ஜோதிட அனுபவங்கள் ;
காதல் திருமணம் செய்தவர்கள் ஜாதகங்கள் இரண்டு என்னிடம் வந்தன..ஆண் ராசி கடகம்..பெண் ராசி மகரம் என இருந்தது..பொதுவாக ஜோதிட விதிப்படி ஏழாம் பொருத்தமாக வரக்கூடிய ராசிகளை இணைக்கலாம் என இருந்தாலும்,கடகம்-மகரம்,சிம்மம்-கும்பம் ராசிகளை இணைப்பது தவறு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது...இந்த ஜாதகங்களை பார்த்த ஜோதிடர் திருமணம் செய்யலாம் தவறில்லை என சொல்லியிருக்கிறார்.
அவர் என்ன செய்வார்...இருவரும் காதலிக்கிறார்கள்,திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம் ஜாதகத்தை ஒரு முறை பார்த்து ,பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க சாமி என்றால் அவர் என்ன செய்வார் பாவம்...பொருத்தம் நல்லாருக்கு ஏழாம் பொருத்தம் என ஓகே சொல்லிவிட்டார்.
இன்று என்னிடம் வந்திருக்கிறார்கள்..இருவருக்கும் ஆறு எட்டுக்குடையவன் திசை...இருவர் ராசியும் பொருத்தம் இல்லை...பெண்ணுக்கு நாகதோசம் பையனுக்கு இல்லை..
ஜாதகத்தில் சுக்கிரன் அமைப்பு,ஏழாம் அதிபதி அமைப்பு,இரண்டாமிடம்....பெண்ணின் குண நலன் பார்த்தவுடன் புரிந்து விட்டது....மருத்துவமனையில்இருக்கிறார்களா..பிரிந்துவிட்டார்களா... என்றேன்...
‘
இரண்டுமேதான்...என்றார் பெண்ணின் தந்தை..
இருவருக்கும் எப்போதும் ஒத்துப்போகாது..ஈகோ பிரச்சனை என்றேன்...
ஆமா சார்..கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் நல்லாருந்தாங்க..இவங்க பிடிவாதமா இருந்ததை பார்த்துதான் கல்யாணம் செஞ்சி வெச்சோம்..அதே பிடிவாததோட இப்ப பிரிஞ்சும் இருக்காங்க...மதிப்பு மரியாதை ரெண்டு பேருமே எதிர்பார்க்குறாங்க.
.காதலில் விட்டு கொடுத்தவங்க..வாழக்கையில ஈகோ பார்க்குறாங்க...காதலியா இருக்கும்போது என் மகளை கொஞ்சியவன்..இன்று சுவரில் பலமாக முட்டி என் மகளை ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு போயிட்டான் ஊரெல்லாம் கடன்..குடிப்பழக்கம் வேற..!
என சொல்லி முடித்தார்.
எப்படி இப்படி மாற்றம் வருகிறது..?
கையை மூடிவைக்கும் வரைதான் ரகசியம் என்பதுபோல...
பூவை முகர்ந்ததும்...
சலித்து விட்டது வண்டுக்கு....
அவளுக்கு தெரியாமல் இருந்த அவன் குணம் அப்போதுதான் வெளிப்பட்டது....
அதிர்ந்தாள்..சண்டை...பிரிவு!
இந்த இரு ராசிகளில் ஜோடி சேர்ந்து, பிரிவு ஏற்பட்ட பலரையும் சந்தித்து இருக்கிறேன்....
-------------------------------------------------
கடகம் நீர் ராசி....சனி முடவன் ராசி...இருட்டு ராசி ..ஒன்றுக்கொன்று பகை...
இரண்டையும் இணைக்க கூடாது....இந்த இரண்டும் ஒரு வீட்டில் சேர்ந்து சந்தோசமாக வாழ வாய்ப்பே இல்லை.
மனப்பொருத்தம் இருந்தால் இயற்கையாகவே ஜாதகத்திலும் பொருத்தம் ஓரளவு இருக்கிறது...
-----------------------------------------------------
கணவ்ன்,மனைவி இருவருக்கும் ஒரே ராசி நட்சத்திரம் அமைந்து ஒற்றுமையாக இருப்பவர்கள் குறைவுதான் என்றாலும் அதிலும் சில விநோதங்கள் நடப்பது உண்டு!
கணவ்ன்,மனைவி இருவருக்கும் மூலம் நட்சத்திரம்,தனுசு ராசி..காதல் திருமணம்...இருவரும் திருமணத்திற்கு பின்னரும் அன்பாக இருந்தார்கள்..சந்தோசம் அதிகமாகவே காணப்பட்டது..அடிக்கடி டூர் செல்வார்கள்...சாயந்திரம் ஆகிட்டா கைகோர்த்துக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள்...
இப்படி ஜாலியா இருந்தா எப்படி சம்பாதிக்கிறது..அவங்க பிரச்ச்னை அதுதான்.கணவன் வேலைக்கு போறதே இல்லை..சரி கல்யாண புதுசுல அப்படித்தான் இருக்கும் என நினைக்க வேண்டாம்..கல்யாணம் ஆகி 5 வருசம் ஆச்சு...
அந்த பொண்ணு வேலைக்கு போகுது...
2 கருத்துகள்:
kanavan manaivi iruvarukkum ore lagnam,ore rasi irukkalaama?
iruvarukumae thanus raasi pooradam natchathiram ithanala ethum problem varuma pls reply me friends....
கருத்துரையிடுக