க
கூனஞ்சேரி;
மூலவர் கைலாய நாதர்,
கருவிலிருந்து பிறக்கும் போதே
எட்டு கோணலுடன் பிறந்த
அஷ்டாவக்கிரன் புது உருக்கொண்ட
ஸ்தலம். பிறரைப் போல்
கோணல் நீங்கி அழகு
பொருளாகியவனாக மாறிய ஸ்தலம். இங்குள்ள
கைலாய நாதரை வழிபட
உடல் ஊனமுற்றவர் குறை
நீங்கி இறை அருள் பெறலாம்.
வழித் தடம்;
சுவாமி மலையிலிருந்து
திருவைகாவூர் செல்லும் சாலையில்
உள்ளது.
.
தங்க நகைத் தொழிலில் ஈடுபடுபவர்
மேன்மையடைய;
செதலபதி;
இங்குள்ள முக்தீஸ்வரர் கோவிலில்
சுவர்ணவல்லி தாயார் காட்சி
தருகிறார். சுவர்ணம் என்றால்
தங்கம். தங்கத்தை வாங்கி
குவிக்க வேண்டும் என
விரும்புபவ, தங்க நகைத் தொழிலில்
ஈடுபட்டிருப்பவர் இந்த அம்பிகையை
வழிபட செல்வம் செழிக்கும்.
வழித் தடம்;
திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில்
உள்ள கூத்தனூரிலிருந்து 2
கி.மீ. தூரத்திலுள்ளது.
மாதவிடாய் சிக்கல்
தீர; மாதவிடாய் கோளாறு
காரணமாக கர்ப்பம் தரிக்காதவர்கள் முப்பந்தல்
இசக்கியம்மனையும், குழந்தை பெற்ற
தாய்மார்கள் மாதவிடாய் அடிக்கடி
வருவது, அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றுடன்
போராடினால் திருநெல்வேலி இசக்கியம்மனையும் வழிபட
வேண்டும்.
வழித் தடம்;
திருநெல்வேலியிலிருந்து நாகர்
கோவில் செல்லும் ரோட்டில்
50 கி.மீ. தூரத்தில் காவல்
கிணறு எனற இடத்தில்
தாண்டிச் சென்றால் முப்பந்தல் இசக்கியம்மனைத் தரிசிக்கலாம்.
திருநெல்வேலி குறுக்குத் துறை இசக்கியம்மனைத் தரிசிக்க
பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து [ஜங்சன்]
தடம் எண் 10 ல்
சென்றால் இத்தலத்தை அடையலாம்.
ஆண்டாங்கோவில்;
இது, ருது பரிகார
தலம் ஆகும். அம்பிகை
சிறப்புமிக்கவள்,
வரப்பிரசாதி. சோம வாரத்தில் இத்தலத்தில்
உள்ள புஷ்கறணியில் நீராடி,
ஏழு சோம வாரம் அம்பிகையை
தரிசித்தால், உரிய வயது
வந்ததும் ருதுவாகாத பெண்கள்
ருதுவாவார்கள்.
வழித் தடம்;
குடந்தையில் இருந்து வலங்கைமான்
வழியாக குடவாசல் செல்லும்
வழித்தடத்தில் 2 கி. மீ. தொலைவில்
உள்ளது.
நவமாருதி
திண்டுக்கல்; தமிழ்நாட்டில் மிகவும்
அரிதாக விள்ங்கும் நவமாருதி
[ஒன்பது வடிவங்கள்] திண்டுக்கல்,
ரவுண்டு ரோடு, ராம்
நகரில் அமைந்துள்ளது.
கிழமை வாரியாக
வழிப்பட்டால் கிடைக்கும் பலன்;
1.
பால மாருதி- ஞாயிறு;
ராகு தோஷம் நீங்கி,
திருமணத்தடை நீங்கும், கண் பார்வை
நிவர்த்தியாகும். சூரிய உதயத்தில்
வழிபட வேண்டும்.
2.
யோக மாருதி-
திங்கள்; மன அமைதி,
குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும்.
3.
தீர
மாருதி-செவ்வாய்; வெற்றிலை மாலை
அணிவித்து, செந்தூர அர்ச்சனையால்
வழிபட்டால் எதிரிகள் தொல்லை
நீங்கும்.
4.
பஜனை மாருதி-புதன்;
முற்பிறவியில் செய்த பாப
தோஷங்கள் விலகும்.
5.
வீர மாருதி- வியாழன்; எலுமிச்சை
மாலை அணிவித்து வழிபட்டால்
குறைவற்ற செல்வமும், கைவிட்டுப்
போன பொருள் கிடைக்கும்.
6.
தியான மாருதி- வெள்ளி; பெண்கள்
வழிபட கணவரின் எதிரிகள்
நீங்கி, குழந்தைகளுக்கு கல்வி
மேம்பாடு கிட்டும்.
7.
பக்த மாருதி- சனி;
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி
வழிபட சனியினால் ஏற்படும் ஆபத்து
நீங்கி நீண்ட ஆயுள்
கிடைக்கும்.
8.
பவ்ய மாருதி- பிறந்த
கிழமைகளில் வழிபட்டால் ராகு,
கேது தெசை பாதிப்பு
நீங்கும். செய்தொழிலில் வெற்றி
கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி
மன அமைதி கிட்டும்.
9.
சஞ்சீவி மாருதி;
பிரதோச காலங்களில் வடை
மாலை சாற்றி வழிபட்டால்
தீராத நோய்கள் தீரும்.
வழித் தடம்;
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சிலுவத்தூர்
சாலையில் ரவுண்டு ரோடு,
ராம் நகர் ஸ்டாப்பில்
இறங்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக