திங்கள், 9 பிப்ரவரி, 2015

நீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்

நீண்ட  ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்  temple in tamilnadu


திருக்கடையூர்;
ஈசன்  தனது  பக்தன்  மார்க்கண்டேயனுக்கு  அபயமளிக்க  காலனை  சம்ஹாரம்  செய்து,  கால சம்ஹார  மூர்த்தியாக  எழுந்தருளியுள்ள  ஸ்தலம்.  இங்கே வந்து  இறைவனைத்  தொழுதால்   நீண்ட  ஆயுள்  கிடைக்கும்.  வயது  முதிர்ந்தவர்,  உடல்  நலம்  குன்றியவர்,  அகால  மரணம்  ஏற்படும்  நிலை,  ஆயுள்  பாதிப்பு  உள்ளவர்  நீண்ட  ஆயுள  பெற இங்கு   ம்ருத்யுஞ்சய  ஹோம்ம்,  ஆயுள்  ஹோம்ம்   செய்து  கொள்ளலாம்.
தம்பதிகள்  59  வயது முடிந்து  60  வயது  ஆரம்பிக்கும் போது  ‘உக்ரரத  சாந்தி  பூஜையும்,  60 வயது  முடிந்து  61  வயது  தொடங்கும்  பொழுது  சஷ்டி  அப்த  பூர்த்தியும், 69  வயது   முடிந்து  70  வயது   ஆரம்பிக்கும் போது  ‘பீமரத சாந்தி  பூஜையும், 79 வயது  முடிந்து  80 வயது  ஆரம்பிக்கும் போது  ‘சதாபிஷேகமும்  செய்து  கொண்டால்  பூரண  ஆயுள்  கிடைக்கும்.
வழித் தடம்;
மயிலாடு துறையிலிருந்து  23 கி .மீ.  தூரத்தில்  உள்ளது.

திருப்பைஞ்சீலி;
இறைவன் காலடியில் எமன் வீழ்ந்து கிடக்கிறான்.  இங்குள்ள  எமன்  கோயிலில்  சிறப்பு  நீராட்டுதல்கள்  வழிபாடுகள்  நடைபெறுகின்றன.
மாரகம்  அல்லது  அதற்கு  இணையான  கண்டம் ஏற்படும்.  காலக் கட்டத்தில்   திருச்சி  அருகே  உள்ள  இத்திருக்கோவிலுக்கு  சென்று  அங்குள்ள  எமதர்ம  ராஜாவுக்கு  மகம்  நட்சத்திரத்தன்று  அபிஷேகம்  செய்தால்  நீண்ட  ஆயுள்  ஏற்படுகிறது.
மரணப்படுகையில்  அவதிபடுபவர்களுக்கு இக்கோவிலில்  வழிபாடு  செய்து,  கோவிலின்  அருகே  காணப்படும்.  மணிகர்ணிகை   தீர்த்தத்தை  தந்தால்   வேதனை  இன்றி  உயிர்  பிரியும்.

திரு கற்குடி;
உயிர்களை  வாழ  வைக்க  உறைந்திருக்கும்  இடம்தான்  திரு கற்குடி   என்று பெயர் கொண்ட  உய்யக்  கொண்டான்  திருமலை.  இத்தலம், மார்க்கண்டேயனுக்கு  சிரஞ்சீவத்  தன்மை  கிடைக்க  செய்த சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு  ஜீவன்  அளித்ததால்  சுவாமிஉஜ்ஜீவ  நாதர்  எனப்படுகிறார்.
இக்கோயிலில்  உள்ள ஜேஷ்டா  தேவியை  தரிசித்தால்  விபத்துகளிலிருந்து  நம்மை   காப்பாற்றுவாள்.
வழித் தடம்;
திருச்சியிலிருந்து  வயலூர்  சாலையில்  5 கி,மீ, தொலைவில்  உள்ளது.

கூத்தம் பூண்டி;
திண்டுக்கல்  மாவட்டம்,  ஒட்டன்சத்திரம்  அருகே உள்ள இவ்வூரில்  ஆனந்த வல்லியுடன் மார்க்கண்டேயப் பெருமாள் கோயில் உள்ளது. மார்க்கண்டேயன்  பூஜித்த ஸ்தலம்.  இங்கு  எமதர்மன் அரூபமாக  காட்சி  தருகிறார்.  60 வயது  நிரம்பியவர்களும்  ஜாதக  ரீதியாக  ஆயுள்  குறைபாடு  உள்ளவர்களும்  இப்பெருமானை  வழிபட்டால்  நீண்ட  ஆயுளும்,  ஆரோக்கியமும் பெற்று  நலமுடன்  வாழலாம்.

கருத்துகள் இல்லை: