வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காதல் ஜோதிடம் love astrology


காதல் ஜோதிடம்/உங்கள் காதல் நிறைவேறுமா..?

love calculator   காதல் ஜோதிடம்,வசியபொருத்தம்,திருமணபொருத்தம் எல்லாமே ஒன்றுதான்.ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது..அவன் ரசனையோடு அவள் ஒத்துப்போகிறாள் என்றால் வாழ்ந்தால் இவளுடந்தான் வாழ வேண்டும் என்று மனம் ஏண்க்குகிறது என்றால் ,அதற்கு சில கிரக நிலைகள்தான் காரணம்.செம ஃபிகரா இருக்கு.இவளை எப்படியும் அடையணும் என கணக்கு போட்டு கணக்கு பண்ணுவது காதல் லிஸ்டில் வராது.அது காம லிஸ்ட்.

தானா ஒரு ஃபிகர் வந்து நான் உங்களை விரும்புறேன்னு சொல்லுது..உடனே நம்மாளு ஆடு தானா வந்து பிரியாணி ஆகுது ஏன் வேண்டாம்னு சொல்லணும்.பார்ட் டைம் பிசினஸ் போல அதை நினைச்சா அதுவும் அந்துவிடும்.50,000 ரூபாய் செல்ஃபோன்,கார் வெச்சிருக்கான்,அப்பா பெரிய ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன் வளைச்சி போடலாம்னு எந்த பொண்ணாவது நினைச்சு கொக்கி போட்டா அதுவும் ரீல் அந்துரும்.அவங்கவங்க தேவை முடிஞ்சா சீக்கிரம் கழண்டுதான் ஆகணும்.ஏன்னா அதுங்களுக்குள்ள காதல் பொருத்தம் ,வசிய பொருத்தம் இருக்காதே.

ஜாதகத்தில் பெண்ணிற்கு சுக்கிரன்,சந்திரன் எங்க இருந்தாலும்,இரண்டாம் இடத்தில் குரு,சுக்கிரன்,புதன்,ராகு,கேது இருந்தாலும் சம்பந்தப்பட்டாலும்.,7 ஆம் இடத்தில் பல கிரகங்கள் இருந்தாலோ சம்பந்தப்பட்டாலோ...பலருடன் லவ் உண்டாகும்.15 வயசுலியே கண் அலைபாய ஆரம்பிச்சிடும்.அழகான ஆண்களுடன் அந்த பெண் வலிய போய் பேசுவாள்.நகைச்சுவையும்,கலகல்ப்பான பேச்சு திறமையும் அவள் வசியத்துக்கு ஒத்துழைக்கும்.பிறந்த தேதி கூட்டு எண் 7 வந்தாலும் அவர்களை பலரும் மொய்ப்பார்கள்.தினசரி ஒரு லவ் மனுவாவது வரும்.

ஜாதகத்துல இந்த பொண்ணு/பையன் காதல் திருமணம் பண்ணுவானா பெத்தவங்க சொல்ற இடத்துல கல்யாணம் செய்வானா என ஜோதிடர்களை கேட்காத பெற்றோர் குறைவு.



பையன் ஜாதகமோ பெண் ஜாதகமோ ஏழரை சனி,அஸ்டம சனி,சனி,கேது,சுக்கிர,குரு,சந்திர திசை நடக்கும் காலங்களில் சந்திரன் கெட்டு போகும் கோட்சார நாட்களில் காதல் வசப்படுவது உண்மை.அது நிலைத்து இருப்பது 5 ஆம் இடம் 7ஆம் இடம் பொறுத்தும் திசா புத்தி பொறுத்தும் அமையும்.பலவீனமான ஜாதகர்கள் காதலில் பிடிவாதமாக இருப்பதில்லை.பெரும்பாலான காதல்கள் ஆசை தீர்ந்ததும் தெளிவு பிறந்து விடுகின்றன...

நிறைய பேர்..காதல் திருமணம் செய்யப்போறேன்.பொருத்தம் இருக்கான்னு பாருங்க என்பார்கள்.ஜாதகத்தை பார்த்ததும் இது மோகத்தினால் வந்த பித்த நிலை என்பது தெரிந்துவிடும்.திருமணத்திற்கு பின் என் ரூட்ல நீ தலையிடாதே ..உன் ரூட்ல நான் தலையிட மாட்டேன் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டு,ஆளுக்கொரு திசையில் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.அதையும் சொல்லி விடுவேன்.சிலர் தப்பிக்க முடியாது சார்..பிச்சிருவா என்பார்கள்.சிலர் என்னுடைய காதல் உயர்ந்தது என்பார்கள்.அடுத்த காதலி விரைவில் அமைய வாழ்த்துக்கள் என மனதில் நினைத்துக்கொள்வேன்.

சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை...குரு செய்யும் அட்டகாசத்தால் இவர்களுக்கு ஒரு காதலுடன் முடிவதில்லை..கல்வி,தொழிலும் சிறப்பாக இருப்பதில்லை.காதலை சுவைக்கவே நேரம் சரியாக போய்விடும்.ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது பெரியோர்களின் சத்தியமான வார்த்தை.கல்யாணம் ஆகி 30 நாளுக்கு பின் ஒரு தடுமாற்றம் அவ்ரும்.அதை சமாளித்து கடப்பவன் குடும்ப வாழ்வில் ஜெயிக்கிறவன்.

திருமண பொருத்தத்தில் வசிய பொருத்தன் என்று ஒரு லிஸ்ட் இருக்கு.இந்த ராசியினர் சந்தித்தால் அவர்களுக்குள் நிரந்தரமான ஒரு பிணைப்பு உண்டாகும் என்பது விதி.காதல் திருமண ஜோடிகள் பலருக்கு இது பொருந்தியது.

மேஷம்-சிம்மமும்,விருச்சிகம்
ரிசபம்-கடகம்,துலாம்
மிதுனம்-கன்னி
கடகம்-விருச்சிகம்,தனுசு
சிம்மம்-துலாம்,மீனம்
கன்னி-ரிசபம்-மீனம்
துலாம்-மகரம்
விருச்சிகம்-கடகம்,கன்னி
தனுசு-மீனம்
மகரம்-மேசமும்,குமபம்
குமபம்-மீனம்
மீனம்-மகரம்

இந்த ராசிக்காரர்கள் சந்தித்தால் உடனே நட்பு உண்டாகும்.மனதிற்கு உடனே இவர்களை பிடிக்கும்.

நட்சத்திரங்களை பொருத்தவரை,12,4,5,7,10,3,15,18,26 வது நட்சத்திரங்கள்,உங்கள் நட்சத்திரத்திலிருந்து ஆகாது.நீடித்து நிற்காது.

உங்கள் ராசிக்கு 7 வது ராசி எப்போதும் பொருந்தி போகும்.கடகம்,மகரம் ஆகாது.சிம்மம்,கும்பம் ஆகாது.

காதலை பொறுத்தவரை மோகமா,அல்லது குடும்பம் நடத்த ஒத்து வருவாளா என்பதை அலசாத தெளிவில்லாத காதல் நிலைத்து நிற்பதில்லை.


கருத்துகள் இல்லை: