புதன், 28 ஜனவரி, 2015

சித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology

ஜோதிட சூட்சும பரிகாரம்;



ராகு காலம் பார்ப்பது எப்படி..?

ராகு என்பது நிழல் கிரகம் ஆகும். இது கிரகம் அல்ல...இருள்..தினமும் ராகு காலம் என ஒண்ணரை மணி நேரத்தை நம் முன்னோர் கொடுத்திருக்கின்றனர்..இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யவேண்டாம்..பயணம் தொடங்கவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர்...
வெள்ளிக்கிழமை எனில் 10.30 முதல் 12.00 மணிவரை காலையில் ராகு காலம் என்பது நமக்கு தெரியும் காலண்டரில் தினமும் போட்டிருப்பார்கள்..ராகு காலத்தில் துவங்கிய காரியம் எதுவும் உருப்படியானதில்லை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.இந்த ராகு காலத்தில் நேர வித்தியாசம் இருக்கிறது...
அதாவது தினமும் சூரிய உதய நேரம் மாறுபடும் ..தினமும் சூரியன் 6 மணிக்கு உதிப்பதில்லை..ஒவ்வொரு தமிழ் மாதம் சூரியன்உதய நேர வித்தியாசம் இருக்கும்..இன்றைய சூரிய உதய நேரம் 6.46 .தை மாதம் தாமதமாக சூரியன் உதிக்கும்.அதற்கு தகுந்தாற்போல ராகு காலத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.இன்று 12 முதல் 1.30 வரை ராகு காலம் எனில் 12.30 முதல் 2 மணி வரை ராகு காலம் என்ரே கணக்கிட வேண்டும்...!! இதன்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்!

கருத்துகள் இல்லை: