வியாழன், 25 ஆகஸ்ட், 2011

கைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்

கைரேகை ஜோதிடம் பொறுத்தவரை மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரேகை வளரும் அல்லது மாறும் என்பார்கள்..ஆணுக்கு வலது கை,பெண்ணுக்கு இடது கை என்பார்கள்..ஆனால் இரண்டு கையையும் பார்த்து பலன் சொல்வதே சரி.கைரேகை மூலம்,கல்வி,திருமணம்,காதல்,சொத்துக்கள் சேர்க்கை,நோய்,கடன் போன்றவற்றை அறிய முடியும்.செவ்வாய் மேடு,சுக்கிர மேடு,சந்திர மேடு,குரு மேடு,சனி மேடு என கவனித்து அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப,பலன் அறிய வேண்டும்.கைரேகையில் அதிகம் பார்ப்பது ஆயுள் ரேகை எப்படி...கங்கண பொருத்தம் (கல்யாணம்) எப்படி என்பதுதான்..

சுக்கிர மேடு;
கட்டை விரலின் அடி பாகத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதியே சுக்கிர மேடு .சுக்கிரன் நல்லாருந்தா சொத்து சேர்க்கைக்கும்,சுகத்துக்கும் குறைச்சலே இருக்காதே.சுக்கிர மேடு உப்பலாக இருந்து,அதில் அதிக கோடுகளும்,குறுக்கு கோடுகளும் இல்லாமல் இருந்தால் சுக்கிரன் நன்றாக இருப்பதாக பொருள்.குறுக்கும் நெடுக்கும் கோடுகள்,புள்ளிகளுடன் வற்றலாக இருந்தால் சுக்கிரன் வலுவில்லை..சொத்துக்களில் வில்லங்கம்,வறுமை,கடன் உண்டாகும் என அர்த்தம்

செவ்வாய் மேடு;
சுண்டு விரலுக்கு நேர் கீழே சந்திர மேட்டுக்கு மேலே இருப்பது செவ்வாய் மேடு.நிலம்,மனை இவற்றுக்கு செவ்வாய் அதிபதி என்பதால்,பூமி யோகம் பெற்றவர் கையில் செவ்வாய் மேடு பலமாக இருக்கும்,மேலே சொன்னது போல குறையில்லாமல் இருக்கும்.

செவ்வாய் மேடும்,சுக்கிர மேடும் நன்கு அமைந்து விதி ரேகை,சூரிய ரேகையும் நன்கு அமைந்து ஆயுள் ரேகையில் மேல்நோக்கிய கிளை ரேகை காணப்படும் வயதில் வீடு,மனை,வாகன யோகம் அமையும்.
ஒருவருக்கு சொத்துக்கள் சேர்க்கை அமையும் காலகட்டத்தில் (வயதுகளில்)குறிப்பிட்ட ரேகைகள் அழுத்தமாக தெளிவாக தோன்றும்...

கருத்துகள் இல்லை: