merrige match லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
merrige match லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 டிசம்பர், 2012

ஜோதிடம்;திருமண வாழ்க்கை சிக்கல்கள்

ஜோதிடம்;திருமண வாழ்க்கை சிக்கல்கள்


ராசிபலன் மட்டும் பார்த்து திருமணம் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் நம் அந்தஸ்துக்கு தகுந்த இடம்,நமக்கு ஏத்த படிப்பு,பையனுக்கு நல்ல வருமானம்,பொண்ணு நிறைய சம்பாதிக்குறா ,பொண்ணு வீடு நல்ல வசதி என இவற்றை பார்ப்பவர்கள்தான் நட்சத்திரபொருத்தம் இருக்கு,ராசிபொருத்தம் ஓகே அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கலாம் என அவசரப்படுகிறார்கள்..ஜோதிடரும் வேறு வழியின்றி இவர்கள் காட்டும் அவசரத்துக்கு ஏற்ப ஒப்புதல் கொடுத்து விடுகிறார்..

இருவரது ஜாதகத்திலும் களத்திர காரகன் 6,8,12ல் மறையாமல் இருக்கனும்,,சனி,சந்திரன் சேர்ந்தோ பார்வை பெற்றோ இருக்க கூடாது....அது சன்னியாசி ஜாதகம்..சங்கராச்சாரியார்,ராமானுஜர்,ஏசுநாதர்,புத்தர் ,வள்ளலார் போன்ற ஆன்மீக ஆய்வாளர்கள்,மக்களுக்கு சேவை செய்ய பிறந்த மகன்களின் ஜாதகத்தில்தான் சனி,சந்திரன் சேர்க்கை,சுக ஸ்தானம் கெட்டு இருத்தல் போன்றவை இருக்கும்...சனி,செவ்வாய் சேர்ந்து இருத்தல்,களத்திரகாரன் கேது நட்சத்திரம் சாரம் பெற்று இருத்தல் போன்றவையும் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாது...

முதல்வர் ஜெயலலிதா ஜாதகத்தில் பார்த்தால் களத்திரகாரன் கேது சாரம் பெற்று இருக்கும்...தனக்கு என குடும்பம் அமையாமல் மக்கள் சேவை ஆற்றுகிறார்....இன்று துணிச்சலுடன் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரி நீரை பெற்று தந்திருக்கிறார்...அவருக்கு ஜாதகத்தில் மக்கள் தலைவர் அமைப்பு உள்ளதால் அவர் இவ்வாறு செயல்பட முடிகிறது

சாதாரண மனிதர்கள் மகிழ்ச்சியான குடும்ப வழ்க்கையை தான் எதிர்பார்ப்போம் அதற்கு ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது...ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு எப்படி என பார்த்தே திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்...

வெள்ளி, 23 நவம்பர், 2012

அழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்

அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....அமைஞ்சா பேரின்பம்தாம்..அப்படி அமைய மாட்டேங்குதே...என புலம்புபவர்கள் பலர்....ஒரு பெண் ஜாதகத்தை பார்த்தால் அதில் அமைந்திருக்கும் கிரக நிலைகளை வைத்து அவள் அழகான பெண்ணா ,அன்பான பெண்ணா என்பதை கண்டறியும் முறைகள் பற்றி கீரனூர் நடராசர் எழுதிய சாதகலங்காரம் சொல்கிறது! 

இதே போல பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும்போது அவளுக்கு வரப்போகும் கணவனை பற்றியும் சொல்ல முடியும்..அவன் நடத்தை,குணம் ,தொழில் பற்றியும் அறியலாம்...

கன்னிகேள் சன்மத்திற் பிறைசுங்கனிருக்கில்
கழற்பெருமையுடன் சுகியாய்க் காசினியில்வாழ்வாள்

என 861 வது சாதகலங்காரம் பாடல் சொல்கிறது

அதாவது லக்னத்தில் சந்திரனும்,சுக்கிரனும் இருந்தால் பெருமையாக பலர் போற்றும்படி சுகமான வாழ்க்கை இவளுக்கும் இவளை கல்யாணம் செய்து கொள்பவனுக்கும் அமையுமாம்..சந்திரனும்,புதனும் லக்னத்தில் இருந்தால் பல கலைகள் தெரிந்தவளாக நன்கு படித்தவளாக இருப்பாள்...புதனும்,சுக்கிரனும் இருந்தால் பட்ட மேற்படிப்பு முடித்தவளாக இருப்பாள்..மிக இனிமையாக பேச்சு இருக்கும்...லக்னத்துக்கு 3ஆம் இடத்தில் சுப கிரகம் ஏதேனும் இருந்தால் செல்வாக்கும்,செல்வமும் உடையவளாக இருப்பாள்...

இரட்டை ராசியில் குரு,செவ்வாய்,புதன் இவர்கள் இருந்தால் நல்ல குடும்பத்தில்,நல்ல குலத்தில் பிறந்தவளாக இருப்பாள்..நல்ல குணமும் இருக்கும்...


 வளர்பிறை சந்திரனை குரு பார்க்க, பிறந்த பெண் அழகும்,குணமும் உடையவர்...

1,7,5,9 ஆம் இடங்கள் கெடாமல் இருந்தால் அழகும்,குணமும்,அன்பும் நிறைந்தவள்..அதே போல கணவனும் இருப்பான்...செக்கிரன்,சூரியன் சேராமல் இருக்கணும்..சேர்ந்தா ..? கணவனுக்கு அடி உதைதான்...செவ்வாய்,சூரியன் 8ஆம் இடத்தில் சேரக்கூடாது...சேர்ந்தா..? அன்புன்னா என்ன..? இனிமைன்னா என்ன..? என்பது கணவனுக்கு மறந்துடும்...!!

பொதுவாகவே பெண் ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் பலமாக அமைந்து,லக்னாதிபதியும்,7ஆம் அதிபதியும்,4,5,7,9,11 போன்ற ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்துவிட்டாலே போதும்.. அவள் கணவனுக்கு மிக யோகமாக அமைந்துவிடும்..நல்ல ருசியாக சமையல் செய்து கணவனை மயக்குவாள்..இனிமையாக அழகாக,அறிவாக பேசி வியக்க வைப்பாள்..தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கணவனுக்கு துணையாக இருப்பாள்..தாம்பத்ய சுகத்திலும் குறைவிருக்காது..மிக அழகான தோற்றமும் இருக்கும்..கணவனும் அழகானவனாக இருப்பான்..திருமணத்துக்கு பின் நல்ல வசதியும்,முன்னேற்றமும் உண்டாகும்..











ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012;தனுசு

வில்லுக்கு அர்ச்சுணன் என பெயர் பெற்ற அர்ச்சுனன் பிறந்தது உங்க ராசியில்தான்...நீங்கள் வசிக்கும் வலப்பக்கம் ஆறு,குளம் இருந்தால் பிரபல யோகம் உண்டு...வெச்ச குறி தப்பாத ராசிக்காரரே...ஊருக்கு உழைச்சு தேஞ்சி போறது நீங்கதான்..பணம் இல்ல..ஆனா ஊருக்குள்ள நல்ல பேரு இருக்கு..என சொன்னா அதை வெச்சு பிரியாணியா சாப்பிட முடியும் என கேட்கும் மனைவி...அதனல நண்பர்களே உலகம்..என இருப்பீர்கள்..டீ சாப்பிட போனா கூட கடக ராசிக்காரங்களும்,தனுசு ராசிக்காரங்களும் துணை இல்லாம போக மாட்டாங்க.

உங்க ராசிக்கு குரு 6ல் இருந்து முடக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார் வருமானமும்,தொழிலிலும் திணறிக்கொண்டிருக்கிறது..பணம் இல்லைன்னா உங்க முகத்துல சிரிப்பையே பார்க்க முடியது..பணம் இருந்துட்டா உங்களை பிடிக்கவே முடியாது..

உங்க ராசிக்கு ராகு 11 ஆம் இடத்திலும்,கேது 5 ஆம் இடத்துக்கும் வரும் 23.12.2012 முதல் மாறப்போறாங்க..இதுவரை 12ல் இருந்த ராகு சுப விரயம்,அசுப விரயம் என மாறி மாறி செலவுகளை கொடுத்து வந்தார் அதுக்கு தகுந்தது போல வருமானத்தையும் கொடுத்து வந்தார்...இனி லாபத்துக்கு மாறும் ராகு வருமானத்தை அள்ளி கொடுப்பார் சில சலுகைகளையும் அனுபவிக்க உதவுவார் என நம்பலாம்..11ல் ராகு வரும்போது ராகு சார்ந்த பொருட்கள் மூலம் ஆதாயம் தருவார்..மின்சாரத்தால் இயங்கக்கூடிய கருவிகள் உற்பத்தி செய்யக்கூடியவர்களுக்கும்,விற்பனை செய்பவர்களுக்கும்,அங்கு பணி புரிபவர்களுக்கும் நல்ல வருமானம் பல மடங்கு முன்னேற்றம் உண்டாகும்..நிறைய ஆர்டர் கிடைக்கும்...

5ல் கேது இருப்பதால் பிள்ளைகள் பற்றிய சிக்கல்கள்,கவலைகள்,செலவுகள் உண்டாகும்..பூர்வீக சொத்து,தந்தை வழி உறவுகள் மூலம் புதிய சிக்கல்கள் உண்டாகும்..குலதெய்வம் கோயில் பற்றிய பிரச்சினைகள் உண்டாகலாம்..

ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்..அதன் மூலம் பணம் விரயம் ஆகும்


வியாழன், 22 நவம்பர், 2012

திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்

ஜோதிடம்;திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்;TAMIL ASTROLOGY;merrige match

ஆண் ,பெண் ஜாதகம் எதுவாக இருந்தாலும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து திருமணத்தை முடிவு செய்யாமல் இருவருக்கும் செவ்வாய் தோசம் இருக்கா,நாக தோசம் இருக்கா,இருவரது லக்னமும் ஒன்றுக்கொன்று மறையாமல் இருக்கா என பார்த்து முடிவு செய்வது அவசியம்...இது F.I.R மாதிரி.

அதன் பிறகு இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன்,செவ்வாய்,சந்திரன் எப்படி இருக்கு..மறைந்தோ,வக்ரம் பெற்றோ,நீசம் அடைந்தோ இருக்கா,7ஆம் அதிபதி,குடும்பாதிபதி எப்படி இருக்கார் என்பதையும் கவனிக்கனும் இதுதான் முக்கியம்...


சனி சந்திரன் சேர்க்கை,சனி செவ்வாய் சேர்க்கை,செவ்வாய் கேது சேர்க்கை,சுக்கிரன் சூரியன் சேர்க்கை,செவ்வாய் சூரியன் சேர்க்கை,7ல் சூரியன் இருப்பது,7ல் சனி இருப்பது,8ஆம் இடத்தில்  சனியோ,சூரியனோ,இருப்பது எல்லாம் பெண்ணுக்கும்,ஆணுக்கும்  திருமண வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும்...

ஏழாம் இடத்தில் தனித்த குரு இருந்தால்,தனித்த சுக்கிரன் இருந்தால் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் திருமண வாழ்வை கசப்பாக்கி விடுகிறார்..

ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தால் துணை வேறு ஒருவருடன் சென்று விடுகிறார்..காரணம் தாம்பத்யம் கசந்துவிடும் அல்லது வெறுத்து விடும்...

7 ஆம் இடத்தில் பகை கிரகங்கள் இருந்தாலோ ,7ஆம் அதிபதி பகை கிரகங்களுடன் கூடி இருந்தாலோ சனி மட்டும் இருந்தாலோ திருமணத்தை தாமதம் ஆக்கி விரக்தி அடைய செய்கிறார்...

7 ஆம் பாவத்திற்கு சனியுடன் ராகு சம்பந்தம் உண்டானால் துணைக்கு கள்ள தொடர்பு உண்டாகிறது...

சுக்கிரன் சந்திரன் சேர்ந்தாலோ,சுக்கிரன்,ராகு சேர்ந்தாலோ மனைவி அல்லது கணவனுக்கு அதிக காம உணர்வுகள் மேலோங்கி எவ்வளவு தாம்பத்யம் சுகம் வைத்துக்கொண்டாலும் போதாமல் வெளியே சுகம் தேட வைத்துவிடலாம்..சுபர் பார்வை இருந்தால் மட்டுபடும்..

செவ்வாயுடன் ராகு அல்லது கேது இணைந்தால் ,அவர்கள் 7ஆம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் துணையை இழந்து வாழ்க்கையை கசப்பாக்கிவிடும்...

சனியும் செவ்வாயும் சேர்ந்து 7 அல்லது 8ல் இருந்தால் கள்ள தொடர்பு,காதல் பிரச்சினையில் சிக்கி அவதிபட நேரும்...

WWW.ASTROSUPER.COM


வியாழன், 16 ஆகஸ்ட், 2012

திருமணம் லேட்டாக காரணம் சனி? ஜோதிட விளக்கம்


திருமணம் தாமதம், தடை உண்டாக்குமா சனி?


ஜாதகம் பார்க்கப்போனல் இப்போ கல்யாணம் ஆகிவிடும்..ஆவணி வந்தால் கல்யானம் ஆகிவிடும் ஆனா அப்படி ஒரு சம்பவம் நடக்கவே மாட்டேங்குதே..ஜோசியரை பார்த்தாலே கடுப்பா வருது...100 ரூபா சும்மா கேட்டாலும் கொடுத்துடலாம்..இப்படி போகும்போதெல்லாம் ஆகிடும் ஆகிடும்னு சொல்றாரே..எல்லா பரிகாரமும் பண்ணியாச்சு..சொல்லாத மந்திரமும் இல்ல..என சலித்துக்கொள்வோர் பலரை பார்த்திருக்கிறேன்....

கோயில்,கோயிலாக சென்று  பரிகாரம் செய்தாலும்,எத்தனை திருமண தகவல் நிலையம்,மேட்ரிமோனியலில் பதிவு செய்தாலும் திருமணம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பின் படி வழி கிடைத்தால்தான் நடக்கும்..அப்படி கிரகங்கள் கூடி வரும்போது பரிகாரம் செய்துகொண்டால்தான் தோசங்களும் விலகும்...

பவானிகூடுதுறை,திருச்செந்தூர்,கொடுமுடி,முடிச்சூர், திருவிடந்தை, திருமணஞ்சேரி, திருவீழிமழிசை, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், உப்பிலியப்பன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தர்ரேஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், மற்றும் திருக்கருகாவூர்,காளகஸ்தி போன்ற கோயில்கள்,தலங்களுக்கு சென்று வந்தும் பலன் இல்லையே தவிப்பவர்கள் அநேகம்..

ஜாதகத்தில் செவ்வாய் தோசம்,நாகதோசத்தால் மட்டும் திருமனம் தாமதம் ஆவதில்லை..இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன..சனி ஒரு மந்த கிரகம்...முடக்கம் தரும் கிரகம்..இவர் எந்த ஸ்தானத்தை பார்வையிடுகிறாரோ.,எந்த கிரகத்துடன் சேர்கிறாரோ அந்த ஸ்தானம்,கரகத்துவம் வலு இழக்கும்..அல்லது அந்த செயல்கள் மந்தம் அடையும்...உதாரணமாக புத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தில் இருந்து 5 ஆம் இடத்தை பார்த்தாலோ இருந்தாலோ,புத்திர அதிபதியுடன் சேர்ந்தாலோ பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்..அபார்சன் கருச்சிதைவு உண்டாகும்...குழந்தை பாக்யம் தாமதம் ஆகும்...

7ஆம் இடத்தில் சனி இருந்தால்,7 ஆம் இடத்தை சனி பார்த்தால்,லக்னத்தில் சனி இருந்தால்,7க்குடையவனுடன் சனி இருந்தால்,7க்குடையவனை சனி பார்த்தால்,சுக்கிரனுடன் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஆகும்...முயர்சி செய்தாலே பல தடங்கல்கள் வரும்...இது போன்ற தோசம் இருப்பவர்கள் சிலர் 40 வயதளவில்தான் திருமனம் செய்திருக்கின்றனர்..அதிலும் சிலர் வேற வழியே இல்லை..இதுதான் அமைஞ்சது என மனசுக்கு பிடிக்காத துணையை திருமணம் செய்கின்றனர்,....குடும்ப வாழ்வும் குழப்பமாகவே இருக்கிறது..சனிதான் பார்த்துட்டாரே....துணையும்...அதுக்கேத்த மாதிரிதான் இருப்பார்...கொஞ்சம் முதிர்ச்சியா....!!

ஏழரை சனி நடக்குது,அஷ்டம சனி நடக்குது..இது திருமண தடையை உண்டாக்குமா எனக்கேட்டால் உண்டாக்காது...குரு பார்வை செவ்வாய்க்கோ,சுக்கிரனுக்கோ,7ஆம் இடத்துக்கோ இருந்தால்,சுக்கிரன்,செவ்வாய்,7க்குடையவன் புத்தி நடந்தால் திருமணம் தடங்கல் இல்லாமல் நடக்கும்!!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்



நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 
மிகவானி லிந்து வெயில்காய 
மிதவாடை வந்து தழல்போல வொன்ற 
வினைமாதர் தந்தம் வசைகூற


குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர 
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 
குறைதீர வந்து குறுகாயோ


மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா 
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 
வடிவே லெறிந்த அதிதீரா


அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே 
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

திருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை

திருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை

ஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்கும் விதிகளில் முக்கியமானதாக ராசி பொருத்தம் பற்றி சொல்லியிருக்கிறது.பெண் ராசிக்கும் ஆண் ராசிக்கும் 2,3,4,6,,12 ஆக வராமல் இருக்க வேண்டும்...

பெண் ராசிக்கு ஆண் ராசி;2 வது ராசியாக வந்தால் மரணம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 3 வது ராசியாக வந்தால் துக்கம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 4 வது ராசியாக வந்தால் ஏழ்மை
பெண் ராசிக்கு ஆண் ராசி 5 வது ராசியாக வந்தால் வைதவ்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 6 வது ராசியாக வந்தால் புத்திர நாசம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 7 வது ராசியாக வந்தால் உத்தமம்,மாங்கல்ய விருத்தி
பெண் ராசிக்கு ஆண் ராசி 8 வது ராசியாக வந்தால் அதிக குழந்தைகள்
பெண் ராசிக்கு ஆண் ராசி 9 வது ராசியாக வந்தால்செளமாங்கல்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 10 வது ராசியாக வந்தால் ஐஸ்வர்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி  11 வது ராசியாக வந்தால் சுகம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 12 வது ராசியாக வந்தால் ஆயுள் விருத்தி

பெண்ணின் ராசிக்கு 6,8 ராசியாக வருவதில் ஒரு விலக்கு இருக்கிறது.அதே போல 7 வது ராசியாக வருவதிலும் ஒரு விலக்கு இருக்கிறது.

மேசம் 6 வது ராசியான கன்னியை இணைக்கலாம்
தனுசு 6 வது ராசியான ரிசபம் சேர்க்கலாம்
துலாம் 6 வது ராசி மீனம் சேர்க்கலாம்.
கும்பம் கடகமும்,சிம்மம்,மகரமும் சேர்க்கலாம்..மிதுனம்,விருச்சிகமும் ஒத்துவரும்.இவை சுப சஷ்டாஷ்டமம் எனப்படும்.( பஞ்சாங்கம் இப்படி சொன்னாலும்,அனுபவத்தில், இதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆணின் ராசியில் இருந்து பெண் ராசியாக 6 வந்தால் எதிரி ஆகிவிடுகிறது.எனவே எப்படியிருப்பினும் இந்த ராசிகள் அடிக்கடி மருத்துவ செலவுகளை சந்திக்கின்றனர்..அல்லது.எலியும் பூனையுமாக ஈகோ பிரச்சினையில் வெறித்தனமாக சண்டை போட்டுக்கொள்கின்றனர்.)

7 வது ராசி யாக பெண் ராசியாக வந்தால் அருமையான பொருத்தம் தான்.ஆனால் கடகம்-மகரம்,சிம்மம்-கும்பம் ஆகவே ஆகாது.பொருள் நஷ்டம்,உயிரிழப்பு உடனே உண்டாகும்.ரிசபம் ராசிக்காரர் விருச்சிகம் ராசிப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரிசபராசிக்காரருக்கு வாழ்வே நரகமாயிடும்...கொஞ்சம் லேட் ஆனாலும் எவ கூட ஊர் சுத்திட்டு வர்ற..? என நெத்தியடியாய் கேள்வி வரும்.

மகரம் ராசி பொன்ணை கடகம் ராசிக்காரர் கல்யாணம் கட்டிக்கிட்டா வாழ்க்கை வெறுத்து போறதுன்னா என்னன்னு இவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்.அந்தளவு வெறுத்து போய் குடிகாரரா மாறிடுவார்...


வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்


ஜோதிடம் சொல்லும் விதிகளில் முக்கியமானது திருமண பொருத்தம்.மனப்பொருத்தம் நன்றாக இருந்தால் மணப்பொருத்தமே பார்க்க வேண்டாம் என சொல்வார்கள்.ஆனால் இப்போதெல்லாம் என்ன படிப்பு,சம்பளம் எவ்வளவு..வீடு சொந்தமா இருக்கா என்பதே முக்கியமாக போய்விட்டதால் பையனும்,பொண்ணும் பழகவும்,புரிந்துகொள்ளவும் வாய்ப்பே இல்லை.நல்ல வசதியான பையன் கிடைக்கும் என்றால் சில பெண்கள் நீ யாரு என 10 வருசம் காதலிச்சு ஊர் சுத்தின காதலனையே கேட்கும் காலம் இது.

காதல்,கவிதை,சினிமா,சென்னை மெரீனா பீச் லவ் னு சுத்துறவங்க..எல்லாம் பக்குவமில்லாதவர்கள்..புத்திசாலி பொண்ணுங்க..நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..

ஜாதகப்படி பொருத்தம் பார்ப்படி..?

இருவரது ஜாதகத்திலும் செவ்வாய் தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் இருக்கான்னு பார்ப்பது முதல் படி.

இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன்,குரு,செவ்வாய்,7க்குடையவன் கெடாமல் இருக்கா என பார்ப்பது அடுத்தபடி...

கூட்டு கிரக சேர்க்கைகள் மோசமாக இருக்கான்னு பார்ப்பது அடுத்த படி.உதாரணம்..செவ்வாய்,+சூரியன்,சனி+சூரியன்,செவ்வாய்+சனி,சுக்கிரன்+ராகு,குரு+ராகு,சந்திரன்+சனி,இவைகள் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தபடீருவருக்கும் ஒரே திசை நடக்குதான்னு பார்க்கணும்.இருவருக்கும் ஒரே திசை நடந்தால் யோகமில்லை.கண்டம்தான்..போராட்டம்தான்..கொஞ்சநாள் கழிச்சும் திசை இருவருக்கும் சந்திக்ககூடாது...

அடுத்தபடியாக இருவர் லக்னமும் ஒண்ணுக்கொன்னு 6,8,12 ல் மறையாமல் இருக்கணும்.அப்பதான் ஒற்றுமை உண்டாகும்..அதே போல ராசியும் இருவர் ராசிக்கும் மறையக்கூடாது..!

அடுத்த படிதான் நட்சத்திரபொருத்தம் பார்க்கணும்..யோனி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்,ராசிபொருத்தம்,ஸ்ரீதீர்க்கம்,இவை மிக அவசியம்.இவை இருந்தால் கூட போதும்...திருமணம் செய்யலாம்...

யோனி பொருத்தம் என்பது இருவரது உடல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய ரகசியம்...ஒவ்வொரு பெண் நட்சத்திரத்துக்கும் நேர் குதிரை,யானை,குரங்கு,ஆடு என போட்டிருப்பார்கள்.அதில் ஏகப்பட்ட ரகசியம் இருக்கிறது...இதெல்லாம் அப்பெண்ணின் காம எண்ணங்கள்,உடல் உறவு கொள்ளும் முறையை யெல்லாம் விவரிக்கும் குறியீடு.

ரஜ்ஜு பொருத்தம் என்பது இருவரது ஆயுள் பற்றியது.அப்பெண்ணின் மாங்கல்யபலம் பற்றியது..எனவே இரண்டும் முக்கியம்.

ஸ்த்ரீதீர்க்கம் பெண்ணின் ஆயுள் பற்றியது...இதுவும் முக்கியம்.

இவையை பரீலித்துதான் திருமணம் செய்ய வேண்டும்.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தால் அதற்கு ஜோதிடரோ,ஜோதிடமோ பொறுப்பாகாது!

வசதி,படிப்பு இதெல்லாம் பார்த்து இந்த சம்பந்தம் போனா வராது..என ஜோதிடரை நெருக்கி,பொருத்தம் எழுதி வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம்...அவர்களுக்கு அப்போதைக்கு வேலை முடியும்.ஆனால் எதிர்காலத்தின் அந்த கணவன்,மனைவி வாழ்க்கை கேள்விக்குறிதான்!!




வியாழன், 26 ஜனவரி, 2012

2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்

2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்;


ஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்க ராசிபலன் மட்டும் நம்பி இருக்கவில்லை.ராசிக்கட்டத்தைதான் பார்க்க சொல்கிறது.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு 9 பொருத்தம் இருக்குன்னு சொன்னான்.இப்படி ஆகிடுச்சே ஜோசியம் பொய் என புலம்பாதீர்கள்...

ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..கொங்கு மண்டலத்தில் ஜோதிடம் மிக துல்லியமாக பார்க்கப்படும்.இங்கு வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பொஆர்ப்பதில்லை.பையன் ராசிக்கு பெண் ராசி பொருத்தம்,பெண் பிறந்த தமிழ் மாதம்,பையன் பிறந்த தமிழ் மாதம்..அதாவது சூரியன் நிற்கும் ராசியை கணக்கிட உதவும்...அதே போல சுக்கிரன் அமைப்பு இருவருக்கும் எப்படி...செவ்வாய் இருவருக்கும் எப்படி..இருவர் ஜாதகத்திலும் லக்னத்துக்கு 7,8 ஆம் இடங்கள் கிரகங்களுடன் இருக்கா,சுத்தமாக இருக்கா,பெண் ஜாதகத்தில் நாக தோசம்,செவ்வாய் தோசம் இருந்தால் பையன் ஜாதகத்திலும் அதே போல அமைப்பு வேண்டும்..என நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டே திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது!

பெண்ணுக்கு நடக்கும் திசா புத்தி 6,8,12 க்குடையவன் என்றால் சூரியன்,சந்திரன் ,செவ்வாய் திசை என்றால் எச்சரிக்கை தேவை.பையனுக்கு 6,8,12 க்குடையவன் திசா புத்தி நடந்தால் எச்சரிக்கை தேவை..

2012 ல் யாருக்கெல்லாம் கல்யாண யோகம் இருக்கு என்பது அவரவர் ஜாதகத்தில் 7,9,5 க்குடையவன் புத்தி,,குரு,சுக்கிரன்,செவ்வாய் புத்தி நடந்தால் சொல்லலாம்...இவருக்கு இந்த வருசம் கல்யாணம் உறுதின்னு..

சிம்மம்,துலாம்,தனுசு,மீனம் ராசியினருக்கு குருபலம் இருப்பதால் இந்த வருசம் கல்யாண யோகம் இருக்கு.அஷ்டம சனி நடக்கும் மீனம் ராசிக்காரங்க சுப செலவு பண்ணிட்டா அஷ்டம சனியும் பரிகாரமும் ஆச்சு.கல்யாணம் பண்ணின மாதிரியும் ஆச்சு..துலாம் ராசிக்காரங்களுக்கும் அப்படித்தான்..சரியா.

(திருமண பொருத்தம் சூட்சுமம் தொடரும்)


வியாழன், 22 டிசம்பர், 2011

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி



’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அவகிட்ட இருக்கு..?’’

‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’

இதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.

இதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.

வீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..?

தலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.

நல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா..? டெய்லி...லட்சுமி ஸ்தோத்திரம் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.

நல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.

கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா..? சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..? அதுவும் எத்தனை நாளைக்கு..?

ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.

என்ன சார் சொல்றிங்க..? 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..?

ஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் பையன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..?

நான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.

ஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்

ஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.

அதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.

இவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..

செவ்வாய், 22 நவம்பர், 2011

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம் பாகம் இரண்டு.

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.

சனி பெயர்ச்சி பலன்கள் படிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் ராகு அமர்ந்த பலன் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சனி அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் சந்திரன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

உங்கள் ஜதகத்தில் லக்கினத்தில் இருந்து எத்தனையாவது கட்டத்தில் செவ்வாய் இருக்கிறது என எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.அதன்படி 

லக்கினத்துக்கு ஐந்தில் செவ்வாய் இருந்தால்;

அரசு உத்யோகம் வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது.பத்துக்குடையவன் படுத்து தூங்கினா பார்த்து சொல்லணும்.அறிவாளி.அனைத்து துறை பத்தியும் அளந்து விடுவார்.புராண இதிகாசமும் சொல்வார்.நீதி என்பார் நேர்மை என்பார்.என்னா அரசியல் என விமர்சனம் செய்வார்.உள்ளூர் கவுன்சிலர் முதல் ஒபாமா வரை காய்ச்சி எடுப்பார்.விமர்சனம் அடுத்தவங்களுக்குதான்.இவரை ஊரே விமர்சனம் செய்யும்.அன்னியோன்ய நண்பர்கள் அறவே கிடையாது.வாழ்வில் வறுமை அதிகம்.மாமன் வகை பாதிக்கும்.குழந்தை பாக்யத்தில் பிரச்சினை.

லக்கினத்துக்கு ஆறில் செவ்வாய்;

ஆறில் செவ்வாய் அடிப்படையில் நல்லது.6 மிடம் எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பத்தி சொல்லுமிடம்.அங்கு போர் வீரன் நின்னா நல்லதுதானே.எதிரிகள் இவர்களை கண்டா அலற மாட்டார்களா.கெட்டவன் செவ்வாய் கெட்டு போறது நல்லதுதான்.அவர் லக்கினத்துக்கு சுபரா இருந்து கெட்டு போனா தொந்தரவுதான்.உள்ளூரில் நல்ல பெயர் கிடைக்கும்.ஊருக்கு உழைக்கும் நல்ல மனுசன்.சகோதரன் கெடுதல் செய்வார்.அரசியல் ஈடுபாடு அநேகமா கிட்டும்.ரோசக்காரனுக்கு கடனை கொடு.ரோசம் கெட்டவனுக்கு பொண்ணை கொடு என்பார்கள்.நாணயஸ்தன்.அதனால கடனை கொடுக்கலாம்..பொண்ணை கொடுக்கலாமா..?கொஞ்சம் கொழுந்தனாருடன் சிரிச்சு பேசுனாலும்,போச்சு....தலையில் கட்டுதான்,பொண்டாட்டிக்கு.உறவுக்குள்ள உரசல் வரும்.அதே சமயம் அன்ணார் க்கு இரண்டு தாரம்.இவர் மட்டும் எப்படி.அப்படித்தான்.கட்டிக்கிறது இல்ல வெச்சுக்குறது..

ஏழில் செவ்வாய்;

செவ்வாய் தோச ஜாதகம்.அம்மா ஆடினால் அய்யா அடங்குவார்.அய்யா ஆடுனால் அம்மா அடங்குவார்.நான் அரசியல் பேசலை.7ல் செவ்வாய் இருக்குற,புருசன் பொஞ்சாதி பத்தி சொல்ரேன்.கல்யாணம் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும்.அந்தளவு அலசி ஆராய்ஞ்சுடுவார்.நரை விழுந்த பின் அவசர அவசரமா கட்டிக்குவார்.ஒரு வழியா அம்மணி வந்து சேர்ந்தாலும் அய்யா பார்வை அடுத்தாத்து அம்புஜம் மேலதான்.சொத்துக்கள்,நிலம் சம்பந்தமான வில்லங்கங்கள் எப்போதும் தொடரும்.பஞ்சாயத்துக்கு ஒவ்வொரு ஆலமரமா ஓடுவார்.காம கதைகள் நிறைய இவரை சுத்தும்.எல்லாம் உண்மைதான்.

எட்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.பெண்ணாய் இருந்தால் மாங்கல்ய தோசம் + செவ்வாய் தோசம்.சொத்து சுகங்கள் நிறைய உண்டு.ஆனா பார்வை பதியும் இடம் தப்பாகிறது.இதனால் பற்றாக்குறை தொடர் கதை.வட்டிக்கு வாங்கி நெட்டி நிமிரும்.கடனுக்கு சொத்து சுகங்கள் இழக்கவும் நேரலாம்.சீக்கிரம் திருமனம் ஆவதில் சிக்கல்.யாரை பார்த்தாலும் பிடிக்கலை.மூக்கு கோணலா இருக்கு என காலம் போகும்.வயசு போச்சேடா வரதராஜா என பின்னால் புலம்புவார்கள்.எட்டாமிடம் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சு அடக்குற மாதிரி ஆணவமா இருக்கும்.நான் அடங்கி போறவன் இல்லை.அடக்கிட்டு போறவன் என்பார்கள்.இதனால் உறவினர்கள் பகையாகலாம்.மூலம் வியாதி தாக்கும் வாய்ப்புண்டு.

ஒன்பதில் செவ்வாய்;

மதிப்புமிக்க மனிதர்.பட்டம் பெறும் வாய்ப்பு உண்டு.எதை செய்தாலும் லாபம் இருக்கா என பார்ப்பவர்கள்.உத்யோகம் பார்த்தால் நல்ல தொழிலாளி.சொந்த தொழில் செய்தால் நல்ல முதலாளி.தெய்வ பக்தி என்பது தேய்பிறை.அப்பா கூட அடிக்கடி சொல்வார் இந்த பயலை பெத்தது தப்பு.அந்தளவு அப்பாவுக்கும் மகனுக்கும் பாசம்.பிள்ளைகளால் நன்மை இல்லை.நாடு கடந்து செல்லும் வாய்ப்பு வரும்.

பத்தில் செவ்வாய்;

வருமானம் வருவதற்கும்,சொத்து சேர்க்கைக்கும் மிக சிறப்பு.துதி பாடினால் ரொம்ப பிடிக்கும்.குற்றம் சொன்னால் அந்த உறவே வேணாம் என தலை முழுகி விடுவார்.ஆதாயம் கிடைக்குதுன்னா கடல்ல இறங்கி கப்பல் தள்ளனும்னு சொன்னாலும் வந்துருவார்.பதவி வகித்தாலும் பண்ணை வீடு தோப்பு துறவுன்னு வாங்கிப்பார்.மாமனார் வீட்டில் முடிந்தளவு ஆதாயம் பார்த்துவிடுவார்.ராணுவம்,காவல்துறை போன்ற பெரும் துறைகளில் பதவி வகிக்க தகுந்தவர்.

பதினொன்றில் செவ்வாய்;

உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களும் இவரிடம் ஐடியா கேட்பார்கள்.உள்ளூரில் இருந்தாலும் சொல்லுக்கு மதிப்பிருக்கும்.நாட்டாமை அல்லது பண்ணையார்.நிலம் சேர்க்கை என்பது நிச்சயம் உண்டு.திரண்ட சொத்துக்கு அதிபதி.கூட பொறந்தவங்க எண்ணிக்கை கூடுதல்.கஞ்சத்தனம் இல்லாம அஞ்சாறு இருக்கும்.குறைந்த கல்வின்னாலும் நிறைந்த ஞானம்.விவசாயம் செய்தால் லாபம் உண்டு.

பனிரெண்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.படுக்கை சுகம் பாதிக்கும்.சொத்து,சுகம் பாதிக்கும்.பெண்களாய் இருந்தால் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை.கல்யாணத்துக்கு பிறகு.மனைவி சுகம் அற்பம்.12 ஆம் இடம் கொஞ்சம் நீக்கு போக்கான இடம்.காமம் சம்பந்தம் அதிகம் உலவும் இடம்.படுக்கை ஸ்தானம் ஆச்சே.அதுல செவ்வாய் இருந்தா விரிவா சொல்ல விரும்பலை.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஜோதிட அனுபவங்கள்


ஜோதிட அனுபவங்கள் ;



காதல் திருமணம் செய்தவர்கள் ஜாதகங்கள் இரண்டு என்னிடம் வந்தன..ஆண் ராசி கடகம்..பெண் ராசி மகரம் என இருந்தது..பொதுவாக ஜோதிட விதிப்படி ஏழாம் பொருத்தமாக வரக்கூடிய ராசிகளை இணைக்கலாம் என இருந்தாலும்,கடகம்-மகரம்,சிம்மம்-கும்பம் ராசிகளை இணைப்பது தவறு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது...இந்த ஜாதகங்களை பார்த்த ஜோதிடர் திருமணம் செய்யலாம் தவறில்லை என சொல்லியிருக்கிறார்.



அவர் என்ன செய்வார்...இருவரும் காதலிக்கிறார்கள்,திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம் ஜாதகத்தை ஒரு முறை பார்த்து ,பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க சாமி என்றால் அவர் என்ன செய்வார் பாவம்...பொருத்தம் நல்லாருக்கு ஏழாம் பொருத்தம் என ஓகே சொல்லிவிட்டார்.

இன்று என்னிடம் வந்திருக்கிறார்கள்..இருவருக்கும் ஆறு எட்டுக்குடையவன் திசை...இருவர் ராசியும் பொருத்தம் இல்லை...பெண்ணுக்கு நாகதோசம் பையனுக்கு இல்லை..

ஜாதகத்தில் சுக்கிரன் அமைப்பு,ஏழாம் அதிபதி அமைப்பு,இரண்டாமிடம்....பெண்ணின் குண நலன் பார்த்தவுடன் புரிந்து விட்டது....மருத்துவமனையில்இருக்கிறார்களா..பிரிந்துவிட்டார்களா... என்றேன்...
‘

இரண்டுமேதான்...என்றார் பெண்ணின் தந்தை..

இருவருக்கும் எப்போதும் ஒத்துப்போகாது..ஈகோ பிரச்சனை என்றேன்...

ஆமா சார்..கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் நல்லாருந்தாங்க..இவங்க பிடிவாதமா இருந்ததை பார்த்துதான் கல்யாணம் செஞ்சி வெச்சோம்..அதே பிடிவாததோட இப்ப பிரிஞ்சும் இருக்காங்க...மதிப்பு மரியாதை ரெண்டு பேருமே எதிர்பார்க்குறாங்க.

.காதலில் விட்டு கொடுத்தவங்க..வாழக்கையில ஈகோ பார்க்குறாங்க...காதலியா இருக்கும்போது என் மகளை கொஞ்சியவன்..இன்று சுவரில் பலமாக முட்டி என் மகளை ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு போயிட்டான் ஊரெல்லாம் கடன்..குடிப்பழக்கம் வேற..!

என சொல்லி முடித்தார்.

எப்படி இப்படி மாற்றம் வருகிறது..?

கையை மூடிவைக்கும் வரைதான் ரகசியம் என்பதுபோல...

பூவை முகர்ந்ததும்...

சலித்து விட்டது வண்டுக்கு....

அவளுக்கு தெரியாமல் இருந்த அவன் குணம் அப்போதுதான் வெளிப்பட்டது....

அதிர்ந்தாள்..சண்டை...பிரிவு!

இந்த இரு ராசிகளில் ஜோடி சேர்ந்து, பிரிவு ஏற்பட்ட பலரையும் சந்தித்து இருக்கிறேன்....

-------------------------------------------------
 ஒரு ஜாதகத்தை பொருத்தம் பார்ப்பதற்காக கவனிக்கும் போது,இருவரின் குணமும் ஒத்துப்போகுமா,பெண் ராசி அதிபதி கிரகம் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்....

கடகம் நீர் ராசி....சனி முடவன் ராசி...இருட்டு ராசி ..ஒன்றுக்கொன்று பகை...
இரண்டையும் இணைக்க கூடாது....இந்த இரண்டும் ஒரு வீட்டில் சேர்ந்து சந்தோசமாக வாழ வாய்ப்பே இல்லை.

மனப்பொருத்தம் இருந்தால் இயற்கையாகவே ஜாதகத்திலும் பொருத்தம் ஓரளவு இருக்கிறது...

-----------------------------------------------------
கணவ்ன்,மனைவி இருவருக்கும் ஒரே ராசி நட்சத்திரம் அமைந்து ஒற்றுமையாக இருப்பவர்கள் குறைவுதான் என்றாலும் அதிலும் சில விநோதங்கள் நடப்பது உண்டு!

கணவ்ன்,மனைவி இருவருக்கும் மூலம் நட்சத்திரம்,தனுசு ராசி..காதல் திருமணம்...இருவரும் திருமணத்திற்கு பின்னரும் அன்பாக இருந்தார்கள்..சந்தோசம் அதிகமாகவே காணப்பட்டது..அடிக்கடி டூர் செல்வார்கள்...சாயந்திரம் ஆகிட்டா கைகோர்த்துக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள்...

இப்படி ஜாலியா இருந்தா எப்படி சம்பாதிக்கிறது..அவங்க பிரச்ச்னை அதுதான்.கணவன் வேலைக்கு போறதே இல்லை..சரி கல்யாண புதுசுல அப்படித்தான் இருக்கும் என நினைக்க வேண்டாம்..கல்யாணம் ஆகி 5 வருசம் ஆச்சு...

அந்த பொண்ணு வேலைக்கு போகுது...

ஞாயிறு, 15 மே, 2011

Astrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்



நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..

உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்.


இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு,மனவருத்தம்,விவாகரத்து ,குறை ஆயுள்,குழந்தை இன்மை,அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம்,கணபொருத்தம்,யோனிபொருத்தம்,ராசி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்;
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்,இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது..தேவகணம்,மனுஷ கணம்,ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம்,மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.

மகேந்திரபொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்;
எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்...அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது......
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்கு பூரம் .அடங்கித்தான் போக முடியும்...நாய் ,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா.இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்;
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.6 வது ராசி புத்திர நாசம்,7 வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி,இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது..அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.

ரஜ்ஜு பொருத்தம்;
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்..அஸ்தம் சந்திரன் நட்சத்திரம்.இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்..மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமானபொருத்தம்.27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு,பாத ரஜ்ஜு,தொடை ரஜ்ஜு,உதர ரஜ்ஜு,என பிரித்திருப்பார்கள்..கணவன்,மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம்,நஷ்டம்,விபத்து என சொல்கிறது..இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.

பொருத்தம் சுலபமாக பார்க்க உதவும் அட்டவணை..

பெண்களுக்கு பார்க்க ,பொருத்தம்;



 ஆண்களுக்கு திருமண பொருத்தம் நட்சத்திர அட்டவணை;



நட்சத்திர பொருத்தம் பார்த்தாலும் அவசியம் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது....இருவருக்கும் லக்னத்துக்கு 7ஆம் இடம் சந்திரனுக்கு 7ஆம் இடம் ,பார்க்கனும்..4ஆம் இடமாகிய ஒழுக்க ஸ்தானத்தை பார்க்கனும்.10 ஆம் இடமாகிய்ட தொழில் ஸ்தானம்,2 ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானம்...மாமனார் ,மாமியார் ஸ்தானம்,குடும்ப ஒற்றுமை,குணநலன் எப்படி என்ற விபரமெல்லாம் ஜாதகத்தில் தெளிவாக தெரியும்.இருவருக்கும் என்ன திசை நடக்கிறது..? அந்த திசை யோகமான திசையா நஷ்டம் தரும் திசையா என்பதை ஆராய்ந்து செய்தால்தான் திருமணம் இனிக்கும்..!!