நவக்கிரக காரகத்துவம்;
நவக்கிரக காரகத்துவம் என்றால், நவக்கிரகங்கள் தரும் பலன் என்று பொருள். எந்த கிரக என்னென்ன வகையான பலன்களை அளிக்க முடியும். எந்தெந்த பலன்களுக்கு கராணம் ஆகிறார் என்பதாகும். 27 நட்சத்திரங்கள் 9 கிரகங்களின் சாரம் பெற்று பன்னிரு ராசிகளில் பவனி வரும்போது என்ன பலன் தருவார் என்பதை அறிய இந்த அத்தியாயம் மிகமிக அவசியம் ஆகும்.
சூரியன்
சூரியன் பிதுர்காரகர். அதாவது தந்தையை குறிப்பவர். பிதா, ஆத்மா, சிரசு, பற்கள், வலதுகண், சிலிர்த்த தலைமுடி, பித்ததேகம், வைத்தியம், ஒற்றைத்தலைவலி, ஜூரம், வியாதியாதியான பெண், சித்தம் பேதலித்த பெண்ணுடன் போகம், பெயர், புகழ், தைரியம், அரசசேவை, உத்யோகம், சைவானுஷ்டானம், தவம் புரிதல், சதாசிவன், பஞ்சலோகம், இரசவாதம், யானை, கோதுமை, மாணிக்கம், மிளகு யாத்திரை, பகல்பொழுது, ஒளி, மலை, காடு, கிராம சஞ்சாரம் இவைகளுக்கெல்லாம் சூரியனே காரகர் ஆவார்.
சந்திரன்
சந்திரன் மாத்ரு காரகர். அதாவது தாயைக் குறிப்பவர். மாதா, பராசக்தி, நல்விருந்து, ஆடை, குதிரை, தூக்கம், உடல் பருத்தும் இளைத்தும் சீறும் இருத்தல், நினைவிழத்தல், கூயரோகம், சீதளநோய்கள், இடது கண், புருவம், குடை, உத்யோகம், புகழ், முத்து, நிலையாக ஒரு இடத்தில் நில்லாமை, வெண்கலம், வெண்ணெய், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம்,கந்தபுஷ்பம், சாமரம், பலம், உப்பளவர், வண்ணார், குளியல் இவைகளுக்கெல்லாம் சந்திரனே காரகம் ஆவார்.
செவ்வாய்
செவ்வாய் சகோதரர் காரகர். பூமி, சுப்ரமணியர், பத்ரகாளி, கோபவான், குயவன், அக்கினி முகமாக செய்யும் தொழிலினர். யுத்தம், இரத்தம், சாயம், வீரதீரச் செயல்கள், செம்பு, பவழம், துவரை, அக்னி பயம், காயம், பகை, கடன், சோரம், வீர்யம், உற்சாகம், ஆடு, படைத்தலைமை, அதிகாரம், அரசியல் பதவி, விதவை ஸ்திரிபோகம், திடீர் மரணம் இவைகளுக்கெல்லாம் செவ்வாயே காரகர் ஆவார்.
புதன்
புதன் அம்மான் காரகர். மாமன், கல்விஞானம், விஷ்ணு, வியாபாரி, கணக்கன், தானாதிபதி, தூதுவன், தேர்ப்பாகன், வாக்கு வன்மை, கதை, கவிதை, கட்டுரை, சங்கீதம், ஜோதிடம், உபந்நியாசம், மேடைப்பேச்சு, உபாசனை, யுக்தி, புத்தி, சத்தியவசனம், வைஷ்வ நியமம், வியாபாரங்கள், கடித பரிவர்த்தனை, தற்காலத்தில் கெரியர், சிற்பத்தொழில், திருநங்கை, தேர், தாதன், தாதி, நாட்டிய வகைகள் முதலானவைகளுக்கும் அண்டரோகம், வாதநோய், விஷரோகம், பிறன் இல் விழைதல், (தாசிலோலன்) பிரபஞ்சமுணர்ந்தவன், நிலையானபேச்சு, புத்திகுறைவு, மரகதப்பச்சை ரத்தினம் ஆகியவைகளுக்கும் இளங்கன்று, இலை, பாசிப்பயறு, வெந்தயம் இவைகட்கும் புதனே காரகர் ஆவார்.
வியாழன் (எ) குரு
வியாழன் புத்திர காரகர். புத்திரர், பிரம்மா, ஞானம், அஷ்டமாசித்துகள், உபதேசம், புத்தி, யுக்தி, யோகப்பயிற்சி, ஆசானாயிருத்தல், உபதேசம், விவகார ஆலோசனை, அரச பதவி, குடும்பத்தலைவன், அரசு சேவை, செல்வம், செல்வாக்கு, ஒழுக்கம், அரச வெகுமதி, பட்டங்கள், விருதுகள், சுருதி, ஸ்மிருதி, ஆன்மீக நெறிகள், ஆன்மீக ஒழுக்கம், சாந்தம், தங்கம், வைடூரியம், புஷ்பராகம், சேமேதேகம், மலர் வகைகள், கனி வகைகள், இனிப்பு, கண்கள், சுற்று வர்க்கம், சித்தர் பரம்பரை, ரிஷி வர்க்கம், தேனி, கடலை, சீரகம் ஆகியவைகட்கு வியாழன் (எ) குருவே காரகர் ஆவார்.
சுக்ரன்
சுக்ரன் களத்திரகாரகர். மனைவி, வீடு, பட்டப்பெயர், பகல்கால மாதா, பல பெண்கள் தொடர்பு, தாசிலோலன், சங்கீதவாத்யம், பரதநாட்டியம், மற்றும் அதில் நாட்டம், வாசனை மலர்கள், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, மற்றும் பரிமள வகைகள், கட்டில் மெத்தை சப்பிரமம் முதலானவைகளுக்கும் வெண்சாமரம், அரசவர்க்க மங்கை, அழகி, போகபாக்யம், அழகு, இளமை, மைவிழி, செல்வவளம், வாகனம், மாலை, கொடி, பொம்மைகள், முதலானவைகளுக்கும் ரத்தினம், வைரம், வெள்ளி, கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம், அகடவிகடம் பேசுதல், மிமிக்ரி செய்தல், ஆசை, பெண்தெய்வவழிபாடு, மக்களிடம் செல்வாக்கு மக்களுக்காக வாதிடல் மற்றும் போராடுதல் மக்கள் சேவைக்கு அறநிலை அமைத்தல் நட்பு, பசு, பால், தயிர், அன்னம், மொச்சை, புளி, ஈயம், தேவஇனப்பெண்கள், இலட்சுமி கடாட்சம், ஆகாய, சமுத்திர யாத்திரை ஆகியவைகளுக்கு சுக்ரனே காரகர் ஆவார்.
சனி
சனி ஆயுள்காரகர். இரவுக்கால தந்தை சாத்தான், உபாயம், ஜீவன மார்க்கம், எருமை விருத்தி, இரும்பு, ஆளடிமை சேவக விருத்தி, வயல், விவசாயம், நீலரத்தினம், ஆகியவைகளுக்கும் மரவேலை, களவு, ஆத்ம பலமின்மை, சிறைமடல், இராஜதண்டனை, வீண்வார்த்தை, வெட்கமின்மை, துன்பம், ஏட்டிக்கு போட்டியாக வாயாடுதல், கடன், அபகர்மா, நீதிக்கு புறம்பானவை. நாத்திகம் பேசுதல், மதுவர்க்கம் அருந்துதல், போதை வஸ்துக்கள், நீச ஸதிரி, விதவை மாதர், ஊனமான ஸ்திரியும் இன்பம் அனுபவித்தல், அலி, அங்கஹீனம், சித்த சுவாதீனமின்மை, மேகநோய், பித்தநோய், எள், கடுகு, உளுந்து, நல்லெண்ணை ஆகியவைகட்கும் சனியே காரகர் ஆகிறார்.
ராகு
யோகம் ராகு தந்தை வழிபாட்டன் வம்சம், எதிர்பாராத புகழ், ஜாலவித்தை (மேஜிக்) செப்படி வித்தை (ஏமாற்றுதல்), களவு, பலவகை வேடத்தொழில், மறைமுக வருவாய் பெறுதல், சேவகத் தொழில், சொந்த ஊர்விட்டு அயலூர் வாசம், தன் குலத்துக்கு விரோதமாக நடத்தல், கண்கட்டி வித்தைகள், உடல்நலம் குன்றிய பெண்ணிடம் இன்பம் அனுபவித்தல், குஷ்டம், வீக்கம், அதிகம் பேசுதல், வாய்வு பிடிப்பு, பித்தம், வயிற்றுவலி, வெட்டுக்காயம், பிளவைக்கட்டிகள் போன்ற நோய்களுக்கும் வளர்ப்பு பிராணிகள், சிறைப்படல், லஞ்சம் வாங்குதல், மதம் மாறுதல் போன்றவைகளுக்கு ராகுவே காரகர்.
கேது
ஞானம், தாய்வழி பாட்டன் வம்சம், கட்டத்தொழில், கம்பளம், சுயஇன்பம், நீசத்தொழில், விபசாரம், பாபத்தொழில், அயல்தேச ஜீவனம், ரணம், விஷரோகம், குஷ்டம், குன்மம் முதலியவைகளுக்கும் தீயினால் கண்டம், தற்செருக்கு, சதா சுகமின்மை, சிறைப்படல் ஆகியவைகட்கு கேதுவே காரகன் கேது மோட்சகாரகன் என்று கூறுவது மரபு.
1 கருத்து:
அடடே...நல்லாத்தான் இருக்கு
கருத்துரையிடுக