செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மே, 2016

அதிர்ஷ்ட லட்சுமி அருள் கிடைக்க செய்ய வேண்டியவை

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது

2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.


1. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.

2. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

3. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

4. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

5. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

6. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

7. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 

8. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

9. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

10. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

11. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது

12. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

13. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.

14. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

15. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

16. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

17. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

18. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.

19. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

20. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

21. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.

22. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

23. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

24. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

25. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

26. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

27. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

28. அதே போல் முதலில் கீரையோஇ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
  வாழ்வில் செய்யக்கூடாதவை
1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 

5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் 

9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 

12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.

13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.
14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது              கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.  

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

குபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா..? யோகமா?


குபேரர் படங்கள்,சிலைகள் இப்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன...பூஜை அறையிலும் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்..இதில் ஒரு சிக்கல் இருக்கிறது 30 வருடத்துக்கு முன்பு இல்லாத வாஸ்து பகவான் போலத்தான் குபேரனும்.50 வருடங்களுக்கு முன்பு கூட லட்சுமி படம் வைத்து வழிபட்டனர் ,,,ஆனால் குபேரன் இல்லை..குபேரனுக்கும் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம்..? புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா..?இதுவெல்லாம் யோசிக்க வேண்டும்

ராவணன் தம்பி குபேரன் என விக்கிபீடியா சொல்கிறது..அரக்கர் குலத்தை சேர்ந்த கடவுள்....குபேரனை விட சிறப்பு மகாலட்சுமிதான்...காரணம் அதில் இருக்கும் மங்கள சின்னங்கள்.மகாலட்சுமியின் சிரிப்பும், அழகும் ,கனிவான,கலையான , தோற்றமும் நம்பிக்கையை தருகிறது...குபேரன் தொந்தியும் ,தொப்பையுமாக இப்போதுள்ள தமிழனை போல சோமபலாக இருப்பதும் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும்.. இப்படியும் யோசிச்சு பார்த்துட்டேன் :-)

எனக்கென்னவோ  மகாலட்சுமி உருவத்தில்தான் அதிக பாசிட்டிவ் சக்திகள் கிடைக்கின்றன.....என்றுதான் நினைக்கிறேன்.குபேரரை வழிபட நினைப்போர் திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் 12 ராசிக்கும் குபேரர் மீன் வாகனத்தில் அருள்கிறார். அங்கு சென்று வழிபட்டு வரலாம்..வீடு,அலுவலகம் முழுக்க குபேரர் படங்களாக மாட்டி வைக்காதீர்!!

சனி, 3 ஜனவரி, 2015

செல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology

மகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார் ...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில் தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும் பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான் பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர் காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..


கெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது..உத்திராயண காலத்தில் மரணம் அடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதுபோல மார்கழி மாத வளர்பிறையில் சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது..மார்கழி ஏகாதசி முடிந்து அடுத்த நாள் துவாதசியில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார்..ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்..அன்று நாம் பெரியவர்களுக்கு நெல்லிக்கனி சாதம் உண்ண கொடுத்தால் செல்வம் இரட்டிப்பாகும்..இப்படி எல்லாம் சில ரகசிய சடங்குகளை செய்து நம் முன்னோர்கள் செல்வம் பெருக வழி செய்தனர்..
 
 தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமி தினம். இன்று சூரிய பகவானின் ரதம் வடக்கு திசை நோக்கித் திரும்புவதாக ஐதீகம். ஆதவனின் பயணத்தில் ஏற்படும் இந்தச் சிறு திருப்பத்தையும் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் சுமங்கலிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி, அதன் மீது சிறிது அரிசியும் மஞ்சள் தூளும் கலந்து (அட்சதை) இலை அடுக்கை அப்படியே தலை மீது வைத்துக் கொண்டு குளிப்பது வழக்கம். ஆண்கள் வெறும் அட்சதையை தலையில் போட்டுக் கொண்டு குளிக்கலாம். பூஜை அறையில் தேர்க்கோலம் இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதனம் செய்து வழிபடலாம். 
 
தை அமாவாசை அன்னதானம்;
 
தை அமாவாசை 20.1.2014 அன்று வருகிறது.. அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,உடல் ஊனமுற்றோர்களுக்கும் , முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003

வியாழன், 27 நவம்பர், 2014

குலதெய்வம் வழிபாடு -16 விதமான செல்வம் பெறும் வழி

துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்...முன்னோர்கள் காலம் காலமாக வழிபடுவதால் அவர்கள் ஆசி அந்த கர்ப்பகிரகத்தில் உறைந்திருக்கும் நீங்கள் வழிபடும்போது உங்கள் கண்கள் வழியாக அதை கிரகித்துக்கொள்கிறீர்கள்..லக்னத்துக்கு 9ஆம் இடத்தில் சுபர் இருப்பவர்களுக்கு குலதெய்வம் ஆசி முழுமையாக இருக்கும்.

சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டு அன்றும் தை மாதம் உத்திராயணம் புண்ணிய காலம் தொடங்கும்போதும் கோயிலுக்கு சென்று 16 விதமான அபிசேகப்பொருட்களால் அபிசேகம் செய்து,சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டு ,புதிய ஆடைகள் அணிவித்து நெய்தீபம் 27 ஏற்றி வழிபட்டு ,கோயிலுக்கு வந்தோருக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக கொடுத்துவிட்டு வரலாம்...

அங்கேயே வீட்டுப்பெண்கள் மூலம் கைப்பட பொங்கல் வைக்க வேண்டும்...!! இதனால் குலதெய்வம் ஆசியால் குடும்பம் தழைத்தீங்கும்....

குலதெய்வத்துக்கு வெறும் சூடம் ஏற்றி வைத்து கும்பிட்டால் அது சந்தோசப்படும்..ஏன்னா அது நம்ம தாய் மாதிரி..கோவிச்சுக்கது..ஆனாலும் வருசம் ஒருமுறை அம்மா வீட்டுக்கு போறோம்...சிறப்பா செய்யனுமே...அதுக்குத்தான்...வாழ்க வளமுடன்..!!!

குலதெய்வம் கோயில் தெரியாதவர்கள் அவர்களது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்யலாம்..அல்லது திருப்பதி பெருமாளை வழிபாடு செய்யலாம்...


முக்கியமான அபிசேக பொருட்கள் ;

நீர்                                        -குலம் தழைத்து ஓங்கும்
பன்னீர்                              -தேக அபிவிருத்தி
சங்கு தீர்த்தம் -                தனபிராப்தி
தைலம் -                            சுபமேன்மை நல்கும்
பஞ்சாமிரதம்-                  புஷ்டி தரும்
தேன் -                                அமுத கானம் குரல் வளம்
‘நெய் -                                பிதுர் வழி தோச நிவர்த்தி
கரும்புச்சாறு -                ஆரோக்கியம் அளிக்கும்
பால் -                                  ஆயுள் அபிவிருத்தி நலம்
தயிர் -                                 பிரஜா மேன்மை தரும்
பஞ்சகவ்யம் -                    மஹாபாதக நாசம்
திருமஞ்சனம் -                வம்சம் விருத்தியாகும்
இளநீர் -                             போக யோகம் கொடுப்பது
பழ வைகை சாறுகள் -சம்பத்து பெருகும்
எலுமிச்சை பழ சாரு - திருஷ்டிகள் விலகும்
மஞ்சள் பொடி -              மங்களம் பெருகிவிடும்
மாவு பொடிகள் -         கடன் உபாதை விலகும்
நெல்லி முள்ளிப்பொடி - ரோகங்கள் தடுக்கும்
சந்தனம் -                          லட்சுமி கடாட்சம்
கலச அபிசேகம் -               எம பயம் நீக்கும்
அன்னாபிசேகம் -           சாம்ராஜ்ய யோகம்
சொர்ணாபிஷேகம் -         நிரந்தர செல்வங்கள்


16 விதமான செல்வங்கள் ;

புகழ் ,கல்வி,ஆற்றல்,வெற்றி,நன்மக்கள்,பொன்,நெல்,ஆயுள்,
அறிவு,நல்லூழ்,இளமை,துணிவு, நோயின்மை,நுகர்ச்சி,பொருள் பெருமை

செவ்வாய், 17 ஜூன், 2014

செல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம்

அரசு,மருதாணி,கஸ்தூரி,சாம்பிராணி,செந்நாயுருவி,இலுப்பை,புனுகு,புங்கன்,முந்திரி,குங்கிலியம்,வெள்ளெருகு,ஏலக்காய்,வெண்கடுகு,கோராசனை,கோஷ்டம்,நொச்சி,ரோஜா இதழ்,ஆலமரம்,சந்தனம்,அகில்,தேவதாரு,கருங்காலி மேற்கண்ட அனைத்து மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கி ,மூலிகை சாம்பிராணி பவுடராக தயாரித்து இருக்கிறேன்..இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும்...செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள் வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . சந்தோசம் எப்போதும் இருக்கும்...கம்ப்யூட்டர் சாம்பிராணி விலை மலிவு என வாங்கி கெட்ட சக்தியை காற்று மாசுபாட்டை வீட்டில் உண்டாக்காதீர்கள்....தரித்திரம்தான் உண்டாகும்.மூலிகை பொடியை மட்டும் உபயோகியுங்கள்..தனல் உருவாக்க ரெடிமேடு சாம்பிராணி கப்கள் கடைகளில் கிடைக்கின்றன...தேங்காய் மூடியை அதாவது கொட்டாங்குச்சியை கேஸ் அடுப்பில் பற்ற வைத்து நெருப்பை உண்டாக்கினால் கூட போதும்....

மூலிகை சாம்பிராணி பொடி தேவைப்படுபவர்கள் என்னிடம் வாங்கி கொள்ளலாம் ஒரு மாத உபயோக அளவில் தருகிறேன்... விலை விபரம் ஒரு மாத அளவு 500 கிராம் ரூ 900 ஆகும்.. தேவைப்படுபவர்களுக்கு கொரியரில் அனுப்புகிறேன்.மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.. sathishastro77@gmail.com

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்க முகவரியை என்னுடைய மெயிலுக்கோ என் நம்பருக்கோ அனுப்பவும்...உடனே புரபசனல் கொரியரில் அனுப்பப்படும்...


இது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும்..வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி, நோயாளிகளை குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்.. இது அருமையான மருந்தாகவும் செயல்படும்.