யோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் கிரக அமைப்புகள்

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வாழ உதவும் கிரகங்கள் சந்திரன் ,சுக்கிரன் தான் உதவுகிறது..காதல்,அன்பு,உல்லாசம் இவற்றுக்கெல்லாம் இவர்களே அதிபதியாக இருக்கிறார்கள்.சந்திரன் 6,8,12ல் மறையாமல் இருந்தால் பணம் இருக்கோ இல்லையோ நிம்மதி இருக்கும்..பாவ கிரகங்கள் சனி,செவ்வாய்,ராகு,கேது கூடாமல் பார்க்காமல் இருக்கனும்.
சந்திரன்,சுக்கிரன் கெடாமல் இருந்தாலே அழகான மனைவி,கைநிறைய பணம்,ஆடம்பர வாழ்க்கை,அறிவான குழந்தைகள் அமைந்து விடும்.இவங்க கடுமையான உழைப்பாளிகள் அல்ல.பணம் சம்பாதிக்க சிரம்படுவோர் அல்ல.அப்பா சம்பாதிச்சு வெச்சிருப்பார்.மனைவி பக்கம் நிறைய சொத்தோடு வந்திருப்பாங்க...தாத்தா சொத்தே பல தலைமுறை காணும் எனும் ரகம் இவர்கள்...
ரிசபம்,துலாம் ராசியினருக்கு ராசிநாதனும்,சந்திரனும் லக்னத்துக்கு மறையாமல் இருந்தால் இப்படி வாழ்வார்கள். இல்லை எனில் நல்லா சாப்பிட்டு ஆடம்பர செலவை கடன் வாங்கி செய்துவிட்டு சந்தோசமா இருப்பாங்க.


புதன் அறிவை குறித்தால் மூளையை குருபகவான் குறிக்கிறார்....குரு கெடக்கூடாது புதனும் கெடக்கூடாது...குரு பலமாக இருப்பவர்களுக்கு மூளை உழைப்பு அதிகம்...மூளை எனில் நுணுக்கமான சிந்தனையில் விளையும் திறமையை குறிக்கும்..குரு திசை நடப்போருக்கு ,குரு பலவீனமாக இருந்தால் ,மூலை சார்ந்த பாதிப்புகள்,சிறுநீரக பாதிப்பு,இருதய கோளாறு அறுவை சிகிச்சை சந்தித்துதான் ஆக வேண்டி இருக்கிறது..புதன் என்பது சாமர்த்தியமான அறிவை குறிக்கும்....கில்லாடி எனப்படுவோர் புதன் ஆதிக்கம் உடையோர்தான்.புதன் ராசியினரான மிதுனம்,கன்னி ராசியினரையும் சொல்லலாம்

ஒவ்வொரு கடவுளும் ஒரு சின்னத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்..சின்னம் அதிர்ஷ்டம் தரும்..பெரிய நிறுவனங்களின் சின்னம் லோகோ வை பார்க்கும்போதெல்லாம் அதை பற்றி நிறைய யோசிப்பேன்...ஆடி கார் சின்னம் வளையம் வளையமாக நான்கு சக்கரங்களை நினைவுபடுத்தும்..அவர்களின் தொழிலுக்கும் சின்னத்துக்கும் பொருந்தி போகிரது ஜாகுவார் சின்னம் சிறுத்தை..அவர்களது வாகனம் சிறுத்தை வேகத்தை நினைவுபடுத்தும்படி வடிவமைத்து இருக்கின்றனர்.
தேர்சக்கரம்,சக்கராயுதம்,தேர் ஓட்டி என பகவான் கிருஷ்ணரை சுற்றி சுற்றி இவை ஏன் வருகிறது என பார்த்தால் அவர் நட்சத்திரம் ரோகிணி..அதன் அமைப்பு சக்கரம் போன்றது...தேர் போன்றது.
சிவன் கையில் இருக்கும் மான் சின்னத்துக்கும் திருவாதிரைக்கும் சம்பந்தம் உண்டு.சிங்கத்தின் மீது இருக்கும் காளி ,முருகனிடம் இருக்கும் வேல்,வினாயகரின் காலடியில் மூஞ்சூரு எலி என எல்லாமே லோகோ போன்றவை..அவர்கள் வாகனம் ஒவ்வொன்றிலும் ஒரு கணக்கு இரு
முழுமையான வளர்ச்சியை அடையாதவை எல்லாம் புதன் அம்சமே.அரவாணிகள் முழு வளர்ச்சி இல்லாதவர்கள்.அவர்களை கிண்டல் செய்தால் தோசம் உண்டாகும் அர்த்தநாரி அம்சமான அவர்களை தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்து விருந்து செய்தால் தொழில் முடக்கம் தீரும்.மக்கள் வசியம் உண்டாகும்...
ஒரு அரவாணி என்னிடம் பத்து ரூபா கொடுப்பா என்றார் முடியாது என்றேன்.ஹீரோ மாதிரி இருந்துட்டு ஜீரோ மாதிரி இல்லைன்னு சொல்றியே என்றார்.அந்த வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.பத்து ரூபா கம்மி.இன்னும் தரேன்.முதல்ல சாப்பிடுங்கன்னு ஓட்டலில் சாப்பிட வெச்சி என் அலுவலகம் அழைத்து 100 ரூபாய் கொடுத்தேன்.ரூபாயை மடித்து என்னை மூணு முறை திருஷ்டி சுற்றிய அழகே தனி.சந்தோசமாக வாழ்த்திட்டு போனார்.
இதுபோல சூட்சும பரிகாரங்கள் தான் நம்மை உயர்த்தும்.


செவ்வாய், 3 மே, 2016

அதிர்ஷ்ட லட்சுமி அருள் கிடைக்க செய்ய வேண்டியவை

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.


1. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

2. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

3. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

4. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

5. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

6. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

7. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 

8. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

9. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

10. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

11. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது

12. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

13. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

14. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

15. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

16. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

17. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

18. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

19. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

20. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

21. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

22. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

23. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

24. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

25. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

26. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

27. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

28. அதே போல் முதலில் கீரையோஇ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
  வாழ்வில் செய்யக்கூடாதவை
1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் 

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.
14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது              கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.  

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

யோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்

யோகங்கள் மொத்தம் 27 ...யோகம் என்பது ,வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

1.விஷ்கம்பம் -உறவினர்களிடம் அன்பு கொண்டவர்

2.ப்ரீதி -அஞ்சாதவர்
3.ஆயுஷ்மான் -ஒழுக்கம் உள்ளவர்

4.செள்பாக்யம் -தெய்வபக்தி நிறைந்தவர் 

5.சோபனம் -தன்மான உணர்வு மிக்கவர்

6.அதிகண்டம் -புகழை விரும்புபவர் 

7.சுகர்மம் -தரும சிந்தனை உடையவர்

8.திருதி -இனிய வார்த்தைகள் பேசுபவர் 

9.சூலம் -அருள் உள்ளம் கொண்டவர்

10.கண்டம் -ஆணவம் உடையவர் 

11.விருத்தி -செல்வர்கள் நட்பு கொண்டவர் 

12.துருவம் -மற்றவரிடம் பணிவு கொள்பவர்

13.வ்யாகாதம் -பயணம் செய்வதில் விருப்பம் உடையவர் 

14.ஹர்ஷாணம் -புத்திசாலியாக இருப்பவர் 

15.வஜ்ரம் -விவசாயத்தில் ஈடுபாடு உடையவர் 

16.ஸித்தி -ஊருக்கு நல்லவராக இருப்பார்

17.வ்யதீபம் -எதிரிகளை வீழ்த்த வல்லவர் 

18.வரீயான் -உண்மைக்கு மாறாக பொய் சொல்பவர் 

19.பரிகம் -ஏமாற்றுவதில் திறமைசாலி

20 -சிவம் -பெற்றோரை பேணுபவர் 

21-ஸித்தம் -ஆலோசனை திறன் மிக்கவர் 

22.ஸாத்யம் -கலைஞர் கலைகளில் வல்லவர்

23.சுபம் -பெண்களிடம் அன்பு செலுத்துபவர் 

24.சுப்பிரம் -முன்கோபம் கொண்டவர் 

25.ப்ராஹாம் -பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர் 

26.மகேந்திரம் ஐந்திரம் -சகல கலைகளையும் அறிந்தவர்

27.வைதிருதி -வீர பராக்கிரம சாலியாக திகழ்பவர்

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்

ஜாதகத்தில் கரணம் -யோகம் என போட்டிருக்கும் நம்மில் பலர் நட்சத்திரம் ராசி தெரிந்து வைத்திருப்பதே பெரிதாக இருக்கிறது இதில் கரணம் யோகம் எல்லாம் என்னன்னு தெரியலையே என குழம்பி கொள்ள வேண்டாம்...கரணம் என்பது திதியில் பாதியாகும்..சூரியனுக்கும்,சந்திரனுக்கு இடைப்பட்ட பகுதியின் அளவுமுறைகளாகும்..6 டிகிரி கொண்டது ஒரு கரணமாகும்..

 கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

இதில் பிறந்தவர்கள் சுருக்கமான பலன்கள்;


1.பவம் -தைரியமானவர்

2.பாலவம் -உயர்ந்த நற்குனம் உடையவர்

3.கெளலவம் -நல்லொழுக்கம் உடையவர்

4.தைதுலை -விசுவசம் உடையவர்..பணி புரிவதில் விருப்பம் உடையவர்

5.கரசை -எதிர்பாலினர் மீது அதீத  மோகம் கொள்பவர்..

6.வணிசை -இனிமையாக பேசுபவர்

7.பத்ரை -செய்யும் தொழிலில் சோர்வடையாதவர்

8.சகுணி -அறிவில் சிறந்தவர்

9.சதுஷ்பாதம் -தத்துவ பயிற்சி

10.நாகவம் -தன்மான உணர்வு மிக்கவர்

11.திம்ஸ்துக்கனம் -உலகியல் அறிவு ,யோக சித்தி இவற்றில் வல்லவர்.



ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?


உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?
சூரிய யோகங்கள்

1. வேசி யோகம் : சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு கேதுக்களைத் தவிர ஏதேனும் கிரஹம் இருப்பது, பண வருவாய், சத்ருக்கள் ஜெயம்.
2. வாசி யோகம் : சூரியனுக்கு 12ல் சந்திரன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரஹம் இருப்பது, பேரும் புகழும் உண்டாகும்.
3. சுப உபயசாரி யோகம் : சூரியனுக்கு இரு பக்கங்களிலேயும் (இருராசிகளிலேயும்) கிரகங்கள் இருப்பது. நல்ல பணவருவாய், பேரும் புகழும் உண்டாகும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்

1. பத்ர யோகம் : புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
2. ருசக யோகம் : அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
3. சசயோகம் : சனி பகவான் ஆட்சி உச்சங்களில் ருது கேந்திரத்தில் நிற்பது. நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
4. ஹம்ஸ யோகம் : குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
5. மாலவ்ய யோகம் : சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்.

அஷ்டலஷ்மி யோகம்
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும். எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.

தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை.
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

 
கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாத ராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.