1.
கல்வி மேம்பாடு;
ஸ்ரீ ஹயக்ரீவர் படம் வைத்து,
நெய் தீபம் எற்றி பால்
நைவேத்தியம் செய்து, வழிபாடு
ஸ்ரீ ஹயக்கீரிவ ஸ்தோத்திரம் 11 முறை
கூறவும்.
ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ
ஹயக்கிரிவருக்கு சாமந்தி பூமாலை
சாற்றி வழிபட்டி வந்தால்,
கல்வி நன்றாக் வரும்.
2. தீராத
நோய் தீர;
தினமும் காலை மாலை
சிறிது தண்ணீர் அல்லது
பால் எடுத்து தன்வந்தரி
படம் வைத்து, நெய்
தீபம் ஏற்றி தன்வந்திரி
ஸ்லோகம் ஜெபித்து உணவுக்கு முன் அருந்த
நோய் குணமாகும்.
3.கடன்கள் தீர;
ஸ்ரீ லட்சுமி நரசிம்மனைத்
தினமும் பூஜிப்பது, ஸ்ரீ
மகா லட்சுமி, ஸ்ரீ துர்க்கையைத்
தினமும் நெய் தீபம்
ஏற்றி வலம் வந்து வணங்குவது.
கடன் தொல்லையில் இருந்து
விடுபட எளிய வழி
இருக்கிறது. எந்த தெய்வத்திற்கு அபிசேகம்
செய்தால் அத்தொல்லையில் இருந்து விடுபட
இயலும். குறிப்பாக தெட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால்
அபிஷேகம் செய்தால் செல்வ
வளம் பெருகும். கடன்
தொல்லை அகலும்.
4. வீட்டில் குபேரன்,
லட்சுமி, வெங்கடசலபதி படங்களை உள் நோக்கியபடியே வைக்க
வேண்டும். வெளியே பார்க்குமாறு
வைத்தால் வீட்டில் பணம்
தங்காது. மேலும், யாருக்கு
பணம் கொடுத்தாலும் வெள்ளிக்கிழமைகளில் மாலை
6 மணிக்கு மேல்
கொடுக்ககூடாது.
5.சந்திராஷ்டமம்;
சந்திரன் அவரவர் ராசிக்கு
8- ம் இடம் வரும் காலம்
2 1\4 நாட்கள்.
இந்நாட்களில் முக்கிய முடிவு,
பேச்சுவார்த்தை, செயல்கள், வண்டி
வாகனங்களில் எச்சரிக்கை மிகவும்
அவசியம்.
6. யாத்திரையில் அசுப
சகுணம்;
பிராயண காலத்தில் கால்
வழுக்கல், இடித்துக் கொள்ளல், பூனை
குறுக்கீடு, கர்ப்ப ஸ்திரீ, விதவை,
நோயாளி, தலை விரித்து வரும்
பெண், தும்மல், உப்பு
கரி, வைக்கோல் அசுப சகுனம்.
அப்படி ஏற்பட்டால் திரும்பி
வந்து நீர் பருகி 5
நிமிடம் கழித்திப் புறப்படலாம்.
இரண்டாம் முறை ஏற்பட்டால்
பிராயணத்தைத் தள்ளிப் போட
வேண்டும்.
அப சகுனம் ஏற்படும் போது;
விஷ்ணு பகவானை மனதில்
தியானித்து கிளம்பலாம்.
7. கெட்ட கனவுகள்;
இரவில் படுக்கப் போகும் முன்பு
சிறிது நேரம் ஸ்ரீ
ராக வேந்திரை நினைத்து ஸ்ரீ
ராகவேந்திரர் துதியை கூறி படுத்தால் கெட்ட
கனவுகள் வராது.
8. மன அமைதி;
காலை மாலை 108
முறை ‘ஓம் நமசிவாய’
மந்திரத்தை வலது
கையில் நீர் உள்ள
பாத்திரம் வைத்து ஜெபித்து
‘ஓளஷதம் நமசிவாய, என்று கூறி நீரை அருந்த
உடல் நலக்கோளாறு நீங்கி
மனம் அமைதி பெறும்.
ஒவ்வொரு நாளும்
இரவு படுக்கும் முன் சிவனை
நினைத்து ‘ஓம் நமசிவாய நம’என்றோ ஓம் நமோநாராயணா என்றோ ராம்ராம் என்றோ உச்சரித்துவர நல்ல தூக்கம் வரும்...கெட்ட சிந்தனைகள்,பயம் நீங்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக