மகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார்
...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில்
தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும்
பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ
விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர
ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான்
பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர்
காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..
கெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள்
சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை
தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு
விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது..உத்திராயண
காலத்தில் மரணம் அடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதுபோல மார்கழி மாத
வளர்பிறையில் சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது..மார்கழி ஏகாதசி முடிந்து
அடுத்த நாள் துவாதசியில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி
கொடுத்தார்..ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்..அன்று நாம்
பெரியவர்களுக்கு நெல்லிக்கனி சாதம் உண்ண கொடுத்தால் செல்வம்
இரட்டிப்பாகும்..இப்படி எல்லாம் சில ரகசிய சடங்குகளை செய்து நம்
முன்னோர்கள் செல்வம் பெருக வழி செய்தனர்..
தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமி தினம். இன்று சூரிய
பகவானின் ரதம் வடக்கு திசை நோக்கித் திரும்புவதாக ஐதீகம். ஆதவனின்
பயணத்தில் ஏற்படும் இந்தச் சிறு திருப்பத்தையும் நாம் பண்டிகையாகக்
கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் சுமங்கலிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு எருக்கம்
இலைகளை அடுக்கி, அதன் மீது சிறிது அரிசியும் மஞ்சள் தூளும் கலந்து
(அட்சதை) இலை அடுக்கை அப்படியே தலை மீது வைத்துக் கொண்டு குளிப்பது
வழக்கம். ஆண்கள் வெறும் அட்சதையை தலையில் போட்டுக் கொண்டு குளிக்கலாம்.
பூஜை அறையில் தேர்க்கோலம் இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதனம் செய்து
வழிபடலாம்.
தை அமாவாசை அன்னதானம்;
தை அமாவாசை 20.1.2014 அன்று வருகிறது.. அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,உடல் ஊனமுற்றோர்களுக்கும் ,
முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள்
கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gma il.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..
நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..
k.sathishkumar,20010801181,sta te bank of india,bhavani
cell;9443499003
நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..
k.sathishkumar,20010801181,sta
cell;9443499003
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக