பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஜோதிடக்கலை.அன்று இடுப்பில் கோவணமும் கையில் தண்டமுமாக பித்தர்கள் மாதிரி சுற்றித் திரிந்தவர்களுக்கு ஜோதிடம் எப்படித் தான் வசமானதோ தெரியவில்லை.கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாய் இருக்கும் கிரகங்கள், பூமியில் உள்ள மனித இனத்தை எப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஞான ஒளியின் மூலமாக உணர்ந்து பாடல்களும் ,வெண்பாக்களுமாகத் தொகுத்ததில் 4,50,000 பாக்கள் என்பது உதிரி தகவல்.
- 1.சூரியன்
- 2.பிரம்மன்
- 3.வியாசர்
- 4.வசிஸ்டர்
- 5.அத்திரி
- 6.பராசுரர்
- 7.கசியபர்
- 8.நாரதர்
- 9.கர்க்கர்
- 10.மரிசீ
- 11.மனு
- 12.ஆங்கீரசர்
- 13.உலோமர்
- 14,பெளலசர்
- 15.சிஸ்னவர்
- 16.யவனர்
- 17.மரு
- 18.செளனகர்
ஆகிய 18 பேர் முக்கியமானவர்கள் என ஆதி ஜோதிட வரலாறு ஓலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.
வேத காலத்தில் பிறந்து இதிகாச காலத்தில் வளர்ந்து, இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது ஜோதிடம்.கி.பி.169 ல் யவனேஸ்வரர் என்பவரால் யவன ஜாதகம் எனும் நூல் இயற்றப்பட்டது.கி.பி.258 ல் இதே பெயரில்இன்னொரு நூல் வெளியிடப்பட்டது.பிற்காலத்தில் கி.பி.587 ல் வராகமிகிரர் எனும் சிறந்த ஜோதிட அறிஞர் தோன்றினார்.இவர் பஞ்ச சித்தந்திகா,பிருஹத் சம்ஹிதை,பிருஹத் ஜாதகம்,பிருஹத் யாத்திரை ,லஹு ஜாதகம் ,பிருஹத் விவாஹ படலம் ஆகிய நூல்களை எழுதினார்.
வராஹிமிரரது மைந்தர் பிருதுயசன் ஹோராட் பன்சாசிகா எனும் நூலை எழுதினார்.கி.பி.1172ல் கணித மேதை பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோமணி எனும் நூலை இயற்றினார்.இவர் 1118 ல் கரணகுதூகலம் எனும் நூலை இயற்றினார்.கல்யாண வர்மா என்பவர் சாராவளியை எழுதினார்.கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கணிதம் மற்றும் வானவியலை காட்டிலும் சோதிடத்தில் பல நூல்கள் தோன்றின.சாமுத்ரிகா லட்சணம்,கைரேகை,பிரஸ்னம்,எனும் தனிதனி பிரிவுகள் தோன்றின.
பலன்களை நிர்ணயிப்பதில் பல தீபிகை ,ஜாதகாதோசம்,ஜாதக சந்திரிகை,பிருஹத் பாரசரீயம் என்பன முக்கியத்துவம் பெற்றன.இது போன்ற நூல்கள் இன்றளவும் வட மொழியில் 74 நூல்கள் உள்ளன.
தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை மொத்தம் 66 உள்ளன,அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.இதை கீரனூர்நடராஜன் எழுதினார்.மங்களேஸ்வரியம்,வீ மகவி ஜோதிடம்,சாதக சூடாமணி,சினேந்திரமாலை,தாண்டவமா லை,சாதக சிந்தாமணி,சந்திர காவியம்,ஆனந்த களிப்பு ,புலிப்பாணி ஜோதிடம்,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.அனைத்து ஜோதிடர்களிடமும் இந்த நூல்கள் இருக்கும்.ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம்.அவற்றில் முக்கியமானவை ;புலிப்பாணி ஜோதிடம்.இது பாடல்கள் நிரம்பியது.பாடல்கள் மூலம் கிரக சேர்க்கை அதன் பலன்களை சொல்கிறது.புலிப்பாணி சித்தர் எழுதியது.தமிழின் மிக பழமையான ஜோதிட நூல்களில் முக்கியமானது.எண்ணற்ற ஜோதிட நூல்கள் இருப்பினும் அவற்றை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல சோதிடர்கள் எழுதி வருகிறார்கள்.அவற்றை படிப்பது சுலபமாக இருக்கும்.அவர்களில் ஆத்தூர் மாதேஸ்வரன்,சி.ஜி.ராஜன்,சிவதா சன் ரவி,முருகு ராஜேந்திரன்,புலியூர் பாலு,சுப.சுப்ரமணியன், முக்கியமானவர்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை.இந்த கிரகவியல் கலைக்கு என்றுமே தேய்பிறை கிடையாது.மகான்களால் உருவாக்கப்பட்டு மன்னர் வம்சத்தால் பாதுகாக்கப்பட்டு,இன்று மனித இனத்துக்கு மகத்தான வழிகாட்டியாக விளங்குகிறது.இந்தக் கலை வசப்பட வேண்டுமானால் அதற்கும் கிரகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் தொட்டே ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது.இன்று பிரதமரும் முதல்வரும் எப்படி தங்கள் அலுவல் பணியின் துவக்கத்தில் சந்திக்கும் நபராக உளவுத்துறை உயர் அதிகாரி இருக்கிறாரோ,அதைப்போல அன்று மன்னர்கள் ஆண்ட காலத்தில் ,அரசர் சந்திக்கும் முதல் நபர் அரண்மனை ஜோதிடரைத்தான்.அதுவும் பல தேர்வுகளுக்கு பின்னரே அந்த அரண்மனை ஜோதிடரை தேர்ந்தெடுத்திருப்பார் அரசர்.
ஜோதிடரும் மன்னரின் ஜாதகத்தை மனக்கண் முன் நிறுத்தி அன்றைய கோட்சார நிலையை கருத்தில் கொண்டு தினப்பலன் சொல்வார். தான் போர் தொடங்க வேண்டிய நட்சத்திரம் எது என ஆராய்ந்து,,தன் நட்சத்திரத்துக்கு 6 வது நட்சத்திரத்தில் ராவணன் மீது போர் தொடங்கினால் வெற்றி பெறலாம் என சூட்சுமம் உணர்ந்து செயல்பட்டான் ராமன்என ராமயணம் சொல்கிறது.
ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், வடநா ட்டு ஜோதிட நூல்களும் விளங்குகின்றன…மேலும் அவரவருக்கென்று ஜோதிட குருக்கள் இருக்கின்றனர்.அந்தந்த பகுதியில் வசிக்கும் ஜோதிடர்களிடம் பல வருடங்கள் ஜோதிடம் பயின்று அதன் பின்பே ஜோதிடர்களாக தொழில் தொடங்குகின்றனர்.ஆனால் இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும்,ஜோதிட கிரகம் என சொல்லப்படும் செவ்வாயும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்
-கட்டுரை.காமில் நான் எழுதிய கட்டுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக