சாம்பிராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாம்பிராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மார்ச், 2017

மூலிகை சாம்பிராணி மூலம் கடன் பிரச்சினை தீருமா..?

மூலிகை சாம்பிராணி என்றால் என்ன..?


பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை.
இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது. வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை விலகிச்சென்றுவிடும். ஆகவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள்.
மழைக்காலங்களில் அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது தலைக்கு குளித்ததும் சாம்பிராணி புகை காட்டுவதை இன்னமும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஈரத்தலையை உலர வைப்பதற்கு சாம்பிராணி தூபம் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளை குளிப்பாட்டி சாம்பிராணி புகை காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்...
இந்த சாம்பிராணியுடன் வெண்கடுகு,அகில்,தேவதாரு,வெண்குங்கிலியம் போன்றவற்றையும் கலந்து மூலிகை சாம்பிராணியாக கொடுத்து வருகிறேன் இது மேலும் உங்கள் பல பிரச்சினைகளை தீர்க்கும் அதி சக்தி வாய்ந்த வழிபாட்டு பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..அரைகிலோ பாக்கெட்டுகளாக விற்பனைக்கு என் நிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன்..தொடர்ச்சியாக இதை வாங்குவோர்தான் அதிகம்....ஹோமம் வீட்டில் வளர்ப்பதுக்கு ஒப்பான சக்தியை இது கொடுக்கிறது...மன அழுத்தம்,மன உளைச்சல் தீர்க்கிறது.ஆரோக்கியம் உண்டாகிறது.கடன் தொல்லை தீர்கிறது.காரணம் அகில்,தேவதாரு போன்ற தெய்வீக மூலிகைகள் நம் தரித்திரத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை உண்டாக்க வல்லவை.தெய்வ சக்தியை நம் இல்லத்தில் குறையாமல் வளர செய்பவை.

அரை கிலோ ரூ 550.கொரியர் சார்ஜுடன் சேர்த்து.

வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு வாட்சப் அல்லது மெசேஜ்ஜில் முகவரி அனுப்பவும்.கொரியர் செய்கிறோம்...

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971.

 மெயில் ..sathishastro77@gmail.com 
வாட்சப் 9443499003

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை


நல்ல சந்தன ஊதுபத்தி இரண்டை கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமான அறையில் வைத்துவிட்டு 20 நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும் தீரும்.மனம் லேசாகும்..
 
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.


சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.


இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.



பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.


பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது.

அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

குறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வழி? பரிகாரம்

தெய்வீக மூலிகை சாம்பிராணி மகிமை;
ஏற்கனவே வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில்;

புகை பட்டால் பகை விலகும்....வீட்டில் ,தொழில் செய்யுமிடத்தில் செவ்வாய்,வெள்ளிதோறும் நமது தயாரிப்பான தெய்வீக நவகிரக சாம்பிராணி புகை போடுங்கள் ..பிரச்சினைகள் தீர,கடன் தீர,கண் திருஷ்டி தீர,செல்வவளம் உண்டாக இதை உபயோகிக்கலாம்...முக்கியமான தெய்வீக மூலிகைகளை அரைத்து,அதனுடன்வெண்கடுகு,சாம்பிராணி,குங்கில்யம்,சேர்த்திருக்கிறோம்.
வீட்டில் கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதன் பலன்கள் இதில் நிச்சயம் கிடைக்கும்...

முதன்முறையாக இதை தயாரித்தபோது மூலிகை பொருட்கள் அதிக தாக்கத்தால் ,புகை குறைவாக வருகிறது என சொன்னவர்களுக்காக,சதுரகிரி மலை சென்று வாங்கி வந்த ஒரிஜினல் முதல் தர சாம்பிராணி இதனுடன் முக்கால் பாகம் கலந்திருப்பதால் நறுமணம்,புகை அதிகளவில் வரும்படி தயாரித்திருக்கிறோம்....

கல்வி,தொழில் தடங்கல் நிவர்த்தியாக மன உளைச்சல் தீர குடும்பத்தில் கஷ்டம் தீர முன்னோர்கள் காலம் முதல் நாம் விட்டில் கணபதி ஹோமம் வளர்ப்பது வழக்கம்..அதில் சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் ,இதில் சாம்பிராணியுடன் கலந்திருப்பதால் அந்த பலன்கள் ,இந்த நமது லட்சுமி குபேரர் தெய்வீக மூலிகை சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும்...செவ்வாய்,வெள்ளி தோறும் இதை வீடு மற்றும் தொழில் செய்யுமிடத்தில் ,நெருப்பில் போட்டு புகை உண்டாக்கினால் போதும்.

நெருப்பு சுலபமாக உண்டாக்க கரிக்கட்டை தேட வேண்டாம்,தேங்காய் மூடியை கேஸ் ஸ்டவ்வில் காட்டி எரிய விடவும்.அந்த தணலை சாம்பிராணி கரண்டியில் போட்டு,அதில் இந்த மூலிகை சாம்பிராணி இரண்டு ஸ்பூன் போட்டால் போதுமானது..


சாம்பிராணி புகை படும் இடத்தில் நோய் கிருமிகள் அண்டாது.

நோய்கள் பரவும் இந்த மழைக்காலத்தில் மூலிகை சாம்பிராணி அவசியம் தேவை.செல்வவளம் உண்டாக,நோய் தீர இதை உபயோகித்து பாருங்கள்.ஏற்கனவே வாங்கியோருக்கு சலுகை விலையில் தருகிறோம்.
இந்த வாரம் தயாரிக்கப்பட்ட புதிய தெய்வீக மூலிகை சாம்பிராணி தேவைப்படுவோர்
செல்லில் தொடர்பு கொள்ளவும் 9443499003 
மெயில்;sathishastro77@gmail.com