செவ்வாய், 6 மார்ச், 2012

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

கீரனூர் நடராசன் என்பவர் கி.பி.1725 ஆம் வருடத்துக்கு முன் வடமொழியில் இயற்றியிருந்தஹோராசாரம்,சாராவளி,பாராசாரியம்,சந்தானதீபம்,பிரகத்ஜாதகம்,சருவார்த்த சிந்தாமணி,மணிகண்ட கேரளம் சம்புநாதம் முதலிய பல சோதிட நூல்களின் முக்கியமான கருத்துக்களை தொகுத்து சாதகாலங்காரம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.இதனை படிக்க மிக கஷ்டமாக இருக்கும்.கடினமான செய்யுள் வெண்பாக்களால் இயற்ற்ப்பட்டிருந்தது..அந்த நூலுக்கு 1900 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோவை அனுப்பர்பாளையம் முருகைய்யா ஜோதிடர் மூலமும்,விரிவுரையும் எழுதினார்.அதன்பிறகு பலரும் பல விரிவுறை விளக்கம் எழுதி இந்த நூலை வெளியிட்டு வருகின்றனர்..

ஆனால் சோதிடர்களுக்கு இது அடிப்படை பாட நூலாகும்..இதை கற்காமல் மனனம் செய்யாமல் ஜோதிடத்தில் அடுத்தக் கட்டத்துக்கு போக இயலாது...புலிப்பாணி ஜோதிடம் பாடல்கள் எப்படி ஜோதிடர்களின் அடிப்படை பாடமோ அது போல சாதகாலங்காரம் முக்கிய பாட நூல்.

விஷ்ணு யோகம் பற்றி ஒரு பாடல்;

உள்ள பத்தாமதிபதியு மொன்பானங்கிசந்தானேறி
மெள்ளயிரண்டாமிடத்திலுற விரும்பியான்பான்றனஞ்சேறில்
கள்ள விஷ்ணுயோக பலன் கதித்தவரசரடி தொழவே
கொள்ளும் ல்க்‌ஷம்பொன்றேடிக் குலாவிநிருப்பனீரேழ் மேல்.

விளக்கம்;

பத்தாமிடத்தோன் ஒன்பதாமிடத்தோனது அங்கிசத் தேறி இரண்டாமிடத்திலிருக்க ஒன்பதாமிடத்தோன் இரண்டாம் ஸ்தானத்தை சேர்ந்தால் விஸ்ணு யோகமாகும்..பலன் மேலான அரசர்களெல்லாம் தன்னடி தொழ பதினாங்கு வயதுக்கு மேல் லட்சம் பொன் சம்பாதித்திருப்பான்...(பாடல் 357)

-தொடரும்)

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடருங்கள். தொடர்கிறோம்.