பொருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா?

ஜோதிடம்;ராகு-கேது ஏற்படுத்தும் திருமண தடை;


திருமணம் ஒருவருக்கு தாமதம் ஆகிக்கொண்டிருப்பதில் பல காரணங்கள் இருக்கலாம்..அதில் ஒன்று நாகதோசம் .ராகு கேது லக்னத்துக்கு 1,2,5ல் இருக்கும்போது நாகதோசம் உண்டாகும் இதில் 5 ஆம் இடத்தில் இருக்கும் ராகு கேது புத்திர ஸ்தானத்தை பாதிக்கிறார்..இதனாலும் பெண் வீட்டார் பெண் கொடுக்க முன்வருவதில்லை..குழந்தை பாக்யம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம்..5ல் கேது இருந்தால் பிள்ளை இல்லை என சொல்லிவிட முடியாது குரு,சுக்கிரன் கெட்டுப்போகாமல் இருந்தால் 5 ஆம் இடத்துக்கு சுபர் பார்வை இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்யம் உண்டு..

7ல் கேது இருந்தால் திருமணம் நடக்காதா சார் என சிலர் கேட்கிறார்கள்...7ஆம் இடம் களத்திர ஸ்தானம்..மனைவியுடன் தாம்பத்யம்,இன்பம் பற்றி சொல்லும் இடம்..அங்கு கேதுவாகிய துறவி கிரகம் இருந்தால் திருமணம் தாமதம் என்பது சரிதான் ஆனால் நடக்காது என சொல்லமுடியாது

சுக்கிரன் 6,8,12 ல் மறைந்து,7 ஆம் அதிபதியும் 6,8,12ல் மறைந்து,ஸ்தான பலம் கெட்டுப்போயிருந்தால் மட்டுமே அப்படி சொல்ல முடியும்...சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் திருமணம் நடக்கும்..

7ல் கேது இருந்தால் திருமண விசயத்தில் குழப்பம்,சந்தேகம் அடைந்து தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்...இதனால் திருமணத்தின் மீது அதிக விருப்பம் இருக்காது..

7ல் ராகு இருந்தால் பலருக்கு அவசர திருமனம்,காதல் திருமணம் ,பிரச்சினையில் திருமணம் நடந்திருக்கிறது..திசா புத்தி மோசமாக இருந்தால் இப்படி நடந்துவிடும்...சந்திரன்,சுக்கிரன் பார்வையும் ஒரு காரணம்..7ல் இன்னொரு கிரகம் ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்றவாறு பலன் மாறும் ..7ல் இருக்கும் கேதுவுடன் குருவோ,சுக்கிரனோ சேர்ந்திருந்தால் நல்லபடியாக திருமணம் நடப்பது அரிது....

குருபார்வை இருந்தால் இனிமையாக திருமணம் நடைபெறும்!!

வியாழன், 23 பிப்ரவரி, 2012

ஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய்கின்றன..?


நவக்கிரக காரகத்துவம்;

நவக்கிரக காரகத்துவம் என்றால், நவக்கிரகங்கள் தரும் பலன் என்று பொருள். எந்த கிரக என்னென்ன வகையான பலன்களை அளிக்க முடியும். எந்தெந்த பலன்களுக்கு கராணம் ஆகிறார் என்பதாகும். 27 நட்சத்திரங்கள் 9 கிரகங்களின் சாரம் பெற்று பன்னிரு ராசிகளில் பவனி வரும்போது என்ன பலன் தருவார் என்பதை அறிய இந்த அத்தியாயம் மிகமிக அவசியம் ஆகும்.

சூரியன்

சூரியன் பிதுர்காரகர். அதாவது தந்தையை குறிப்பவர். பிதா, ஆத்மா, சிரசு, பற்கள், வலதுகண், சிலிர்த்த தலைமுடி, பித்ததேகம், வைத்தியம், ஒற்றைத்தலைவலி, ஜூரம், வியாதியாதியான பெண், சித்தம் பேதலித்த பெண்ணுடன் போகம், பெயர், புகழ், தைரியம், அரசசேவை, உத்யோகம், சைவானுஷ்டானம், தவம் புரிதல், சதாசிவன், பஞ்சலோகம், இரசவாதம், யானை, கோதுமை, மாணிக்கம், மிளகு யாத்திரை, பகல்பொழுது, ஒளி, மலை, காடு, கிராம சஞ்சாரம் இவைகளுக்கெல்லாம் சூரியனே காரகர் ஆவார்.

சந்திரன்

சந்திரன் மாத்ரு காரகர். அதாவது தாயைக் குறிப்பவர். மாதா, பராசக்தி, நல்விருந்து, ஆடை, குதிரை, தூக்கம், உடல் பருத்தும் இளைத்தும் சீறும் இருத்தல், நினைவிழத்தல், கூயரோகம், சீதளநோய்கள், இடது கண், புருவம், குடை, உத்யோகம், புகழ், முத்து, நிலையாக ஒரு இடத்தில் நில்லாமை, வெண்கலம், வெண்ணெய், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம்,கந்தபுஷ்பம், சாமரம், பலம், உப்பளவர், வண்ணார், குளியல் இவைகளுக்கெல்லாம் சந்திரனே காரகம் ஆவார்.

செவ்வாய்

செவ்வாய் சகோதரர் காரகர். பூமி, சுப்ரமணியர், பத்ரகாளி, கோபவான், குயவன், அக்கினி முகமாக செய்யும் தொழிலினர். யுத்தம், இரத்தம், சாயம், வீரதீரச் செயல்கள், செம்பு, பவழம், துவரை, அக்னி பயம், காயம், பகை, கடன், சோரம், வீர்யம், உற்சாகம், ஆடு, படைத்தலைமை, அதிகாரம், அரசியல் பதவி, விதவை ஸ்திரிபோகம், திடீர் மரணம் இவைகளுக்கெல்லாம் செவ்வாயே காரகர் ஆவார்.

புதன்

புதன் அம்மான் காரகர். மாமன், கல்விஞானம், விஷ்ணு, வியாபாரி, கணக்கன், தானாதிபதி, தூதுவன், தேர்ப்பாகன், வாக்கு வன்மை, கதை, கவிதை, கட்டுரை, சங்கீதம், ஜோதிடம், உபந்நியாசம், மேடைப்பேச்சு, உபாசனை, யுக்தி, புத்தி, சத்தியவசனம், வைஷ்வ நியமம், வியாபாரங்கள், கடித பரிவர்த்தனை, தற்காலத்தில் கெரியர், சிற்பத்தொழில், திருநங்கை, தேர், தாதன், தாதி, நாட்டிய வகைகள் முதலானவைகளுக்கும் அண்டரோகம், வாதநோய், விஷரோகம், பிறன் இல் விழைதல், (தாசிலோலன்) பிரபஞ்சமுணர்ந்தவன், நிலையானபேச்சு, புத்திகுறைவு, மரகதப்பச்சை ரத்தினம் ஆகியவைகளுக்கும் இளங்கன்று, இலை, பாசிப்பயறு, வெந்தயம் இவைகட்கும் புதனே காரகர் ஆவார்.

வியாழன் (எ) குரு

வியாழன் புத்திர காரகர். புத்திரர், பிரம்மா, ஞானம், அஷ்டமாசித்துகள், உபதேசம், புத்தி, யுக்தி, யோகப்பயிற்சி, ஆசானாயிருத்தல், உபதேசம், விவகார ஆலோசனை, அரச பதவி, குடும்பத்தலைவன், அரசு சேவை, செல்வம், செல்வாக்கு, ஒழுக்கம், அரச வெகுமதி, பட்டங்கள், விருதுகள், சுருதி, ஸ்மிருதி, ஆன்மீக நெறிகள், ஆன்மீக ஒழுக்கம், சாந்தம், தங்கம், வைடூரியம், புஷ்பராகம், சேமேதேகம், மலர் வகைகள், கனி வகைகள், இனிப்பு, கண்கள், சுற்று வர்க்கம், சித்தர் பரம்பரை, ரிஷி வர்க்கம், தேனி, கடலை, சீரகம் ஆகியவைகட்கு வியாழன் (எ) குருவே காரகர் ஆவார்.

சுக்ரன்

சுக்ரன் களத்திரகாரகர். மனைவி, வீடு, பட்டப்பெயர், பகல்கால மாதா, பல பெண்கள் தொடர்பு, தாசிலோலன், சங்கீதவாத்யம், பரதநாட்டியம், மற்றும் அதில் நாட்டம், வாசனை மலர்கள், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, மற்றும் பரிமள வகைகள், கட்டில் மெத்தை சப்பிரமம் முதலானவைகளுக்கும் வெண்சாமரம், அரசவர்க்க மங்கை, அழகி, போகபாக்யம், அழகு, இளமை, மைவிழி, செல்வவளம், வாகனம், மாலை, கொடி, பொம்மைகள், முதலானவைகளுக்கும் ரத்தினம், வைரம், வெள்ளி, கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம், அகடவிகடம்  பேசுதல், மிமிக்ரி செய்தல், ஆசை, பெண்தெய்வவழிபாடு, மக்களிடம் செல்வாக்கு மக்களுக்காக வாதிடல் மற்றும் போராடுதல் மக்கள் சேவைக்கு அறநிலை அமைத்தல் நட்பு, பசு, பால், தயிர், அன்னம், மொச்சை, புளி, ஈயம், தேவஇனப்பெண்கள், இலட்சுமி கடாட்சம், ஆகாய, சமுத்திர யாத்திரை ஆகியவைகளுக்கு சுக்ரனே காரகர் ஆவார்.

சனி 

சனி ஆயுள்காரகர். இரவுக்கால தந்தை சாத்தான், உபாயம், ஜீவன மார்க்கம், எருமை விருத்தி, இரும்பு, ஆளடிமை சேவக விருத்தி, வயல், விவசாயம், நீலரத்தினம், ஆகியவைகளுக்கும் மரவேலை, களவு, ஆத்ம பலமின்மை, சிறைமடல், இராஜதண்டனை, வீண்வார்த்தை, வெட்கமின்மை, துன்பம், ஏட்டிக்கு போட்டியாக வாயாடுதல், கடன், அபகர்மா, நீதிக்கு புறம்பானவை. நாத்திகம் பேசுதல், மதுவர்க்கம் அருந்துதல், போதை வஸ்துக்கள், நீச ஸதிரி, விதவை மாதர், ஊனமான ஸ்திரியும் இன்பம் அனுபவித்தல், அலி, அங்கஹீனம், சித்த சுவாதீனமின்மை, மேகநோய், பித்தநோய், எள், கடுகு, உளுந்து, நல்லெண்ணை ஆகியவைகட்கும் சனியே காரகர் ஆகிறார்.

ராகு

யோகம் ராகு தந்தை வழிபாட்டன் வம்சம், எதிர்பாராத புகழ், ஜாலவித்தை (மேஜிக்) செப்படி வித்தை (ஏமாற்றுதல்), களவு, பலவகை வேடத்தொழில், மறைமுக வருவாய் பெறுதல், சேவகத் தொழில், சொந்த ஊர்விட்டு அயலூர் வாசம், தன் குலத்துக்கு விரோதமாக நடத்தல், கண்கட்டி வித்தைகள், உடல்நலம் குன்றிய பெண்ணிடம் இன்பம் அனுபவித்தல், குஷ்டம், வீக்கம், அதிகம் பேசுதல், வாய்வு பிடிப்பு, பித்தம், வயிற்றுவலி, வெட்டுக்காயம், பிளவைக்கட்டிகள் போன்ற நோய்களுக்கும் வளர்ப்பு பிராணிகள், சிறைப்படல், லஞ்சம் வாங்குதல், மதம் மாறுதல் போன்றவைகளுக்கு ராகுவே காரகர்.

கேது

ஞானம், தாய்வழி பாட்டன் வம்சம், கட்டத்தொழில், கம்பளம், சுயஇன்பம், நீசத்தொழில், விபசாரம், பாபத்தொழில், அயல்தேச ஜீவனம், ரணம், விஷரோகம், குஷ்டம், குன்மம் முதலியவைகளுக்கும் தீயினால் கண்டம், தற்செருக்கு, சதா சுகமின்மை, சிறைப்படல் ஆகியவைகட்கு கேதுவே காரகன் கேது மோட்சகாரகன் என்று கூறுவது மரபு.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்


ஜோதிடம் சொல்லும் விதிகளில் முக்கியமானது திருமண பொருத்தம்.மனப்பொருத்தம் நன்றாக இருந்தால் மணப்பொருத்தமே பார்க்க வேண்டாம் என சொல்வார்கள்.ஆனால் இப்போதெல்லாம் என்ன படிப்பு,சம்பளம் எவ்வளவு..வீடு சொந்தமா இருக்கா என்பதே முக்கியமாக போய்விட்டதால் பையனும்,பொண்ணும் பழகவும்,புரிந்துகொள்ளவும் வாய்ப்பே இல்லை.நல்ல வசதியான பையன் கிடைக்கும் என்றால் சில பெண்கள் நீ யாரு என 10 வருசம் காதலிச்சு ஊர் சுத்தின காதலனையே கேட்கும் காலம் இது.

காதல்,கவிதை,சினிமா,சென்னை மெரீனா பீச் லவ் னு சுத்துறவங்க..எல்லாம் பக்குவமில்லாதவர்கள்..புத்திசாலி பொண்ணுங்க..நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..

ஜாதகப்படி பொருத்தம் பார்ப்படி..?

இருவரது ஜாதகத்திலும் செவ்வாய் தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் இருக்கான்னு பார்ப்பது முதல் படி.

இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன்,குரு,செவ்வாய்,7க்குடையவன் கெடாமல் இருக்கா என பார்ப்பது அடுத்தபடி...

கூட்டு கிரக சேர்க்கைகள் மோசமாக இருக்கான்னு பார்ப்பது அடுத்த படி.உதாரணம்..செவ்வாய்,+சூரியன்,சனி+சூரியன்,செவ்வாய்+சனி,சுக்கிரன்+ராகு,குரு+ராகு,சந்திரன்+சனி,இவைகள் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தபடீருவருக்கும் ஒரே திசை நடக்குதான்னு பார்க்கணும்.இருவருக்கும் ஒரே திசை நடந்தால் யோகமில்லை.கண்டம்தான்..போராட்டம்தான்..கொஞ்சநாள் கழிச்சும் திசை இருவருக்கும் சந்திக்ககூடாது...

அடுத்தபடியாக இருவர் லக்னமும் ஒண்ணுக்கொன்னு 6,8,12 ல் மறையாமல் இருக்கணும்.அப்பதான் ஒற்றுமை உண்டாகும்..அதே போல ராசியும் இருவர் ராசிக்கும் மறையக்கூடாது..!

அடுத்த படிதான் நட்சத்திரபொருத்தம் பார்க்கணும்..யோனி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்,ராசிபொருத்தம்,ஸ்ரீதீர்க்கம்,இவை மிக அவசியம்.இவை இருந்தால் கூட போதும்...திருமணம் செய்யலாம்...

யோனி பொருத்தம் என்பது இருவரது உடல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய ரகசியம்...ஒவ்வொரு பெண் நட்சத்திரத்துக்கும் நேர் குதிரை,யானை,குரங்கு,ஆடு என போட்டிருப்பார்கள்.அதில் ஏகப்பட்ட ரகசியம் இருக்கிறது...இதெல்லாம் அப்பெண்ணின் காம எண்ணங்கள்,உடல் உறவு கொள்ளும் முறையை யெல்லாம் விவரிக்கும் குறியீடு.

ரஜ்ஜு பொருத்தம் என்பது இருவரது ஆயுள் பற்றியது.அப்பெண்ணின் மாங்கல்யபலம் பற்றியது..எனவே இரண்டும் முக்கியம்.

ஸ்த்ரீதீர்க்கம் பெண்ணின் ஆயுள் பற்றியது...இதுவும் முக்கியம்.

இவையை பரீலித்துதான் திருமணம் செய்ய வேண்டும்.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தால் அதற்கு ஜோதிடரோ,ஜோதிடமோ பொறுப்பாகாது!

வசதி,படிப்பு இதெல்லாம் பார்த்து இந்த சம்பந்தம் போனா வராது..என ஜோதிடரை நெருக்கி,பொருத்தம் எழுதி வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம்...அவர்களுக்கு அப்போதைக்கு வேலை முடியும்.ஆனால் எதிர்காலத்தின் அந்த கணவன்,மனைவி வாழ்க்கை கேள்விக்குறிதான்!!




வியாழன், 25 ஆகஸ்ட், 2011

திருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology


திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி..?


ஜோதிடம் திருமண பொருத்தம் விதிகளை கடுமையாக அமைத்திருக்கிறது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது....எவ்வளவு இனிமையான வார்த்தைகள்.பாருங்கள்.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற கண்ணதாசன் வரிகள் இன்னும் திருமண பந்தத்திற்கு பெருமை கூட்டுகிறது.
 
திருமண பொருத்தம் பார்க்க சில விதிமுறைகளை ஜோதிடம் வகுத்துள்ளது.அதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

திருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;

ரோஹிணி,மிருக்சிரீடம்,மகம்,உத்திரம்,ஹஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திரட்டாதி,ரேவதி,திருவோணம்,சதயம்,அசுவினி,புனர்பூசம்,சித்திரை,அவிட்டம்ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்வது உத்தமம்.

அதுபோல துவிதியை,திருதியை,பஞ்சமி,சப்தமி,தசமி,ஏகாதசி,திரயோதசி,ஆகிய திதிகளில் திருமணம் செய்வது உத்தமமான பலன் தரும்.

ஒருவர் பிறந்த நட்சத்திரம்,பிறந்த மாதம்,பிறந்த லக்னத்தில் திருமணம் செய்யக்கூடாது.

தற்போது இரண்டு கல்யாணம் ஒரே மேடையில் செய்கிறார்கள்.அதில் ஒரு தம்பதி பிரிவினை உண்டாகின்றன..விருத்தி இல்லை.

குருபலம்;

ஒருவர் ராசிக்கு குரு 2,5,7,9 ல் வரும்போது குருபலம் உண்டாகிறது.அச்சமயத்தில் திருமணம் செய்வதுதான் நல்ல மகிழ்ச்சியான திருமன வாழ்க்கை அமையும்.நல்ல குடும்ப சம்பந்தமும் அமையும்.

7 ஆம் இடத்தில் சுக்கிரன் சனி இணைந்து காணப்பட்டால்,இரண்டு தாரம் அமையும்..சரியாக 31 வது வயதில் இரண்டாவது கல்யாணம் நடக்கும்.

7 ல் சுக்கிரன் அமர்ந்தால் மனைவியால் அவமானம் உண்டு.ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்யும் சூழலும் உண்டாகும்.

சனி 7 ல் இருந்தால் கறுப்பு நிறமுள்ள துணையே அமையும்...அதுவும் தாமதமாக.

குரு 7 ல் தனியாக நின்றால் திருமண தாமதத்திற்காக பல பரிகாரங்கள் செய்வர்.தாமதமான திருமணம்.திருமணத்திற்கு பின் அதிர்ஷ்டம் உண்டு.(ஆனால்)


நட்சத்திரப்பொருத்தம் மட்டும் போதுமா..?


பெண்ணின் நட்சத்திரம்,பையன் நட்சத்திரம் மட்டும் பார்த்து 9 பொருத்தம் வருது.கல்யாணத்தை முடிச்சிடலாம்னு நினைச்சா ஆப்பு கன்ஃபார்ம்.

வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து செய்யும் திருமணங்கள் பிரிவுக்ளையே உண்டாக்கும்.
]
இருவரது ஜாதகத்திலும் கிரகங்கள் அமைந்த விதத்தை பார்த்தே இதனை முடிவு செய்ய வேண்டும்...

பெண் ராசிக்கு பையன் ராசி அமைந்த விதம்.

இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன் அமைந்த விதம்.

ஒருத்தருக்கு சுக்கிரன் உச்சம்.பெண்ணுக்கு சுக்கிரன் நீசம்னா ...இருவருக்கும் உணவு முறைல இருந்து ,தாம்பத்தியம் சுகம் திருப்தி வரை ஒற்றுமை இருக்காது.ஏட்டிக்கு போட்டிதான்..சுக்கிரன் உச்சம் பெற்றவன் பிரியாணி வேணும்பான்.சுக்கிரன் நீச பெண் பழைய சோறே போதும்பா.

இவன் மெத்தையிலதான் படுப்பேன்னு சொல்வான்.அவ கட்டாந்தரையே போதும்..கிழிஞ்ச கோரை பாய் பத்தாதா என்பாள்.

இது எப்படி..?

சுக்கிரன் அமைந்த விதம்..இது போல ஒவ்வொரு கிரகத்துக்கும் குணாதிசயம் மாறும்.
செவ்வாய் உச்சம் பெற்ற பெண் ..பலசாலி,திரியம், உடையவள். என் பொண்ணு பத்து ஆம்பளைக்கு சமம் என்பாள் அம்மாக்காரி..காரணம் அந்த பெண் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம்.இவளுக்கு பயந்தாங்கொள்ளி கோழையாக இருக்கும்,பயத்தில் மவுனமாகவே இருக்கும் செவ்வாய் கெட்டுப்போன ஜாதகத்தை சேர்த்தால் என்னாகும்..?

இருவருக்கும் சந்தோசம் இல்லை..நான் மலை..நீ மடு கதைதான்.

செவ்வாய் தோசத்தை செவ்வாய் தோசம் உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும்..