சனி, 27 ஆகஸ்ட், 2011

27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க வேண்டிய தெய்வங்கள்; ஸ்தலங்கள்


27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்-   ஸ்தலங்கள்


1. அஸ்வினி: இந்த நட்சத்திரத்தில் பூ முடித்தல், கர்ப்பாதானம், விவாகம், அன்னப்பிராசனம் நாமகரணம், உபநயனம், வேதம், சாஸ்திரம் கற்க, நூதன வாகனம், ஆடையாபரணம் வாங்கி அணிய, பட்டாபிஷேகம் (பதவி ஏற்றல்), கிரகாரம்பம், சித்திரம், ரத்தினமிழைத்தல் (நவரத்தினக் கற்கள் வாங்க), பொன்னேர் கட்ட, விதைக்க, தென்னை, மா, பலா, முதலிய மரங்கள் நட, யாகம் செய்ய, யாத்திரை செல்ல, தேவதா பிரதிஷ்டை, கிரகப்பிரவேசம் முதலியனவும் செய்ய உத்தமம்.
தெய்வம் : தர்ப்பாரண்யேசுவரர், பூண்முலையம்மை
கிரகம் : திருநள்ளாரில் உள்ள ராகு, கேது
ஸ்தலம் : திருநள்ளார் (காரைக்காலில் இருந்து 5 கி.மீ. பேரளத்தில் இருந்து 17 கி.மீ.).


2. பரணி: மூலிகையை உபயோகிக்க, நீரில் படகு விட (கப்பல் பயணம்), தீர்த்த யாத்திரையில் திதி கொடுக்க, யாக சாலையில் அடுப்பிடவும் (ஓமங்கள் செய்ய) நன்று.
தெய்வம் : ஊத்துவத்தாண்டவப் பெருமான், வண்டார் குழலியம்மை
கிரகம் : இராகு, சனி
ஸ்தலம் : திருவாலங்காடு (கோவிலுக்கு வடமேற்கில் காளி கோவில் உள்ளது. சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது 64 கி. மீ.).

3. கிருத்திகை: சுரங்கம் வெட்ட, யாக ஆரம்பம் செய்ய, மடப்பள்ளி சமையல் முதலியவைகள் செய்ய, மரங்கள் வெட்ட, கடன் நீக்க, வாகனம் விற்கவும் நன்று.
தெய்வம் : காயாரோகணேஸ்வரர், நீலாயதாட்சியம்மை
கிரகம் : இராகு – ஆதிசேஷன்
ஸ்தலம் : நாகப்பட்டினம் (திருவாரூரில் இருந்து            24 கி.மீ.).

4. ரோகிணி: ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், நாமகரணம் (பெயர் சூட்டல்), விருந்துண்ணல், உபநயனம் (பூநூல் அணிதல்), வித்தை கற்றுக் கொள்ளுதல் கோவில் கட்ட, திருமணம், புதிய ஆடைகள் வாங்கி அணிய, பட்டாபிஷேகம் (பதவி ஏற்றல்), கிரஹப்பிரவேசம், ஊருக்குப் பயணம், கும்பாபிஷேகம், யாகம், நவக்கிரக சாந்தி செய்ய, தொழில் தொடங்க, புத்தகங்கள், பத்திரிக்கைகள் பிரசுரம் செய்யவும் நன்று.
தெய்வம் : செண்பகாரண்யேசுவரர், கிரிகுஜாம்பிகை
கிரகம் : இராகு
ஸ்தலம் : திருநாகேஸ்வரம் (கும்பகோணத்தின் அருகே உள்ளது).

5. மிருகசீரிஷம்: திருமணம், உபநயனம், வித்தியாரம்பம், நகைகள் வாங்க, மனை கோல, ஊருக்கு பயணம் செய்ய, பொன்னேர் கட்ட, விதைக்க, யாத்திரை செல்லவும் நன்று.
தெய்வம் : வனதுர்க்கை
கிரகம் : இராகு
ஸ்தலம் : கதிராமங்கலம் (கும்பகோணத்தில் இருந்து குத்தாலம் போகும் வழியில் உள்ளது).

6. திருவாதிரை: சூளைக்கு நெருப்பு வைக்க, ஆயுத அப்பியாசம், மந்திரம் சொல்லவும் நலமானது
தெய்வம் : அக்கினீஸ்வரர், பஞ்சின் மெல்லடியம்மை
கிரகம் : ராகு, சனி
ஸ்தலம் : திருக்கோவிக்காடு (திருவாரூரிலிருந்து சுமார் 18 கி.மீ.).

7. புனர்பூசம்: பூ முடித்தல், சீமந்தம் செய்ய, பதவி உயர்வு, வாஸ்து சாந்தி, கிரஹப்பிரவேசம், யாத்திரை செல்ல, தொழில் தொடங்க, பந்தக்கால் முகூர்த்தம், விவாகம், கோடி வஸ்திரம் தரிக்கவும் நலம்.
தெய்வம் : ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மை
கிரகம் : குரு பகவான் (தட்சிணாமூர்த்தி)
ஸ்தலம் : ஆலங்குடி (கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் வழி.).

8. பூசம்: ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம் செய்ய, நாமகரணம், அன்னப்பிராசனம், வித்தியாரம்பம், சௌலோப நயனம், கர்னாபரணம் செய்ய, ஆலோசனை சபை கூட்ட, பதவி உயர்வு பெற, பசு வாங்க விவசாயம் செய்ய, யாத்திரை செல்ல, குரு உபதேசம், நடனம் முதலியவைகளுக்கு நலம்.
தெய்வம் : சனி பகவான்
கிரகம் : சனி
ஸ்தலம் : குச்சனூர் (தேனி அருகே உள்ள உத்தம பாளையத்திலிருந்து 10 கி.மீ.)


9. ஆயில்யம்: ஜெபம் பூர்த்தி செய்ய, நவக்கிரக சாந்தி செய்ய, ஆயுதம் கொள்ள, கிணற்றில் கல் கட்டிடம் கட்டவும் நன்மையானது.
தெய்வம் : முருகர்
கிரகம் : சனி, செவ்வாய்
ஸ்தலம் : மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம்


10. மகம்: மந்திர பிரயோகம், கசம் எடுக்கவும் நலம்.
தெய்வம் : தில்லைக்காளி
கிரகம் : இராகு, கேது
ஸ்தலம் : சிதம்பரம் (மயிலாடுதுறையிலிருந்து சுமார் 59 கி.மீ., கடலூரிலிருந்து சுமார் 37 கிமீ.)

11. பூரம்: படம் வரைய, ஆயுதப் பிரயோகம் செய்ய, கிரக பாதையை நிவர்த்தி செய்யவும் நன்று.
தெய்வம் : அருள்வள்ளல்நாதர், யாழின்மென்மொழியம்மை
கிரகம் : இராகு 
ஸ்தலம் : திருமணஞ்சேரி (மயிலாடுதுறையிலிருந்து சுமார் 8 கி.மீ.).

12. உத்திரம்: கர்ப்பாதானம், பூ முடித்தல், சீமந்தம் செய்ய, கிரகப்பிரவேசம், விதைவிதைக்க, தேவதா பிரதிஷ்டை செய்யவும் நலம்.
தெய்வம் : வஞ்சியம்மன்
கிரகம் : இராகு, கேது
ஸ்தலம் : மூலனூர் (ராதாபுரத்திலிருந்து சுமார் 25 கி.மீ.).

13. ஹஸ்தம்: ருது சாந்தி, கர்ப்பாதானம், காதணி விழா நடத்த, சாஸ்திர அப்பியாசம் செய்ய, விதை விதைக்க, தொழில் தொடங்க, மந்திரம் சொல்ல, யாத்திரை செல்ல, கும்பாபிஷேகம், கிணறு வெட்ட, பூச்சோலை அமைக்க, கிரகாரம்பம், ராஜ தரிசனம், கிரகப்பிரவேசம் செய்ய நலம்.
தெய்வம் : ராஜதுர்க்கை
கிரகம் : இராகு
ஸ்தலம் : திருவாரூர் (கும்பகோணத்திலிருந்து 35 கி.மீ.).

14. சித்திரை: கர்ப்பாதானம், பூ முடித்தல், நாமகரணம் (பெயர் சூட்டுதல்), உபநயனம் (பூநூல் அணிதல்), திருமணம் செய்ய, வேத சாஸ்திரம் தொடங்க, வாகனம் வாங்க, நாட்டியம் தொடங்க, மருந்து செய்ய, தேவதைகளை வணங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கிரகப்பிரவேசம் செய்ய நன்று.
தெய்வம் : ராஜதுர்க்கை, வன்மீகநாதர், நீலோற்பலாம்பாள்
கிரகம் : சனி
ஸ்தலம் : திருவாரூர் (தஞ்சாவூரிலிருந்து சுமார் 55 கி.மீ.).

15. சுவாதி: கர்ப்பாதானம், பூ முடித்தல், நாமகரணம் (பெயர் சூட்டுதல்), சாமிக்கு முடி கொடுக்க, அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், ஜோதிடம, திருமணம், சங்கீதம், வாகனம் வாங்க, விவசாயம் செய்ய, கும்பாபிஷேகம் செய்ய, கிரகப்பிரவேசம், புத்தகங்கள், பத்திரிகைகள் பிரசுரிக்கவும் நலம். 
தெய்வம் : ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
கிரகம் : இராகு, சனி
ஸ்தலம் : திருவானைக்காவல் (திருச்சிக்கு அருகில்)

16. விசாகம்: விவசாயத்தால் உற்பத்தியாகிய தானியங்களை அறுவடை செய்ய, கிணறு வெட்டவும் நன்று.
தெய்வம் : ஏடகநாதர், உமாதேவி
கிரகம் : இராகு, சனி
ஸ்தலம் : திருவேடகம் (சோழவந்தானிலிருந்து சுமார் 4 கி.மீ.).

17. அனுஷம்: ருதுசாந்தி, வித்தியாரம்பம், நகை அணிய, கிரகப்பிரவேசம், வாசற்கால் வைக்க, தூண் நாட்ட, தானியம் சேமித்து வைக்க, முகூர்த்தக்கால் நட, தேவதா பிரதிஷ்டையும் செய்ய நன்று.
தெய்வம் : மூகாம்பிகை
கிரகம் : சனி
ஸ்தலம் : திருவிடைமருதூர் (கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மீ.).

18. கேட்டை: ஆபரணம் அழித்துச் செய்ய, சூளை போட, ராஜ விவகாரம் தொடங்க, கடன் வாங்க, வாகனம் மாற்றவும் நன்மையானது.

தெய்வம் : அங்காளபரமேஸ்வரி
கிரகம் : இராகு, கேது
ஸ்தலம் : பல்லடம் (திருப்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ.).

19. மூலம்: ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பேரை மாற்றி வைக்க, விருந்துண்ண, வித்தியாப்பியாசம், திருமணம் செய்ய, நகை தயாரிக்க, விதை விதைக்க, கிணறு வெட்ட, மந்திரம் ஜெபிக்கவும் நலம்.
தெய்வம் : சொக்கநாதர், மீனாட்சியம்மை
கிரகம் : குரு பகவான்
ஸ்தலம் : மதுரை.

20. பூராடம்: கணிதாரம்பம், கரும்பு நட, முத்து, பவழம் வாங்க, பழைய கிணறுகளை சீர்திருத்த, கடனில் இருந்து விடுபடவும் நலம்.
தெய்வம் : நாவலீஸ்வரர், சுந்தரநாயகி
கிரகம் : தட்சிணாமூர்த்தி (குரு)
ஸ்தலம் : திருநாமநல்லூர் (உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ.).

21. உத்திராடம்: கர்ப்பாதானம், பூ முடித்தல், வித்தியாப்பியாசம், பட்டாபிஷேகம் (பதவி ஏற்றல்), வீடுகளில் சங்கு ஸ்தானம் செய்யவும் நன்று.


தெய்வம் : துர்க்கா தேவி
கிரகம் : சனி பகவான்
ஸ்தலம் : தர்மபுரம் (காரைக்காலிலிருந்து சுமார் 4 கி.மீ.).

22. திருவோணம்: ருது சாந்தி, அன்னப்பிராசனம், காதணி அணிதல், விஷ்ணு கும்பாபிஷேகம், கிரகாரம்பம், ஹோமசாந்தி, மந்திராப்பியாசம், பொன்னேர் கட்ட, விதைக்க, தீர்த்த ஸ்நானம் செய்ய நன்று.
தெய்வம் : ராஜகாளியம்மன்
கிரகம் : இராகு, கேது, சனி
ஸ்தலம் : தெத்துப்பட்டி (திண்டுக்கல்லிலிருந்து சுமார் 25 கி.மீ.).

23. அவிட்டம்: பூ முடித்தல், நாமகரணம், சாமிக்கு முடி கொடுத்தல், காதணி அணிதல், விருந்துண்ண, ஆபரணம் பூண, உபநயனம், வித்தியாரம்பம், பட்டாபிஷேகம் (பதவி ஏற்றல்), வாகனமேறுதல், கிரகப்பிரவேசம், சங்கீதாரம்பம், தொழில் தொடங்கவும் நலம்.
தெய்வம் : கொடுமுடி நாதர், பன்மொழியம்மை
கிரகம் : சனி, இராகு 
ஸ்தலம் : கொடுமுடி (கரூரிலிருந்து சுமார் 27 கி.மீ.).

24. சதயம்: கர்ப்பாதானம், பூ முடித்தல், வாகனம் வாங்க, வியாபார கணக்கு முடிக்க, பூமி கொள்ள, கிரகம் வாங்கவும் நலம்.
தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர், அர்த்தநாரீஸ்வரீ
கிரகம் : இராகு சனி 
ஸ்தலம் : திருச்செங்கோடு (சேலத்திலிருந்து சுமார் 35 கி.மீ.).

25. பூரட்டாதி: கபிலை, ஏற்றம் முதலியன ஸ்தாபிக்க, மந்திரம் ஜெபிக்க, திருமணம் செய்யவும் நன்று. 

தெய்வம் : ஏகாம்பரநாதர், ஏலவார்குழலியம்மை, சித்திர குப்தன்
கிரகம் : இராகு கேது 
ஸ்தலம் : காஞ்சிபுரம்.

26. உத்திரட்டாதி: ருது சாந்தி, சலக விருட்சம் தொடங்க, கோபுர ஆலயாரம்பம், கிரகாரம்பமும் செய்ய நன்று.
தெய்வம் : ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி.
கிரகம் : சனி, குரு
ஸ்தலம் : திருவையாறு (தஞ்சாவூரிலிருந்து சுமார் 11 கி.மீ.).

27. ரேவதி: ருது சாந்தி, திருமணம் செய்ய, சாஸ்திரங்கள் கற்க, ஆபரணம் அணிய, ராஜ தரிசனம் (பெரிய மனிதர்களை சந்திக்க), விதை விதைக்க யாத்திரை, கும்பாபிஷேகம் செய்யவும் உத்தமம்.
தெய்வம் : துயரந்தீர்த்தநாதர், பூங்கொடி நாயகி
கிரகம் : சனி, ராகு
ஸ்தலம் : ஓமாம்புலியூர் (சிதம்பரத்திலிருந்து சுமார் 30 கி.மீ.).

கருத்துகள் இல்லை: