புதன், 24 ஆகஸ்ட், 2011

ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..?


ஜோதிடம் கற்க;
ஜோதிடம் கற்று ஜோதிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பலரும் எனக்கு 
மெயில் அனுப்புகிறார்கள்.ஜோதிடம் கற்று தருவீர்களா என கேட்கிறார்கள்.ஜோதிடம் 
என்பது ஒரு கடல்.அதில் கையளவு நீரை தான் நாம் வைத்திருக்கிறோம் என என் குரு அடிக்கடி சொல்வார்.எனது ஜோதிட சேவைக்கு முதல் பிள்ளையார் 
சுழி போட்டது எனது ஜோதிட புத்தகம் தான்.இதன் மூலம்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவால்முழு நேர ஜோதிடராக இருக்க முடிகிறது.ரெகுலராக என்னிடம் மட்டுமே ஜோதிடம் பார்ப்பவர்கள் சுமார் 300 பேர் இருப்பார்கள்.தினசரி ஒருவர் என்றாலும்,வருடம் முழுவதும்பிரச்சனை இல்லை.இதனால் ஜோதிடராக 24 மணி நேர சேவையில் இறங்கிவிட்டேன்.

எண்கணித ஜோதிடம் பற்றியும்,பெயர் எப்படி அமைந்தால் வெற்றி கிடைக்கும் 
என்பது பற்றியும் அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம் என்னும் இந்த நூல் 96 பக்கங்களில் 
விளக்குகிறது.


குரு மூலமாக கற்கப்படும் ஜோதிடமே நிலையான அறிவை தரும்.அவர்களின் 
ஆசியோடு படிப்பதே உண்மையான ஜோதிட கல்வி.என் குரு நாகப்பன் அவர்கள் 
அவரது குருவிற்கு துணி துவைத்து,சமையல் செய்து,கால் அமுக்கிவிட்டெல்லாம்
 ஜோதிடம் கற்றார்.குருவிற்கு சேவை செய்யும் உண்மையான சீடனாக இருந்து,
குருவுடன் வாழ்ந்து ஜோதிடம் கற்ற கதையை அடிக்கடி என்னிடம் சொல்வார்.
நான் அவரிடம் கற்றுக்கொண்ட நேரம் காலை ஒரு மணி நேரம் மாலை 
ஒரு மணி நேரம்.இரண்டு வருடங்கள்.இவையெல்லாம் அனுபவ ஜோதிடம்தான்.
அவர் ஜோதிடம் பார்க்கும்போது அருகில் இருப்பேன்.இவர் நட்சத்திரம் அனுசம்.
இவர் எப்படி தெரியுமா என விளக்குவார்.இவருக்கு உடன் பிறந்தோர் நால்வர்.
அதை எப்படி சொன்னேன் தெரியுமா என என்னிடம் ஜாதகம் வைத்து விளக்கி 
சொல்வார்.இப்படியே குழந்தை பாக்யம்,திருமண தாமதம் என ஒவ்வொன்றுக்கும் 
பார்க்கும் முறை என பிரித்து சொல்லி தருவார்.


முதன் முதலில் வேறு ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் கற்று தருவீர்களா 
என நான் கேட்டதற்கு லிஃப்கோ பதிப்பகத்தின் குடும்ப ஜோதிடம் புத்தகம் கொடுத்து 
இதை முதலில் மனப்பாடம் செய்.பிறகு வா.என சொல்லிவிட்டார்.ஜோதிடம் 
என்பதில் மனப்பாட பகுதிகள் நிறைய இருக்கின்றன...
(தொடரும்)

கருத்துகள் இல்லை: