CYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+
இண்டெர்னெட் பிரவுசிங் செண்டர்கள் இன்று கிராமங்களில் கூட வேகமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன..கல்லூரி மாணவர்களுக்கு பலவிதத்திலும் பெரிய உதவிகரமாக இவை இருப்பதாலும்,அவர்கள் பிராஜக்ட் ரிப்போர்களுக்கு தேவையான குறிப்புகளை எடுக்க உதவுவதாலும் இண்டர் நெட் சென்டர்கள் நல்ல தொழிலாக வளர்ந்து வருகிறது..செல்ஃபோன் பாடல்கள் தரவிறக்க,சினிமாக்கள் டவுன்லோடு செய்ய,ஈமெயில் செக் செய்ய என்று பயன்படுத்துபவர்கள் அதிகம்.
எங்கள் ஊரில் ஐந்து பிரவுசிங் செண்டர்கள் உள்ளன.இங்கு நான்கு கல்லூரிகள் இருப்பதால் நீக்ரோ மாணவர்கள்,கேரளா,ஆந்திராவில் இருந்து இங்கு வந்து தங்கி படிப்பவர்களும் அதிகம்..எனவே எல்லா சென்டர்களும் பிஸிதான்..நான் அடிக்கடி பிரவுசிங் செண்டர் போவேன்...இளைஞர்கள் எந்தளவு வருகிறார்களோ அதே அளவு இளம்பெண்களும் மாணவிகளும் வருகிறார்கள் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் ஸ்கைப்பில் பேச குடும்ப பெண்களும் வருகிறார்கள்....
16 +பெண்களுக்கு இண்டர்னெட் அறிமுகம் ஆவதே ரிசல்டுகள் பார்ப்பதில்தான்..இவர்கள் இப்படி அறிமுகம் ஆகி இண்டர் நெட்டை முதன்முதலாக ஆர்வமுடன் பார்த்து விட்டு மத்தவங்க எல்லாம் என்ன பார்க்கிறாங்க என நோட்டம் விடுகிறார்கள் ..தடுப்பு பார்க்க முடியாதபடி இருந்தால் பரவாயில்லை...பார்க்கும்படி இருந்தால் ,பக்கத்துல இருக்கிறவன் ஆபாசபடம் பார்த்தால் ? அவர்கள் முதலில் ச்சீ மோசம் என திரும்புவார்கள் என்றாலும் என்ன என்ன இருக்குமோ என முதல் குழப்பம் ஆரம்பிக்கிறது...
இது ஒரு வகை..கல்லூரி பெண்களுக்கு தன் தோழிகள் மூலமாக ஃபேஸ்புக் ,ஜீமெயில் சாட்டிங்,எல்லாம் நன்கு அத்துபடி ஆகிவிட்டது.. உன் மெயில் ஐடி என்ன ..ஃபேஸ்புக் ஐடி என்ன என பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள்..தோழியின் வீட்டில் உட்கார்ந்து பழகி கொள்கிறார்கள்..அப்புறம் போரடிக்கும் போது தயங்கி தயங்கி பிரவுசிங் செண்டருக்குள் நுழைந்து ஃபேஸ்புக் அப்டேட் செய்ய பழகி கொண்டு விடுகிறார்கள் அதன் பின் அதன் அடிமை போல் ஆகி விடுகிறார்கள்...ஞாயிற்றுகிழமை மட்டும் அல்லாமல் கல்லூரி முடிந்ததும் பிரவுசிங் செண்டர்களில் ஒரு மணி நேரம் செலவழித்து விட்டு போகும் மாணவர்களுக்கு போட்டியாக இவர்களும் வருகிறார்கள்....
முதலில் ஃபேஸ்புக்கில் ஆரம்பிப்பது..மற்ற தளங்களை பார்வை இடுவது வரை தொடரும்..இதுவரை சினிமா மட்டுமே இளைஞர்களை சீரழிக்கிறது என்ற நிலை இப்போது மாறிவிட்டது..டிவி மோகம் மறைந்து இண்டர் நெட் மோகம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது....
இவர்களாவது பரவாயில்லை ..விவரம் தெரிந்தவர்கள்..ஸ்கூல் படிக்கும் சின்ன பசங்க எல்லாம் இன்று தினசரி கேம்ஸ் விளையாட பிரவுசிங் செண்டரே கதியாக கிடக்கிறார்கள்.. கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக இன்று அதிக குழந்தைகளை கிறுக்கு பிடிக்க வைத்திருப்பது கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றால் அது மிகை இல்லை...ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூபாய் என்ற ரேஞ்சில் இவர்கள் கேம்ஸ் விளையாடுவதை பார்த்தால் வீட்டில் பணம் வாங்கி வந்து விளையாடுவதை போலவே தெரியவில்லை..மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள்.. இத்தனைக்கும் இவர்கள் பணக்கார குழந்தைகள் அல்ல...அரசு பள்ளியில் படிக்கும் சாதாரணமானவர்கள்...
ரூம் போல சில பிரவுசிங் கஃபேக்கள் இருப்பதால் பல காதலர்களுக்கும் வசதியாக போய் விட்டது..ஒரு மணி நேரத்து இருபது ரூபாதாம்பா ரொம்ப சீப் என இவர்கள் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை..மொச்ச் மொச்ச் சத்தம் பேச்சிலர்களை கடுப்படித்து விடுகிறது...
பிரவுசிங் செண்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தியவர்கள் எந்தெந்த தளம் பார்த்தார்கள் என்ற ஹிஸ்டரியை செண்டர் உரிமையாளர்கள் உடனே அழித்து விட வேண்டும்..ஒருமுறை சடவுன் செய்து ஆன் செய்தால் கூட போதும்..அதன்பிறகே அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும்..
சின்ன பசங்க அதிக நேரம் கேஸ் விளையாடினாலோ..தினசரி வந்து கொண்டிருந்தாலோ அவனது வீட்டில் தகவல் தெரிவித்து விட வேண்டும்...
சிறிய வயது பெண்கள் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்கள் முடிந்தவரை ஆபாச தளங்களை தடை செய்து செட்டிங்க்ஸ் அமைக்க முயற்சிக்கலாம்..ஏன் என்றால் அவர்கள் அறியாமல் திடீர் என சில ஆபாச தளங்கள் திறந்து விட வாய்ப்புண்டு...
முடிந்தவரை பெற்றோர்கள் தங்கள் பெண்களுடன் பிரவுசிங் சென்டர் வந்து அவர்கள் வேலை முடியும் வரை உடன் இருந்து விட்டு செல்வது நல்லது...
பக்கத்து சீட்ல இரண்டு முன்று வயசு பொண்ணுங்க சேர்ந்து ஏய் இங்க பாருடி என் கீச்சு கீச்சு குரலில் பேசிக் கொள்வதை கேட்கும்போது...நமக்கு டென்சன் ஏறுது
1 கருத்து:
கண்டிக்க வேண்டிய விஷயம். பகிர்வுக்கு நன்றி
கருத்துரையிடுக