புதன், 24 ஆகஸ்ட், 2011

2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology




2011 குரு பெயர்ச்சி பலன்கள்;

குரு பெயர்ச்சி பலன்கள் பொறுத்தவரை ராசிக்கு பார்ப்பது போலவே 
நமது லக்கினத்துக்கும் பார்க்க வேண்டும்..ராசியிலிருந்து ஆறாம் 
இடத்திற்கு குரு வந்தாலும் அதன் பார்வை லக்கினத்திற்கு 
எந்த வீடுகளை படுகிறது என பார்ப்பது நன்று..அதன் அடிப்படையில்
 பலன்கள் மாறுபடும்..
http://2.bp.blogspot.com/-DwLx8G0RShQ/TcqEtMU9AqI/AAAAAAAAB8Q/owvYJXBm_J4/s400/4dabb21307a2d04172011223755.jpg
.


குரு பெயர்ச்சி பலன்கள் நடைமுறை வாழ்வில் எப்படி இருக்கும் என 
பார்த்தால் ,பொதுவாக குரு ராசிக்கு ஆறாம் இடம் வந்தால் என்னாகு
ம் என பார்ப்போம்..என் ராசிக்கு ஒரு முறை குரு ஆறாம் இடம் வரும் 
போது போலீஸில் மாட்டினேன்...எப்படி தெரியுமா.லைசன்ஸ் இல்லாமல்
 பைக் ஓட்டியதால் .அதாவது ஆறு வருடத்துக்கு முன்.அப்புறம் ஆறாமிட
 குருவால் ரத்த காயம் ,மருத்துவ செலவுகள் என ஏற்படுகின்றன..
வீட்டில் நெருங்கிய உறவினர் யாராவது உடம்பு முடியாம இருந்தா
 அவங்க முடிஞ்சிடுறாங்க...ஏகப்பட்ட செலவுகள் இழுத்து வைக்கும்.
வருமானத்துக்கு அதிகமா செலவு ஏற்பட்டு அகலக்கால் வெச்சி,
கடனாளி ஆக்கும்...உறவுகளில் எதிரியை உண்டாக்கும்..நண்பர்கள் 
சிலர் பகைவர் ஆவர்..எடுத்த காரியம் தடை தாமதம் ஏற்படுத்தும்....

நகைக்கடன் உண்டாக்கும்...தங்கத்தை அடகு வைப்பது நல்லது...
.இது ஒரு பரிகாரம்.

அஸ்டம சனி நடக்கும்போது கறுப்பு நிற காராம்பசுவை தானம் 
செஞ்சா விபத்து,வழக்கு,உயிர்பயம் உண்டாகாதுன்னு பரிகாரம் 
சொல்வேன்.அதுபோல உங்கள் ராசிக்கு ஆறு,எட்டு,பன்னிரெண்டில் 
குரு வரும்போது தங்கம் அடகு வைக்கலாம்.அதனால் ஒரு இடமோ,
வீடோ வாங்கலாம்....இதை செய்ய முடியாவிட்டால் வங்கி கடன் 
வாங்குங்கள்....

இவை இல்லாமல் உங்கள் பணத்தை வங்கியில் குவித்து 
வைத்திருந்தால்,உங்கள் குடும்பத்தாருக்கு மருத்துவ செலவு உறுதி.
பணம்,விலை உயர்ந்த பொருட்கள் குரு பெயர்ச்சி சாதகமாக இல்லாத 
போது இட பெயர்ச்சி ஆகவேண்டும்...குரு சாதகமாக உங்கள் ராசிக்கு 
வரும்போது அவை பல மடங்காக உங்களிடத்தில் இடபெயர்ச்சியாகும்...


விருச்சிகம்,கன்னி,ரிசபம் ராசியினர் சுப செலவு செய்தல்...அதாவது
 வீட்டில் உள்ளோர்க்கு சுபம் செய்து வைத்தல் மூலமாக 
கையிருப்பு கரையும்.தொழிலில் மந்தம் காணப்படும்..மனைவியுடன் 
அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும்.கடன் ஏற்படும்..அப்படி 
உண்டானால் செலவுக்கு தகுந்த பணம் வந்து கொண்டிருக்கும்...
சனிப்பெயர்ச்சிக்கு பின் கடன் அடைபடும்.குழந்தைகளால் கவலைகள் 
உண்டாகும்.பெற்றோருடன் வீண் வாக்குவாதம் உண்டாகும்..அடிக்கடி 
உடல்நலன் சரியில்லாமல் போக கூடும்..


மேசம் ராசியினருக்கு ஜென்மத்தில் குரு வருவதால்,பெரிய நன்மையும்
 இல்லை.பெரிய கெடுதலும் இல்லை..வீடு அல்லது தொழில் 
செய்யுமிடத்தில் ஒரு மாற்றம் வரும்....வீடு வாடகையாக இருந்தால்
 உடனே மாற்றுவது நல்லது..இல்லையேல் தொழில் பாதிக்கலாம்.



ரிசப ராசிக்கு குரு கெட்டவர் தான் என்பதால்,கெட்டவன் கெட்டிடில் 
கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள்.அந்த வகையில் இது நன்மைதான்
 தரும் என எண்ணுகிறேன்..ஆனால் நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் 
என்றால் ஸாரி...கவலைகளும்,நோய்களும் உங்களை மன நிம்மதியற்று 
அலைய செய்யும்..பெண்களால் கெட்ட பெயர் உண்டாகும்.

கடக ராசிக்கு பத்தாம் இடம் வருகிறார் குருபகவான்....அன்பிற்கும் ,
பாசத்திற்கும் உரிய உங்களுக்கு ராசிக்கு மூன்றில் சனி இருப்பதால் 
கெடுதல் எதுவும் நேர்ந்து விடாது..சனி திசை,கேது திசை,ராகு திசை 
நடந்து கொண்டிருந்தால் மட்டுமெ அதிக பாதிப்பு உண்டாகும்...
திருப்பதி சென்று வந்தால் மிக நல்லது.


மகரம்,கும்பம் ராசியினருக்கு குரு சுமாரான பலன்களையே கொடுப்பார்...
பொதுவாக இந்த இரண்டு ராசியும் சனியின் வீட்டில் இருக்கும் 
சந்திரனை குறிக்கிறது..சந்திரன் சனி வீட்டில் இருப்பதால் இந்த 
ராசியினருக்கு எப்போதும் மனக்குழப்பம் அதிகமகவே இருக்கும்...
வீண் அலைச்சல் திரிச்சல் அதிகம் இருக்கும்..கடுமையான உழைப்பு 
இருந்தும் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது....இவர்கள் வருடம் 
ஒரு முறை திருப்பதி அல்லது திருநள்ளாரு சென்று வருவது நல்லது....

டிஸ்கி;நான் குறிப்பிடாத மற்ற ராசிக்காரர்களுக்குத்தான் 
குரு பெயர்ச்சி முதல் பகுதி பதிவை படிக்கவும்.

கருத்துகள் இல்லை: