சோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மே, 2018

ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்

10  ம் பாவகத்தில்  நிற்கும் கிரகங்கள் விபரம்
     
ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில் இந்த கிரகங்கள் இருந்தாலும் சொல்லப்பட்டுள்ள காரகத்துவ தொழில் அமையும் யார் வலிமையாக இருக்கிறார்களோ அது சம்பந்தமான தொழில் என யூகிக்கலாம் ..பத்தாம் அதிபதி 6,8,12ல் மறைந்திருந்தாலும் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் தொழில் அடிக்கடி சரிவையும் சிக்கலையும் சந்திக்கும்...பத்தில் இருக்கும் கிரகம் பலமாக அமைந்து பத்தாம் அதிபதி வலிமை குறைந்திருந்தால் வலிமையாக இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும்.


சூரியன்  - அரசியல்வாதிகள்  , மந்திரிகள் , நீதிபதிகள் , அரசு ஊழியர் .

சந்திரன்  - நர்ஸ் ,  பணிப் பெண் , உணவு சார்ந்த துறை , மதியுகம்

செவ்வாய் – படை வீரர்கள் , மருத்துவர் , நிலக்கிழார்  , வியாபாரி , இன்ஜினியர் , ஆயில்  காப்பிட்டூத் துறை

புதன் – ஆசிரியர்  , கணக்காளார்கள் , தணிக்கைத் துறை , ஏஜெண்டுகள் , முதல்வர்கள் , ஜோதிட நிபுணர்   ,

குரு – பணம் புழங்கும் , நீதிபதி , ஜீவல்லரி , அறநிலையம் , மதம் , அறிவு  சார்ந்த  தொழில் , காப்பகம் ,

சுக்கிரன் – இசை , கலைஞர்கள் , நறுமணப் பொருள்கள்  , துணி , ரத்தினம் , பெண்கள் சம்பந்தம் , ஒட்டல் ,  பத்திரிக்கை , மீடியா , வீட்டு உபயோக பொருள்

சனீஸ்வரர்  - ஆலைகள் , லேபர் காற்றை  வைத்து  செய்தல்  , கமிஷன் , தரகர் , ஏற்றுமதி , இறக்குமதி ,   எந்திரம் , பூமி ,தொடர்பு .




  10  ம் வீட்டு  அதிபதி       12  பாவங்களில் நிற்கும்  பலன் ;

1 . லக்னாதிபதி  10  ல் இருந்தால் தொழிலை இவர் தேடி செல்வார் . 10  ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்  தேடி வரும்  .

2 . 2 ம் அதிபதி 10  ல் அமைந்தால்  வாக்கால்  ஜீவனம் அமையும் .
10  ம் அதிபதி  2  ல் அமைந்தால் குடும்பத் தொழில் அமையும் .

3 . 3  ம் அதிபதி  10  ல் இருந்தால்  கஷ்டபட்டு தொழில்  அமையும் .
10  ம் அதிபதி 3  ல் இருந்தால் தன் சொந்த முயற்சியால்  தொழில் அமையும் .

4 .  10  ம் அதிபதி 4  ல் இருந்தால்  பல தொழில்கள் அமையும் . 10  ம் அதிபதி  4  லிருந்தாலும்   வாகனத் தொழில் அமையும் .

5 . 5 ம் அதிபதி 10  ல் இருந்தால் ஆன்மீகத் தொழில் மற்றும் பெரிய  பதவிகளைப் பெறலாம் .
10   ம் அதிபதி 5 ல் அமைந்தால் அரசு உத்தியோகம் அமையும் .

6 . 6 ம் அதிபதி 10 ல் இருந்தால் அடிமை  உத்தியோகம் , செய்ய முடியும் .10  ம் அதிபதி  6 ல் இருந்தால்  அடிமை தொழில் அமையும் .



7  . 10  ம்  அதிபதி   8  ல் இருந்தால்  எந்த தொழிலும்  நிலையாக அமையாது .  10  ம் அதிபதி  9  ல் இருந்தால் தந்தை தொழில் அமையும் .
8 . 10  ம் அதிபதி 10  ல் இருந்தால் உன்னதமான தொழில்   அமையும் .


9 . 10  ம் அதிபதி  12  ல் இருந்தால்  பெரும்பாலும் இந்த  அமைப்பு  உள்ளவர்கள்  . வெளி நாட்டில்  வேலை  பார்ப்பவர்  ( அ ) வீட்டை விட்டு  வெகு தொலைவு  சென்று  வேலை  பார்ப்பவரகள்  .

வியாழன், 23 ஜூலை, 2015

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

அதிகாலை 4.30 முதல் காலை 7.30 வரை சூரிய உதயத்தில் பிராண வாயு பூமியில் நிறைந்திருக்கும்.இக்காலங்களில் மூளைக்கு மனப்பாட பயிற்சி ,உடலுக்கு உடற்பயிற்சி அளித்தால் சக்ல உள் உறுப்புகளும் ஆக்சிஜனை குடித்து வலுவாகும்..இளம் சூரிய ஒளியையும் தோலின் துவாரங்களின் வழியே ஆக்சிஜனுடன் பரவுவது ஹைப்போ தலமசையும்,உயிர் ஹார்மோன் சுரக்கும் பினியல்,பிட்யூட்டரி,தைராய்டு அட்டிரனல் சுரப்பிகளையும் வலுப்படுத்தும்.அன்று முழுவதும் சோம்பலும் வராது.கண் ,குரல்,முகப்பொலிவு போன்ரவை உண்டாகி சர்வஜன வசியம் உண்டாகும்...

அதிகாலையில் எழுதல் தினசரி ஆறுமுறை தியானம் செய்தல் ,உடற்பயிற்சி,மெள்னவிரதம்,சிக்கனப்பழக்கம், போன்றவை மன உறுதியை வளர்க்கும்..சோம்பலை போக்கும்.தீய கிரக திசாபுத்தியை சமாளிக்கும் அறிவு மனோபலம் தரும்..ஏழரை சனி,அஷ்டம சனி,அஷ்டம குரு இவற்றுக்கு பயப்பட தேவையில்லை...

உயிரை வளர்க்கும் விதம் அறிந்தே உடலை வளர்த்தேனே என்று திருமூலர் கூறியது போலவே பக்தி உஷ்ணத்தால்தான் உயிர் சக்திகளை உடலில் பலப்படுத்த முடியும் உள்ளத்தில் உள்ளவன் கட-உள்.

செவ்வாய் கெட்டால் வாகனத்தால் பிரச்சினை,வீண் வம்பு,கோர்ட் கேஸ் பிரச்சினை உண்டாகிறது சனி கெட்டால் சோம்பல்,சோர்வு உண்டாகிறது சந்திரன் கெட்டால் நிம்மதி கெடுகிறது சூரியன் ஆரோக்கியம் கெடுகிறது புதன் கெட்டால் அறிவு கெடுகிறது...குரு கெட்டால் செல்வாக்கு கெடுகிறது மரியாதை கெடுகிறது..சுக்கிரன் கெட்டால் சுகம் கெடுகிறது 

..இவ்வாறு நவகிரகங்கள் தரும் தொல்லைகளை சமாளிக்க மன உறுதி உடல் உறுதி வசியம்..அதற்கு அதிகாலை எழுதல்,தியானம் ,யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....புலம்பிக்கொண்டே இருப்பதும்,கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதும் மன உறுதியை குலைத்து பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க செய்யும்...இதனால் உற்சாகம் கெட்டு வசிய சக்தி நீங்கி விடுகிறது...

கவலை,புலம்பலைவிட்டு தள்ளிவிட்டு உள்மனம்,உளுறுப்புகள்,மன ஆர்ரலை பெருக்கிக்கொள்ளுங்கள்..நவகிரகங்களை சமாளித்து வெற்றி பெறுவோம்...

செவ்வாய், 6 மார்ச், 2012

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

கீரனூர் நடராசன் என்பவர் கி.பி.1725 ஆம் வருடத்துக்கு முன் வடமொழியில் இயற்றியிருந்தஹோராசாரம்,சாராவளி,பாராசாரியம்,சந்தானதீபம்,பிரகத்ஜாதகம்,சருவார்த்த சிந்தாமணி,மணிகண்ட கேரளம் சம்புநாதம் முதலிய பல சோதிட நூல்களின் முக்கியமான கருத்துக்களை தொகுத்து சாதகாலங்காரம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.இதனை படிக்க மிக கஷ்டமாக இருக்கும்.கடினமான செய்யுள் வெண்பாக்களால் இயற்ற்ப்பட்டிருந்தது..அந்த நூலுக்கு 1900 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோவை அனுப்பர்பாளையம் முருகைய்யா ஜோதிடர் மூலமும்,விரிவுரையும் எழுதினார்.அதன்பிறகு பலரும் பல விரிவுறை விளக்கம் எழுதி இந்த நூலை வெளியிட்டு வருகின்றனர்..

ஆனால் சோதிடர்களுக்கு இது அடிப்படை பாட நூலாகும்..இதை கற்காமல் மனனம் செய்யாமல் ஜோதிடத்தில் அடுத்தக் கட்டத்துக்கு போக இயலாது...புலிப்பாணி ஜோதிடம் பாடல்கள் எப்படி ஜோதிடர்களின் அடிப்படை பாடமோ அது போல சாதகாலங்காரம் முக்கிய பாட நூல்.

விஷ்ணு யோகம் பற்றி ஒரு பாடல்;

உள்ள பத்தாமதிபதியு மொன்பானங்கிசந்தானேறி
மெள்ளயிரண்டாமிடத்திலுற விரும்பியான்பான்றனஞ்சேறில்
கள்ள விஷ்ணுயோக பலன் கதித்தவரசரடி தொழவே
கொள்ளும் ல்க்‌ஷம்பொன்றேடிக் குலாவிநிருப்பனீரேழ் மேல்.

விளக்கம்;

பத்தாமிடத்தோன் ஒன்பதாமிடத்தோனது அங்கிசத் தேறி இரண்டாமிடத்திலிருக்க ஒன்பதாமிடத்தோன் இரண்டாம் ஸ்தானத்தை சேர்ந்தால் விஸ்ணு யோகமாகும்..பலன் மேலான அரசர்களெல்லாம் தன்னடி தொழ பதினாங்கு வயதுக்கு மேல் லட்சம் பொன் சம்பாதித்திருப்பான்...(பாடல் 357)

-தொடரும்)

சனி, 18 பிப்ரவரி, 2012

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்


ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்;நல்ல நேரம் சதீஷ்குமார்

1. துருதுரா யோகம் : சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன், ராகு கேதுவைத் தவிர இதர கிரஹங்கள் இருப்பின், இந்த யோகம் ஏற்படும். இதனுடைய பலன்கள், சம்பத்து, வாகனங்கள், நல்ல குணங்கள்.

2. அநபா யோகம் : சந்திரனுக்கு 12வத ராசியில் ராகு கேதுக்களைத் தவிர கிரகங்கள் இருப்பது, இதன் பலன்கள்; நல்ல ஆரோக்கியமும் பேரும் புகழும் உண்டாகும்.

3. சுநபா யோகம் : சந்திரனுக்கு 2ல் சூரியன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது. உழைத்து சம்பாதித்தல், நல்ல புத்திமான், ராஜாவுக்குச் சமானம்.

4. கேமத்துருமம் : சந்திரனுக்கு பின்னும் முன்னும் கிரகங்கள் இல்லாமை. இது ஒரு பொல்லாத யோகம். தரித்திரமும் பீடையும் உண்டாகும்.
ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏதேனும் ஒரு கிரஹம் இருந்தால் இந்த தோஷ பரிஹாரமாகும்.

5. கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம் : சந்திரனுக்கு ஏதேனும் ஒரு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) பிரஹஸ்பதி இருப்பது. இது ஒரு நல்ல யோகம். நல்ல பெயரும் புகழும் உண்டு. தீர்க்க ஆயுள், பணவருவாய் பகைவர்களை வெல்லும் திறமை.

6. சந்திரமங்கள யோகம் : சந்திரன், செவ்வாய் சேர்க்கை. இதன் பலன்கள் நிலச்சொத்து, பேரும் புகழும். ஆயினும் சில சமயத்தில் மனக்கோளாறு அல்லது சஞ்சலம் உண்டாகலாம்.

7. அதியோகம் : சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் குரு, புதன், சுக்கிரன் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ நிற்பது. இது ஒரு பலமான யோகம். இந்த யோகம் உடையவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய உத்தியோகங்களிலே இருப்பார்கள். போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவோர். நல்ல பணவசதி உண்டு. பேரும் புகழும் உண்டு. இதேபோல் லக்னத்திற்கு 6,7,8ல் சுபர்கள் இருந்தால் அது லக்ன அதியோகம் எனப்படும். அதுவும் ஒரு நல்ல யோகமே.

8. சகடயோகம் : சந்திரனுக்கு குரு 8 அல்லது 12ல் இருந்தால் சகடம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சக்கரம் போல் நிலையில்லாத வாழக்கையே பெறுவர். சதா கஷ்டங்கள் ஏற்படும்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

ஜோதிடம் வளர்ந்த வரலாறு



பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஜோதிடக்கலை.அன்று இடுப்பில் கோவணமும் கையில் தண்டமுமாக பித்தர்கள் மாதிரி சுற்றித் திரிந்தவர்களுக்கு ஜோதிடம் எப்படித் தான் வசமானதோ தெரியவில்லை.கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாய் இருக்கும் கிரகங்கள், பூமியில் உள்ள மனித இனத்தை எப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஞான ஒளியின் மூலமாக உணர்ந்து பாடல்களும் ,வெண்பாக்களுமாகத் தொகுத்ததில் 4,50,000 பாக்கள் என்பது உதிரி தகவல்.
  • 1.சூரியன்
  • 2.பிரம்மன்
  • 3.வியாசர்
  • 4.வசிஸ்டர்
  • 5.அத்திரி
  • 6.பராசுரர்
  • 7.கசியபர்
  • 8.நாரதர்
  • 9.கர்க்கர்
  • 10.மரிசீ
  • 11.மனு
  • 12.ஆங்கீரசர்
  • 13.உலோமர்
  • 14,பெளலசர்
  • 15.சிஸ்னவர்
  • 16.யவனர்
  • 17.மரு
  • 18.செளனகர்
ஆகிய 18 பேர் முக்கியமானவர்கள் என ஆதி ஜோதிட வரலாறு ஓலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.
வேத காலத்தில் பிறந்து இதிகாச காலத்தில் வளர்ந்து, இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது ஜோதிடம்.கி.பி.169 ல் யவனேஸ்வரர் என்பவரால் யவன ஜாதகம் எனும் நூல் இயற்றப்பட்டது.கி.பி.258 ல் இதே பெயரில்இன்னொரு நூல் வெளியிடப்பட்டது.பிற்காலத்தில் கி.பி.587 ல் வராகமிகிரர் எனும் சிறந்த ஜோதிட அறிஞர் தோன்றினார்.இவர் பஞ்ச சித்தந்திகா,பிருஹத் சம்ஹிதை,பிருஹத் ஜாதகம்,பிருஹத் யாத்திரை ,லஹு ஜாதகம் ,பிருஹத் விவாஹ படலம் ஆகிய நூல்களை எழுதினார்.
வராஹிமிரரது மைந்தர் பிருதுயசன் ஹோராட் பன்சாசிகா எனும் நூலை எழுதினார்.கி.பி.1172ல் கணித மேதை பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோமணி எனும் நூலை இயற்றினார்.இவர் 1118 ல் கரணகுதூகலம் எனும் நூலை இயற்றினார்.கல்யாண வர்மா என்பவர் சாராவளியை எழுதினார்.கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கணிதம் மற்றும் வானவியலை காட்டிலும் சோதிடத்தில் பல நூல்கள் தோன்றின.சாமுத்ரிகா லட்சணம்,கைரேகை,பிரஸ்னம்,எனும் தனிதனி பிரிவுகள் தோன்றின.
பலன்களை நிர்ணயிப்பதில் பல தீபிகை ,ஜாதகாதோசம்,ஜாதக சந்திரிகை,பிருஹத் பாரசரீயம் என்பன முக்கியத்துவம் பெற்றன.இது போன்ற நூல்கள் இன்றளவும் வட மொழியில் 74 நூல்கள் உள்ளன.
தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை மொத்தம் 66 உள்ளன,அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.இதை கீரனூர்நடராஜன் எழுதினார்.மங்களேஸ்வரியம்,வீமகவி ஜோதிடம்,சாதக சூடாமணி,சினேந்திரமாலை,தாண்டவமாலை,சாதக சிந்தாமணி,சந்திர காவியம்,ஆனந்த களிப்பு ,புலிப்பாணி ஜோதிடம்,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.அனைத்து ஜோதிடர்களிடமும் இந்த நூல்கள் இருக்கும்.ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம்.அவற்றில் முக்கியமானவை ;புலிப்பாணி ஜோதிடம்.இது பாடல்கள் நிரம்பியது.பாடல்கள் மூலம் கிரக சேர்க்கை அதன் பலன்களை சொல்கிறது.புலிப்பாணி சித்தர் எழுதியது.தமிழின் மிக பழமையான ஜோதிட நூல்களில் முக்கியமானது.எண்ணற்ற ஜோதிட நூல்கள் இருப்பினும் அவற்றை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல சோதிடர்கள் எழுதி வருகிறார்கள்.அவற்றை படிப்பது சுலபமாக இருக்கும்.அவர்களில் ஆத்தூர் மாதேஸ்வரன்,சி.ஜி.ராஜன்,சிவதாசன் ரவி,முருகு ராஜேந்திரன்,புலியூர் பாலு,சுப.சுப்ரமணியன், முக்கியமானவர்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை.இந்த கிரகவியல் கலைக்கு என்றுமே தேய்பிறை கிடையாது.மகான்களால் உருவாக்கப்பட்டு மன்னர் வம்சத்தால் பாதுகாக்கப்பட்டு,இன்று மனித இனத்துக்கு மகத்தான வழிகாட்டியாக விளங்குகிறது.இந்தக் கலை வசப்பட வேண்டுமானால் அதற்கும் கிரகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் தொட்டே ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது.இன்று பிரதமரும் முதல்வரும் எப்படி தங்கள் அலுவல் பணியின் துவக்கத்தில் சந்திக்கும் நபராக உளவுத்துறை உயர் அதிகாரி இருக்கிறாரோ,அதைப்போல அன்று மன்னர்கள் ஆண்ட காலத்தில் ,அரசர் சந்திக்கும் முதல் நபர் அரண்மனை ஜோதிடரைத்தான்.அதுவும் பல தேர்வுகளுக்கு பின்னரே அந்த அரண்மனை ஜோதிடரை தேர்ந்தெடுத்திருப்பார் அரசர்.
ஜோதிடரும் மன்னரின் ஜாதகத்தை மனக்கண் முன் நிறுத்தி அன்றைய கோட்சார நிலையை கருத்தில் கொண்டு தினப்பலன் சொல்வார். தான் போர் தொடங்க வேண்டிய நட்சத்திரம் எது என ஆராய்ந்து,,தன் நட்சத்திரத்துக்கு 6 வது நட்சத்திரத்தில் ராவணன் மீது போர் தொடங்கினால் வெற்றி பெறலாம் என சூட்சுமம் உணர்ந்து செயல்பட்டான் ராமன்என ராமயணம் சொல்கிறது.
ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், வடநாட்டு ஜோதிட நூல்களும் விளங்குகின்றன…மேலும் அவரவருக்கென்று ஜோதிட குருக்கள் இருக்கின்றனர்.அந்தந்த பகுதியில் வசிக்கும் ஜோதிடர்களிடம் பல வருடங்கள் ஜோதிடம் பயின்று அதன் பின்பே ஜோதிடர்களாக தொழில் தொடங்குகின்றனர்.ஆனால் இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும்,ஜோதிட கிரகம் என சொல்லப்படும் செவ்வாயும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்

-கட்டுரை.காமில் நான் எழுதிய கட்டுரை

திங்கள், 19 செப்டம்பர், 2011

நாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி?

நாடி சோதிட ம் பல வகை உண்டு.இதில் பிருஹத் நாடி சோதிடம் மூலம் பலன்கள் எப்படி காண்கிறார்கள் என்பதை காண்போம்.

ராசி கட்டம் பார்த்து சாதாரண ஜோதிட முறை பலன் காண்பத்ற்கும்,நாடி சோதிடம் மூலம் பலன் காண்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனினும் சில பலன்கள் அதில் நச்ச் என இருக்கும்..கோட்சாரம்,திசா புத்தி,சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி என பிரித்து பலன் சொல்வதில்லை..(அதுல தான் நம்மாளுக குழப்பிடுறாங்கன்னோ என்னவோ)

*ஆண்கள் ஜாதகத்தில் குரு எங்கு உள்ளாரோ அதுவே லக்னமாக வைத்து பலன் காண வேண்டும்.சனி கர்மாவை பத்தி சொல்லும் கிரகமாக பார்க்க வேண்டும்..


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்


ரஜினியின் ராசியான மகர ராசி நேயர்களே..நீங்கள் கடும் உழைப்பாளிகள் மட்டுமல்ல..அன்புக்காக ஏங்கும் மென்மையான மனம் கொண்டவர்கள்.யாரையும் அவ்வளவு எளிதில் பகைத்து கொள்ள மாட்டீர்கள்...பகைத்தாலும் மனதிற்குள் உங்கள் ஆதங்கத்தை பூட்டிக்கொண்டு வெளியில் சிரித்து பேசி சமாளிப்பீர்கள்.அடிச்சா அதிரடி..இல்லைன்னா எங்க இருக்கோம்னே தெரியாத ஒரு அமைதி..காரணம் மகரம் ஒரு ஆழ்ந்த ராசி.சனிக்குண்டான ராசி என்பதால் சனியின் காரகத்துவமான கடும் முயற்சி,கடும் உழைப்பு,அதிக அலைச்சல் எப்போதும் உங்களுடன் இருக்கும்.மோசமான ஆட்களால் அடிக்கடி தொந்தரவு,சங்கடம் நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

புதன், 14 செப்டம்பர், 2011

திருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க!

திருமண பொருத்தம் பற்றி எழுத நிறைய இருக்கிறது.கற்பை இழக்கும் பெண்கள் ஜாதகம் என்ற பதிவில் ஐடியா மணி கற்புன்னா என்ன சார்னு கேட்டார்.கற்புன்னா கற்புக்கரசி குஷ்பூ சொன்ன மாதிரி காண்டம் யூஸ் பண்ணினா கற்பு.காண்டம் யூஸ் பண்ணாட்டா கற்பு போயிடும் அப்படீன்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா கற்புன்னா ஒரு பெண் ஒரு ஆடவனை மனதால் ஆசைப்பட்டு களங்கப்பட்டாலே கற்பு போச்சுன்னு நம் இந்து மத சாஸ்திரம் சொல்கிறது.ஆற்றில் நீர் எடுக்கும்போது சூரியனை பார்த்து மனம் பறிகொடுத்த மனைவியை விலக்கி வைத்த முனிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.அந்தளவு அந்தாளு சைக்கோவான்னு கேட்க கூடாது.கற்பு ஸ்தானம் நு லக்கினத்தில் இருந்து நான்காம் இடத்தை ஜோதிடம் சொல்கிறது.இதை பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன்.
திருமணபொருத்தம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்;

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012


சனி பெயர்ச்சி -ரஜினி,ஜெயலலிதா,கருணாநிதிக்கு பாதிப்பா?-ஜோதிடம்   
சனி பெயர்ச்சி /கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்,குருபெயர்ச்சி/ராசிபலன்


சனி பெயர்ச்சிஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது.சனி கடகத்திற்கு வரும்போது கடகம் சந்திரன் வீட்டிற்கு வரும்போது கடகம் சந்திரன் வீடு ,நீர் கிரகம் என்பதால் சுனாமி உண்டானது.கடல் கொந்தளித்தது.பேரழிவு ஏற்படுத்தும் 26 ஆம் நாளில் இது நடந்தது.
சனி சிம்ம வீடான சூரியன் வீட்டிற்கு வரும்போது சூரியன் அரசு கிரகம்,நெருப்பு கிரகம் என்பதால் முக்கிய மந்திரிகள் மரணம்,ரயில் விபத்து,விமான விபத்து,அரசியல் மாற்றம் போன்றவை உண்டானது.


திங்கள், 5 செப்டம்பர், 2011

கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி


ஜோதிடம்;கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக
எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் அணியலாம். வெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள். 

பிறந்ததேதி 4, 13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22, 31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.
ஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.
குடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது. விலை மலிவு, தெரிந்தவர்களிடம் வாங்கினேன் என கோமேதகம் கல்லை வாங்கி நேரம், காலம் பார்க்காமல், கைராசி பார்க்காமல் வாங்கி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ளாதீர்கள். சிறந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி வாங்கி, குறிப்பிட்ட நாட்களில் அணிந்தால் நல்ல பலனை தரும். பணம் தங்கும் கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
கோ மேதகம் என்பது பசுவின் சிறுநீர் போல, பாம்பின் விஷத்தை போன்ற நிறத்தில் இருக்கும். ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் உடையவர்கள், 7ம் இடத்தில் ராகு அமையப்பெற்றவர்களும் கோமேதகம் அணிந்து தோஷம் நிவர்த்தி பெறலாம்.
எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுகிறான், வாக்குவாதம் செய்து கொண்டே இருக்கிறான். மிகவும் துறுதுறுவென இருக்கிறான் என மகனை பற்றி குறை சொல்பவர்கள் இதை அணிய செய்து நல்ல மாற்றங்களை காணலாம். எங்க பூர்வீக வீடு விற்பனைக்காக ஒருவருடமாக அலைந்து கொண்டே இருக்கிறேன். மிகவும் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது? என ஒரு நண்பர் கேட்டார். அவருக்கு கோமேதகம் அணிய வைத்தேன். 48 தினங்களில் அவர் எதிர்பார்த்த விலையை விட அதிக விலைக்கே அந்த வீடு விற்பனையானது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பங்குசந்தை ஜோதிடம் share market astrology


பெரும் லாபம் சம்பாதிக்க ஜோதிடம் வழி காட்டுமா..?


பங்கு சந்தையில் எல்லோரும் பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகி விடுவதில்லை.100 க்கு 90 சதவீதம் பேர் நஷ்டப்பட்டு பலர் அந்த பக்கமே தலை வைத்து படுக்காமல் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விடுவதும் உண்டு.சிலர் ஜஸ்ட் லைக் தட்டாக சில மணி நேரங்களில் பல ஆயிரங்கள் சம்பாதித்து விடுவதும் உண்டு.பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்.அதாவது கணிப்பு முறை இருக்கும்.

ஷேர் மார்க்கெட் நிலவரம் பத்தி எனக்கு அக்குவேறு ஆணி வேறயா தெரியும்.எது படுக்கும் எது எந்திரிக்கும்னு ஃபிங்கர் டிப்ஸ் ல வெச்சிருக்கேன் என கொக்கரித்தவர்கள் கூட பல சமயம் மண்ணை கவ்வி விடுவதுண்டு.புதுசா கத்துக்க ஆரம்பிச்சு மள மளன்னு சம்பாதிச்ச ஆளுங்களும் உண்டு.

பங்கு சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டம்,தினசரி வர்த்தகம், என சில வகைகள் உண்டு.ஜாதகப்படி பங்கு வர்த்தக ஆலோசகர் ஆக வேண்டுமெனில் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் குரு,புதன் சம்பந்தம் பெற வேண்டும்.ஆலோசனை என்றாலும் தனம் என்றாலும் குருதான் அதிபதி குரு கெட்டவர் கூறு கெட்டவர் என்பதால் குரு கெடாமல் இருப்பவர்தான் சிறந்த ஆலோசக்லராக இருக்க முடியும்.
ஷேர் மார்க்கெட் என்பது ஜோதிடத்தில் புதையல்,திடீர் பண வரவு,போன்ற கேட்டகிரியில் வருகிறது.

எட்டாமிடம் திடீர் பண வரவை சொல்லும் இடம்.இந்த இடத்தை குரு,புதன் போன்ற சுபர் பார்த்தாலும் இருந்தாலும் ,6க்குடையவன் இரண்டில் இருந்தாலும்,ஜாதகத்தில் குரு திசை ,புதன் திசை ,ராகு திசைநடந்தாலும் பங்கு சந்தையில் செல்வத்தை அள்ளுவார்கள்.மற்றவர் எல்லாம் பணத்தை இவர்களிடத்தில் விடுவதற்கு வந்தவர்கள்.

நல்ல பேச்சு திறமை,நன்கு கவனிக்கும் தன்மை,நுண்ணறிவு,சமயோசித புத்தி,சரியான முடிவு சரியான நேரத்தில் எடுத்தல் இவையெல்லாம் பங்கு வர்த்தகத்தில் மிக முக்கியம்.இவை எல்லாவற்றுக்கும் குருவே அதிபதி.காரகன்.பங்கு வர்த்தகம் மூலம்,கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது மட்டுமில்லாமல் இந்தியாவின் முதுகெலும்பாய் தொழிலை வளர்த்த அம்பானிக்கும் குரு திசையில்தான் அவ்வளவு செல்வம் சேர்ந்தது.