சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்
திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,(15.11.2011)செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சென்றார்.வாக்கிய பஞ்சாங்கப்படி 21.12.2011 அன்று பெயர்ச்சியானார்.
இந்த பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று கடகம் ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.கடகம் சந்திரன் பகவானின் ராசி.குளிர்ந்த நீர் ராசி என்பதாலோ என்னவோ இவர்களும் குளிர்ந்த மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.பிறருக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல ஓடி வந்து உதவும் நற்குணமும் எப்போதும் சிரித்த முகத்துடனும் காட்சி தருபவர்கள்.சந்திரன் தாயை குறிக்கும் கிரகம் மட்டுமல்ல.....அழகுக்கும்,அறிவுக்கும் நாயகியாக திகழும் கிரகம் அல்லவா சந்திரன்? அதனால் இவர்கள் அழகும்,அறிவும் மிக்கவர்களாக,அதிக பாசம் அன்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடக ராசி அன்பர்கள் எனக்கு நிறைய ஜோதிட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.பணிவும்,மனிதனுக்கு மதிப்பு கொடுக்கும் அவர்கள் பண்பும் என்னை பல சமயம் மெய் சிலிர்க்க வைத்ததுண்டு.
குடும்பத்தினர் மீது அதிக அக்கறை கொண்டுள்ள இவர்களுக்குத்தான் கடவுள் அதிக சோதனைகளை கொடுக்கிறார்.இருப்பினும் இவர்கள் அதையெல்லாம் மீறி வெற்றி பெறக்கூடியவர்கள்.
உங்கள் கடக ராசிக்கு சனிபகவான் என்ன செய்யபோகிறார்..?
உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு செல்லும் சனிபகவான் ,அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார்.4 ஆம் இடம் சுக ஸ்தனம்.அர்த்தாஷ்டம சனி என்றாலே வீட்டைக் கட்டு அல்லது வைத்தியம் பார் என்பதே சரி.உடல் ஆரோக்கியம்,சுகம்,தாயார்,வண்டி வாகனங்கள்,சொத்துக்கள் சம்பந்தமான இடத்தில் வந்து நிற்கிறார்.இவற்றில் சில பாதிப்புகளை செய்யும்படி உள்ளார். கவனம் தேவை.
குரு சாதகமாக இல்லாத அமைப்பு இருப்பினும்,சனி 4 ல் இருப்பதாலும் தொழில்,வருமானம் சற்று மந்தமாகவே காணப்படும்.இடமாற்றம் உண்டாகும்.வீடு அல்லது தொழில் செய்யுமிடத்தில் சில மாற்றங்கள் உண்டாகும்.குருப்பெயர்ச்சி வரை சமாளிக்கத்தான் வேண்டும்.சுய ஜாதகத்தில் 1,4,7,10 க்குடையவர் திசை நடந்தால் பிரச்சனை இல்லை.நன்றாக்வே இருக்கும்.மாணவர்களுக்கு அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.இடம்,தொழில் மாற்றம் செய்ய நேரலாம்.வீடு மாற எண்ணம் கொண்டவர்கள் உடன் மாறிக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்;5,6
சனி வக்ரம்;
15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014
சனி வக்ரகலம் உங்களுக்கு நன்மையானதே .உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.முன்னேற்றமான சூழ்நிலை தென்படும்.
பரிகாரம்;திருப்பதி.சந்திரனின் ராசியில் பிறந்ததால் சந்திரன் திருத்தலம் திருப்பதி சென்று வந்தால் பூரண உடல்நலம்,மனநலம்,நீண்ட ஆயுள் உண்டாகும்.
சமயபுரம் மாரியம்மன்,திருச்செந்தூர் மூன்றில் உங்கள் இஷ்ட தெய்வம் எதுவோ அங்கு சென்று வரலாம்.
வசதி படைத்தவர்கள் ,இஷ்டம் இருப்போர்,நேரம் இருப்போர் ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்யுங்கள்.உங்கள் மனக்குறை அனைத்தும் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக