tamil astrology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil astrology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மிதுனம்,கடகம்


மிதுனம் ராசி பலன்;

பாரப்பா இன்னொன்று பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் அமைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம் 
தீர்ப்பதற்கு வகைவிவரம் சொல்வேன் மைந்தா
கூரப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லான கன்னியர்க்கு நன்னீராட்டி
வீரப்பா விலகுமடா நாகதோசம் 
விதியுள்ள ஜென்மனவன் பிறப்பான் பாரே’’

என புலிப்பாணி சித்தர் பாடுகிறார்....

ராகு 5ஆம் இடத்தில் அமரும்போது புத்திர தோசம்,நாகதோசம் என்கிறார்..இது பிறந்த ஜாதகத்தில் ராகு லக்னத்தில் அமர்ந்த பலனாக எடுத்துக்கொள்ளலாம்...பொதுவாக ராசியாகிலும்,லக்னமாக இருந்தாலும் 5ல் ராகு வருகிறார் என்றால் பூர்வபுண்ணிய தோசம்,நாகதோசம் எனலாம்..இதன் பலன் என்ன..? 5ஆம் இடம் அறிவு ஸ்தானம்,முன்னோர் ஸ்தானம்,வெற்றி ஸ்தானம்,லட்சுமி ஸ்தானம் ,தாய்க்கு தன ஸ்தானம்,தகப்பனுக்கு அஷ்டம ஸ்தானம் எனப்படும்...இந்த இடத்தில் ராகு நிழல் கிரகம் அமரும்போது இவை எல்லாம் பாதிக்கப்படும்...குழந்தைகளால் மன நிம்மதி கெடலாம்..சீக்கிரம் நடக்க வேண்டிய காரியம் வீண் அலைச்சல் ஏற்படுத்தி முடியலாம்..பூர்வீக சொத்து இருப்பின் அதன் மூலம் புது பிரச்சினைகள் வரலாம்...வழக்குகள் ஏற்படலாம்...

நாகதோசமாக உண்டாவதால் நாகர் வழிபாடு, காளி வழிபாடு, துர்க்கா பரமேஸ்வரியை ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.


கடகம் ராசிபலன்;


பேசுமந்த கேந்திரத்தில் ராகு நிற்க 
பிரபலனாம் ராஜாக்கள் சேவையுள்ளோன்
வீசுகின்ற தனம் படைத்து சீமானாகி 
விதரனையாய் வாழ்ந்திடுவான் இன்னம் கேளு.


என்று 4ஆம் இடத்து ராகு பற்றி புலிப்பாணி சித்தர் புகழ்ந்து தள்ளுகிறார்..ஆனால் இதற்கு திசா புத்தி பலமும் ஏதாவது சுபகிரகத்தின் பார்வையும் அவசியம்...இல்லையேல் வெறும் 4 ஆமிட ராகு உடல்நலன்குறைவையும்,சொத்து சம்பந்தமான வில்லங்கங்களையும் உண்டாக்குவார்..நிம்மதி குறைவும் ,பண விரயமும்,தாயால் மன நிம்மதி கெடுவதும்,வண்டி வாகனங்கள் முதல் குடியிருக்கும் வீடு வரை எதையாவது கழட்டி மாற்றுதல்,பழுது பார்த்தல் என செலவு ஆகிக்கொண்டே இருக்கும்....4ல் ஏற்கனவே சனி இருக்கார்...ராகுவும் சேர்ந்து இருக்கார்..நடந்து போனா க்கூட தடுக்கி விழும் நேரம்..கவனமா இருங்க..வெளியூர் பயணம்,இரவில் பயணம் கவனம் அதிகம் தேவை...திருப்பதி போக முடியாட்டி முருகனை செவ்வாய் தோறும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க..

வெள்ளி, 9 நவம்பர், 2012

ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது

ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது

இந்த வாரம் குமுதத்தில் எங்கள் (சித்தோடு)ஊரில் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆவி ஜோசியர் சாமிநாதன் பற்றி செய்தி வந்திருக்கிறது...1984ல் ஒருவருக்கு ஆவி மூலம் ஜோதிடம் கேட்டு பலன் சொல்லி இருக்கிறார்..இன்னும் 12 வருடம் கழித்து நீ சினிமா துறைக்கு செல்வாய்...அதன் பின் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் நீ கொல்லப்படுவாய் என சொல்லி இருக்கிறார்..ஜோதிடம் கேட்டவருக்கு ஆல்ப்ஸ் மலை எங்கிருக்கிறது என்பது கூட அப்போது தெரியாதாம்..சரியாக 15 வருடம் கழித்து அவர் சினிமாவில் கனவே கலையாதே என்னும் சினிமா மூலம் நுழைந்திருக்கிறார்..அவர் பெயர் தேவி பாரதி எழுத்தாளர்...அதே போல போனமாதம் சுவிட்சர்லாந்தும் சென்றிருக்கிறார்...அங்குள்ள ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் தான் தங்கி இருந்திருக்கிறார்..நல்லவேளை கொல்லப்படவில்லை..பேட்டி கொடுத்திருக்கிறார்;-)

------------------

சில பேர் பூர்வீக சொத்து,தந்தை,முப்பாட்டன் சொத்து வெச்சி பொழச்சுக்கிறாங்க...இதுதான் பாக்கிய ஸ்தானம் நல்லாருக்கணும் என்பது..(உதாரணம் கலைஞர் குடும்பம் ;-))சில பேர் சுயமா சம்பாதிச்சு பொழச்சுக்குவாங்க...உதாரணம் கலைஞர் தான் ;) இதுக்கு லக்னாதிபதி,தனாதிபதி நல்லாருக்கணும்..தன்னம்பிக்கையால் ஜெயிப்பவர்கள் இவர்கள்..இவர்கள் தான் தன்னம்பிக்கை ஓவராகி போய் சாமியாவது பூதமாவது என்பார்கள்...சில பேர் மனைவி வந்த யோகத்
தால் முன்னேறுவார்கள் 7ஆம் இடம்,சுக்கிரன் நல்லாருக்கணும்..எல்லாம் என் பொண்டாட்டி ராசி என்பார்கள்...சில பேர் குழந்தையால் முன்னேறுவார்கள் என் பொண்ணு பொறந்தா என் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுச்சி என்பார்கள்...சில பேர்க்கு இரண்டவது குழந்தை பிறந்த பின் முன்னேற்றம் உண்டாகும்...இரண்டாவது பொண்ணுக்கு பின்னாடி தான் இவ்வளவு சொத்து சம்பாதிச்சேன் என்பார்கள்...சிலருக்கு இது எதுவுமே கிடைக்காது...அவர்கள்தான் கடைசி வரை துன்பத்தில் வாடுகிறார்கள்..விதி,மதி,பதி கெட்டவர்கள்!!



---------------------------

ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சும் ,ஈர்ப்பு சக்தியும்,பூமியில் கூடுதல் குறைதல் பொறுத்து அச்சமயத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல்,மூளை,செல்களில் பதிவாகி குணாதிசயமாக மாறுகின்றன...சுக்கிரன் ,குரு,செவ்வாய் கிரகங்கள் நாம் பிறக்கும்போது பூமியில் எவ்வளவு கதிர்வீச்சின் அளவு இருந்ததோ அதை பொறுத்து நம் ஜாதக கட்டத்தில் கிரக பலம் குறிக்கப்படுகிறது...அதை பொறுத்து நம் வாழ்வில் அந்த கிரகங்களின் காரகத்துவம் கூடும் குறையும்..சந்திரன் தாயின் நிலை குறிக்கும்...சூரியன் தந்தை நிலை குறிக்கும் செவ்வாய் சகோதரன் நிலை புதன் தாய்மாமன் குறிக்கும்..இவர்களுடன் உங்கள் பாசம்,ஒற்றுமை எப்படி இருக்கும்..நாம் பிறந்த பின் இவர்கள் நிலை எப்படி இருக்கும் என அறிய முடியும்..

--------------------



செவ்வாய் கிரகத்தின் நிலை பொறுத்து ஒரு பெண்ணின் கணவன் நிலை அறிய முடியும்..சுக்கிரன் அமைப்பை பொறுத்து மனைவி நிலை அறிய முடியும்...நம்மால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்...பணம் தங்குமா அழியுமா...சொத்துக்கள் சேர்க்கை உண்டா இல்லையா என்பதை லக்னத்துக்கு இரண்டாம் அதிபதியையும்,சுக்கிரனையும் பார்த்து பலன் சொல்லலாம்...




திங்கள், 10 செப்டம்பர், 2012

ஜோதிடம்;சிம்மம்,கன்னி,துலாம் லக்கினத்தில் பிறந்தவர் பலன்


ஜோதிடம்;சிம்மம்,கன்னி,துலாம் லக்கினத்தில் பிறந்தவர் ராசி பலன்;



சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு பிறந்தவர்களைக் கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப்பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திடபுத்தியுள்ளவராகவும் இருப்பார்கள். ஆனால் முன்கோபியாகவும் இருப்பர்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள் சுக்கிரனும் புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்கிரன் சனி, புதன் இவர்கள் மாரகாதிபதிகள். மாரக ஸ்தானத்தில் இவர்கள் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப மற்றவர்களுக்கு பல சமயங்களில் சிம்ம ஸ்வரூபமாகவே இருப்பார்கள்.

இவர்கள் வாழ்வின் பிறபகுதியில் நற்பலனும்,யோகபலனும் பெறுவார்கள்..அரசு அதிகாரிகள்,நகை,வண்டி வாகன தொழில் செய்பவர்கள்,அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருக்கின்றனர்...

5,10,27,30 இந்த வயதுகளில் கண்டம் உண்டாகி விலகும்..

லக்கினத்தை சுபர்கள் பார்த்து லக்னாதிபதி,அஷ்டமாதிபதி,ஆயுள்காரகன் வலுத்திருந்தால் பூரண ஆயுள் உண்டாகும்..

கோபம்,பிடிவாதம்,இவரது பலவீனம்..தன்னிடம் பழகுபவர்கள் நேர்மையாக,உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்..

கன்னி லக்னம்
கன்னியா லக்னமல்லவா? சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும் விவேகமும் இருக்கும். நல்ல நடத்தையுள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்யா லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு, பாவிகள் புதனும், சுக்கிரனும் யோகக்காரர்கள். புதனும், சுக்கிரனம் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தைக் கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
இவர்கள் திறமைசாலிகள் என்று பெயர் எடுத்து புகழுடன் விளங்குவார்கள்.

இவர்கள் மிக எளிதில் பணக்காரர் ஆகிவிடுவார்..நிறைய நட்பு வட்டமும்,நிறைய யோசனைகளும்,சாதூர்யமும் நிறைந்தவர் ஆச்சே..

பத்திரிக்கையாளர்கள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள் நிரைய பேர் இந்த லக்னத்தை சார்ந்தவர்கள்..

புதன்,சுக்கிரன் நன்றாக இவர்கள் ஜாதகத்தில் அமைந்திருந்தால் வாழ்நாள் முழுக்க யோகம்தான்..

லக்னத்தை சுபர்கள் பார்த்தால் ஆயுள் காரர்கள் சிறப்பாக இருந்தால் 77 வயது வரை ஆயுள் பலம் உண்டு..

துலாம் லக்னம்
துலாம் என்றால் தராசு ஆயிற்றே! தராசு பிhக்கும் தொழில் ஏற்படும். தராசு போல் பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம் புத்திசாலித்தனம், செல்வம் சேர்ப்பதில் கவனம், எதிலும் முன்ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்க்கையில் சுகங்கள் அனுபவிக்கவும். வாய்ப்புண்டு. ஆயுள் நீண்டது என்றே கூறவேண்டும்.

துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள், சந்திரனும், புதனும், யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபர்கள். அங்காரகன் தோஷம் உடையவன்.

துலாம் லக்னத்தார் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனம் என்றே சொல்லலாம்..பெண்களாக இருப்பின் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திப்பர்..காரணம் இவர்கள் அழகானவர்கள்..அழகாக பேசுவார்கள்..பெரும் செலவுகள் தங்களை அலங்கரித்துக்கொள்வதற்காகவே இருக்கும்..சுற்றுலா,ஆடம்பரத்தில் அதிக விருப்பம் கொண்டவர்கள்...இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் கோபம் வந்தால் எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவார்கள் அவர்களுடன் பழகுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள்..தராசு சின்னமே இவர்கள் ஒருவரை பார்த்தவுடன் எளிதில் எடைபோடக்கூடியவர்கள் என்பதால்தான்..நுணுக்கமான அறிவு நிறைந்தவர்கள்....உணவு சுவையாக அன்பாக பரிமாற வேண்டும் என்பதில் முக்கியத்துவம் காட்டுவார்கள்..ரசனை அதிகம் நிறைந்தவர்கள்..இப்படி இருந்தா நல்லாருக்கும் என அழகாக எடுத்து சொல்வார்கள்..

இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாகவும்,சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள்..நடிகர்களாகவும் கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்...

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்துல எப்படி.?ராசிபலன்


ராகு கேது இருவரும் சாயா கிரஹங்கள். இருவரைப் பற்றியும் பொதுவாகவே சொல்லவேண்டும் அதாவது:

ஒருவர் பிறக்கும்போது லக்னத்தில் ராகு கேது இவர்களில் யார் இருந்தாலும் ஜாதகர் புத்திரபாக்கியம் உண்டு. ஆயுள் விருத்தியில்லாதவர். செல்வந்தன். ஆனாலும், ஏதேனும் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிருப்பார். அற்ப வித்தையுள்ளவர். நடுத்தரவயதிற்கு மேல் பாக்கியவான் என்று சொல்லக்கூடிய நிலையை அடைபவர். தயை கருணை என்பது இல்லாத கடின சித்தம் உள்ளவர். சோம்பல் என்பது உடன் பிறந்தது போல் உறவாகும். இரு விவாக ப்ராப்தியுள்ளவர்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் புகழ்மிக்கவர். திடீர் கோபத்திற்கு ஆளாவார். தைரியசாலி. அகால போஜனமுள்ளவர். லஷ்மியின் அருள்பெறும் பாக்கியமும் உண்டு என்று சொல்லவேண்டும்.
நான்காவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் தயவு தாஷண்யம் உள்ளவர். முன் சகோதரிகள் உள்ளவர். அற்ப புத்தியுள்ளவர். துன்மார்க்கர் என்று பெயர் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் முன்னோர் வழி சாபம்..புத்திர தோசம் என சொல்லப்படுகிறது..பூர்வபுண்ணியம் பாதிக்கப்படுகிறது..காரிய தடைகள் அதிகம் உண்டாகிறது..5 ஆம் அதிபதியும்,சுக்கிரனும்,குருவும் கெட்டால் குழந்தை இல்லை...அல்லது தாமதமாக பிறக்கும்..

ஆறாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் ஸ்திர பாக்கியம் அதிகம் உள்ளவர். ஸ்திரீகள் மகிழும் வண்ணம் நடந்துகொள்பவர். சில ஸ்திரீகளின் பகைமையும் சம்பாதித்துக் கொள்ளவேண்டியதாகவும் ஏற்படும்.
ஏழாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் நீர் ரோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாக ஏற்படும். வித்துவான் இரண்டு மனைவியர் உண்டு.
எட்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் அதிகம் குறிப்பாக சொல்லவே;ணடியதில்லை. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இவைகளைக் கொண்டு பலன் சொல்லலாம்.
ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் தந்தை முரண்பாடானவர்..தந்தைக்கும்,ஜாதகருக்கும் ஆகாது..பங்காளி சண்டை இருக்கும்..குலதெய்வ வழிபாடு நின்று போகும்..பாக்யங்களை கெடுக்கிறது..நல்ல வீடு,மனைவி,குழந்தைகள் விசயத்தில் சில மன சஞ்சலங்களை உண்டாக்கும்..

பத்தாம் இடத்தில் ராகு இருந்தால் கேது இருந்தால் பணம் பறந்துவரும் என்பார்கள்..தொழில் ஸ்தானத்தில் ஒரு அசுபராவது இருப்பது தொழிலுக்கு பிரச்சினை இல்லை எனலாம்..

பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு லாபத்தையே கொடுப்பார்..நல்லது...பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..குறுக்கு வழியில் கூட சம்பாதித்து விடுவார்...

12 ஆம் இடத்தில் ராகு மறைவது கேது மறைவது நல்லதுதான்...12ல் கேது மறுபிறப்பு இல்லை என்பார்கள்..எல்லா கஷ்டத்தையும் கொடுத்துவிடுவாரா..என்றால் அப்படி இல்லை..பிறபகுதியில் ஆன்மீக யாத்திரை,கோயில் கட்டுதல் போன்ற புண்ணிய பலன்களை சேர்ப்பார்..

கிரக நாயகர்கள் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் என்பது பொதுவாக சொல்லக்கூடியதே தவிர இதை வைத்து பலனைக் கனிக்கக்கூடாது. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்ககை, தசைகள், புத்திகள் இவைகளின் பலன்களையும் கவனிக்கவேண்டும்.

புதன், 28 மார்ச், 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013


குரு பகவான் வைகாசி மாதம் 4 ஆம் தேதி 17.5.2012 வியாழக்கிழமை மாலை 6.24 அளவில் திருக்கணிதம் பஞ்சாங்கப்படி மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...

17.5.2012 முதல் 31.5.2013 வரை ரிசப ராசியில் சஞ்சாரம் செய்கிறார்..

குரு பார்க்க கோடி புண்ணியம்,,,குரு பார்க்க சகல தோசங்களும் நிவர்த்தி என்பதற்கேற்ப வருடம் ஒரு ராசிக்கு பெயர்ச்சியால் அனேக குற்றங்கள்,தோசங்கள் குறையும்...சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்..

இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நன்மையும் குருபலமும் பெறக்கூடியவர்கள் யார் ..?

மேசம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் குருபலம் பெறுகிறார்கள் இதனால் உத்யோக உயர்வு,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல்,திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தல் ,குழந்தை பாக்யம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் காலம் இது.


எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள்;


மிதுனம்-விரய குரு


மீனம்-மூன்றாமிட குரு


சிம்மம் ராசி-10 ஆம் இட குரு


துலாம் ராசி-அஷ்டம குரு


தனுசு ராசி-ஆறாமிட குரு


கும்பம் ராசி- 4 ஆம் இட குரு


இவர்களுக்கான பலன்களும் பரிகாரமும் விரைவில் எழுதுகிறேன்...ராசிபலன் ஆகட்டும்,குரு பெயர்ச்சி ஆகட்டும்,சனி பெயர்ச்சி ஆகட்டும்..பொதுவாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக பலத்தாலும்,திசா புத்தியாலும் பலன்கள் மாறலாம்..உதாரணமாக 4ஆம் அதிபதி திசை...ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவருக்கு குரு பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ பெரிய கெடுதல் செய்வதில்லை...குரு திசை,சுக்கிர திசை...லக்னத்துக்கு சுபர் திசைகள் அதிக பாதிப்பை தருவதில்லை..தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்..போலீஸ் ஸ்டேஷன் வம்பு வழக்கு என்றால் ஒருவர்க்கு டூ வீலர் லைசன்ஸ் பிரச்சினையில் கோர்ட்டில் தண்டம் அழலாம்..இன்னொருவர் செய்யாத தப்புக்கு ஜெயிலில் தண்டனையும் அனுபவிக்கலம்..இருவருக்கும் ஒரே ராசிதான்..ஆனால் திசா புத்தி வேறு வேறு ஆச்சே..ஜாதகம் வேறு ஆச்சே..எனவே இது எச்சரிக்கை பதிவுதான்..!!.





செவ்வாய், 6 மார்ச், 2012

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

சாதகாலங்காரம்-கீரனூர் நடராசன்

கீரனூர் நடராசன் என்பவர் கி.பி.1725 ஆம் வருடத்துக்கு முன் வடமொழியில் இயற்றியிருந்தஹோராசாரம்,சாராவளி,பாராசாரியம்,சந்தானதீபம்,பிரகத்ஜாதகம்,சருவார்த்த சிந்தாமணி,மணிகண்ட கேரளம் சம்புநாதம் முதலிய பல சோதிட நூல்களின் முக்கியமான கருத்துக்களை தொகுத்து சாதகாலங்காரம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.இதனை படிக்க மிக கஷ்டமாக இருக்கும்.கடினமான செய்யுள் வெண்பாக்களால் இயற்ற்ப்பட்டிருந்தது..அந்த நூலுக்கு 1900 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோவை அனுப்பர்பாளையம் முருகைய்யா ஜோதிடர் மூலமும்,விரிவுரையும் எழுதினார்.அதன்பிறகு பலரும் பல விரிவுறை விளக்கம் எழுதி இந்த நூலை வெளியிட்டு வருகின்றனர்..

ஆனால் சோதிடர்களுக்கு இது அடிப்படை பாட நூலாகும்..இதை கற்காமல் மனனம் செய்யாமல் ஜோதிடத்தில் அடுத்தக் கட்டத்துக்கு போக இயலாது...புலிப்பாணி ஜோதிடம் பாடல்கள் எப்படி ஜோதிடர்களின் அடிப்படை பாடமோ அது போல சாதகாலங்காரம் முக்கிய பாட நூல்.

விஷ்ணு யோகம் பற்றி ஒரு பாடல்;

உள்ள பத்தாமதிபதியு மொன்பானங்கிசந்தானேறி
மெள்ளயிரண்டாமிடத்திலுற விரும்பியான்பான்றனஞ்சேறில்
கள்ள விஷ்ணுயோக பலன் கதித்தவரசரடி தொழவே
கொள்ளும் ல்க்‌ஷம்பொன்றேடிக் குலாவிநிருப்பனீரேழ் மேல்.

விளக்கம்;

பத்தாமிடத்தோன் ஒன்பதாமிடத்தோனது அங்கிசத் தேறி இரண்டாமிடத்திலிருக்க ஒன்பதாமிடத்தோன் இரண்டாம் ஸ்தானத்தை சேர்ந்தால் விஸ்ணு யோகமாகும்..பலன் மேலான அரசர்களெல்லாம் தன்னடி தொழ பதினாங்கு வயதுக்கு மேல் லட்சம் பொன் சம்பாதித்திருப்பான்...(பாடல் 357)

-தொடரும்)

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?


உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?
சூரிய யோகங்கள்

1. வேசி யோகம் : சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு கேதுக்களைத் தவிர ஏதேனும் கிரஹம் இருப்பது, பண வருவாய், சத்ருக்கள் ஜெயம்.
2. வாசி யோகம் : சூரியனுக்கு 12ல் சந்திரன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரஹம் இருப்பது, பேரும் புகழும் உண்டாகும்.
3. சுப உபயசாரி யோகம் : சூரியனுக்கு இரு பக்கங்களிலேயும் (இருராசிகளிலேயும்) கிரகங்கள் இருப்பது. நல்ல பணவருவாய், பேரும் புகழும் உண்டாகும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்

1. பத்ர யோகம் : புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
2. ருசக யோகம் : அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
3. சசயோகம் : சனி பகவான் ஆட்சி உச்சங்களில் ருது கேந்திரத்தில் நிற்பது. நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
4. ஹம்ஸ யோகம் : குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
5. மாலவ்ய யோகம் : சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்.

அஷ்டலஷ்மி யோகம்
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும். எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.

தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை.
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

 
கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாத ராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்


ஜோதிடம் சொல்லும் விதிகளில் முக்கியமானது திருமண பொருத்தம்.மனப்பொருத்தம் நன்றாக இருந்தால் மணப்பொருத்தமே பார்க்க வேண்டாம் என சொல்வார்கள்.ஆனால் இப்போதெல்லாம் என்ன படிப்பு,சம்பளம் எவ்வளவு..வீடு சொந்தமா இருக்கா என்பதே முக்கியமாக போய்விட்டதால் பையனும்,பொண்ணும் பழகவும்,புரிந்துகொள்ளவும் வாய்ப்பே இல்லை.நல்ல வசதியான பையன் கிடைக்கும் என்றால் சில பெண்கள் நீ யாரு என 10 வருசம் காதலிச்சு ஊர் சுத்தின காதலனையே கேட்கும் காலம் இது.

காதல்,கவிதை,சினிமா,சென்னை மெரீனா பீச் லவ் னு சுத்துறவங்க..எல்லாம் பக்குவமில்லாதவர்கள்..புத்திசாலி பொண்ணுங்க..நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..

ஜாதகப்படி பொருத்தம் பார்ப்படி..?

இருவரது ஜாதகத்திலும் செவ்வாய் தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் இருக்கான்னு பார்ப்பது முதல் படி.

இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன்,குரு,செவ்வாய்,7க்குடையவன் கெடாமல் இருக்கா என பார்ப்பது அடுத்தபடி...

கூட்டு கிரக சேர்க்கைகள் மோசமாக இருக்கான்னு பார்ப்பது அடுத்த படி.உதாரணம்..செவ்வாய்,+சூரியன்,சனி+சூரியன்,செவ்வாய்+சனி,சுக்கிரன்+ராகு,குரு+ராகு,சந்திரன்+சனி,இவைகள் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தபடீருவருக்கும் ஒரே திசை நடக்குதான்னு பார்க்கணும்.இருவருக்கும் ஒரே திசை நடந்தால் யோகமில்லை.கண்டம்தான்..போராட்டம்தான்..கொஞ்சநாள் கழிச்சும் திசை இருவருக்கும் சந்திக்ககூடாது...

அடுத்தபடியாக இருவர் லக்னமும் ஒண்ணுக்கொன்னு 6,8,12 ல் மறையாமல் இருக்கணும்.அப்பதான் ஒற்றுமை உண்டாகும்..அதே போல ராசியும் இருவர் ராசிக்கும் மறையக்கூடாது..!

அடுத்த படிதான் நட்சத்திரபொருத்தம் பார்க்கணும்..யோனி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்,ராசிபொருத்தம்,ஸ்ரீதீர்க்கம்,இவை மிக அவசியம்.இவை இருந்தால் கூட போதும்...திருமணம் செய்யலாம்...

யோனி பொருத்தம் என்பது இருவரது உடல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய ரகசியம்...ஒவ்வொரு பெண் நட்சத்திரத்துக்கும் நேர் குதிரை,யானை,குரங்கு,ஆடு என போட்டிருப்பார்கள்.அதில் ஏகப்பட்ட ரகசியம் இருக்கிறது...இதெல்லாம் அப்பெண்ணின் காம எண்ணங்கள்,உடல் உறவு கொள்ளும் முறையை யெல்லாம் விவரிக்கும் குறியீடு.

ரஜ்ஜு பொருத்தம் என்பது இருவரது ஆயுள் பற்றியது.அப்பெண்ணின் மாங்கல்யபலம் பற்றியது..எனவே இரண்டும் முக்கியம்.

ஸ்த்ரீதீர்க்கம் பெண்ணின் ஆயுள் பற்றியது...இதுவும் முக்கியம்.

இவையை பரீலித்துதான் திருமணம் செய்ய வேண்டும்.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தால் அதற்கு ஜோதிடரோ,ஜோதிடமோ பொறுப்பாகாது!

வசதி,படிப்பு இதெல்லாம் பார்த்து இந்த சம்பந்தம் போனா வராது..என ஜோதிடரை நெருக்கி,பொருத்தம் எழுதி வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம்...அவர்களுக்கு அப்போதைக்கு வேலை முடியும்.ஆனால் எதிர்காலத்தின் அந்த கணவன்,மனைவி வாழ்க்கை கேள்விக்குறிதான்!!




புதன், 4 ஜனவரி, 2012

சனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா

சனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா



1.ஆயுள்காரகர் என்றழைக்கப்படும் சனீஸ்வரர் அலிகிரகமாகும்(ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நிலை அலியாகும்)உலகில் துன்பங்களை அளிக்கும் சனிதான் பிறவியின் ஆயுளை நிர்ணயம் செய்யும் ஆயுள்காரகன் ஆகிறார்.

2.சனி பாபக் கிரகமாவார்.அதிலும் கொடிய பாபர் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

3.குலம்-சூத்திர குலம்.(கீழ் சாதி)

4.மொழி-அன்னியம்(ஆங்கிலம் என பலர் சொல்கின்றனர்)

5.குணம்;தாமசம்(மெதுவான செயல்)

6.உயரம்;குட்டையானவர் என்பதுடன் முடவானவர் என்று கூறப்படுகிறது.

7.நிறம்;நீலம் (கறுப்பும் சொல்லப்படுகிறது..எனினும் சனியின் நிறம் நீலம்தான்.சனிக்கு நீலன் என்ற பெயரும் உள்ளது.பலரும் கறுப்பு என்றாலும் நீலமும் உகந்த நிறம்.

8.உடல் உறுப்பில் பாதத்துக்கு ஆதிபத்தியம் பெறுபவர்.

9.நரம்பு சம்பந்தமான ஆதிபத்தியம் பெறுபவர்.

10.அடிமை எனும் அந்தஸ்து பெறுபவர்.

11..தானியம்; எள்.

12.திசை; மேற்கு

13.வாகனம்; காகம்

14.ஆசனம்; பிறை

15.சுவை; கசப்பு

16.உலோகம்; இரும்பு

17.வஸ்திரம்; கிழிந்த ஆடை

18.மலர்; கருங்குவளை

19.பஞ்சபூத தத்துவத்தில்;நிலம்

20;சமித்து(தாவரம்); வன்னி

21.வாசனை திரவியம்;புனுகு

22.இடம்; குப்பைத் தொட்டி,கழிவுநீர் தேங்கும் இடம்,சாக்கடை

23.கிரக ஷேத்திரம்; திருநள்ளாறு

24;அம்சம்; ஈஸ்வர அம்சம்

25.கிழமை; சனிக்கிழமை

26.வலிமை; இரவில் வலிமை பெறும் இவர் சூரியனின் மைந்தன்.இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிதுர்காரகன் சனியே ஆவார்.பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் பிதுர்காரகன் ஆவார்.சூரியன் பிதுர்காரகன் என அழைக்கப்பட்டாலும் பகல்,இரவு பாகுபாடு உணர்ந்து பிதுர்காரகனை கணக்கிடுவது சரியாக பலன் சொல்ல ஏதுவாக இருக்கும்.

27.பார்வை; தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார்.

28.எண்கணித ஜோதிடத்தில் சனி எண்;8..இந்த எண் என்றாலே பலரும் அலறுவர்.வாகன எண்களில் கூட இதை பலரும் பயன்படுத்துவதில்லை.நாத்திகம் பேசுவோர் இந்த எண் உள்ள வண்டியை வாங்க சொல்லுங்கள்..ஹிஹி என்பார்.8ஆம் எண் ஜாதகத்தில் சனி வலுத்தோருக்கும்,8ல் பிறந்தோர்க்கும் நன்மையே செய்கிறது.அவரா போய் விரும்பி வாங்கினா கஷ்டம்தான்.தானா அமையணும்.

29.உச்சம் பெறும் ராசி;துலாம்.(20 பாகைகள் வரை பரமோச்சம்)

30.நீசம் பெறும் ராசி;மேசம் (20 பாகைகள் வரை பரம நீசம்)

31.ஆட்சி பெறும் ராசி;மகரம்,கும்பம்

32தாயார்; சாயாதேவி

33.மனைவி; நீலாதேவி

34.ராசிக்கட்டத்தை கடக்கும் காலம்;30 வருடம்.(அதாவது முழு ரவுண்ட்

35.ஒரு ராசியில் தங்கும் காலம்;இரண்டரை வருடம்..ராசியை அதாவது 3 கட்டங்கள் கடக்கும் காலம், உங்கள் ராசி நடுவில் இருப்பின் அது ஏழரை சனி..அதாவது ஏழரை வருடம் சனி பிடிக்குள் வருகிறீர்கள்.

36.பலன்; ராசியில் பிரவேசித்து 4 மாதம் கழித்து பலன் தர தொடங்குவார்

37.அஸ்தங்கம்;சூரியனுடன் 17 பாகைக்குள் வரும்போதுஅஸ்தமனம் அடைந்து அஸ்தங்க தோசம் அடைவார்

38.அஸ்தமனம் ஆகும் ராசிகள்; கடகம்,சிம்மம்

39.அதிதேவதை; யமன்

40.பிரதி அதிதேவதை;பிரஜாபதி

41.அவதாரம்;சனி பகவான் மகாவிஸ்ணுவின் கூர்ம அவதாரம் என சொல்லப்படுகிறது

42.மூலத்திரிகோண ராசி;கும்பம்

43.நட்பு ராசிகள்;ரிசபம்,மிதுனம்,கன்னி

44.பகை ராசிகள்;கடகம்,சிம்மம்,விருச்சிகம்

45.சமம் பெறும் ராசிகள்;தனுசு,மீனம்

46.நட்பு கிரகங்கள்;புதன்,சுக்கிரன்,ராகு,கேது

47.பகை கிரகங்கள்;சூரியன்,சந்திரன்,செவ்வாய்

48.சமம் கிரகம்;குரு

49.சனி திசை காலம்;19 வருடம்

50.சனி நட்சத்திரங்கள்; பூசம்,அனுசம்,உத்திரட்டாதி



செவ்வாய், 18 அக்டோபர், 2011

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra

சித்திரை 3 ஆம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் வரை.

அன்பு,காதல்,பாசம்,நேசம் என மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதிலும்,தூண்டிவிடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.அழகான தோற்றம்,அன்பான பேச்சு என இளமையில் மட்டுமல்ல..முதுமையிலும் மன்மத ராசாக்கள் தான் இவர்கள்.பிறந்த வீட்டாருடன் பிணக்கு உண்டாகும்..தந்தை ஆகாத ராசி உங்களுடையது என்பதால் ஒரு பிரிவினையோ..அல்லது இழப்போ..கருத்து வேறுபாடோ தந்தையுடன் அடிக்கடி உண்டாவது உங்க ராசியின் இயல்பு.

அழகான மனைவி வேண்டும் என தேடிபிடித்து கல்யாணம் செஞ்சுக்கணும் என சின்ன வயதிலிருந்தே கனவு காண்பீர்கள்..அதன்படியே பெரும்பாலும் அமைத்துகொள்வீர்கள்.காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புண்டு.சுக்ரன் ராசியாச்சே.

திங்கள், 3 அக்டோபர், 2011

திருமண பொருத்தம்;எத்தனை மனைவி..? astrology

திருமண பொருத்தம்;திருமணம் எப்போது..? astrology

கல்யாணம் எனக்கு எப்போது நடக்கும் சார் என ஒருவர் ஜாதகம் கொடுத்து கேட்டால் முதலில் அவர் ராசிக்கு குரு பலம் இருக்கா என பார்க்கணும்.அதன் பிறகு அவர் ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி எங்கு இருக்கார் 7 மிடத்தில் என்ன கிரகம் இருக்கு,7 ஆம் இடத்தை எந்த கிரகம் பார்க்குது...சுக்கிரன்,செவ்வாய் 6,8,12 ல் மறைஞ்சு இருக்கான்னு பார்த்துட்டுதான் திசா புத்தி பார்க்குறோம்..குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,புதன்,7க்குடையவன் ,9க்குடையவன்,5க்குடையவன் புத்தி நடந்தா திருமணம் சீக்கிரம் நடக்கும்.அவர் கேட்ட நேரம் குரு,சுக்கிர ஓரையா இருந்தா உடனே நடக்கும்..நவாம்சத்தில் 7 ஆம் அதிபதி புத்தி,7 ல் இருக்கும் கிரகம் புத்தியா இருந்தாலும் ரிசல்ட் பாசிட்டிவ் தான்..


இன்னும் சில குறிப்புகள் பாருங்க; சுக்கிரனை எத்தனை கிரகங்கள் கூடுகிறதோ...அத்தனை மனைவிகளாம்..உதாரணமா சுக்கிரன்,செவ்வாய் கூடி இருந்தா ரெண்டு மனைவின்னு டக்குன்னு சொல்ல முடியாது..மனைவி தவ்விர தோழி ஒருவர் இருக்க வாய்ப்புண்டு.ஆனா இதைவிட சுலபமான விசயம் லக்கினத்தில் இருந்து 7 ஆம் இடத்து ராசிக்குறிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் செர்ந்திருக்கிறதோ அத்தனை மனைவி அல்லது துணைவி.இது சரியாக அனுபவத்தில் வருகிறது.

7 ஆம் அதிபதி 8 இல் இருக்க திரிகோணம் ,கேந்திரத்தில் இருக்க வேறு தாரம் நினைக்க மாட்டான்.லக்கினத்தில் இருந்து 7 கட்டங்களுக்குள் சுக்கிரன் இருந்தால் சீக்கிரமேற் திருமணம் நடக்கும்.லக்கினத்தில் பாவ கிரகம் இருந்து 7 ஆம் வீட்டில் நீசன் இருந்து விட்டால் இரண்டு கல்யாணம் செய்து கொள்வார்..
11 ஆம் இடத்தோனும் ,7 ஆம் இடத்தானும்7 ஆம் இடத்தானும் கூடிட,அல்லது திரிகோணத்தில் இருக்க மூன்று கல்யாணம் முடிப்பானாம்.


வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்டையும்

திருமண பொருத்தம் பார்க்கும் போதும்,காம உணர்வை பற்றி அறிந்து கொள்ளவும் ஜாதகத்தில் பார்க்க வேண்டிய கிரகம் சுக்கிரன்..வசதியாக வாழ்வாரா...வறுமையில் உழல்வாரா...என பார்க்க சுக்கிரனை காண வேண்டும்.ஒரு மனிதனின் வாழ்வில் இல்லறம் நல்லறமாக அமைவது அவரது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள இடத்தை பொறுத்தே ஆகும்.

சுக்கிரனுக்கு ரிசபம்,துலாம் சொந்த வீடு.மீனம் உச்ச வீடு.கன்னி நீச வீடு.ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிசபம்,துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம்,பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.இசையில் நாட்டம் காட்டுவார்.பெருமையோடு மதிக்கப்படுவார்.நோயற்ற பயமற்ற வாழ்க்கை அமையும்,மனதுக்கு உகந்த இல்லற துணை கிடைக்கும்..

சனி, 17 செப்டம்பர், 2011

பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)

பிரசன்ன ஜோதிடம் என்பது ஒருவர் வரும் நேரம்,கேள்வி கேட்கும் நெரம் பொறுத்து கணிதம் போட்டு பலன் சொல்வதாகும்.சில ஜோதிடர்கள் ஃபோன் மூலம் கேட்கும் நேரத்தை கணித்தும் சொல்ல்லி வருகின்றனர்.இப்போது நான் சொல்வது வெற்றிலை மூலம் பார்க்கப்படும் ஆரூடம். சோழி பிரசன்னம்,அகத்தியர் ஆரூடம் போன்ற வரிசையில் இந்த வெற்றிலை ஜோதிடமும் வருகிறது.இதை எப்படி கணிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சாதகம் பார்க்க வந்தவரை 24 வெற்றிலைக்கு மேல் வாங்கி வர சொல்லவும்.வாங்கி வந்த வெற்றிலையை 2 ஆல் பெருக்க வேண்டும்.வெற்றிலையை மீண்டும் 5 ஆல் பெருக்க வேண்டும்.
5 ஆல் பெருக்கியதை ஒன்று கூட்டி 7 ஆல் வகுக்க வேண்டும்.சைபர் வந்தால் 7 என கணக்கிடவும்.