தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;
சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும்
தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் படுகிறது..
சூரிய பகவான்
ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சந்திரன் நமது
மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம்,
உற்சாகம் தரக்கூடியவர்
சூரியனைப் "பிதுர் காரகன்" என்றும், சந்திரனை
"மாதுர் காரகன்" என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும்
சந்திரனும் நமது தாய்,தந்தையாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய்
இழந்தவர்கள் அமாவாசையில் வழிபடுவது மிக சிறப்பு..அதுவும் உத்தராயணம் எனும்
புண்ணியகாலமாக தை அமவாசைக்கு பல மடங்கு புண்ணியம் உண்டு..இந்நாளில்
குலதெய்வத்தை வணங்குவதும்,புண்ணியநதிகளில் நீராடுவதும்,தான தர்மம்
செய்வதும் அளவற்ற புண்ணிய பலன்களை தரும்..!!
1 கருத்து:
தை அமாவாசை குறித்த பகிர்வு சிறப்பு.
கருத்துரையிடுக