செவ்வாய், 27 ஜனவரி, 2015

கோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத்திரம் பலன்கள்

சித்திரை மாசம் குழந்தை பிறந்தா ஆகாதுன்னு சொல்றோம்...காரணம் சூரியன் பலமா இருக்கும் மாசம்...கத்திரி வெயில் குழந்தைக்கு ஆகாது என்று ஒரு காரணம் இருப்பினும் அவன் வாழ்நாளில் ரோசத்துடன் ,பிடிவாதத்துடன் வாழ்ந்து எல்லோரையும் பகையாக்கிக்கொள்கிறான்..என்பதும் ஒரு காரணம்..
அதே போல ஆடி,ஐப்பசியில் பிறப்பதும் அதிகமான ரோசம்,பிடிவாதத்தைதந்துவிடுகிறது..சூரியன் தந்தையை குறிப்பதால் இந்த மாதங்களில் பிறப்போருக்கும் தந்தைக்கும் ஒத்துப்போவது கொஞ்சம் கஷ்டம்தான் 9ஆம் இடம் எனும் பாக்யஸ்தானம் நன்றாக இருந்தால் அங்கு சுபர் இருந்தால் பிரச்சினை இல்லை..இல்லைன்னா தந்தை வழி சொந்தம் எல்லாம் பகையாகும்...போக்குவரத்தே இல்லாமல் போயிடும்.

ஆடி,ஆவணி,ஐப்பசி,சித்திரையில் பிறந்தாலும் இவர்கள் தொழில் பெரும்பாலும் பிறர் இவர்களை வணங்கும்படி மரியாதை தரும்படி அமைகிறது..திறமையானவர்களாகவும்,எல்லோரையும் நிர்வாகம் செய்யும் திறனும்,தன்னம்பிக்கை,ஆத்ம பலமும் இவர்களுக்கு இருக்கும்..எல்லாம் சரியாக நடக்கனும்...இவங்க நேர்மையா இருக்காங்களோ இல்லையோ மத்தவங்க நேர்மையா இருக்கனும்னு நினைப்பாங்க..ரோசம் கெட்டவனுக்கு பொண்ணக்கொடுன்னு பழமொழி இருக்கு...இந்த மாதம் ராசி,நட்சத்திரத்தில் பிறந்த பொண்ணை இதே மாதிரி அமைப்பில் இருப்பவர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்தால் அது பொருத்தமே வந்தாலும் வில்லங்கம்தான்..ரெண்டு பேருமே ரோசமா இருந்தா சொந்தக்காரங்க கூட வீட்டுக்கு வர பயப்படுவாங்க..!

ிறைய அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் இந்த மாதங்களில் பிறந்தவராக இருக்கின்றனர்..குரு,செவ்வாய்,சூரியன் மூவரும் அரசு கிரகங்கள் எனப்படும்..எனவே இவர்கள் பலம் பெர்றிருந்தால் அரசுப்பணி ,அரசியலில் வெற்றி பெறலாம்..அவர்களது திசையோ புத்தியோ நடக்கனும் ..10 ஆம் இடத்துடன் சம்பந்தம் பெறனும் என்பதும் முக்கிய விதி..சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை விட ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இன்னும் வாய்ப்பு அதிகம். சூரியன் அங்கு ஆட்சி பெற்று சொந்த வீட்டில் இருப்பது அதன் காரணம்.சாந்தமான குணமும்,மலர்ச்சியான முகத்தையும்தான் எல்லோரும் விரும்புவார்கள்...பழகவும் எல்லோருக்கும் பிடிக்கும்..எப்பவும் கடுகடுன்னு இருந்தா கிட்டப்போனா முகத்துல குத்து விழும் போலிருக்கே என வசியத்தை தடுக்கும் இதை சிம்ம ராசிக்காரர்கள் பெரிதும் உணர்ந்திருப்பர்....இவங்க கிட்ட பலரும் பேசவே பயப்பட இது ஒஉ காரணம் ஆனால் பூரம் நட்சத்திரத்துக்கு கொஞ்சம் விதிவிலக்கு உண்டு..இவங்க எல்லோரையும் சார்ந்து இருக்கவே விரும்புவாங்க..

ராசி அடிப்படையில் ரோசக்காரர்கள் என்றால் மேசம்,விருச்சிகம்,சிம்மம் என்றுசொல்லலாம்..நட்சத்திரஅடிப்படையில்கிருத்திகை,மிருகசிரீடம்,சித்திரை,
உத்திரம்,உத்திராடம்,அவிட்டம்,.போன்றவையாகும்..இதில் சூரியன்,செவ்வாய் நட்சத்திரங்களை கொடுத்துள்ளேன்..அடங்கி  போறது இவங்க குணமில்லை அடக்கி வைப்பது இவர்கள் குணம்..எதிரி கிட்ட இப்படி இருந்தா பிரச்சினை இல்லை.. எல்லோர்கிட்டயும் இப்படி இருந்தா பிரச்சினைதானே..?‪#‎astrology‬

கருத்துகள் இல்லை: